Wednesday, August 1

மனம் தேடும் மரங்கள்!



நிழல் தரும் சுகங்களை,
வெயிலில் நடந்திட உணர்கிறேன்,
வழிந்து ஓடும் குருதியாய்,
வியர்வையும் நாறிட சட்டையில்,
நகர்ந்து நடக்கும் நங்கையின்,
நாசியை துளைதிருக்க கூடுமோ,
மேலும், கீழும் பார்க்கிறாள்,
வேதனையில் என்னை ஆழ்த்தினால்,
தேடிட மரங்கள் இல்லையே, சாலையில்,
எங்கு தேடியும் உங்களை காணலையே,
மனம் தேடும் மங்கையோ நீங்களும்.

இப்படியொரு இழிநிலை இவ்வுலகினில்,
குளிர் காற்றில்லை உறங்கிட இரவினில்,
ஒதுங்கி நிற்க மரமில்லை வெயிலினில்,
தேனீக்கள் தேன்சுவை மறந்திடும் விரைவினில்,
பறவைகள், மந்திகள், பழங்கள் படங்களில்,
காட்டி சொல்லிடும் நிலை வரும், வருங்காலங்களில்,
தேடிட மரங்கள் இல்லையே, சாலையில்,
எங்கு தேடியும் உங்களை காணலையே,
மனம் தேடும் மங்கையோ நீங்களும்.

இன்றைக்கே இந்நிலை நமக்கெனில்,
நாளைய தலைமுறை புதைந்திடும் நிலத்தினில்,
விதைத்திடுவோம், வளர்த்திடுவோம் மரங்களை,
காத்திடுவோம், நிழல் காய்ந்திடுவோம் மனங்களில்,
தேடிட மரங்கள் இல்லையே, சாலையில்,
எங்கு தேடியும் உங்களை காணலையே,
மனம் தேடும் மங்கையோ நீங்களும்.



(இந்த குழந்தை பார்த்தேனும் திருந்திடுவோம்,
இடமிருந்தால், ஒரு மரக்கன்றை நட்டு நீரூற்றுவோம்,
மரங்களை காப்போம், மனமகிழ்ந்து வாழ்வோம்.)


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: