Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts

Sunday, October 26

எழுவர் விடுதலை உறுதி பெரும்..!

Mar 11` 2014


சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,
சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,

அறிவால் ஒரு நிலை மேல் கொண்ட தமிழா(மனிதா),
உன்னினம் மடிந்து வீழ்ந்ததை கண்டும்,
பெண்ணினம் கர்பிழந்து உருக்குலைந்ததை கேட்டும்,
துளியும் கலங்காத உன்னிலையே துரோகம்..,

வெகுண்டெழ வேண்டாம் - நின்று
வேடிக்கைப் பார்க்காதிருந்தால் போதும்,
வெடிகுண்டுகள் வீச வேண்டாம் - நீயறிந்த
அவலங்களை நாடறிய செய்தால் போதும்,

உண்மை நிலை உலகும் அறிய,
உண்ணாநிலை போராட்டங்கள் தொடரும்
உயிரையும் பொருட்படுத்தா மாணவர்கட்கு
உறுதுணை நின்றாலே போதும்..,

தமிழ் வெல்லும், தமிழீழமும் பிறக்கும்
எழுவர் விடுதலை உறுதி பெரும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./614822355276309/?type=3&permPage=1

ஒவ்வொன்றும் அழகோ அழகு..!

Mar 09` 2014


இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு,

கன்னம் உரசி காதினை மறைக்கும் 
உன் கார்குழல் அழகு,
செவ்விதழ் மறைக்கும் செவ்விதழ் சாயம்
சிலிர்த்திட செய்யும் அழகு,
புருவம் வளைந்து கார்முகில் ஆகவே
கச்சித பொருத்தம் அழகு,
கோதுமை நிறம் தங்கமாய் மின்னும்
தமிழச்சி உன்மேனி அழகு,

ஒவ்வொன்றாய் சொல்லிடவே ஆசையும் கூடுதே
அதற்கு என் இச்சென்மமும் போதாதே..,
இன்னும் ஏழு வேண்டுமே, மீண்டும்
மீண்டும் பிறந்து சொல்லிடவே,

இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613878338704044/?type=3&permPage=1

நெசமா யோசிக்கல ..

Mar 08` 2014



பெண்களின்றி கவிஞனும் கிடையாது, 
பெண்களின்றி கவிதையும் நமக்கேது.., 
பெண்ணும் கவிதையும் ஒன்றாம் 
பெண்ணே கவிதையே அழகாம்.

பெண்கள் தின சிறப்பு பாடல்/ கவிதை.
-----------------------------------------------------

நெசமா யோசிக்கல ...
-------------------------------

பல்லவி:

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம்:

வரப்பு வயலோரம் வாய்கா நடுவோரம்
எத்தி, எத்தி நடந்தவள ....,
சுத்தி, சுத்தி ஒளிஞ்சிருந்து ரசிச்சிருந்தேன்
கண்ணிமைக்கா மணிக்கணக்கா பார்த்திருந்தேன்..,
ஏபுள்ள எழுமிச்ச நெறமுள்ள மொசபுள்ள
ஏர் உழ மண்ணில்ல என் மனம் நீ உள்ள
மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல ...,

பல்லவி (2)

அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம் (2)

கருவேலம் காட்டுக்குள்ள குருவி சத்தம் காதினிக்க
கருவிழிக்காரி நீ சிரிக்க அத மறந்தேன்.,
நெல் கதிர் மேல கிளிகள் கூட்டம், கொஞ்சும் கீதம்
மயில் நடையா நீ வரவே கொஞ்சம் சிலிர்த்தேன்..,
வாத்துக கூட சேத்தினில் நடனம், நடவும் ரசிக்கும்
வஞ்சி நீ வந்திடவே நெஞ்சம் குளிர்ந்தேன்..,
எனை மறந்தேன், எதுவும் தோனலயே
மூளயும் யோசிக்கலயே..,
நெசமா என் மூளயும் யோசிக்கலயே..,

பல்லவி (3 )

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613185708773307/?type=3&permPage=1

பெண்மையை போற்றுவோம்..

