Thursday, April 12

நிறம்! (Racism)




வண்ண வண்ண பூக்கள் யாவும்
வார்த்தை பேச முடியாததாலோ,
வர்ணம் பல வண்ணங்களில்,
வாசனையோடு பூத்து பேசும்,

மனிதா உனக்கு என்னக்குறைச்சல்,
பேச நாவும் உள்ளதுதானே,
நிறத்தில் என்ன நிறைய கண்டாய்?.

நிரந்தரம் இல்லா வாழ்வு அதனை,
நிறத்தை கொண்டா நீட்டிக்க செய்வாய்?
நிஜமாய் நீயும் நிறத்தை வெறுக்க,
காரணம், இல்லா காரணம் சொல்வாய்?.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு எல்லாம்,
பார்க்கும் கண்ணுக்கு குளுமை தரலாம்,
கண்ணை புடுங்கி, என்நிறம் கேட்டால்
என்னென்று சொல்லும் உந்தன் நாவு?

கண்ணன், அவனை கார்மேகம் என்பர்,
கள்வன் அவன் பின் எத்தனை கோபியர்?
கருமை, சூழ்ந்திட்ட வானமும் தானே,
வற்றிடா நதியை வார்த்திட முடியும்?.

ரெத்தமும், சதையும் பிரிவது நேர்ந்தால்,
செத்தது உடலும், பிரிந்தது உயிரும்?
கண்களில் கருவிழி, நீக்கிட உனக்கு,
கருமையே பார்வை, இருளிலே வாழ்க்கை.

பரதேசி குடிவழி, பிறந்தவன் நீயோ,
ஒப்பில்லை உன்னை சொல்ல,
இவனும், நீயும் ஒன்று தானோ?

நிறத்தால், மனிதனை பார்ப்பதை நிறுத்து,
குணத்தால், அன்பால், பார்த்தல் நன்று.

உலகில், உயிர்கள் யாவும் ஒன்றே - இந்த
உண்மையை உணரு, மனிதம் செழிக்கும் !!

::: கோ.இராம்குமார் ::::


No comments: