Showing posts with label காதல் மொழி. Show all posts
Showing posts with label காதல் மொழி. Show all posts

Monday, October 27

எழுதா கவிதைகள் சொல்லும் புத்தகமே!

Mar 17` 2014


"ஒரு முறை உச்சி முகர்ந்தேன் - அது 
உயிர் வரை உரசிப் போனதே..,
மறு முறை மறுத்தும் வேண்டினேன் 
மீண்டும் உயிர் திரும்பிடவே, 
விடிவது வாடிக்கை யானது - இன்னும் 
அரை நொடி வேண்டுமே..,
வெட்கம் விடுத்து பக்கங்கள் புரட்டு
எழுதா கவிதைகள் சொல்லும் புத்தகமே."

.....

இசைக்கு வரிகளா, வரிகளுக்கு இசையா
வரிசை கட்டி எழுதி தருகிறேன் ..,

இசைக்க யார் தயார்?

எழுத்தோலை!

முனிவரும் இனி..

Mar 15` 2014


கடைதெரு பிள்ளையார் கூட
கண்கள் உருட்டி பார்த்திட கூடும்,
தவத்தில் இருக்கும் முனிவரும் இனி
மௌனத்தை கலைத்திட தூண்டும்,

மேகம், மின்னல், மழை மூன்றும்
ஒன்றாய் சேர்ந்திடும், பேசிடும்....,
மோகம் மூடும், மௌனம் விலகும்
மொத்தம் அழகின் சங்கமம் உன்னில்,
முக்கூடல் சுழல் என்னில்,
அலை மோதி மீதமின்றி தொலைந்தேன்,
போடி எல்லாம் உன்னாலே
இந்நாள், நானும் இல்லாமல் போனேனே...,

கடைதெரு பிள்ளையார் கூட
கண்கள் உருட்டி பார்த்திட கூடும்,
தவத்தில் இருக்கும் முனிவரும் இனி
மௌனத்தை கலைத்திட தூண்டும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616997871725424/?type=3&permPage=1

தேவர் உலக அமிர்தமாய் !

Mar 15` 2014


தேன் மதுர சுவைக்கீடாய்,
தேவர் உலக அமிர்தமாய்
கண்டிப்பாய் உன்னிதழும்
இருந்திடக் கூடும்..,

எட்ட இருந்து பார்திடவே
கட்டி கரும்பாய் இனிக்குதடி,
தொட்டு மட்டும் பார்த்துவிட்டால்
என்னுயிரும் உடலை பிரியுமடி.

எழுத்தோலை!

Sunday, October 26

அவள் அன்னையும் செய்தது..!

Mar 14` 2014


பாம்பல்ல அதுவும்,
ஓடும் நதியுமல்ல,
நீர் திவலைகள் முளைக்கும்
மலையுச்சியும் அல்ல,
மயிர் இருக்கும் - இருந்தும் 
இல்லாதுப் போல் வழுக்கும்..,

வளைந்து, நெளிவது,
வெண்ணிலவின் தெளிவது,
தேனீக்கள் கூடது,
கிளிகளும் தேடுவது,
தொட்டால் சுடுவது,
கண்களுக்கு குளிரது,

இடையது,
என்னவள் இடையது..,
எனக்கெனவே
அவள் அன்னையும் செய்தது,
வளைவது, நெளிவது
என்னையும் வாட்டி, வதைப்பது
தொட்டால் சுருங்கும் மலரது
எனக்கு மட்டுமானது..,
இடையது, என்னவள் இடையது,
எனக்கென்றும் இனியது.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616436948448183/?type=3&permPage=1

ஒற்றைக்கால் கொக்காய்..!

Mar 14` 2014


நதி
அதில் நீந்தும்
மீனும்,
முதலையும்..,

சகியே,
நதியே.....,
உன்னில்
நானும் நீந்தவே ..,
மீனவதாரம் எடுக்கவா...?
இல்லை,
முதலையாய் மீண்டும்
பிறக்கவா ..?

இரண்டினில் ஒன்று
ஏதேனும் பார்த்திடவே..,
நொடிகள் சிறிதும் - என்
கண்கள் இரண்டை
மூடிடா நிற்கறேன்..,
ஒற்றைக்கால் கொக்காய்..,
விடாப்பிடியாய்..,
விரும்பிய விதியால்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616417181783493/?type=3&permPage=1

இருட்டு ஒரு பொருட்டாய் இல்லை !

Mar 14` 2014


இருட்டு 
ஒரு பொருட்டாய் இல்லை.., 
அவள் இடை 
மெழுகில் செய்ததால்.., 
என் விரல்கள் அதில் 
படர்ந்திட்ட தருவாயில்..,
பரவிய வெளிச்சம்,
அவள் முகம் - அதில்
மின்னிய விளக்கு
திரியாய் தெரிய...,
இருட்டு
ஒரு பொருட்டாய் இல்லை
எங்களுக்கு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616377965120748/?type=3&permPage=1

அதிகாலையில் சுபம்!

Mar 10` 2014


தாமரை இலை மேல்
தண்ணீர் துளிகள் - அவள்
கீழ் இதழ் ஓரமாய் ...,
சக்கரை துகள்கள் - இனிப்பு,
எறும்புக்கு மட்டும் அல்ல 
எனக்கும் பிடித்ததே,

தேநீர் கோப்பை,
துயில் நீங்கா படுக்கை,
நான், அவள்...,
இதழ்கள் பரிமாற்றம்
இனிமையின் அரங்கேற்றம்..,
அதிகாலையில் சுபம்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616368121788399/?type=3&permPage=1

ஒவ்வொன்றும் அழகோ அழகு..!

Mar 09` 2014


இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு,

கன்னம் உரசி காதினை மறைக்கும் 
உன் கார்குழல் அழகு,
செவ்விதழ் மறைக்கும் செவ்விதழ் சாயம்
சிலிர்த்திட செய்யும் அழகு,
புருவம் வளைந்து கார்முகில் ஆகவே
கச்சித பொருத்தம் அழகு,
கோதுமை நிறம் தங்கமாய் மின்னும்
தமிழச்சி உன்மேனி அழகு,

ஒவ்வொன்றாய் சொல்லிடவே ஆசையும் கூடுதே
அதற்கு என் இச்சென்மமும் போதாதே..,
இன்னும் ஏழு வேண்டுமே, மீண்டும்
மீண்டும் பிறந்து சொல்லிடவே,

இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613878338704044/?type=3&permPage=1

நெசமா யோசிக்கல ..

Mar 08` 2014



பெண்களின்றி கவிஞனும் கிடையாது, 
பெண்களின்றி கவிதையும் நமக்கேது.., 
பெண்ணும் கவிதையும் ஒன்றாம் 
பெண்ணே கவிதையே அழகாம்.

பெண்கள் தின சிறப்பு பாடல்/ கவிதை.
-----------------------------------------------------

நெசமா யோசிக்கல ...
-------------------------------

பல்லவி:

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம்:

வரப்பு வயலோரம் வாய்கா நடுவோரம்
எத்தி, எத்தி நடந்தவள ....,
சுத்தி, சுத்தி ஒளிஞ்சிருந்து ரசிச்சிருந்தேன்
கண்ணிமைக்கா மணிக்கணக்கா பார்த்திருந்தேன்..,
ஏபுள்ள எழுமிச்ச நெறமுள்ள மொசபுள்ள
ஏர் உழ மண்ணில்ல என் மனம் நீ உள்ள
மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல ...,

பல்லவி (2)

அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம் (2)

கருவேலம் காட்டுக்குள்ள குருவி சத்தம் காதினிக்க
கருவிழிக்காரி நீ சிரிக்க அத மறந்தேன்.,
நெல் கதிர் மேல கிளிகள் கூட்டம், கொஞ்சும் கீதம்
மயில் நடையா நீ வரவே கொஞ்சம் சிலிர்த்தேன்..,
வாத்துக கூட சேத்தினில் நடனம், நடவும் ரசிக்கும்
வஞ்சி நீ வந்திடவே நெஞ்சம் குளிர்ந்தேன்..,
எனை மறந்தேன், எதுவும் தோனலயே
மூளயும் யோசிக்கலயே..,
நெசமா என் மூளயும் யோசிக்கலயே..,

பல்லவி (3 )

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613185708773307/?type=3&permPage=1

அன்றே பௌர்ணமியோ ?

Mar 06` 2014


கருமை கடலையும் மறைக்கும்
இருள் சூழ்ந்த நொடியில்..,
பருவம் வந்த பெண்ணும் - தன்
புருவம் உயர்த்தி சிரித்தால்

அன்றே பௌர்ணமியோ ?
 
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612096348882243/?type=3&permPage=1

தாமத இரவிலும்..

Mar 04` 2014


நினைவுகளை இனுக்கி, இனுக்கி இறுக்கி
வைத்துக்கொள்கிறேன் என்னுளங் கையில்.,
இம்மியளவும் பிசகா சருகாய் காயும்
தருவாயில் கூடத் தவறவிடா - தளரா
மனங்கொண்டே தாமத இரவிலும் உறங்கா 
உறுதியாய் உள்ளடக்கிய உயிராம், உயிரே
உறவாய் உனக்கொண்ட உரிமையில்..

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611195898972288/?type=3&permPage=1

நிழல் கூட மெல்ல துரத்தும்...

Mar 04` 2014


குறுஞ்செய்தி கவிதையில் ஒன்றாய், உனக்காய் 
மொத்தமாய் மூன்றே வரியில் முடித்திட 
எத்தனித்தே எண்ணி, எண்ணி என்னையும் 
இழந்தேன் ஏழெட்டு வரிகளில்.., 

"நீ, நிஜமாய் தெரியும் வெளிச்சம் - மதி
உன்னால் தானே வானிலே நிற்கும்..,
நிழல் கூட மெல்ல துரத்தும் - உன்
அருகாமையில் அகல் விளக்கும் ஒளிர...,
ஒளி ஒளிந்துக்கொள்ளும் இடுக்கில் தொங்கல்
தொங்கும், சிணுங்கும், மினுங்கும்..,
கற்றை குழல் உரச கார்முகில்
அருகாமையில் மறைந்து சிரிக்கும்,"

குறுஞ்செய்தி கவிதையில் ஒன்றாய், உனக்காய்
மொத்தமாய் மூன்றே வரியில் முடித்திட
எத்தனித்தே எண்ணி, எண்ணி என்னையும்
இழந்தேன் ஏழெட்டு வரிகளில்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611174268974451/?type=3&permPage=1

பற்கள் வழி கடந்து விழும்..!

Mar 01` 2014


நற்றிணை நலம் தரும் நயமாய் 
நிதம் கேட்டிட தூண்டும் - உன் 
பற்கள் வழி கடந்து விழும் 
சொற்கள் ஒன்றும் ஒவ்வொன்றும்..,

ஒவ்வொரு மொழி அழகை மொத்தம்
கொண்டே முத்தயிதழ் வழி – காற்றில்
பரவி என் சித்தம் நனைத்து - சத்தம்
குறைத்து சலசலப்பை நிறைக்கும்..,

நிறைந்தும் நிற்காமல் நீந்தி கடந்து
நிறைமதி ஒளியாய் சிரிக்கும் – போதும்
புன்னைகை அரசியே என்னையும் விடு
விடியும்முன் விழித்துக் கொள்கிறேன். 


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./609637789128099/?type=3&permPage=1

தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தே..!

Feb 26` 2014



நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்..,

நீயே ஆசையே, என்னுள் தினம் 
அசையும் அசைவே அழகே..,
அனுதினம் ஆர்ப்பரிக்கும் அணுவே,
என்னுள் இருந்தே எனை தின்றே
எனை இயக்கும் இசையே,
இன்றெங்கே நீயும்சென்றாய் மறைந்தே..,
தேடும் திசையே மறந்தேனடி
தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தேனடி
விதியே நம்மை பிரிதிடினும் - நாம்
மதி இழந்தா மயங்கி கிடந்தோம்.

நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608111382614073/?type=3&permPage=1

உயிர்வலி மட்டும் என்னுள் மிச்சம்..

Feb 25` 2014


உண்மையில், உண்மையில் உயிராய் இருந்தேன்,
உனையே, உனையே உறவாய் நினைத்தேன்,
உயிரே, உயிரே எனையும் பிரிந்தாய்
உடலையும், உயிரையும் தீயால் சுட்டாய்,
ஒரு நொடி கூட என் காதலை அறியா 
எங்கோ இருந்தே என்னையும் கொன்றாய்...,

உண்மை காதல் உன் காலடி மண்ணில் கலக்க
உயிர்வலி மட்டும் என்னுள் மிச்சம்..,
உயிர்த்தெழ ஒருமொழி போதும் அன்பே
உன்னிலே என்றும், இரத்தநாளங்கள் அதன் அணுவில்,
ஏதோ ஒரு மூலையில் - ஒட்டி
இருந்தேனும் எஞ்சிய காலம் கழிப்பேன்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./607620049329873/?type=3&permPage=1

நளினம், நடனம் !

Feb`17 2014


நிறைந்த நீர் குவளைப் போல் 
நெளிந்து என்னை ஈர்க்கும் 
அவள் இடையும் அது உடையும் 
நடையும் நளினம், நடனம்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./603154616443083/?type=3&permPage=1

ஓராயிரம் ஆண்டுகள்..!

Jan 24`2014


ககன(ம்)!
--------------

கானகம், வானம், சுவர்கம், 
செந்தணல், படைபலம், பறவையினம்,
இவையனைத்தும் ஒற்றை சொல்லில்
உந்தன் பெயரில் அடங்கிடுமெனில்..,

நான் மட்டும் எப்படி
உன்னில் அடங்காதிருப்பது,

அழகாய் சிரிப்பில்
சுவர்கத்தை காட்டி,
வானாய் அளவிடா
அன்பை ஊட்டி,
திசையறியா பறவையாய்
அமுதமொழி கூட்டி,
செந்தணல் கண்களால்
என்னையும் வாட்டி,
கானகமாய் விரிந்தாய்
என்னிதயம் புகுந்தாய்,
படைபலம் இல்லா
அரசனும் ஆனேன்,
உன்னன்பால் சிறைப்பட்டு
அடிமையாய் போனேன்,

சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,
சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,

வாழ்ந்து போகிறேன்
என்றென்றும் எனை இயக்கும்
உன்னிதய கூட்டில்
ஓராயிரம் ஆண்டுகள்.


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./589840507774494/?type=3&permPage=1

நீளும் எந்த பயணமும் ...

Jan 07th 2013


நீளும் எந்த பயணமும் 
நீ அருகில் இருந்தால் விருப்பம்,
வளைவும், நெளிவும் இருந்தும், 
ரயிலாய் நீ அழகாய் தெரிந்தும், 
உன் இடையோடு என் கைக்கோர்த்து 
நாம் நடைப்போடும் சந்தர்ப்பம்
அடியோடு நீ மறுக்கும் நாளும்
உன் அழகோடு உறவாடா - என்
உயிர் ஒருப்போதும் உறங்காது,

நீளும் எந்த பயணமும்
நீ அருகில் இருந்தால் விருப்பம்.


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580723705352841/?type=3&permPage=1

சொல்லி, சொல்லி மலைக்கிறேன் !

Jan 07`2013


அழகிய நீர்வீழ்ச்சி அருகில் அவள் 
இதில் எந்த அழகில் நான் மயங்க?
அள்ளி அனைத்திடாதபடி ஆர்ப்பரிக்கும் 
இவையிரண்டும் எனக் கண்முன்னே,

துள்ளி மகிழவும் இயலாதவனாய்
சொல்லி, சொல்லி மலைக்கிறேன்
இன்னும் ஈராயிரம் கண்கள் வேண்டி
இரக்கமுரு சன்முகனிடம் கேட்கிறேன்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580720875353124/?type=3&permPage=1

ழகற வடிவிடை !

27th Dec 2013


ழகற வடிவிடை தின்னும் நித்திரை,
துள்ளும் அசைவுமென் கண்களின் கொடுப்பனை,
அள்ளும் அழகியலில் இவளொரு தொடர்கதை,
ய ர ல வ ழ ள யாரிவள் இடையின இளவரசி?

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./575065872585291/?type=3&permPage=1