Sunday, July 29

முடிந்தது ஞாயிறு!



நத்தையாய் நகர்ந்து வரும் ஞாயிறு
போவது மட்டும் முயல் வேகத்தில்

முந்தியது முயல்,
முடிந்தது ஞாயிறு.

குழம்பிய நொடி!


தேன்குழல் தேகத்தை திருட ஏறி,
ஊறிடும் எறும்புகள் சறுக்கிவிழும்,
சறுக்கு மாரமாய் அவள் இடையும்,
என் எடையை எப்படி சுமக்க போகிறதோ -
தெரியவில்லை,

இறுக்கி பிடித்துக்கொள்ளவா, இல்லை
இறுக அனைத்துக்கொள்ளவா?

குழம்பிய நொடியில், விழுந்தாள் என் மடியில்.






- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பட்டினத்து யுவதிகள்.!

எருமை மாட்டிற்கு உறைக்கும் அளவில்
ஒலி எழுப்பியும் ஓரம் போகா பசுமாடுகள்,

காதுக்கேள் பொறியுடன் பேசியபடி,
எங்கேயோ பறந்துக்கொண்டிருக்கும்,
பட்டினத்து யுவதிகள்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

மது பான கடை(கள்).!


பல நாள் பட்டினிகிடந்தவன்,
பண்டிகைக்காய் காத்திருப்பதுப் போல,
சனி கிழமைக்காய் காத்திருக்கும்,
இந்திய குடிம்மக்கள்,

உள்ளே நுழைய முடியா நெரிசலுடன்,
மது பான கடை(கள்).




- எழுத்தோலை  கோ.இராம்குமார் -

நான் கடவுள்!


வாரத்தில் ஒரு நாள்,
கட்டாய கடன் வசூல்,
இன்று சனிக்கிழமை,
வாசலில் வரிசையாய்,
வறியவர்க்கூட்டம்,

நான் கடவுள்!


- எழுத்தோலை கோ.ராம்குமார் -


Friday, July 27

நடுநிசி துரத்தல்கள்!



ஆழக்கடல் நடுவில் ஆடியப்படி,
ஒற்றை பாய்மரப்படகு - துடுப்புகள்
அதன் ஆட்டத்தை கட்டுப்படுத்த,
ஆடியப்படகும் சமநிலையில், சாந்தமாய்,
போன உயிர் திரும்பியதோ அதிலிருந்த
எனக்கும், ஏரியில் கூட நீந்திடா நானும்
நடுக்கடலில், யாரும் தெரியா இருட்டில்,
யாருமற்று தத்தளிக்கிறேன் - பயம்
கவ்விய இதயத்துடன் பதறியே,
வீர்ரென கத்தி, அலறுகிறேன்,
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று!
அப்பொழுதுதான்,
ஒருக்குரல் பக்கத்திலிருந்து என்னிடம்,

என்ன கனவா? போ, போய் விபூதி எடுத்து
பூசிக்கொண்டு படு எல்லாம் போய்விடுமென்று.


நடுநிசி துரத்தல்கள்!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

செல்ல தேவதை!




சீன பெருஞ்சுவர்மேல்,
தேவதை ஓவியம்ப் போல்,
இச்சின்ன சுவற்றின் மேல்,
என் செல்ல தேவதை,
அழகாய் சிரிக்கிறாள்,
காவியம் படிக்கிறாள்,

அதுவோ அழகு!

My
Lovely Niece:  "Trisha".
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -

முற்று!


காதல் கவிதை எழுத ஏனோ
எண்ணம் வரவில்லை சில காலமாய்,
காதலிக்க யாரும், இல்லை என்பதாலா,
பழைய காதல், பாழாய்ப்போனதாலா,
பசுமை கருகும் பருவம் பக்குவமானதாலா,
எதனால் என்று என்னிடமே கேட்கிறேன்,
விளங்கா மௌனமே மிச்சம்.

என்னைக்கடந்து போனதொரு காற்றாய்,
காதலும் என் இதயமும் அதன் மௌனமும்,
முற்றும்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

எனக்கு பசிக்கிறது!


எழுதுவதற்கு ஒரு காகிதமும்,
எழுதுக்கோலும் கொடுங்கள் போதும்,
ஜீவன் உள்ள வரையில் எழுதி, எழுதியே,
பசியாறிக்கொள்கிறேன்.

எனக்கு பசிக்கிறது!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

காசு!


ஒன்றரை வயது குழந்தைப்போல்,
ஓடியாட முடியாமல், ஓய்வும் இல்லாமல்,
ஓடி ஓடி தேடுகிறேன் பணத்தை,
கோடி கோடியாய், இல்லையென்றாலும்,
ஆயிரத்தில் வந்து, வந்த சற்று நொடிக்குள்,
காற்றைப்போல் திசைமாறி, வந்தவழியே,
கையில் ஒட்டா ஒற்றை நயா பைசாவாய்,
ஓட்டம் பிடிக்கிறது, என்ன வெறுப்போ என்மேல்

காசுக்கு?

புதுசாய் வாசமடிக்கிறது, மண்வாசனையா?
பணவாசனையா? காற்றடிப்பதாலோ ? - இந்த
முறையேனும் கதவை சாத்திவைப்பேனோ?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Thursday, July 26

நம்பிக்கை!

இல்லை, என்றோரு வார்த்தை இல்லை,
இருக்கு, இருக்கு என்று நாள்கணக்கில் இழுப்பு?
நம்பியவன் நடுத்தெருவில் நிற்கும் வரை,
இல்லை என்றோரு வார்த்தை இல்லை!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

ஸ்ருதி!


சிரிப்பும், அழுகையும் மட்டுமே,
அன்றாட வாழக்கையாய்,
சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி,
சிறகை முழுதாய் இன்னும்
விரிக்கவேயில்லை, அதற்குள்
தேவதையாய் சொர்க்கம் சேர்ந்து,
சோகத்திலே நம்மையெல்லாம்,
தேங்க வைத்து, தேம்பி, தேம்பி
அழவைத்து, நிஜமாய் சிரித்த நீ (ஸ்ருதி)
இன்று நிழற்ப்படத்தில் சிரிக்கிறாய்,

நியாயம் கேட்க ஒரு மணியில்லையே?
மனுநீதி ஆட்சியையும் நடக்கவில்லையே?
யாரிடம் சொல்வது, எப்படி சொல்வது,
பசுவாய் துடிக்கும் பெற்றோர் கண்ணீர்,
துடைக்க நமது கைகள், கோர்ப்பதை தவிர,
உன் ஆன்மா, சொர்கத்தில் சாந்தியடைய.







- எழுத்தோலை கோ.இராம்குமார் -

புதிதாய், தெளிவாய் இயற்கை!



புதிதாய், தெளிவாய் இயற்கை,
கலங்காலமாய் காலைகள் புலர,
எனக்கும், இவ்வுலகில் இடமிருக்கு
என்பதைப்போல், இன்றும் எனதுயிர்
என்னிடமே, உயிர்மெய் இரண்டும்
இணைப்பிரியாலே!



- எழுத்தோலை  கோ.இராம்குமார் -

ஓம் நமசிவாயா! ஓம் நமசிவாயா!!


ஒற்றைக்கல் கோபுரமாய்,
ஒருபக்கமும் நிழல்சரியா,
ஆயிரம் ஆண்டுக்காலங்கள்,
வாழ்ந்திட ஆசை, பேராசை,
என்னை செதுக்க ஒரு சோழன்,
இல்லையே பிரகதீஸ்வரா,
ஏழை என், கோரிக்கையெல்லாம்,
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திட அல்ல,
அடுத்த நொடியை கடந்திடவே,

சிவ, சிவ சிவக்கும் கண்களுடன்,
துடிக்கும் என் நெஞ்சமும்,
நொடிக்கும் நாளில் எல்லாம்,
நினைக்கும் உன் பெயரை,
நொடிக்கு ஒரு முறை துதித்தாலும்,
திரும்பா உன்னருள் ததும்பா,
திகைத்து நிற்கிறேன் நிர்க்கதியாய்,
உன் வாசலில்,

நெற்றிக்கண் திறக்க வேண்டாம்,
உன் ஓரக்கண் பார்வையே போதும்,

ஓம் நமசிவாயா! ஓம் நமசிவாயா!!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பொய் சொல்லும் கண்கள்!


கண்களும் பொய் சொல்லுமாம்
கேட்டிருக்கிறேன், பார்த்ததில்லை
கருவிழி, அதன்வழி, புகும்வழி
அதனுள் ஊடுருவி ப்பார்க்கிறேன்,
உற்றுப்பார்க்கிறேன், புன்னகையுடன்
திரும்பி நடக்கிறேன்,

கண்களுக்குள் கவிதை,
உவமைகளும், சிலேடைகளும்,
எதுகைகளும், மோனைகளும்
இலக்கண, இலக்கிய மொத்தமமும்,
அவள் கண்களில் பொய்களாய்,
அகம் அமர்ந்திருந்ததே, ஆச்சர்யம்,

மணக்கும் தமிழ், மயக்கியதென்னை,
அவள் விழிகளில் அது சொல்லும் பொய்களில்.





- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Photo Courtesy: Falcon Designers!

தமிழ் ஊற்று!


கோட்டான்களும் கொட்டாவி
விடும் நடுநிசியில் - நானும்
என் பேனாவும் ஒருவருக்கொருவர்,
துணையாய் இறுக க்கைப்பிடிதே,
இருட்டிலோர் கவிதை வடிக்கிறோம்...

யாருமற்ற தனிமையிலும் இனிமை,
தமிழ் ஊற்றில் நீர்ப்பருகுவதால்.




- எழுத்தோலை கோ.இராம்குமார் -

வெளிச்சம்!


வெளிச்சம் மங்கி இருளதொடங்கியதும் - புது
வெளிச்சம் என் மேல் படர்வதை உணர்கிறேன் - அது
முழுமதியோ இல்லை என்னவள் பார்வதியோ?

அவள் பார்வையில் ஒளிருது ஒற்றை வெண்ணிலவு!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

அசைந்தாடும் ஆசைகள்!

மடித்த விரல்கள்
விரிக்கும் நொடியில்,
சிரிக்கும் உனது
சிவந்த உதடுகளை,
கிள்ளி, சுருக்க
முயல்கிறேன்,
முந்தானை என்
முயற்சிகளை
முறியடிக்கிறது,
முக்காடை கொஞ்சம்
இறக்கி வையடி,
கொஞ்சம் கொத்தி,
ஒத்திக்கொள்கிறேன்,

கோவை கொடியில்,

அசைந்தாடும்  என்னாசைகள்.

-  எழுத்தோலை கோ.இராம்குமார் -

Wednesday, July 25

விதிவிலக்கு!



முடிந்து போன இரவுகளில் - வடிந்து
முடிந்த மழையதுவும், இலைகளிலும்,
மலர்களிலுமாய் சிறு, சிறு துளிகளாய்
சிரித்திட, சினுங்கிடும் குருவிகளோடு,
கொஞ்சி விளையாடும் சித்தெரும்புகள்,
மரணத்தை மறந்த மகாத்மாக்களாய்
மாண்டுமடிய, காலையுணவை கழித்து,
கரைந்த உணவும் கலக்க, கழியத் தேடிய
கழிவறைகளாய் மகான்களின் சிலைகளும்
எழிலிழந்து, காத்துவாங்கி கொண்டிருக்கும்
தெருக்களாய் கடற்க்கரை சாலைகளும்,
முக்கிய சந்திப்பு வளையங்களும்.

இயற்கையின் விதி, தலைவர்களுக்கு - மட்டும்
என்ன விதிவிலக்கா?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

மெட்டுக்கு என் பாட்டு! (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரிக்கூட்டம்)




விழிகளிலே உன் விழிகளிலே,
எனக்கொரு கவிதை நீ சொன்னாய்,
வரிகளிலே அதன் வரிகளிலே,
எதுகையாய் என்னையும் நீ கோர்த்தாய்,
சொல்லாத கவிதையாய் அது இனித்ததே,
இன்னிசை சேராமாலே சுகம் சேர்த்ததே....

(விழிகளிலே ...........)

விண்ணுக்குள் என்னை நட்டு நீரூற்றினாய்,
விண்ணுக்குள் என்னை நட்டு நீரூற்றினாய்,
கண்களில் காதல் கொடி பறக்குது உயர்ந்து,
எனக்கிது இதுநாள் தெரியவும் இல்லை,
இருட்டில் கிடந்ததெந்தன் உயிரும்,
புரியுது, புரியுது புலம்பலை நிறுத்து,
உனக்கென பூத்திருக்கும் பூவுமிது புதுசு,
சொல்லாமல் இருந்திட்டால் சொர்க்கத்தில்
இடமில்லை, சொல்லிட வந்துவிட்டேன்
வந்துவிடு என்னுடனே.

(விழிகளிலே ...........)

சொல்லுக்குள் எண்ணெய் விட்டு சூடேற்றினாய்,
சொல்லுக்குள் எண்ணெய் விட்டு சூடேற்றினாய்,
சொந்தமெல்லாம் உதறிவிட்டு வர தோன்றுதே,
இதயமும் துடிப்பது இசைப்போல் இருக்கு,
உள்ளுக்குள்ள நீயிருக்க நிஜமாய் கிறுக்கு,
உன்முகம், முகமது நான் காண்கையிலே,
இலக்கண இலக்கியம் உயிர்க்கொள்ளுதே,
சொல்லாமல் இருந்திட்டால் சொர்க்கத்தில்
இடமில்லை, சொல்லிட வந்துவிட்டேன்
வந்துவிடு என்னுடனே.

விழிகளிலே உன் விழிகளிலே,
எனக்கொரு கவிதை நீ சொன்னாய்,
வரிகளிலே அதன் வரிகளிலே,
எதுகையாய் என்னையும் நீ கோர்த்தாய்,
சொல்லாத கவிதையாய் அது இனித்ததே,
இன்னிசை சேராமாலே சுகம் சேர்த்ததே,



(விழிகளிலே ...........)



- எழுத்தோலை கோ.இராம்குமார் -
Photo Courtesy: Google!

கிரகணம்!




நெருப்பாய் காயும் சூரியனும்,
காதல்க்கொள்ள நெருங்கும் நிலவும்,
எதிர் எதிரே வரவே பிடிக்குமாம் கிரகணம்,
தழுவி திளைத்து நீங்கும் நொடியில்,
எத்தனை விசித்திரம் வானவெளி மாளிகையில்.

நெருப்பாய் என்னை தழுவு பெண்ணிலவே,
கிரகணம் நமக்குள் நடக்குமா பார்க்கலாம்.
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
Photo Courtesy: Google!

பேசும் ஓவியம்




மௌனம் கலைந்திருந்த,
மேகமாய் கார்வண்ணம்,
உன்க்கூந்தல் காற்றில் பறந்திட,
அதைக்கோதும் உன்விரலினிலே,
வண்ணம் தோய்த்து வரைந்திட்ட
ஓவியமாய் உன் முகம், பேசிடும்
பெண் சிலையாய் என்னிடம் பேச,
எதோ பேச நானும் இசைந்தேன்,
இளையவளே, இம்சை செய்வதை
நிறுத்துக் கொஞ்சம், உன் கண்ணசைவில்
கரைந்துபோகும் மண் சிலையாய்,
உன் இதழசைவின் கோணம் கண்டு
இன்பமும், துன்பமும் இரண்டுமே
நீயென, நினைவில் நிறைந்து,
நிதம்நிதம் கனவில் திளைக்கிறேன்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
Photo Courtesy: Google!

மாநகர இளங்குமரிகள்!



முகம்மறைத்த முல்லைக்கொடிகள்,
தலைமுதல், கால்வரை கண்ணைமட்டும் விட்டு,
கண்ணாடியணிந்து, காற்றுடன் ஆடியே,
கமகம வாசம்பரப்பி,
விசையுந்தில் வேகமாய்,
வீதிகள் வாய்ப்பிளக்க வழிப்போகும்,
கொள்ளைக்கூட்ட தலைவிகளோ.

மாநகர இளங்குமரிகள்!




- எழுத்தோலை கோ.இராம்குமார் -


Photo Courtesy: Google!

Monday, July 23

நாடோடி!


நாடி, நாடி நானுமானேனோ நாடோடி,
வீடோடோடி, கடோடோடி கடைசியாய்,
விற்காமல் நின்ற விறகாய் மாறி,
அதை எரிக்க கிடைக்கும் கரியாய் கருகி,
அதை பொடிக்க பறக்கும் கரும்புகையாய் பரவி,
அது கலக்கும் காற்றாய் கண்ணை விட்டே மறைவேனோ,

மறுஜென்மம் என்றொன்றிருந்தால் அதிலும் -
இதுவோ, மறுபடியும்!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Sunday, July 22

பூஜைகேத்த பூத்தேடி!

 
 
காற்றோடு மிதக்கும் இலையாய்,
என் கண்ணோடு மிதக்கும் உன் நிழலாலே,
பெண்ணோடு உன்னை ஒப்பிட முடியவில்லை,
தேவதைகள் கூட்டத்திற்கு தலைமை நீ தங்குவதால்,
உன்னோடு உன்னையே ஒப்பிட்டு பார்க்கிறேன்,
உன்னைவிட அழகிய பெண்ணில்லை என்பதால்,

அழகிய அற்புதமே, ஆயிரம் பூக்களின் அர்த்தமே,
இருட்டில் தேடிய மெழுகுவர்த்தியாய் முழிப்பிதுங்கி,
தடவி, தடவிப் பார்க்கிறேன், தாவணி குமரி உன்
தேகமும் மெழுகினால் செய்ததோ என்னவோ?
இத்தனை வழுக்கல்கள், எத்தனை சறுக்கல்கள்,
சலவைக்கல் சலவையாய் என்னுள் சலசலப்பு சத்தமே,
மெல்லிய சலனமாய் கேட்கிறதே,

ஓடையாய் ஓடி ஒரு நிமிடமும் நில்லாது,
உன் நிலலதுப்போல் தொடர்கிறேன்,
ஓரக்கண் பார்வை வீசு, ஓரமாய் நின்னு பேசு,
பேருலகம் போல் உனையே நிற்காமல் சுழல்கிறேன்,
இருண்டு ஒளிவீசும் பகலிரவு கணக்காய்,
பசித்தூக்கம் மறந்து, பூஜைக்காய் காத்திருக்கும்
கடவுளைப்போல, கடவுளுக்காய் காத்திருக்கும்
பக்கதன் நானே!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Saturday, July 21

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே....




மனமே மயக்கும் மனமே உந்தன்,
மணமே என்னுள் மணக்க நானும் மிதக்கிறேன்,
தயங்கி, கிறங்கும், குழப்பம் அதனால்,
இருக்கும் இடமறந்து, இதய யறைப்புகுந்து,
இயக்கம் இடிமுழக்கம் ப்போல் துடிதுடித்தே கேட்க்குதே,
உன்ப்பெயர் சொல்வேனோ? என்னுயிர் காணலையே,
ஏனோ என்நெஞ்சில் ஏதேதோ சத்தம் கேட்கிறதே...

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே...

எனக்காய் பிறந்தவள் நீயே, செந்தாழம்பூவே,
சிவப்பு செம்பருத்தி ஒற்றையிதழ் சிரிப்பினில் 
சிறகடிக்க செய்தாய் என்னை, சிட்டுக்குருவியும் ஆனேன்,
அலைப்பேசி கோபுர கதிர்ப்போல் உன்ப்பார்வை கொல்ல,
அழிந்துவருகிறது என்மனம் வந்தென்னை காப்பாயோ ஆருயிரே?
அழிவிலிருந்து என்னை மீட்ப்பாயோ? மீளாதுயல்கிறேன், மின்மினியே?

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே...

இத்தனை நாள் காதலித்தோம், இரவுப்பகல் பார்த்ததில்லை 
இரண்டு நொடி உனைபிரிந்தேன் இரவதுவும் நீள்கிறதே,
இங்கிருந்த உன்னிதயம், பத்திரமே, ரத்தினமே,
பக்குவமாய் உன்னை சேர்ந்திடவே, பார்த்து பூத்து இருக்கிறேனே,
இசைத்தமிழ் உன் மொழியில் இசைந்து ஒற்றை வார்த்தை சொல்லு,
தாலி ஒன்று கட்டிக்கொள்ள நல்ல, நாள்க்கிழமை, நேரம் ஒன்று,
வாசுகியாய் உனை கொண்டாடியே, வள்ளுவனாய் வாழ்ந்திடவேன்,

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே...

மனமே மயக்கும் மனமே உந்தன்,
மணமே என்னுள் மணக்க நானும் மிதக்கிறேன்,
தயங்கி, கிறங்கும், குழப்பம் அதனால்,
இருக்கும் இடமறந்து, இதய யறைப்புகுந்து,
இயக்கம் இடிமுழக்கம் ப்போல் துடிதுடித்தே கேட்க்குதே,
உன்ப்பெயர் சொல்வேனோ? என்னுயிர் காணலையே,
ஏனோ என்நெஞ்சில் ஏதேதோ சத்தம் கேட்கிறதே...

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே.....


- எழுத்தோலை கோ.இராம்குமார்-
 
Photo Courtesy: Falcon Designers!

Friday, July 20

பளீர், சுளீர் !!



 அக்ஷயப்பாதிர ஐஸ்க்ரீம் நிறையாய்,
அலைமோதும் ஆனந்தம் உன் கண்களில்,
பேரானந்தம் உனை காண்கையில் - என்னுள்
எதோ, நேற்று வரை இல்லாத மாற்றமாய் இன்று,

கண்களில் பளீர், இதயத்தில் சுளீர்,
இயங்க தயங்குது இதயம் எனது,
மருந்து இருந்தும் மயங்கியே கிடக்கிறேன்,
பூஜாவே நீ பூத்தேனோ?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -





Photo Courtesy: Falcon Designers!

உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்....


சிரு பொன்மனி அசையும் அதில் தெரிக்கும் புது இசையும்....
என்கிற கல்லுக்குள் ஈரம் படத்தின் பாடல் மெட்டிற்கு பொருந்துமாறு எழுதும் முனைப்பில்,
எனது பாடல் வரிகள் இதோ...

----------
உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்
நான் கிடப்பேன் ராப்பொழுதும், பகல்முழுதும்,
ரசிப்பேன், துடிப்பேன், நடிப்பேன் இருந்தும்
தீராது என் மோகமது உனைசேராது, 

(உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள் ....)

உன் கண்களில் நீ சொல்வது தான், கேட்பது
நான், தீரா பிழைப்போ, கொடுப்பும் எதற்கோ?
நம் இருவரின் இதயமும் துடிப்பது நிற்காமலே,
நீங்காமலே நிதமும் பிறக்கும், நீ என் பொன்வசந்தம்,
இலையசையும், பனி துளி சிதறும், என் மேல் படரும்,
கொடிப்போல் வழியும், கைகளது துடைக்கும், நிற்கும்,

(உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்.....)

மறுபடி ஒருமுறை உன்னை பார்த்திட,
வழியும் மோகம், வேண்டாம் தாபம்,
பொன்மேனியது குளிர்ப் போல் நடுங்கும்,
நா வறண்டு மீண்டும் தாகம் எடுக்கும்,
கண்மணி ஒரு அடி தள்ளியே நில்லடி,
எனக்குள் ஒரு திருடன் உன்னை,
துருவி வருடிட துடிப்பதை உணர்கிறேன்...

உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்
நான் கிடப்பேன் ராப்பொழுதும், பகல்முழுதும்,
ரசிப்பேன், துடிப்பேன், நடிப்பேன் இருந்தும்
தீராது என் மோகமது உனைசேராது,

(
உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்.....)


- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
 
Photo Courtesy: Negis Art!

Thursday, July 19

கனவு தேவதை!


கனவு கலைந்ததும்,
அவளும் தொலைந்துவிட்டால்,
தெளிந்த நீரில், கல்லெறிந்தார்ப்போல்  ,
நானும் கலங்கிநிற்கிறேன்,
முழிக்கிறேன், விழிக்கிறேன், தேடினேன்,
தேவதையவள் யாரவள்,
எங்குத்தேடியும்  ஏமாற்றமே மிச்சமே!





- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Photo Courtesy: Negis Art!

Wednesday, July 18

போறாளே, போறாளே.....!


கோவை சாலையில், கோதை ஒருத்தி

கோவைப்பழ இதற் முனுமுனுக்க
என்னிடம் ஏதோ, சொல்லி போறாளே
போறாளே, போறாளே நெஞ்சை திருடி
போறாளே...., நேசம் வைத்து போறாளே...


நேரம் திருடி சேர்த்துவைத்து,
மணி கணக்காய் காக்க வைத்து,
மனசை கிள்ளி, அள்ளிக்கொண்டு,
மதியம் நேரம் வரப்பின்னோரம்,
வரச்சொல்லி சைகை காட்டி - போறாளே,
போறாளே போறாளே பூவாய் சிரித்தவள்
போறாளே ...., முல்லை பூ சூடி போறாளே...

எதோ நடக்குது உள்ளுக்குள்ள,
ஓட்டபந்தயம் முடியவில்ல,
ஒன்றா, இரண்டா அவள சொல்ல,
ஒருநாள் போதாது சொல்ல, சொல்ல,
உள்ளுக்குள் உறைந்த நெய்யைப்போல,
உருகாமல் நிற்கிறாளே பருவ முல்ல,
ஒரு முறை மட்டுமே பார்த்தேனே அவள,
இன்னொரு முறை பார்க்க போறேனே,
போறேனே போறேனே, இன்று அவளைப்பார்க்க
போறேனே....... மைதிலி மைவிழி வழி போறேனே...


- எழுத்தோலை  கோ.இராம்குமார்-


Photo  courtesy: Negis Art!

அமாவாசை!



அவள் இதழ்ச்சாயம் - என்
இதழுடன் பூச முனைந்து
அவளிதழ் திசையில்,
என் முகம் திரும்பி,
செவி சுருக்கி, கண்மூடி,
நெஞ்சுப்படப்படக்க, நெருங்குகையில்,
ஒரு நிழல்க்கண்டு அதிர்ந்தேனே,
அது சுழல்ப்போல என்னைச்சுற்ற,
தணல் குறைந்த புகைப்படலமாய்,
என்னிமை புகுந்து, கண்ணிமைக்கும்
பொழுதில் மாயமாய் போனதே,
கைம்பெண் அவளின் கணவனோ,
அவனும் அலகையோ!

குழப்பம் படர்ந்த நெஞ்சுடன் - இறுக
பற்றிய கை விலக்கி, விலகி கிடந்தப்பா
வாடை சரிசெய்து, மாட்ட மறந்த
கொக்கி மாட்டிவிட்டு, கலைந்திருந்த
கொசுவமடிப்பை அடுக்க மடித்து,
ஆசை தீயை தண்ணீர்
குடித்து
அணைத்து சென்றேன்.

அன்றைய இரவும், அமாவாசையோ!
 











- எழுத்தோலை கோ.இராம்குமார் -






Photo Courtesy: Negis Art!




Tuesday, July 17

தோழிக்கு அவள் தோழி கூருவாதாய் ஒரு பிறந்தநாள் வாழ்த்து!


கனவு போன்று இருக்குதடி - நாம்,
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்.

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால் தடம் மறைந்தே போனதடி.

கனவு போன்று இருக்குதடி - நாம்,
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்,
கனவு போன்று இருக்குதடி.......,

கல்வி பயின்ற நாட்கள் அன்று,
கதைத்து சிரித்த நொடிகள் தொலைத்து,
சேர்ந்து நடந்த தெருக்கள் மறந்து,
அன்பாய் கொடுத்த முத்தமும் காய்ந்து,
மொத்தமாய் தொலைந்தே போனதடி,

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால் தடம் மறைந்தே போனதடி,
கனவு போன்று இருக்குதடி - நாம்,
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்..

அன்பிற்கு இலக்கணம் எதுவென்றால்,
உன்னையே உரக்க சொல்லுவேன்,
பெற்றவர், உற்றவர், நண்பர்கள்,
இவர்களே உலகமோ உனக்குமடி,
தோழியே, தங்கையே, தேவதையே,
தங்க ரதம் சுமந்துவரும் உற்சவமே,
உனையே சுற்றிவந்து வரம்க்கேட்கிறேன்,
உன் பிறந்தநாளில் இன்று - என்றுமே
எனைப்பிரியா வரமொன்றை தருவாயோயடி?
எப்பொழுதும் எனை பிரியா இருப்பாயோயடி?

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற் கரை மணலாய் - நம்
கால் தடம் மறைந்தே போனதடி,
கனவு போன்று இருக்குதடி - நாம்,
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்..

மலர்ந்து, மணம் சுமந்து, சிரிக்கும்
பூவே உனக்கு, பிறந்தநாள் இன்று,
வாழ்த்துகள், என்னினிய வாழ்த்துக்கள்,
வயதோடு சேர்ந்திருந்தோம்,
மனதோடு பேசிக்கிடந்தோம்,
வாழ்க்கையென்று வந்தபின்,
இரு வழி பிரியும் பயணத்தில்,
இருதுருவம் விலகி நின்றோமே,
காலம் சொல்லும் நம் நட்பை,
வாழும் காலமும் நிறைதிருப்பேன்,
வசந்தமாய் அதனை ரசித்திருப்பேன்,
தோழியும் நீயும் எனைப்போலே,
என்றுமே, என்னை நினைத்திருப்பாயோ?

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற் கரை மணலாய் - நம்
கால் தடம் மறைந்தே போனதடி,

கனவு போன்று இருக்குதடி - நாம்,
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்,
வாழ்த்து சொல்ல வந்திருக்கிறேன் - என்
வாழ்த்துக்கள் அத்தனையும் ஏற்பாயோ?
வாழ்த்துகள், வாழ்த்துகள் - என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
தோழி இல்லையடி நீயெனக்கு,
உன்னுள் பாதிதானடி நானுனக்கு,
கனவு போன்று இருக்குதடி - நாம்,
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்.....

 

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

ஒத்திகை நாடகம்!



ஒற்றையாய் திரிவது
உனக்கு கிடைத்த சாபமோ,
கூட துணையின்றி வெறுமையாய்
தனிமையில் எத்தனை இரவுகள்?

உன்னை தேடி ஒருநாள் வருவாள்,
என்று எங்கேயும் நீயும் நில்லாமல்,
மேற்கில் தொடங்கி கிழக்கில் மறைந்து,
மீண்டும் மாலையில் தொடங்குவாய்,
உன் காதல், தேடல் காரியத்தை..

நிலவே ஒ, வெண்ணிலவே!

உன்னைப்போல் ஒருவன்
இங்கே, ஒய்ந்துப்போய்
உட்கார்ந்தே விட்டான்,
போதுமடா சாமி என்று,
நொந்த இதயம் பிடித்து,
நோகும் நொடிகள் கடந்து,
ஒடிந்து போன செடியாய்,
வாடி, வதங்கி, காய்ந்து,
பறந்தே போனதவன்
இதயம் என்றோ.

ஒற்றையாய் உன்னை பார்த்தே,
ஒருக்கிளியாய், சிறகை இறுக்கி,
ஓரக்கிளை போதுமென்று,
ஒவ்வொரு நாளாய்,
உதிர்கின்ற இலையாய்,
நாட்களை எண்ணி,
நாசி நிற்கும் நாளுக்காய்,
இன்றே,
ஒத்திகை நாடகம்
பார்க்கின்றானே!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

அண்ணன் விஜய் மகேந்திரன் உனக்கு, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


பிறைநிலவாய் தேய்ந்து வளரும் வானில்
தேயாத வெண்ணிலவாய் வலம்வரும்
சகலகலா வல்லவன், நல்லவன் எங்கள்
அண்ணன் விஜய் மகேந்திரன் உனக்கு
கவர்னர் விருது ஒன்று போதாது,

ஜனாதிபதி விருது, தேசிய விருது,
விஜய் விருது, பிலிம் பேர் விருது
இப்படி இன்னும் பல விருதுகள்
தேடி உன்னை வரும்
நாளும் வெகு தூரம் இல்லை.

உன்னுடைய எழுத்துக்கள் சொல்கிறது
இவைகள் சாத்தியம் என்று,
உன்னுடைய திறமை சொல்கிறது
இவைகள் ஒன்றும் தூரமில்லை என்று
உன் வியர்வை சொல்கிறது
உன்னால் புதுமையாய் படம்
படைக்க முடியும் என்று

இத்தனையும் சாத்தியம்
ஆகும் நாளை நோக்கி - நீ
அடியெடுத்து வைக்கும் இந்த வருடம்,
உன் பிறந்தநாளில் தொடங்கும் இந்த நிமிடம்,
நீ தொட்டதெல்லாம் பொன்னாகும் தருணம்,
வெற்றி கொடி கை ஏந்தி!
மேலும், மேலும் வெற்றிப்பெற,

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

பொம்மை குமரி!


கண்கள் சொல்கிறது - அவள்
என்னை தான் பார்க்கிறாள் என்று,
என்னால் தான் நம்ப முடியவில்லை
இரண்டொரு முறை திரும்பி பார்க்கிறேன்,
ஆமாம், அவள் என்னை தான் பார்க்கிறாள்.

கதவு க்கண்ணாடியில், ஒரு பிம்பம்,
அழகாய் புடவையில், பொம்மை குமரி.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

SWEET HEART!


யார்சுவைத்து பார்த்தது,
எதை சேர்த்து சமைத்து,
தேன் விட்டு குலைத்ததுவோ,
இல்லை,
சக்கரை பாகில் கரைத்ததுவோ,
யாரை கேட்டு இப்படி அழைத்தனர்,
யாருக்கும் பதில் தெரியலையே,

இதயமே நீயும்,
இரத்தமும்,சதையுமாய்
தானே இருக்கிறாய்,
அப்புறம் எப்படி " SWEET HEART " ஆனாய்?

வட்ட வெண்ணிலா!


தூரத்தில் தானிருக்கும் நிலவு,
துணையாய் இரவை துயில அழைக்கும்,
உறவாய் இரவை, உயிராய் உரச,
தேய்ந்து போகுமோ தேய்பிறை தேவதையும்?
தேடல், நிற்கும் வரை, தேய்வதும் நிற்காதோ,
திங்களுக்கு ஒருமுறை, வளர்வதும் நிற்காதோ.

வட்ட வெண்ணிலா,
வெட்டிய என்னவள் கால் நகமாய்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

என்னுள் எதோ, நடக்குது புதிதாய்..!


என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
நடுக்கம், மயக்கம், கிறக்கம் - இவை
எல்லாம் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?
என்னுள் எதோ, எதேதேதோ நடக்குது புதிதாய்...

என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

முதல் காதல் கொண்டவன் கேட்க்கும்,
முதல் முத்தத்தின் எதிர்ப்பார்ப்பு எனவும்,
கடல் தாண்டி வேலையில் இருக்கும்,
கணவனின் வருகைக்காய் காத்திடும் மனையின் மனமும்,
பொம்மை கேட்டு தந்தையின்,
வரவுக்காய் கதவிநோரம், வாசலை பார்த்திடும் குழந்தையின் கண்களும்,
என்னிடம் காண்கிறேன், இதுநாள் வரையில்
இதுப்போல் இல்லையே, என்னுள் எதோ
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

காதலி வரவுக்காய் காத்திருக்கும் காதலன் போல,
மணிக்கொருமுறை நேரம் காண்கிறேன்,
தூரம் இருந்த நாளும் அருகில் வந்ததின்று,
எட்டே மணி நேரம் தானே இருக்குது இன்னும்,
தேர்வின் முடிவுக்கு கூட இப்படி காத்தும் இல்லை.
இதுநாள் வரையில் இதுப்போல் இல்லையே,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

கண்கள் காணப்போகும் அவரின் தரிசனம்,
நாளை காலைவரை காத்திருப்பதே நிதர்சனம்,
பில்லா, பில்லா, டேவிட் பில்லா......
இடியை பிளக்க வைக்கும் எனது குரலும்,
வானை முட்டும் எனது விசிலின் சத்தமும்,
நாளை அரங்கேறும் தலைக்கு அபிசேகம்,
காண கண் கோடி வேண்டும் இறைவனே உதவனும்,
இதுநாள் வரையில் இதுப்போல் இல்லையே,
என்னுள் எதோ
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

பில்லா இரண்டு,
பல தடைகளை கடந்து,
நாளை திரையினை தொடுவது,
இறைவனை எதிரிலே பார்ப்பதை போலவோ!
வெற்றி பெற்று, வாகை சூடி,
மனிமாகுடம் தல ய்க்கு வைக்க,
நாளை காலை அமர்க்களமாய் அரங்கேருதே....
வாழ்த்திட தொடங்கினேன்,
பாடலாய் பாடுகிறேன்,
வாழ்த்துகள், வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள்,
இதுநாள் வரையில் இதுப்போல் இல்லையே,
என்னுள் எதோ
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..

என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்.. (2)
 

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

இன்பமும் அவளும்!


இரவும் நிலவும்,
இன்பமும் அவளும்,
இரண்டுமே பிரிவது,
பகலவன் வரவிலோ,
வெறுக்கிறேன், நடிக்கிறேன்,
வேட்கையில் தவிக்கிறேன்,
வியர்வையும் காய்வதற்குள் - மின்
விசிறி நிறுத்திவிட்டு,
திரைசீலை விலக்கிவிட்டு,
அறைக்கதவை திறந்துக்கொண்டு ,
நழுவி, விலகி செல்ல முனைந்தாளே,

முத்த சத்தம் எல்லாம்,
முழுதாய் முடியவில்லை,
முழுக்க, முழுக்க முயன்று
மூச்சு திணறவில்லை,
எச்சில் பஞ்சம் நாவில்
விக்கல் நிக்கவில்லை,
விடியல் யாரைக்கேட்டு,
விரசாய் வந்ததுயின்று,
தினுசாய் கற்ற கலையை,
செய்முறை விளக்கம் காண,
ஏனோ வேண்டாம் என்றாள்,
பாவம் அவளும் தானே,
பச்சை உடம்புக்காரி வேறு,
பதுசாய் தொங்க முடியாதே,
பதினைந்து மாத கட்டுப்பாடு,
கட்டவிழ்க்க இன்னும் தாமதம் ஏனோ?

பச்சை குழந்தையாய் அழவ்வைத்தாள்,
பஞ்சமி இரவும், விடியலை தொட்டதே!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

மலர்ச்சோலை!



மல்லிகைக்கு மறுப்பெயர்த்தேடி,
மிதிலை மாநகரில் நான் நின்றேன்,
செல்வியே மைதிலியாய்,
மலர்ச்சோலையில் அமர்ந்திருந்தாள்,

மலர்மணம் வீசும் சோலையதில்,
மல்லியும், முல்லையும்,
முளரியும், சென்பகமுமாய்,
மலர்ந்து சிரிக்கும், மனம் வீசும்,
மயக்கம் தரும் அதனையும் - ரசித்திட
வருவோரும், போவோரும்
ஆயிரமாயிரம் இருப்பரோ - இருந்தும்,
அவர்களில்த்தான், யாரைத்தான் - ஒரு
மலருக்காவது பிடித்திருக்குமோ?

மைதிலியே,
உன் மலர்ப்பாதம்,
பூஞ்சோலைத்தொடும் நேரம்,
சிரித்திருக்கும்,
பூத்திருக்கும் பூக்கள் அத்தனையும்,
அழகாய்
உன் திருவாய், மொழி நீ பேச,
கேட்டிருக்கும்,
பூக்கள் எல்லாம் மெதுவாய்
தலையசைக்கும், இன்னிசைப்போல்
ரசித்திருக்கும்,
இருந்தயிடம் தாழ்ந்து
சாய்ந்திருக்கும்,
கால்கள் இரண்டு இல்லையே
என்று துயர்க்கொள்ளும்,
இருந்திருந்தால் - உன்னுடனே
வந்திடவே நினைத்திருக்கும்,
அத்தனை அழகாய் மைதிலி - நீ
பிறந்ததனால் - மலர்க்கூட
மயங்கிடுமே, தன்னை மறந்து
உன்னுடனே வந்திடுமே.

இத்தனையும் கண்டு,
நான் வியந்து நின்றேனே,
தேடிவந்த மலர் சோலையிலே,
செதுக்கி வாய்த்த கல்லாக,
வார்த்தையில்லா கவியாக.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

சிவப்பு சீலை!



சிவப்பு சீலையினிலே - மெய்,
சிலிக்க வைக்கும் சித்திரம்போல்,
செண்பகமும் வெட்க்கம்கொல்லும்,
வானவில்லின் வளைப்போட்டு,
வட்டமாய் பொட்டும்வைத்து,
வாசனை மல்லி, முழம்ச்சூடி,
மகரந்த நிறமேனி மினுங்கிடும்,
வேல் விழியாள் மைதிலியாய்,
மார்கழியில் பனித்துளியாய் ,
சித்திரையில் மழைத்துளியாய்,
எத்தனை, எத்தனை பெண்கள்
இருந்தும் அத்தனை கண்களும்,
உன் மேல் நிறுத்தும்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

கோலம்!



முறைவாசல் நாளில்,
கோலம்போட நீ வருவாய்,
கோவில் போக நான் கடப்பேன்,
இரண்டுமே நடந்தது இந்நாளிலோ,
புள்ளிகள் வைத்து எண்ணியப்பொழுது,
புருவம் வளைந்து வில்லாய் போவதேன்,

வைத்த எண்ணிக்கை குறைந்ததோ,
வளைய, நுழைய தேடிய புள்ளியும்,
நீ வைக்க முனைந்த தருணம் தானோ,
உன்வாசல் கடக்க நடந்தேன் நானே,
என்னை பார்த்த நொடிகளில் நீயும் - வைக்க
மறந்தது புள்ளியோ என்னவோ - என்
இதயம் தொலைந்தே அங்கேயே!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

கும்மாளம்!


அலைமோதும் கூட்டம் கண்டு,
அணைப்போட்டு, விட்டனர் உள்ளே,
அபிசேகம், ஆராதனை, அர்ச்சனைகள்,
ஐம்பதடி உன்னுருவ படத்திற்கு,
அதேவுயர பூமாலை அசத்தலாய் அரங்கேற,
ஆட்டம், பாட்டம், கும்மாளம்.

ஆயிரமாயிரம் இதயங்கள் மத்தியில்,
நீ கடவுளா, இல்லை அவனுக்கும் மேலா,
எத்தனை உற்சாகம், அத்தனை சந்தோசம்,
உன்பெயர் கேட்டால் உள்ளுக்குள்,
ஏனோ சரவெடி வெடிக்குதே.

ஆசை நாயகன் நீ அமர்க்களமாய்,
எங்கள் அசைவை செதுக்கிவிட்டாய்,
யார் என்ன சொன்னாலென்ன,
எவர் என்ன பேசினாலென்ன,
உயிர் இருப்பது உண்மையானால்,
அதிலே துடிப்பது உன் பெயராய் இருக்கும்.

தங்கத்தில் உன்னுருவம்,
தீட்ட செய்து மாட்டி அலைவோம்,
சிங்க தலை கொண்ட எங்கள் தலைவனே,
செல்லமாய் உன்னை "தல" என்றோமே!


தல போல வருமா!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

வலி!



