Thursday, May 31
முன்னுரை!
சத்தமின்றி முத்தம் கேட்டேன்,
எச்சில்தொட்டு இதழ் பதித்தாள்,
இச்சென்ற சத்தமில்லை - இருந்தும்,
நச்சென்று என் நரம்புகள் புடைத்தன.
வச்ச இதழ் வச்ச இடத்திலேயே,
இருந்திட்டு போகட்டும் - எடுத்திடாதே,
வசதி வாய்ப்பு தேவையில்லை,
வஞ்சியுந்தன் இதழ் போதும்.
வேண்டும் இன்னும், இதுப்போல
வேண்டியப் பொழுதெல்லாம் - ஒவ்வொன்றாய்,
முழுமதி உந்தன் இதழ் பதியும் - நிமிஷ,
மூச்சு சூட்டில் திளைப்பேனே.
இனிமை தேனும் புளிக்கும் - உன்
இதழின் ஓரம் கசியும்,
இனிப்பில் குளித்த - எச்சில்
அதனை சுவைத்த பிறகு.
இதழ் முத்தத்தில் - படிப்படியாய்,
மேல் இதழ் கடிக்க - மெதுமெதுவாய்,
கீழ் இதழ் துடிக்கும் - படபடப்பாய்,
நாவினை சுழற்ற - கவிப்படிப்பாய்,
காதலன் - என் இதழ் காகிதத்தில்.
கலவியின் முன்னுரை முத்தமாய்,
காதலி கண்மூடும் தருணமாய்,
காதலன் இதழ் சேரும் அவளிதழ் மேடை,
அரங்கேற்றம் இன்றோ! முதல் இரவு.
::: கோ.இராம்குமார் :::
புலம்பல்ஸ் 6
புலம்பல்ஸ் 5
Wednesday, May 30
ரோஜாப்பூ!
Saturday, May 19
புலம்பல்ஸ் 4
அவளோ, இவளும் தெரியவே இல்லையே,
தேவதையும் மண்ணிற்கு வருவதில்லையே,
வந்ததோ?, முதல்முறை அவள்வுரு வத்திலே - என்னை,
கொன்றது பலமுறை உயிர் என்னிடமில்லையே,
தேரில்லா சிலைப்போல் நடப்பது அழகே - அவளும்
பேசுகையில், கேட்டிருந்தேன் அது குரல் அல்ல குழலே,
கைகள் தாளமிடும், உதடுகள் முனுமுனுக்கும்,
இனியதொரு இசையோ? அவள்ப்பெயர், கீதமே! சங்கீதமே!!
::: கோ.இராம்குமார் :::
Monday, May 14
புலம்பல்ஸ் 3
Thursday, May 10
கறிக்கடை காக்கைகள்! ( குட்டிக்கதை )
------
அதுவொரு ஞாயிறு காலை, இளங்காலை பொழுதும் என்பதால் அங்குமிங்குமாய் ஓரிரு மக்கள் நடந்தவாறு சுறுசுறுப்பை முடுக்கி,
விடுமுறையை செலவிட ஆயத்தமாயினர் ஒவ்வொருவரும். ஞாயிறு என்பதால் இன்றைய விற்பனை மற்ற நாட்களை காட்டிலும் சிறப்பாக இருக்கும்
என்பதால், சில்லறை செலவிட்டு பத்து ஆடுகளை சேர்த்தே வாங்கஈருந்தார் கரீம் பாய், கடையை திறந்து சுத்தமிட்டு, தராசை மாட்டி, எடைக்கற்க்களையும்
சரிப்பார்த்து அடுக்கிவைதார், கடைப்பையன் கழுத்தறுத்த ஆட்டின் தோலை உரித்து தலைக்கீழாய் கொக்கியில் மாட்டிட வரத்தொடங்கினர் வாடிக்கையாளர்
கூட்டம், கூட்டத்தில் ஒருவர்: பாய் நல்ல இளங்கறியா ஒரு முக்காக்கிலோ போடுங்க, இன்னொருத்தர்: அப்படியே எனக்கும் ஒரு அரைக்கிலோ கொடுங்க பாய் என கூட்டம் களைக்கட்ட தொடங்கியது, பாயும் கறியை வெட்டி காசாக்கினார்.
எங்கயாவது ஒரு துண்டு கீழ சிதறாத என்கிற ஏக்க பார்வையில் பெரிதாய் ஒரு காக்கை கூட்டம் ஆங்காங்கே, மின்சார கம்பியிலும், கடை கொட்டகையிலும்,
மரத்தின் தாழ்கிளையிலும் அமர்ந்தவாறு, பார்வை மொத்தமாய் கறிகடையிலே பயனிதவாறு, பரிதாப காக்கைகள்!.
எதிர்ப்பார வேளையில் ஒருவர் வாங்கி சென்ற கறிப்பை அறுந்துவிழ அத்தனை கறியும் கொட்டியது தரையில், பதறிய அவரும், பறந்துவந்த காக்கைக்களுமாய் சண்டையிடா குறையில் எட்டியவரை லாபம் என்று கொத்தியக்கறியுடன் பறந்தன அதிர்ஷ்டத்தில் இருந்த ஒன்றிரண்டு காக்கைகள், எஞ்சி இருந்த காக்கைகளோ அஞ்சிய முகத்துடன் எட்ட இருந்தே ஏக்கத்தில் சோகத்துடன் பார்த்தன. கூட்டத்தில் ஒரு பரிதாபம் என்னவெனில், ஒரு காக்கைக்கு ஒருக்கால் கிடையாததும், இன்னொரு காக்கைக்கு அடிபட்ட இறைக்கையுமாய் பறந்துசென்று எடுக்க முடியாமல், ஊனத்தால் தன்னம்பிக்கை இழந்தார்ப்போல், நம்மால் முடியாது என்பதுப்போல், எடுத்துவரும் காக்கையிடம் எனக்கும் சேர்த்தே எடுத்துவா என்பதுப்போல், அவைகளை பார்த்து கா கா என கரையும் தருணம் சோகமாய் தெரிந்தாலும், ஊனமாய் இருப்பதை பலவீனமாய் எண்ணி இருப்பதை நினைக்கையில், உண்மையிலே எனக்கு வந்த கோபம் அந்த காக்கையின் மீதா இல்லை, அத்தனை படைத்த கடவுளின் மீதா, எனக்குள் ஒரு விவாதம் அரங்கேற, முடிவுதெறியா முற்றும் போட்டேன்.
முதற் முயற்சியுடன்
::: கோ.இராம்குமார் :::
Wednesday, May 9
வெஜ், புலம்பல்ஸ் !
Tuesday, May 8
புலம்பல்ஸ் !
பூவோ, பெண்ணோ நீ அழகாய் பிறந்துவிட்டாய் - அட
எனக்குள் தானே, ஏனோ நீயும் நுழைந்துவிட்டாய்,
நிழலாய் என்னை உன்னுடன் அலையவிட்டாய்,
அனலாய், பனியாய், அனைத்துமே நீயாய் மாறிவிட்டாய்,
உன்னாலே என்னோடு, ஏனோ என்னை பேசவைத்தாய்,
உறங்காத இரவுகளில் உறவின்றி,உளறுகிறேன்
ஒருமையில், தனிமையில், ஒற்றையாய் உன்னோடு.
ஓசை, இசையாய் மாற்றும் மூங்கில் துளையாய்,
மூடி திறக்க பிறக்கிறேன், உன்னினைவுகளால் மெல்லிசையாய்,
போதும் போதும் இவ்விம்சகள் என்றெண்ணும்போது,
வேண்டும் வேண்டாம் என்றாலும் வேண்டும் மீண்டும் என்கிறாய்
வேண்டா விருப்பமாய், வேண்டிய கடவுளாய்,
அழகாய் அழகாய்! பூவாய் பூத்தவள் உன்னிடம்
திரும்ப தருகிறேன், காதல் சாதல் இரண்டையும்.
காதலே நிம்மதி, என்பதை விட
நிம்மதியே காதலாய் ஆனால்,
நிம்மதியாய் காதலித்து விடுவேன்,
காதலியாய் நீயும் கிடைத்துவிட்டால்.
::: கோ.இராம்குமார் :::
Subscribe to:
Posts (Atom)