Mar 08` 2014


அடக்கம், அடக்கும், ஆளுமை, அன்பும்
உணர்வும் ஒளிப்படர் மதிமுகமும் ,
ஒருங்கிணைந்த உருவம் ஓர் உருவம் 
அவள் பெண்ணெனும் தவம்.., 

தவமாய் தவமிருந்தாலும் தலைக்கீழ் நின்றாலும்
தாயாய் ஆணாக முடியாது,
அவள் வலிகள் சுமந்திட முடியாது,
அதை உணரவும் வழியேது..,

வழி போகும் வழியெல்லாம் காணும்
விழி அதுவும் காணும்,
பெண்கள் எல்லாம் பெண்கள் அல்ல
நல்ல விழிக்கொண்டு கண்டால்..,
பெற்ற தாயும், உடன் பிறந்தவளும்
உற்ற தோழியும் அவளே..,

அவளே நம் குலம் காப்பவள் ,
அவளே வணங்கும் கடவுள்,
அவளே அன்பையும், அறிவையும் கொடுத்தவள்,
அவளே பெண்ணெனும் குறள்..,

பெண்மையை போற்றுவோம்..,
கண்களாய் அவர்களை காத்திடுவோம்.

"இனிய மகளிர் தின வாழ்த்துகள்..,"
அன்பு சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612908152134396/?type=3&permPage=1

வென்றிடா உறங்கோம்..!

Mar 06` 2014



தாமரை மலரும், சூரியன் உதிக்கும், 
துடைப்பம் சுத்தம் செய்யும் - இவை
மூன்றும் இலையின் கீழ் இல்லாமல் போய்விடும் - என
சூளுரைக்கும் ஆளும் கட்சிக்குமிது பொருந்தும்,

நோட்டா இரைத்தாலும் நோட்டா இருக்க
நோகாது நொங்கு திங்க இயலாது.., - இங்கு
இலையும் கிளைகளின்றி காய்ந்து உதிரும்
தாமரையும் தண்ணீரின்றி கருகி கவிழும்..,

அடிமேலடி செருப்படி வாங்கியவன் வாக்காளன்,
வக்காலத்து வாங்க, வாய்க்கு வந்த வார்த்தைகளை
வாரியிறைத்து வாக்கு சேகரிக்க வருபவன் வேட்பாளன்.,
அவனையே நம்பி குடும்பம் மறக்கும் அவனடித்தொண்டன்,

மதியிழந்து கிடந்த நாட்களும் அன்று,
விதியென்று வாழ்ந்த காலமும் சென்றது,
இனியொரு விதி செய்திட விழுந்தோம்
வீதிகளில் எங்கள் போராட்டங்களால் வென்றோம்...,

இளந்தலைமுறை மொழியின உணர்வாளர்கள் நாங்ளே,
எங்களை தட்டி எழுப்பியது என்னவோ நீங்களே.,
வெல்ல துடிப்பது எங்கள் போராடும் குனமொன்றே
வென்றிடா உறங்கோம் தழீழம் நமதே.

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612148192210392/?type=3&permPage=1

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே!

Mar 04` 2014


கோடிட்ட இடத்தை நிரப்புனீர் அன்று 
பள்ளியில் புள்ளி மான்கலென..,
கேள்வியும் இதுவாய் தானே இருந்தது 
சிறுத்தையை விட வேகமாயோடும்..,

ஓடும் அதிவேகம் தாவி வளைந்து,
தன் இலக்கை தவறவிடா,
சிறுத்தையும் சிரத்தையும் எண்ணா, உண்ண
இன்னொரு உயிர் தேடலில்..,

தேடும் இடம் அடர் வனம்
அது ஒருக் காலம் - புதர்கள்,
புல்வெளிகள், வான் மறைத்த மரங்கள்
எங்கள் இனங்களின் புகலிடம்..,

புகலிடம் புது இடமாய், மாயமாய்
புது, புது வீடுகளாய் - இன்று
மரங்களை காணோம், மலைகளை காணோம்
எங்கள் சந்ததிகளும் காணோம்..,

காணாமலே இன்னும் சில காலங்களில்
நாங்களும் போய் விடுவோமோ,
நாளை பிள்ளைகளும் எங்களை எட்டில்
பார்த்தே எண்ணங்களில் மகிழ்வாரோ..,

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே உணர்வீரோ
எங்களுக்கும் உணர்வுண்டு அறிவீரோ,
நாங்களும் உயிர்களே, உறவுகளே கருணையுடன்
எங்களயும் பார்ப்பீரோ இனியேனும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611123258979552/?type=3&permPage=1

இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

Feb 26` 2014



இயற்கையை காப்போம்!
-----------------------------------

இந்த புவி இன்று 
புதுமைகளை கண்டதெல்லாம் 
உன்னால் தான் மனிதா..,
வானளாவிய கட்டிடங்களும் - அதற்கு
மேலே கூர்த்தீட்டி நிற்கும்
அலைவரிசை கோபுரங்களும் சாத்தியமானது
உன்னால் தான் மனிதா...,
எங்கு பார்க்கினும் பறந்துக்கொண்டிருக்கும்,
சாலைகளில் எல்லாம் விரைந்துக்கொண்டிருக்கும்
வான் ஊர்திகளும், வாகனங்களும்
உலவிட ஊர் கடந்திட உதவியது
உன் திறமை தான் மனிதா..,
இன்னும் பல பிரம்மாண்டங்கள்
வியக்க வைக்கும் அதிசயங்கள் எல்லாம்
உன்னால் தான் மனிதா...,

இவையாவும்,
இன்றைக்கு இல்லாமல் இருந்திருந்தால்
இந்த பூமி தோன்றியதைப் போலவே
பசுமையாய் சிரித்திருக்கும்...,
எங்கு காணினும் கழிவுகள் இன்றி
இன்னும் வளமாய் தன்னை கொண்டிருக்கும்...,
வற்றாத ஆறுகள் இன்னும் கிடைத்திருக்கும்...,
பொங்கும் சமுத்திரம் விழுங்கா - பல
நிலங்கள் இன்றும் இருந்திருக்கும்..,
மரங்களே மண்ணை காத்திருக்கும்...,
அதன் பரப்பில் அன்று வாழ்ந்த
டைனோசர்களும், மமூத் யானைகளும்,
ஏட்டினிலும், கணினியிலும்
காணும் இன்னும் பல உயிரினங்களும்
இன்றும் வாழ்ந்திருக்கும்..,
பறவைகளும் மகிழ்ந்திருக்கும்...,

எல்லாம் போனது மனிதா ...
ஏட்டு சுரைக்காய் வைத்துக்கொண்டு
பசிக்கிறது என்பதில் பலனென்ன நண்பா..,
இழந்தவை மீள்வதும்,
இறந்தவர் சிரிப்பதும் சாத்தியம் தானா
இருப்பதை நாளையும் இருந்திட செய்வோம் - இனி
எஞ்சி இருப்பதையாது அடுத்த தலைமுறைக்கு
விட்டுவைப்போம்.., புவியை காப்போம்
நம்மால் முடிந்தவரை மரங்களை வளர்ப்போம்,
இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608050309286847/?type=3&permPage=1

தவமாய் பெற்ற தவப்புதல்வன்..!

Feb`13 2014


காட்சிகளை வெறும் காட்சிகளாய் 
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை,

இவன் இருந்தான் சுருள் மகிழ்ந்தது
இனி மறைந்தான் இருள் சூழ்ந்தது..,
துல்லியம் தெரியா துள்ளித்திரியும்
துணை இயக்கம் துள்ளல் முறிந்தது,

ஆசானாய் அள்ளி, அள்ளி வழங்கிய
யோசனைகளை எல்லாம் இனி யார்தருவர்..,
எங்கும் சுழலும் சுருள்சக்கரம் காட்டும்
காட்சிகளும் கசக்கும், ஒளியுகம் சிரிக்கும்,
திரையுலகு தவிக்கும், தலைமுறைகள் ஏங்கும்..,
தவமாய் பெற்ற தவப்புதல்வன் உறங்கிடவே,

காட்சிகளை உணர்ந்த என் கண்கள்
இன்று கண்ணீரை உதிர்த்தப்படி ..

காட்சிகளை வெறும் காட்சிகளாய்
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./600644150027463/?type=3&permPage=1

சாதிகள் இல்லையடி பாப்பா!

Jan 17`2014



எதிர்வரும் ஞாயிறு அன்று,

கூடல் நகர் கவிஞர் பேரவை மற்றும் ஓவியன் கலைக்கூடம்!
(இடம்: காந்தி திடல், (கூடலூர், நீலகிரி மாவட்டம்), நாள்: 19.01.2014)

இணைந்து நடத்தும்
சமத்துவ பொங்கல் விழா கவியரங்கில்,

கொடுக்கப்பட்ட தலைப்புக்கு நான் வாசிக்க இருக்கும் கவிதை,

-----------------------------------------
சாதிகள் இல்லையடி பாப்பா!
-----------------------------------------

தீப்பிழம்பினும்,
விரைந்து அழிக்கும் இந்த தீ
ஒரு வியாதியே இச் சமூகத்தில்
பரிந்துரைக்கப்படாத மருந்துகள் போல்
சுயமருத்துவம் செய்துக்கொண்டு
தனக்கு தானே, தனித்தனியே ஆங்காங்கே
பிரிந்து விரிந்து அழித்துக்கொண்டிருக்கிறது..,
நம் சமூகத்தில்,
வறண்ட நிலத்தில் பிளந்துக் கிடக்கும்
மணர்குழம்புகள் போலே..,

சாதி என்கின்றனர்..,
சாத்தியக்கூறுகள் ஏதும் அறியா
சம்பிரதாய மடமை கயவர்கள்..,
வேதியல் மாற்றம்
உடல்ரீதியில் தெரிய
மனமுவந்து மனம் திறந்து
காதல் மலர்ந்து திருமணம் புரிந்து
புதியதோர் வாழ்வியல்
தொடங்கிடும் தருணமே
குறுக்கிடும் இந்த தீப்பிழம்பும்
பொசுக்கி விழுங்கிடும் கொடுமையும்
நிகழ்வதும் நீங்குமோ,

ஒதுக்கி, ஒதுக்கி,
ஒதுங்கி, ஒதுங்கி முழிப்பிதுங்கி
வழிப்பாதை, வழிப்பாடு ஆலை(யம்)
பாடசாலை நுழைந்திடா நாளை
சீர்த்திருத்திய பெரியார் - முதியவர்
முறிந்துப் போன முருங்கை கிளையாய்
என்றோ அவருடன் புதைத்துவிட்டு
ஒதுக்கினர்..,

இடமாம், ஒதுக்கீடாம்
பார்பனனாம், பறையனாம்
இதற்கு இடைப்பட்ட இடைசாதி
வன்னியனாம், தேவனாம் இன்னும்
நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களால்
வீதிக்கொரு கட்சியாம்,
வீட்டுக்கொரு சங்கமாம்,

பள்ளியில் சேர்க்கையில்
விதைத்திடும் முதல் விதை
விண்ணப்ப தாளில் கேள்வியாய்
சாதியின் குறிப்பீடு - இதில்
சாதிக்கு ஏற்றவாறு மதிப்பீடு
திருந்துமோ அரசும்,
திருத்துமோ அதன் அரசாணையையும்,
அணைக்குமா சாதீய தீப்பிழம்பும்
அன்பால் அனைவரையும்
அரவணைக்குமோ இச்சமூகம்..,

குருதி ஒன்றெனில்
மனிதமும் ஒன்றே.
சாதிகள் இல்லையெனில்
சமூகமெல்லாம் சமமே,
இதை உணர்த்திட
உண்மையை உணர்ந்திட
ஒன்றினைவோம்
ஒர்குடைக்குள்,
ஒன்றே குலமென்ற
ஒருங்கிணைப்பில்,

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

எழுத்தோலை!

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

24th Dec 2013


இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து 
வெள்ளை மேக மூட்டம் போல் 
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து 
மனதெல்லாம் குளுமை சூழ்ந்து கொண்டது ..,

உலகெல்லாம் உண்மை நிலைத்து நிற்க
மானுடமெல்லாம் மனிதநேயம் செழித்து
காணும் இடமெல்லாம் அன்பொன்றே
கடவு சொல்லாய் கடவுள் சொல்லாய் ..,

ஏழைக்கும், ஏழ்மையே தெரியாதவர்க்கும்
இன்முகம் கொண்டே எடுத்துரைக்க
அவதரித்த தேவன் மகனோ நீயும்
உதித்த நாளும் இதுவோ...,

மார்கழி பிறந்ததால் நிலமெங்கும் குழுமை - நீ
மார்கழியில் பிறந்ததால் எங்கள் மனதிலும் குழுமை..,

இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து
வெள்ளை மேக மூட்டம் போல்
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து
மனதெல்லாம் குளுமை சூழ்ந்தது உன்னால்...,

இன்னாள் மாத்திரம் அல்ல எந்நாளும் குளுமையே -உன்னை
என்றென்றும் எங்கள் இதயத்தில் சுமப்பதால்.

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

* MERRY CHRISTMAS *

எழுத்தோலை!

ஆதலால், காதல் செய்வீர்..!

21st Dec 2013



நீ வெறுக்கும் ஒவ்வொரு உயிரும்
இன்னொருவருக்கு உயிராய் வளம்வரும்
அன்பு என்றும் நிலையானதே இப்புவியில்
அதற்க்கு எப்படித்தெரியும் ஏழைப்பணக்காரன்,
ஆதலால், காதல் செய்வீர்,
தனிமையைத் தகர்த்தெறிவீர்.

எழுத்தோலை!

விடியாத வறுமை, குடியானவன் குடிலில்! (உலக சாதனைக்கான படைப்பு)

19th Dec 2014





வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்.., (1)

ஒருக்காணி நிலமுண்டு அதனில்
சோளமும், நெல்லும் நடவும் எத்தனித்தே
வளமாய் வாய்கால் வழி நீர்செலுத்த
இரவும், பகலும் உறக்கம் மறக்கும்
வயிற்றில் வரிப்படர்ந்த வருமை உழவன்
வானம் பார்த்து காத்து நிற்க.., (2)

குடியானவன் (உழவன்) குடிலில் விடியாத வருமை
ஏர்கலப்பைகள், எருதுகள், ஏற்றமும் இல்லை,
இயந்திற கலப்பைகள் அதுவும் எட்டாக்கனி நிலைமை
மின்சார எற்றமும் மின்வெட்டு இடைவேளை(யில்)
தள்ளூப்படிக்கு தவிக்கும் வட்டியுமதன் குட்டியும்
ஒருவேளை உணவை ஒத்திகைக்குகூட காட்டிடவில்லை..,(3)

இயற்கையும், செயற்கையாய் மாறிடும் காலத்தில்
பயிர்செழித்த பூவியதில் பூகோள கோடுகள்
சதுரடி அறுபது ரூபாய் பெயர்பலகைகள்
நகரத்திற்கு மிக அருகில் மிகைசொற்கள்
ஏழையும், ஏழ்மையை மாற்றிட துனியும்
எந்தநொடியும், அவன்பிடியை பிரியும் விவசாயம்.., (4)

இப்படியும், எப்படியும் வாழ்வதும் நகர்வதும்
முண்டியடித்து முன்னேற முயல்பவர் துவல்வதும்
ஏறிய ஏணியை எட்டிவிட்டு பார்பதும்
ஏளனமாய் ஏழையை பார்பவர் இருப்பதும்
இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதும் - எல்லாம்
ஆசை எனும் இச்சையால் விளையுமோ..,(5)

வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்
ஏழை உழவன் அவன்நிலை நினைத்து
வருந்தும், வரிசையில் நம்மில் எத்தனைப்பேர் இங்கே?.., (6)

இயந்திர கலப்பை = Tractors
மின்சார எற்ற(மு)ம் = Pump Set

எழுத்தோலை !

என் செல்ல மருமகளே, "3சா"

11th Oct 2013

எப்பொழுதும் மழை என் நெஞ்சில்
எப்பொழுதும் மழை என் நெஞ்சில்
மழலை இவள் மொழிக் கொஞ்சல்-தனை
நிதம் கேளாதிருந்தும் எதிர் ஒலிக்கும்
என்றுமென் செவி அதனில் அருவியாய்,

எப்பொழுதும் புயல் என் உயிரில்(இதயத்தில்)
எப்பொழுதும் புயல் என் உயிரில்(இதயத்தில்)
இவளை (புகைப்படத்தை) கடக்கும் தருணங்கள் எல்லாம்
வேரோடு சாய்ந்த பனைமரம் நானே,
வேராரோடும் இல்லாத பந்தமோ இவளும்
என் அக்காள் வயிற்றில் உதித்த
அல்லி மலர் கொத்தின் குவியல் அழகும்,