என்ன தான் வேண்டும் என்றே
தெரியாது, புரியாது, வருவதும்
போவதும் வழக்கமாய் இருப்பது
உன் வாடிக்கையா - இல்லை,
வேடிக்கையா?
நான் அடித்து துவைக்கும்
சலவை கல்லா, இல்லை,
வெட்டி சாய்த்துவிட்டு போகும்,
பட்ட மரமா, இல்லை
பாவமா, பழியா, பரதேசியா?
என்னத்தான் வேண்டும் உனக்கு?
என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய் என்னிடம்?
விட்டுவிடு, என்னிடம் எதுவும் இல்லை
கொடுப்பதற்கு,
உயிரையும் உருவிக்கொண்டு,
ஓட ஓட வெட்டியதற்கு சமமாய் - நானும்
அன்றே, அங்கேயே மரித்துவிட்டேன்,
இன்று - நீ நிற்ப்பது என் கல்லறையில்,
வந்ததற்கு ஒரு மலர்செண்டை மட்டும்
வைத்துவிட்டு போ.
என் ஆவி அடங்கி, அமைதியாய் உறங்கிடும்,
உன் நினைவை துறந்து, தூய்மையாய்!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -


Photo courtesy: Negis Art.

களிப்பு !

 
ஈன்ரப் பொழுதில் கண்ணீர்மல்க,
கை விரித்து அணைத்தேன் - கண்ணே
உன்னை மகனாக பெற்றேனே அந்நாள்,
மறுப்பிறப்பில் கிடைத்த வரமோ நீயும்,
முதல் வார்த்தையாய் அம்மா என்றதும்,
வாரியணைத்தேன், வயதொன்று தொட்டதும்,
மண்டியிட்டு நடந்த நீ, நொண்டியடித்து,
முதலடி வைத்தாய், கண்கொட்டி பார்த்திருந்தேன்,
ராகவா என்று ராகமாய் பாடியழைத்தேன்,
பார்த்திருந்தேன், ஒருக்கைப்பிடித்து,
உன்னுடன் சேர்ந்து நடந்தேன், வயதொன்று
கடந்து, இரண்டு வயதை நீ யடைந்து,
இன்று பள்ளியும் சேர்ந்துவிட்டாய்,
பாருலகை ஆளவே, பண்பாளனாய்,
பலப்பட்டம் பெற்று, நாட்டிற்கும்,
வீட்டிற்கும் நன்ப்பேரு சேர்த்திடவே,
வாழ்த்திடும் அன்னையாய், அரவணைக்கிறேன்,
என் வம்சம், உன்னால் எழுத்தலைமுறைக்கும்,
தொடரும் என்னும் களிப்பில்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Tuesday, July 10

இரவு உணவு!


அவள் கட்டைவிரல் நகத்தை
கடித்து துப்பிய நொடிகளில் - என்
பற்கள் கூசுவதை உணர்கிறேன்
அருகருகே இருந்தும்,
அறைமுழுதும் நிறைந்தும்,
கோபத்தில் கரைந்த தாபத்தில்,
கால் வாயிற்று கஞ்சியுடன்
முடிந்துப்போன என் இரவு உணவு.

::: கோ.இராம்குமார் :::

கனவு போன்று இருக்குதடி!



கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்.

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரைமணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி.

கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்,
கனவு போன்று இருக்குதடி.......,

கல்வி பயின்ற நாட்கள் அன்று,
கதைத்து சிரித்த நொடிகள் தொலைத்து,
சேர்ந்து நடந்த தெருக்கள் மறந்து,
அன்பாய் கொடுத்த முத்தமும் காய்ந்து,
மொத்தமாய் தொலைந்தே போனதடி,

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி,
கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்..

அன்பிற்கு இலக்கணம் எதுவென்றால்,
உன்னையே உரக்க சொல்லுவேன்,
பெற்றவர், உற்றவர், நண்பர்கள்,
இவர்களே உலகமோ உனக்குமடி,
தோழியே, தங்கையே, தேவதையே,
தங்க ரதம் சுமந்துவரும் உற்சவமே,
உனையே சுற்றிவந்து வரம்க்கேட்கிறேன்,
உன் பிறந்தநாளில் இன்று - என்றுமே
எனைப்பிரியா வரமொன்றை தருவாயோயடி?
எப்பொழுதும் எனை பிரியா இருப்பாயோயடி?

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி,
கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்..

மலர்ந்து, மணம் சுமந்து, சிரிக்கும்
பூவே உனக்கு, பிறந்தநாள் இன்று,
வாழ்த்துகள், என்னினிய வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்களுடன் அக்கறையும் இருக்குதடி,
வயதொன்று கூடியதை கூர்ந்தாயோ?
வாழ்க்கைக்கு துணையொன்று வேண்டாமோ?
என் வாய்மொழி கேட்பையோ, காயத்ரி?
இனியும், காலம் தாழ்த்தாதே,
உனக்காய் ஒரு உலகம்,
உலகமாய் ஒரு துணையும்,
பெற்று பெருவாழ்வு வாழ்த்திட,
எனக்கும் ஆசையாய் இருக்குதடி,
வாழ்த்துக்கள் மறுபடியும்,
என் வார்த்தைகள் உயிர் பெற்றிட,
வாழ்த்துகள், வாழ்த்துகள் - என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி,

கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்.


::: கோ.இராம்குமார்  :::

தாமரை இலை, தண்ணீர்!


தாமரை மலர் மேல்,
அமர்ந்திடும் வண்டுகளும்,
சுற்றி வரும் பெண்டுகளும்,
என் மேல் விழுந்து,
போகவா ஆசைப்பட்டேன்,
இழவு, என் நேரமோ - ஓர்
இரவு மட்டுமே,
வாழ்க்கை வாழ்ந்திடும்,
ஈசல் போன்றுத்தான்,
விடியல் வந்தபின்,
என் சிறகை இழக்க செய்து,
சிரித்து, கொசுருக்கேட்டு,
கொசுவம் சரிசெய்து,
கொண்டை முடிந்தபடி,
நெற்றி முத்தம் மிட்டு,
நேரம் ஆனதென்று - அவசரம்,
அவசரமாய் விடைப்பிரிந்தாளே,

தாமரை இலைமேல் தண்ணீராய்,
நானும் அவளும்!!


::: கோ.இராம்குமார் :::



Photo Courtesy: Negis Art!