Thursday, May 31
முன்னுரை!
சத்தமின்றி முத்தம் கேட்டேன்,
எச்சில்தொட்டு இதழ் பதித்தாள்,
இச்சென்ற சத்தமில்லை - இருந்தும்,
நச்சென்று என் நரம்புகள் புடைத்தன.
வச்ச இதழ் வச்ச இடத்திலேயே,
இருந்திட்டு போகட்டும் - எடுத்திடாதே,
வசதி வாய்ப்பு தேவையில்லை,
வஞ்சியுந்தன் இதழ் போதும்.
வேண்டும் இன்னும், இதுப்போல
வேண்டியப் பொழுதெல்லாம் - ஒவ்வொன்றாய்,
முழுமதி உந்தன் இதழ் பதியும் - நிமிஷ,
மூச்சு சூட்டில் திளைப்பேனே.
இனிமை தேனும் புளிக்கும் - உன்
இதழின் ஓரம் கசியும்,
இனிப்பில் குளித்த - எச்சில்
அதனை சுவைத்த பிறகு.
இதழ் முத்தத்தில் - படிப்படியாய்,
மேல் இதழ் கடிக்க - மெதுமெதுவாய்,
கீழ் இதழ் துடிக்கும் - படபடப்பாய்,
நாவினை சுழற்ற - கவிப்படிப்பாய்,
காதலன் - என் இதழ் காகிதத்தில்.
கலவியின் முன்னுரை முத்தமாய்,
காதலி கண்மூடும் தருணமாய்,
காதலன் இதழ் சேரும் அவளிதழ் மேடை,
அரங்கேற்றம் இன்றோ! முதல் இரவு.
::: கோ.இராம்குமார் :::
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
Post a Comment