Monday, May 6

நீ மட்டும் என்ன விதிவிலக்கா?

May` 02

பிரிவுக்கும் எனை மிக 
பிடிக்கும் போலிருக்கு,
பரிதாபமே இன்றி - தினம் 
கொன்று தின்கிறதே,
கடிவாளமும் பூட்டி 
கண் மறைக்க பார்க்கிறதே,
ஏனடி - நீயும் 
ஏளனமாய் பார்க்கிறாய்,
பாவமாய் பிறந்தவன் நான்,
எனக்கென்று ஒன்றும் - நிலை
இல்லா உலகம் இது - இதில்
நீ மட்டும் என்ன
விதிவிலக்கா?

எழுத்தோலை!

இந்த ஆனந்த தொல்லை?

May` 01

சுவாசிக்க காற்றும் இல்லை,
வாசிக்க எழுத்தும் இல்லை,
நேசிக்க நீயும் இல்லை - ஏனடி 
இந்த ஆனந்த தொல்லை?

எழுத்தோலை!

எனக்கும் போட்டியாய்!

May` 01

கவிதையும் கவிதை எழுதிட 
காகிதமும், மைப்பேனாவும்
இமைக்காமல் பார்க்குமோ, 
ஒவ்வொரு வரியாய் படித்தே
ஊரெல்லாம் சொல்லுமோ,
உற்சாகத்தில் உறங்கவும் மறுக்குமோ,

அவள் வசம் சிறையில் கிடக்கும்,
எனக்கும் போட்டியாய்.


எழுத்தோலை!

நிறாசையும் என்னிடம் ஜெயிக்குமா!

May` 01

ஆயிரம்பேர் உனக்கொள்ள 
அடிக்கல் நட்டுப் போனார்கள்,
ஆயிரத்தி ஒன்றாய் - நான் 
அவ்வழியில் வந்தேன்,
பார்த்தேன், ரசித்தே, அசந்தேன்,
ஆசைக்கூடக் கொண்டேன்,

அளவுக்கு மீறிய ஆசையும் 
எனக்கெதுக்கதடி வம்பும் என்று,
எட்டி நின்றே கனவு மட்டும் கண்டேன்,
கனவுகள், நிஜங்களாய் நிகழ்ந்திட
முடியுமோ,
நிறாசையும் என்னிடம் ஜெயிக்குமா.

எழுத்தோலை!

ராக்சசியே என்னடி செய்தாய் மாயம்!

May` 01

பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
இரவிது என்று தெரிந்தும்,
தூக்கம் கண்ணை கிள்ளியும் - இன்னும், 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

ராக்சசி என்னடி செய்தாய் மாயம்,
ராக்சசன் போலானேனே நானும்.

எழுத்தோலை!

உயிர்க்கொண்டே சிரிக்கிறதே!

May` 01

மான் விழியால் சொல்லும் 
தேன்க் கவிதை ஒவ்வொன்றும்,
பூங்குயில்கள் இசையில் 
பல்லவிகள் பாடும் - இதழ்கள்,
இரண்டும் உனதே 
உயிர்க்கொண்டே சிரிக்கிறதே.


எழுத்தோலை!

வழுக்கி விழுகிறேன்!

Apr` 30

மின்னல் கொடிகளில் 
வர்ணம் குழைத்து,
யார் அப்பியது உன் 
கன்னத்தில்,
விரல்கள் தொட்டு 
வியந்து நிற்கிறேன்,
கண்கள் திறந்தே 
வழுக்கி விழுகிறேன்.


எழுத்தோலை!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "தல" !

Apr` 30

அடங்கிப் போகிறோம், அடங்கிப் போகிறோம் 
ஆண்டவனுக்கு அடுத்து உனக்கு மட்டும்,
அடங்க மறுக்கிறோம், மயங்கி நிற்கிறோம் 
உன்னைக் கண்டால் ஆனந்தம் கொண்டு,
மன்னவனே, மந்திர முகனே
தென்னகம் எல்லாம் தேடும் முகமே,
அரியணை இல்லா ஆட்சி புரிபவன்
நீ தானே, நீ மட்டும் தானே,

அதிசயமே அதிசயிக்கும்
அன்புள்ளவன்,
பசியென்று வந்தவருக்கு
உயிர் தந்தவன்,
தேவையில்லா தலைப்புகளில்
தலைக் காட்டாதவன்,
தல என்ற பெயருக்கு
தகுதியானவன்,
உள் ஒன்று, புறம் ஒன்றாய்
பேசாதவன்,
உலகமெல்லாம் தன்னை
பின்ப்பற்ற செய்தவன்,
சினம் கொண்ட அரக்கனும்,
நல்
குணம் கொள்ள செய்திடும்
கண்க்கொண்டவன்,

எங்கள் அண்ணன் - உனக்கு
இன்று பிறந்தநாளோ - உன்
சொலக்கேட்டு எங்களை நாங்கள்
மாற்றிக்கொண்டோம் என்றோ,
அன்று முதலே நாங்களும்
மானிடராய் ஆனோம்,

மகிழ்கிறோம், திமிர்க்கொண்டு அலைகிறோம்,
எவன் வந்துக் கேட்டாலும் - சட்டையை
உயர்த்தி சொல்வோம் - தல
ரசிகன் என்று, உன் ரசிகன் என்று,
மகிழ்கிறோம், திமிர்க்கொண்டு அலைகிறோம்,
எவன் வந்துக் கேட்டாலும் - சட்டையை
உயர்த்தி சொல்வோம் - தல
ரசிகன் என்று, உன் ரசிகன் என்று,

தலப் போல வருமா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "தல" !


எழுத்தோலை!

மருமகளாய் வருவாள் ...!

Apr` 30

என் அம்மாவிடம் சொன்னேன் இன்று - தேவதை 
ஒருத்தி உனக்கு மருமகளாய் வருவாள் என்று, 
ரம்பையா, ஊர்வசியா, மேனகையா என்றவள் 
இன்றே பார்க்க வேண்டுமாம் அவளை,

ஆசை, என் அம்மாவுக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான்.

எழுத்தோலை!

இவளைப் போல் எவளும் இல்லையே.!

Apr` 30

சொல் பேச்சு கேட்கும்
செல்லப் பிரயாணியாக அவள்,
என் ஒரு சொல் க்கேட்டு 
உறங்கப் போவாளோ,
உறைந்தேன் நானும் 
அக்கணமே,

அவளைப் போல் இவள் இல்லையே,
இவளைப் போல் எவளும் இல்லையே.

எழுத்தோலை!

கலை கண்களுக்கு மட்டும்!

Apr` 30

(கலை கண்களுக்கு மட்டும்)
---------------------------------------------

பின்னிருக்கை இல்லா 
ஈருருளை வேண்டும் - அதில் 
நாம் இருவர் மட்டும் 
பயணிக்க வேண்டும்,

முன் அனுபவமில்லா 
முத்தங்கள் வேண்டும் - அதில்
மூச்சோடு மூச்சாக
நாம் கலக்க வேண்டும்,

மடி மீது தலை சாய்த்து
முத்தங்கள் தந்தாலும் - அதில்
சத்தங்கள் கேட்காமல்
மூழ்கிட வேண்டும்,

இலைகளும் இல்லாத
செடிகளும் வேண்டும் - அதில்
கொடிப் போல் படர்ந்து
நாம் கிடக்க வேண்டும்,

மின்சாரம் இல்லாத
இரவுகள் வேண்டும் - அதில்
ஆடைகளும் வேலையின்றி
ஓய்வெடுக்க வேண்டும்,

அதிகாலை அரைத்தூக்கம்
அரவணைத்தாலும் க்கூட - அதில்
அவசரம் இல்லாத
சரசங்கள் வேண்டும்,

கனவொன்று கண்டாலும்
காமம் சேர்க்க வேண்டும் - அதில்
கனவென்பதே தெரியாமல்
கட்டில் உடைய வேண்டும்,

கண்ட நாள் முதல்
காதல் சொல்லா நின்றாலும் - அதில்
காத்திருத்தலும், பார்த்திருத்தலும்
சரிப் பாதி வேண்டும்,

வேண்டும் வேண்டும்
இவை எல்லாம் வேண்டும்,
வேண்டிக்கொண்டிருக்கிறேன்,
நீயும் - என்னைப் போல்
வேண்டியதுண்டா - சொல்லடி
என் மடிக் கணினியே.


எழுத்தோலை!

தமிழுக்கும், தமிழனுக்கும் திருவிழா நாள்...!

Apr` 29

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 
பிறந்தநாளில் அன்னாரை, அவர் 
தமிழுக்கு ஆற்றிய சேவையை நினைவுக்கூர்வோம்,
வாருங்கள் நண்பர்களே!

-------------------------------------

சுருங்கு மீசைக்காரருக்கு
இன்று பிறந்தநாள்,
சுருங்கு மீசைக்காரருக்கு
இன்று பிறந்தநாள் - இதுவோ
தமிழுக்கும், தமிழனுக்கும்
திருவிழா நாள்,

சுருங்க கவிகள் இயற்றி
விளங்கா மண்டைகளையும்,
கலங்கரை விளக்கமாய் மாற்றிய
சுருங்கு மீசைக்காரருக்கு
இன்று பிறந்தநாள்,

பாவேந்தர் என்றனர் அவரை,
புரட்சிக் கவிஞர் என்றும் சொன்னனர்,
படித்திட, படித்திட நரம்புகள்
புடைத்திடும் கவியும் - சொல்லும்
பாக்களின் வேந்தரும் அவரே,

வணகிடுவோம் நாளும்,
தமிழனாய் இருக்கும் - நாம்
ஒவ்வொருவரும்,
சுருங்கு மீசைக்காரருக்கு
இன்று பிறந்தநாள் - இதுவோ
தமிழுக்கும், தமிழனுக்கும்
திருவிழா நாள்.


எழுத்தோலை!

பார்த்திட பார்த்திட !

Apr` 29

பார்த்திட பார்த்திட 
பார்த்திட மீண்டும்,
உடைந்து சிதறுது 
எனது இதயம்,
நீ நிஜமான ஓவியம்,
நடமாடும் நாட்டியம்,
நகைக்கும் சிற்பம்,
பார்த்திட பார்த்திட 
பார்த்திட வேண்டும்,
பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்,
உன்னை நித்தமெல்லாம்,
நிமிடங்கள் எல்லாம்,
என்றும் என்றென்றும்.

எழுத்தோலை!

இதுவெலாம்!

Apr` 29

மின்னல்கள் எல்லாம் ஒன்றுக் கூடி
நின்றுப் பேசிவிட்டு - என் 
ஜன்னல் வழி ஓரமாய்
வந்து சொல்லி சென்றது,

இன்னியும் தங்களால் 
மின்னிட முடியாதென்று,
உன்னவள் உலவிடும் ஊரிலே,
எங்களுக்கு இனியிங்கு வேலையேது - என்றே,

மின்னல் கீற்று கண்ணாள் நீ,
உன்னால் மட்டுமே முடியும் இதுவெலாம்.

எழுத்தோலை!

சேமித்து நான் ரசிக்க?

Apr` 29

தங்கத்தை வெட்டி எடுக்கும்,
சுரங்கத்தில் எனக்கும் வேலை, 

வெட்டி அள்ளி சலிக்க, சலிக்க
சலிக்காமல் மின்னிடும் தங்கமாய்,
உன் புன்னகை - என்னை
அங்கேயே ஆயுள் முழுதும் 
கிடக்க சொல்கிறதே,
நடக்குமா? 

நாளும், பொழுதும் உன்
பொன்னகை புன்னகைகளை
அள்ளி,
சேமித்து நான் ரசிக்க?

எழுத்தோலை!

வசந்த முல்லை, மல்லிகையே...!

Apr` 29

சந்தன இலையிலும் 
செந்தாழம் பூவிலும்
வாசனை இருப்பது பலருக்கு 
தெரியும்,

நீ பேசிடும் பேச்சினிலே
இரண்டையும் யார் கலந்தார்,
பரவசத்தில் என் உயிர்
என்னிடமே இல்லையே,

இதழ் ஜென்னல் வழி
தென்றலாய் பேசிடும்,
வசந்த முல்லை,
மல்லிகையே.

எழுத்தோலை!

துன்பம் மறந்து சாகிறேன்!

Apr` 29

பாலாற்றுத் தண்ணீரில்
தேன் கலந்ததுப் போலே - நீ 
சொல்ல, சொல்ல இனிக்குதடி,
சொற்கள் எல்லாம் செவியில்
சொர்கமும் வந்தது - என் 
அருகில்,

இடைவிடா பேசு,
துன்பம் மறந்து சாகிறேன்.

எழுத்தோலை!

புல்லாங்குழலும் தோற்றுப்போகும்!

Apr` 29

புல்லாங்குழலும் தோற்றுப்போகும் - அவள் 
இதழ்ப் பட்டு தெறிக்கும்,
குரல் அதனை கேட்டால், 

நான், கேட்டுக்கொண்டிருக்கிறேன் - அவள் 
இசைத்துக்கொண்டிருக்கிறாள்.

எழுத்தோலை!

அகிலா, அகிலா...

Apr` 29


அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,
அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,

புள் நுனிகள் எல்லாம் திமிரில் திரியுது பெண்ணே
சொல்லிவை, நீ எந்தன் சொந்தம் என்றே,
பச்சைக்கிளிகள் கூட பார்த்துவிட துடிப்பேன்,
பச்சைப்பிள்ளைப் போல் எனை
மாற்றியவள் நீதானே,
தேடலில், தேடா கிடைத்த சொந்தம் - நீயும்
தென்றலும், மின்னலும், தெளிந்த வானும்
கலந்து செய்த சிற்பமோ, எனக்கும்,

அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,
அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,

தெருவெல்லாம் பெண்கள் கூட்டம் இருந்தும்
அங்கெல்லாம் உன் முகம் மட்டும் தெரியும்,
கண்களில் நீயும் விழுந்த நேரம் தானே
எனை நானே தெரிந்துக் கொண்டேன்
ராக்சசி என்னடி செய்தாய் என்னை
சாட்சிகள் இல்லா கொலைகளும் செய்கிறேன் நானும்,
காட்சிகள் காலையும், மாலையும்
காற்றைப் போல் மாறிடும் போதிலும்,
நிலவாக நீ மட்டும் தானே
ஒளிகின்றாய் அழகாய் தானே,

அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,
அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா.


எழுத்தோலை!

எனை மறந்தே!

Apr` 28

மெல்ல மெல்ல என்னுள்ளே,
சொல்ல சொல்ல கேட்காமலே,
அழகே அழகாய் வந்தவளே - நீ,
ஒற்றை கேள்வி கேட்டதற்கே - என் 
செல்கள் எல்லாம் சிலிர்க்குதடி,
நித்தமும் என்னுடன் நீயிருந்தால்,
எப்படி திளைப்பேன் எனை மறந்தே.


எழுத்தோலை!

ஓராயிரம்முறை !

Apr` 28

உன் பெயரை ஓராயிரம்முறை 
உச்சரிக்கிறேன்,
ஏனென்று தெரியாமலே,
எதற்கென்று புரியாமலே,
ஸ்ரீ ராமஜெயம் எழுதிடாக் குறைதான்,
சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா,
சூடிட வா 
செண்பக பூச்சரமே.


