Wednesday, February 29

ரோஜா மலரே !





செஞ்சிவப்பு
, மஞ்சள் கூட்டாய்
வண்ணத்துடன் கமழும் வாசம்,
வைகறையின் வழிகள் நடுவே
வளர்ந்து கிடந்த ரோஜா மலரே !

வாசனை உன் வாசனையில் தான்,
எத்தனை ரகம், ராகமாய்?

கோவிலில் கடவுள் வாசம்
பெண்ணிடம் ஆசை வாசம்
சாவினில் சோக வாசம்
செடியினில் பூத்த வாசம்

உன்னை கொடுத்து அவளிடம் சொன்னேன்,
உன்னைவிட அவள் அழகென்று...

நீயோ முறைத்தாய், அவளோ ரசித்தாள்,
நான் சொன்னது பொய் என்று புரியாமல் !




:::: இராம்குமார் கோபால் ::::



Thursday, February 23

அர்த்தம் !

புன்னகை - நீ வீசிச்சென்றது
புயல் - என் நெஞ்சை பற்றிக்கொண்டது
உறக்கம் - எனக்கு வெறுத்துவிட்டது
விடியல் - தேடி, கண் விழித்தது
கால்கள் - உன்னை காண வந்துநின்றது
ஏக்கம் - மனம் முழுதும் கவ்விகொண்டது
வருகை - நீ வரும் நேரம் தெரியா நான் தவித்தது
ஏமாற்ற்றம் - நீ வந்தும் என்னை கண்டுகொள்ளாமல் சென்றது
பெண்கள் - தெரிந்தோ தெரியாமலோ அழகாய் இருப்பது
ஆண்கள் - சின்ன சிரிப்புக்கும் அர்த்தம் தெரியாமல் சிக்கி மடிவது

இவையாவும் நெடுங்க்கால தொடர்ச்சி, எனினும்
எனக்கு இது புரியாத புதும்முயற்சி .....


:::: இராம்குமார் கோபால் :::::


Monday, February 20

மின் வெட்டு !




இருண்டு போகும் பொழுதுகள் - நீளும்
நாளிது பொன்னாளிது, அம்மா !
உங்கள் கருணையில், மலர்ந்திட்ட
பகலது இரவாய், இரவது இருளாய் !!

என்னதவம் செய்தோம் நாங்கள்
மிரட்டும் உந்தன் குரலைப்போலே
மிரண்டு போன எங்கள் வாழ்வும்
இருண்டு போவதோ, இன்னும் கொடுமை !!

:::: கோ.இராம்குமார் ::::



தேடல் !


நிலா முற்றத்தில்
நிழல் மாற்றத்தில்
நிஜம் தொலைத்த தேடலில்
நீங்கா உந்தன் நினைவலையில்
நீண்டநேர காத்திருப்பில் - நீ
வராத சோகம் கண்ணை கிள்ள
வார்த்தை யாவும் மறந்துப்போக
கடைசி ரயிலும் போனதடா - என்மேல்
கோவம் ஏதும் கொள்ளாதேடா
நீ மட்டும் போதும், என்றும் - என
என் நெஞ்சில் ஒலிக்கும் ராகம் எட்டும்
நீங்காத ரீங்காரமாய் என்றும் - உன்
தோள் சாய்ந்து உறங்க வேண்டும்
தவறேது செய்தேன் அன்பே ! - என்
தவம் நீயே ! தாயும் நீயே !!
தாலாட்டு, தமிழ்ப்பாட்டு எல்லாம்
உன் பெயராய், உச்சரிக்கும் நானும்
நீ இன்றி நிலத்தில் புதையும்
பிணமாய் மக்கி போவதே மேலோ ?



::::: இராம்குமார் கோபால் ::::::


Saturday, February 18

புறா விடு தூது!


ஒருக்காலமும் இருந்தது
ஓலை வழிச்செய்திதனை
ஒற்றன் அவன் எடுத்துக்கொண்டு
ஓரிரு மாதம் காலம் தாழ்த்தி,
உரியவரிடம் கொண்டுச்சேர்க்க !

அடுத்தக்காலம் என்னவெனில்
தூது அனுப்பி தெரிவித்தல் - புறா
விடு தூது அதுவும், ஓரிரு
வாரம் பறந்தோடியே பெரு-
நவரை சேர்ந்திடுமே !

மூன்றாம் காலம் காகிதம்-
மூலம், தபால்த்தலை ஒட்டியே
சேர்த்திட பெட்டியில், ஓரிரு
நாளில் விலாச குறிப்பில் !

மேகமாய் ஓடும் காலமோ இன்று !
மின்னஞ்சல், குறுஞ்ச்செய்தி, செழுஞ்செய்தி
இணையில்லா விரைவில் இணையம்
இதுப்போதும், எப்போதும், எவரோடும்
இருந்திட தொடர்பினிலே முப்பொழுதும் !

காலம் மாற்றம் கண்ட நிமிடம்
உள்ளன்கையில் வந்தது உலகம்.

:::: இராம்குமார் கோபால் ::::




சேலைவனம் !


மலர்ச்சோலை, பூமாலை
மதிமயக்கும் அதன் வாடை
இவைப்போன்று ஒருவேளை - அவள்
அணிந்திருந்தாள் பட்டுசேலை.

பறந்திருந்த சேலை தலைப்பும்

சிறியதாய், அவளிடைத்தனை காட்ட ,
ஆஹா! என்ன அழகு, கண்கள் சொன்னது !

சேர்ந்திருந்த கொசுவமடிப்புகள்

கொஞ்சமாய், கீழிறங்கி கிடக்க
ஐயோ! என்னை விட்டுவிடு, இதயம் சொன்னது !

மறைந்திருந்த மாராப்பும் மெல்லியதாய்

மறைத்தும், மறைய மறுக்கும் களிநுதுப்பு
ஆஹ் ! வேண்டுமா என்னை, என்றது !

மொத்தமாய் சொல்வதெனில் - அவள்
முந்தானை முடிச்சினிலே சிக்கிக் -
கொண்டேன், படு முடியாய் விடியும்வரை.


விடிந்தால் மறந்துப்போகும் கனவுதனில் !


:::: இராம்குமார் கோபால் :::::



Friday, February 17

பசி !

பசித்து கிடந்த நாளில் எல்லாம்
பார்த்து கிடக்கும் பரதேசியும் நானோ.

என்னைப்போல் எத்தனை ஆயிரம், லட்சம்
பேர், அரை வயிறும், கால் வயிறும் நிரப்ப
அல்லாடி, தள்ளாடும் தாளம்மில்லா திண்டாட்டம்.
இருப்பவன் கொடுக்க மனம் இல்லா திருப்பதாலே,
இல்லாதவன், இயலாதவனாய் கையேந்தி

கடை த்தெருவிலும், கோயில் வாசலிலும் !




PLEASE HELP POOR, IF THEY REALLY POOR !



Monday, February 13

புலம்பல் !


என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.
இல்லா உலகில் இருப்பது போல்,
கனவுகள் கண்டுக்களித்தேனே ...

என்ன சொல்ல வந்தேனோ
ஏதோ சொல்லி நின்றேனே (2 )

சில்லென்ற தென்றல்ககாற்றை நானுமே
சேர்த்துவைக்க காத்திருந்த நேரமே
புயல் வந்து புலம்பெயர்ந்த அடிவேராய்
திசைமாறி குடியேறும் - அவளின்
மேல், மெல்லியதொரு மேலாடையாய் !

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.
இல்லா உலகில் இருப்பது போல்,
கனவுகள் கண்டுக்களித்தேனே ...

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.(2 )

மழைமேகம் தோரணங்கள் போலவே
மாலைந்நேரம் சாரலும் தூரவே
மதியிழந்து மயங்கியே நானுமே
மதிலோரம் சாய்ந்திருக்கும் அவளின்
மேல், சுவரொட்டி காகிதமாய் !

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே.
இல்லா உலகில் இருப்பது போல்,
கனவுகள் கண்டுக்களித்தேனே ...

என்ன சொல்ல வந்தேனோ,
ஏதோ சொல்லி நின்றேனே. (2)

::::: இராம்குமார் கோபால் ::::::



Friday, February 10

அவள் வருவாளா ?



கைக்கெட்டிய கனி இருந்தும்,
உச்சிக்கிளை ஏறி உலிக்கிட உதிர்ந்திடும்
நெல்லிகனியாய் புளித்துப்போனதோ நம் காதல் !

உன்னோடு நடந்து போன தெருக்கள் - அன்று
ஏனோ, இல்லை மின்வெட்டால் இருளாய் ...
உன்னோடு சண்டையிட்ட பூங்காக்கள் - அன்று
ஏனோ, இல்லை ஆறுமணிக்கு மேலாய் ....
உன்னோடு பேசிய செல்போன் இணைப்பு - அன்று
ஏனோ இல்லை போஸ்ட் பெய்ட் போனாய் ...
உன்னோடு ஊர்சுற்றிய ஞாயிற்று கிழமைகளில் - அன்று
ஏனோ இல்லை என்னிடம் ஆயரம் ரூபாய் ...

இதனால் தான் நீ என்னை, பிரிந்தாயோ !

வருடா வருட காதலர் தினமன்று - உனக்கு
கொடுத்த, புது அலைபேசிகள் கூட என்ன நினைத்திருக்கும்,
என்னை கட்டிப்பிடித்து தூங்குவதாக சொல்லி - நீ
கட்டியணைத்து தூங்கிய கரடி பொம்மையும் கூட என்னை புரிந்திருக்கும்,

எப்படியடி நீ மறந்தாயடி?

உனக்கு பிடிக்கும், உனக்கு பிடிக்கும் என்று
எனக்கு பிடித்ததை கூட மறந்து போனேன்,
நினைத்து பார்க்க, நெஞ்சு துடிக்கிறது,
நீ இல்லாத இன்றைய பொழுது.

நிஜம் இல்லை பொய்தானோ என்று - நீ
வருவாய் என காத்திருப்பேன் காதலர் தினமன்று...



:::::::: இராம்குமார்கோபால் :::::::::


Saturday, February 4

பொய்!


அச்சில் வார்த்த சிலை வடிவும்,
அரசியை ஒத்த அலங்காரமும்,
அவள் அழகை சொல்லும் உவமைகளாய் !

அரியணை அமர்ந்த, அதிகாரமும்,
தலையணை சாய்ந்த, தலைகனமும்,
அவள் பண்பை உணர்த்தும் புதுக்கவிகளாய் !

பார்க்கும் பார்வையில், வெட்கமும்,
சிரிக்கும் சிரிப்பினில், அடக்கமும்,
அவள் இயல்பை காட்டும் எழுத்துக்களாய் !

என்னை மயக்கிய அவள் கண்களும்,
காதலில் அவளது, பெண்மையும்,
சிரித்து பேசியதெல்லாம், பொய்களாய் !

பொய்யாய் போன வாழ்கையில்,
கரைந்தோடும், கண்களில் கண்ணீராய் !!


::::: இராம்குமார் கோபால் ::::::