பொய்!
அச்சில் வார்த்த சிலை வடிவும், அரசியை ஒத்த அலங்காரமும், அவள் அழகை சொல்லும் உவமைகளாய் ! அரியணை அமர்ந்த, அதிகாரமும், தலையணை சாய்ந்த, தலைகனமும், அவள் பண்பை உணர்த்தும் புதுக்கவிகளாய் ! பார்க்கும் பார்வையில், வெட்கமும், சிரிக்கும் சிரிப்பினில், அடக்கமும், அவள் இயல்பை காட்டும் எழுத்துக்களாய் ! என்னை மயக்கிய அவள் கண்களும், காதலில் அவளது, பெண்மையும், சிரித்து பேசியதெல்லாம், பொய்களாய் ! பொய்யாய் போன வாழ்கையில், கரைந்தோடும், கண்களில் கண்ணீராய் !! ::::: இராம்குமார் கோபால் ::::::
No comments:
Post a Comment