எழுத்தோலை!

இறக்கைகள் இல்லா தேவதை...

Apr` 28


இறக்கைகள் இல்லா தேவதை - அவளை,
இரக்கமின்றி காதலிப்பவன் நான்,
அவளுக்கே தெரியாமல் - அவள்
இதயத்தில் நுழைந்தே, அமர்ந்தே,

உறங்கும் பொழுதுகள் மட்டுமே
கிறக்கம் கொள்ள செய்துவிட்டு,
விடியும் பொழுதில் மறையும்,
மடியில் கிடக்கும் வெண்ணிலா,
அவள்
சிரிக்கும் மணித்துளிகள் எல்லாம்,
துடிக்கும் இதயம் எனது - அதன்
சத்தங்கள் கூட அறிந்திடாதவள்
கனவுக்கே சொந்தக்காரியாம்,

இறக்கைகள் இல்லா
தேவதை அவள் - துளியும்
இறக்கம் இல்லா கோதையோ அவள்,
எனக்கென என்றோ பிறந்தே,
இன்றைய நாள் வரை
தெரியாமலே வளர்ந்தவள்,
எனக்கென என்றோ பிறந்தே,
இன்றைய நாள் வரை
தெரியாமலே வளர்ந்தவள்,
இறக்கைகள் இல்லா தேவதை, அவள்.


எழுத்தோலை!

கள்ளி!

Apr` 27

நொடிமுள் நொடிக்கும் நொடிகள் 
என் இதயத்தில் மின்னல் கொடிகள்,
சலனமின்றி நீ வந்ததும், போனதும் 
யாருக்கும் தெரியாது. 

கள்ளி,
சொல்லிவிட்டு வந்திருக்கலாமே.

எழுத்தோலை!

அதிசயம் நிகழ்ந்ததுப் போல் அதிர்ந்தேன்.....

Apr` 26

பல்லவி:

தனித்தீவில், தனிமையில் 
தவிக்கும் நிலவும் - தனக்கே,
துணையென உனை வர,
சொன்னாலும் சொல்லும், பத்திரம் (2)

சரணம்:

அதிசயம் நிகழ்ந்ததுப் போல்
அதிர்ந்தேன் ஓர் நாள்,
என்றுனைக் கண்டேனோ
அந்நாள்,
ஆகாயத்தாமரை அப்படியே
தரையிறங்கி, நடைப்பயின்றே
இதழ் சிரிக்க, எனக்கெதிரே
வந்ததால்,

பல்லவி:

தனித்தீவில், தனிமையில்
தவிக்கும் நிலவும் - தனக்கே
துணையென உனை வர
சொன்னாலும் சொல்லும் பத்திரம்,

சரணம்:

மழலை சிரிப்பில் உதிறும்
சிதறல்கள் எல்லாம் - உன்
இதழசைவில் நடந்திருக்க
வேண்டும்,
காணாமல் கண்டவன் போலே
கணக்கின்றி காண்கிறேன்
மணிக்கணக்காய் நாள், கிழமைப்
பார்க்கா,

பல்லவி:

தனித்தீவில், தனிமையில்
தவிக்கும் நிலவும் - தனக்கே
துணையென உனை வர
சொன்னாலும் சொல்லும் பத்திரம்,

சரணம்:

தவிக்காமல் தவிக்கும்
உன் மனசும் - துடிக்கின்ற
நொடிகள் எல்லாம் துயர்
துடைக்க துணையொன்று
இல்லாத போதும்,
விரும்பாமல் விரும்பி
தவித்ததுப் போதும்
தனிமையில்,
மேகங்கள் கூட்டாய் சேரா
மழையும் உண்டோ
வானில்,
பூங்காற்றும் வீசா
குளிர்காற்றும் சிலிர்க்குமோ
சொல்,

பல்லவி:

தனித்தீவில், தனிமையில்
தவிக்கும் நிலவும் - தனக்கே
துணையென உனை வர
சொன்னாலும் சொல்லும் பத்திரம் (2)


எழுத்தோலை!

அன்றுனை ஈன்றவள்!

Apr` 25

அன்றுனை ஈன்றவள் 
மா தவம் புரிந்திருக்க 
வேண்டும்,
மாவிலை கொழுந்தின் 
வாசம் வீசும் சோலைதனில்
நீயும் பிறந்திருக்க வேண்டும்,
மாநிறம் மிகுந்து,
மாதுளை கலந்து,
பிணைந்து செய்தார்ப்போல்
உன்னிநிறம் மின்னுவதால்,

ஒருப்புறம் பார்த்தால்
சந்திரன் ஒளியும் நீ,
மறுப்புறம் பார்த்தால்
ஞாயிறின் கதிரொளி,
எதிரினில் நின்றால்
இயற்கையின் பிம்பம் நீ
தொலைவினில் வந்தால் - தேடிடும்
பெண்களின் மனக் கள்வன் நீ...

இதயமும் உன்னிடம்
எத்தனை தான் உள்ளதடா
ஏணியும் உன்னிடத்தில்
எத்தனைமுறை தோற்க்குமடா,
ஏக்கமாய் பார்க்கிறோம்
உன் உள்ளம் தனில் செல்லவே,
தருவாயா ஓர் இதயம்
உறவாய், தோழனாய், சகோதரனாய்
உன்னை கொள்ள.

அன்றுனை ஈன்றவள்
மா தவம் புரிந்திருக்க
வேண்டும்,
அன்றுனை ஈன்றவள்
மா தவம் புரிந்திருக்க
வேண்டும்,


எழுத்தோலை!

உறக்கமற்ற இரவின்!

Apr` 25

முக்கனிகளில் ஒன்று, மா
முகம்தனில், இமைகளில், 
பலாவினை புதைத்த, வா -
ழை க்கொடுக்கும் சுவை,
அவள்,
கண்ணசைவில் கண்டேன்,
மைத் தோய்த்த அவைகள் 
காணவே சுவைக் கூட்டிடுதே.

உறக்கமற்ற இரவின்,
உளறல்கள்.

எழுத்தோலை!

இதழ்கள் கிடைத்தால்!

Apr` 24

மறுப்புகள் சொல்லா 
இதழ்கள் கிடைத்தால் 
என் செய்வேனோ 
நானும்,
கற்பனை செய்கிறேன் 
கீழ்க்கண்டவாறு,

மறுப்புகள் சொல்லா 
இதழ்கள் கிடைத்தால் ,
நல்லவனாய் நடிப்பேனோ,
நயவஞ்சகம் புரிவேனோ,
நாசுக்காய் நெருங்கி
நசுக்கி பிழிவேனோ,
நா நுழைந்து துழாவி
நா சேர்ந்து குழைவேனோ,
சுரப்பூக்கி இறைத்த நீரில்
வேட்கை தனித்து நிறைவோ,

போதும் இப்பொழுது இதுப்
போதும் போதும் என்றே,
மிச்சம் வைக்க எண்ணி
என்னிதழை பிரித்தாலும்,
நான் மட்டும் என்னவோ
இன்னும் அவள் இதழ்க்குள்ளே.


எழுத்தோலை!

அவள் செவிக்கும்!

Apr` 24

அவள் செவிக்கும் 
என் வரிகள் எட்டுமாயின் 
பகலிலும் நிலாக்காயும்,
இரவிலும் மழைப்பொழியும்,
என் தனிமையும் 
தனிந்துப்போகும் - என்னருகில் 
அவள்,
வந்து சேர்வதால்.

எழுத்தோலை!

உறங்கி மகிழவே!

Apr` 24

மெல்ல திறந்ததுக் கதவு,
கனவு தேசத்தில்
காதல் வாசம் செய்ய,
சென்று வருகிறேன்,
உறங்கி மகிழவே,
உறவாய் ஒருத்தி இல்லாதப் 
போதும்,
கனவிலேனும் கண்கள் காணட்டும்,
உருவமில்லா ஊர்வசியின்,
சங்கத் தமிழ் முத்தங்களில்,
வரிகள் எடுத்து
கவிகள் படித்திடட்டும்,

சென்று வருகிறேன்,
உறங்கி மகிழவே.

எழுத்தோலை!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - அன்பு அக்கா!

Apr` 23

வாருங்கள் தோழைமைகளே வாழ்த்திட,
என் அன்பு தமக்கையின் பிறந்தநாளில் இன்று.
----------------------------------------------------------


அன்பிற்கு மறுப்பெயர் 
உண்டோ, இல்லை - எங்கும் 
தேடியும் கானா செல்வமாய் 
கண்டேன் உங்களை, 
கடுந்தவம் புரிந்து
பெற்ற வரமாய், அரிதாய்
யார்க்கும் கிடைக்கா
சொந்தமாய்,
அன்னையாய், தமக்கையாய்
நீங்கள் கிடைத்ததில்
பெருமகிழ்ச்சி கொண்டேன்,

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. (குறள் 1117)

வள்ளுவம் சொல்லிய
குறளுக்கு ஒப்பாம் நீங்கள்,
பிறை வடிவம் கொண்டும்,
முழுவுருவம் பூண்டும்,
ஒளிர்கின்ற நிலவும்
ஏனோ சிறு களங்கம்
கொண்டே உலவிடும்,
அச்சிறு களங்கமும் இல்லா
வென்னிலவாம் நீங்கள்,

வாழியவே பல்லாண்டு,
இன்றுப் போல் என்றும்,
பலநூறு ஆண்டுகள் கடந்தே,
எங்களுடன் இணைந்திருந்தே.

வாழ்க வளமுடன்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - அன்பு அக்கா!


அன்பு தம்பி,
எழுத்தோலை!

நம் புவியை, உலகை காக்க!

Apr` 22

உருகத் தொடங்கியது பனிமலைகள் 
இனி ஓடி ஒளிய முடியாது,
எரிக்க தொடங்கிவிட்டது சூரியன் 
இனி மழையை வேண்டியும் பயனில்லை,
ஆடியும் போனது ஐப்பசியும் வந்தது 
வராமலே நிர்ப்பது நீயோ மழையே,

எங்கு காணினும் கரும் புகை,
கார் மேகத்தையும் கரைக்கும் புகை,
கார்பன் மோனோ ஆக்சைட்
கட்டை வண்டி காலத்தில் இல்லையே,
கார் வண்டிகள் பெருகி போனதும்
காற்றும் கெட்டே சூழலும் கேட்டதோ?

சிந்திக்க தொங்கவிடின் - நம்
சந்ததிக்கு நிர்க்கதியே,
சிந்திப்போம், காப்போம்
புவியன்னையை - அவளின்மேல்
நாடகமாடும் நாம் எல்லாம்,
உலக புவி நாளாம் இன்றே,
உறுதிமொழி எடுப்போம்
நம் புவியை, உலகை காக்க.


எழுத்தோலை!

அவள் குரல்!

Apr` 21

அலை ஓயும் 
என்றேனும் என்றே 
தினம், 
கரைதனில் நின்றாலும்,
கால்கள்தனை நனைக்க 
தவறுமோ,

மணல் மீது நின்றாடும் 
மயில் போலவே அவள் 
மயிர் பறந்திட்ட தருணம்,
குயிலொன்று கூவ
அவள் குரல் தானே
என்பேன் நானே.

எழுத்தோலை!

பொருள் நூறு !

Apr` 21

தினம் ஒருக் குறள் படித்தும் 
உனக் குரல் கேட்காது 
உறங்காது பெண்ணே
என் கண்கள்,

பொருள் நூறு 
குறள் சொல்லியும், 
அருள் கொடுப்பது,
உன்குரல் மட்டும் தான். 

எழுத்தோலை!