இப்பொழுதும், எப்பொழுதும் முப்பொழுதும்
முகமலர்ந்த சிரிப்பதுவில் முழுமதியாம்,
அம்மாவின் அம்முவாம் நீயும்
அழகாய்தான் கடந்தாயோ ஒன்பது வருடம்,

அல்லித்தண்டு கால்கள் இரண்டும், பதிக்கும்
நடக்கும் முதல் நாள் இன்றும் - உனக்கும்
பிறந்தநாளோ அழகே, அழகாய் எடுத்துவை
எல்லாம் இனிதே, இனியெல்லாம் வளமே,

வாழ்கவே நீ நலமோடு, நல் குணமோடு
வாழியவே நீ பல்லாண்டு பல நூறாண்டு
போற்றும், உன் புகழ்ப்பாடும் பெயருடுக்க
அன்னையின் சொல்கேட்டு, ஐயனின் பொருள்கேட்டு
நடந்திடவே, நடந்திடுமே யாவும் நலமாய்.

வாழ்த்துகள் மாமனின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என் செல்ல மருமகளே, "3சா"

எழுத்தோலை!

கடல் கடந்து, தூர தேசம் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் ....

08 Oct 2013



கடல் தாண்டி தடம் பதித்தாலும் - இன்றும்
இங்குள்ளப்படியே அங்கும் ஆராதனைகள்,
தமிழ் கலாச்சாரங்கள், மொழிப் போற்றுதல்கள்
எல்லாம் அளவாய், அழகாய், அழகாய்...,

எந்நாடு சென்றாலும் கலாச்சாரம் மறக்காமல்
வாட்ஸ்அப் (Whats up?) என்றாலும் வாடிக்கை மறைக்காமல்
பண்பாட்டை இன்னும் புண்ப்படா காத்து
புன்னகை பூக்கும் புகைப்படம் எடுத்து
தாய்நாட்டில் இருந்தும் எல்லாவற்றையும் மறந்த
எங்களையும் நீங்கள் கேள்வி கேட்பதுப் போன்றே,
உச்சந்தலையில் நச்சென்று குட்டிய்தாய் உணர்கிறேன்,

வாழ்க நீவீர் நலமுடன் வளமுடன் - என்றும்
குறைவில்லா புன்னைகை இதழுடன்.

கடல் தாண்டி தடம் பதித்தாலும் - இன்றும்
இங்குள்ளப்படியே அங்கும் ஆராதனைகள்,
தமிழ் கலாச்சாரங்கள், மொழிப் போற்றுதல்கள்
எல்லாம் அளவாய், அழகாய், அழகாய்...,


எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./532401573518388/?type=3&permPage=1

Fake ID யால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.


01 Oct 2013



Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

Emailu facebooknu
Freeyaa கொடுத்தா மாமு
ஆளாளுக்கு accounttu ஒன்னு
Open பண்றான் மாமு
Emailu facebooknu
Freeyaa கொடுத்தா மாமு
ஆளாளுக்கு accounttu ஒன்னு
open பண்றான் மாமு

Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

Profile picturela பொண்ணு போட்டோ
Cover photola குழந்தை photo
பேருக்கூட வச்சான் பாரு
Research பன்னினாக் கூட கெடைக்காதப் பேரு
அட, அங்கதான் நூறுப் பேரு
Queவுலதான் நின்னான்ப் பாரு,

Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
Fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

Hiனு status போட்டதுக்கு 50 likeu
I am sorrynu status போட்டதுக்கு 100 commenttu
கொழந்த photova share பன்னா
அதுக்கு கூட 40 பேரு.....,
Cute, beautifulnu அடிச்சிவிடுறான்
என்ன கொடும sir இது,
எத்தனப்பேரு chatla போய்
I love you சொன்னானோ..,
ஏமாந்த கொக்காட்டாம்
அவன்கிட்ட bulbutதான் வாங்கினானோ,

fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு,

பொம்மைக்கு பொடவ கட்னாலே
பெருமூச்சி விட்டவங்கடா நாங்க
நமிதா படம் போட்ட idல இருந்து
friend request வந்தா விட்ருவோமா தூங்க
எல்லாமே மாயைன்னு தெரிஞ்சிகிட்டோம் lateta
இந்த facebookke fakebookkunu புரிஞ்சிடுச்சி righttaa
போதுண்டா, போதுண்டா fakeக்கான friendshipe
fake idக்கு goodbye சொல்லாட்டி வீணாகும் வாழ்க்கையே,

fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு...
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு
fakeu fakeu fakeu
நம்மல ஆக்கிபுட்டா பேக்கு...

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./529142487177630/?type=3&permPage=1

என்னை இன்னும் வலுப்படுத்தும்..!

22nd Sep 2013


என் எண்ணங்களை இங்கு பதிவிட 
எழுத்துக்களை தமிழிடம் யாசிக்கிறேன்
விருந்துப் படைத்தர் போல சுவையாய் 
சொற்களும் சொல்லிடமாளாது கிடக்க 
அள்ளி அள்ளி மையில் கலந்து 
அவையோர் யாவர்க்கும் படைக்கிறேன்,

பசிமறந்து, படித்து மகிழ்ந்து நீங்களும்
ருசியெப்படி என்று சொல்லி செல்லுங்கள்,
தவறுகளை திருத்திடவும்,
புதுமைகளை சேர்த்திடவும் - என்னை
இன்னும் வலுப்படுத்தும் அதுவும்.

நன்றி, நன்றி அன்பர்களே, நண்பர்களே.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./524874314271114/?type=3&permPage=1

ஆண்டாண்டுக்கும் வியக்கும்!

17th September`2013



அழகாய் அரும்பிய அல்லிமலர் யாவும் - உன் 
அழகில் நாணி பொய்கையில் மூழ்குதே,
அரும்பி சிரித்த மல்லிகை பூவும் 
அரைநொடி தாமதமாய் இலைமறைவை நீக்குதே, 
ஆரவாரம் செய்திடும் முளரிப்பூக்களும் கூட 
அடங்கித்தான் போகுதடி அம்மணிநீ கண்ணிமைக்க,
அடியெடுத்து நடைப்பயிலும் அன்னமும்,
அணிவகுப்பில் முன்செல்லும் மயில் நடனமும்
ஆண்டாண்டுக்கும் வியக்கும், சொல்லும் உன்னழகை.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... பிரியா! 

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai

Friday, September 13

நானும் "எழுத்தோலை!"


ஆகஸ்ட்` 29

இங்கிருந்தும் இல்லாதுப்போலே 
நின்றிந்தும் முடியாமல் 
கண்மறைந்துப் போவதும் மேலோ
இன்றில்லை, நேற்றில்லை 
நாளையும் இப்படியே
தொடர்ந்திடும் யாவும் துயரம்
கொன்றிடும் கொடியதும் 
கோவம் முற்றிடும்
முன்னரே (முகநூலிலிருந்து) 
மறைக்கின்றேன் இந்நிமிடமே,
நானும் "எழுத்தோலை!"

சாரல் குளிர்ப்பட்டு நெடுநாளா ஆகுதுல்ல..


ஆகஸ்ட்` 27

மேகம் கருக்குது,
மழ வரப் போவுது, 
சாரல் குளிருக்கு 
மனசெல்லாம் ஏங்குது,
வாடி மழப்புள்ள - என்னைத் 
தேடி என்னூருக்குள்ள...,

வருஷம் முழுசாக 
வதங்கி தான் நான் கெடந்தேன்,
வறுத்த வாழைக்கா போலதானே
சுருங்கி தான் போயிருந்தேன்,
வாடி மழப்புள்ள - என்னைத்
தேடி என்னூருக்குள்ள,
சாரல் குளிர்ப்பட்டு
நெடுநாளா ஆகுதுல்ல..

எழுத்தோலை!

ஆதலால் காதல் செய்வீர்...


ஆகஸ்ட்` 24

காதல் எனும் கருமம் 
காமத்தில் முற்றும் - அதன் 
அடையாளங்கள் அனாதை 
இல்லங்களை நிரப்பும்,

ஆதலால் காதல் செய்வீர்.

எழுத்தோலை!