Saturday, August 25

கசியும் மௌனம்!



இமைக்குள் உருளும் விழிக்குள்,
கசியும் மௌனம் புரியாது,
கசிந்து ஒழுகும் நீரில், கண்ணீரில்
கலந்து மிதக்கும் உப்பும், – என்னிடத்தில்
தப்பாய் சேர்க்கிறது உன் மௌனத்தின்
அர்த்தங்களை,

மௌனமே மொழியாய் யானால்,
வார்த்தை தேவைகள் யாவர்க்கு வேண்டும்,
கண்ணிலே பேசிக்கொள்வோம்,
கைஜாடையில் கலந்துரையாடுவோம்,
ஊமையர், செவிக்கேளாதோர் போலவே,
நாமும் இருந்து விட்டு போவோமே,

வாயிருக்கும் நாயும் கூட
வள்ளென்று குரைத்து பேசிட,
வண்ணக்கிளி என்னடி ஆச்சுயுனக்கு
வாய்திறந்து பேசிடு ஒருமொழி,
வாடியே சாய்ந்திட்ட மல்லிக்கொடி
போலவே, வதங்கி நிற்கும் வார்த்தைகள்,
உனது வாய்த்திறந்து பேசிட வசந்தமாய் வீசுமே,

மௌனம் கசிந்துருகி
கண்களில் கண்ணீராய்,
புரியாதுப் போகவே,
அர்த்தங்கள் தேடியே
ஆயுள் வரை அலைவேனே,

பேசிடு ஒரு சொல்,
இனிதொரு தமிழ் மொழியில்,
வீசிடும் வசந்தத்தை ஒருமுறை
சுவாசித்து விட்டு சாகிறேன்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

தமிழ் வளர்ப்போம்!


யாவரும் இணைந்து,
இலக்கியம் காப்போம்,
இலக்கண காவியங்கள்
இயற்றியே காப்போம்,
இருப்பது ஒரு உயிர் (தமிழ்),
இனிமையின் மறுப்பெயர்,
இயன்றவரை,
இவ்வுலகில் நாம்,
இருக்கும் வரை, நம் செந்தமிழை,
கண்கள் இரண்டாய் காப்போம்
ஆலம் மரமாய்,
விழுதாய் வளர்ப்போம்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
- எழுத்தோலை கோ.இராம்குமார் -

வணக்கம், வாழவைக்கும் சென்னை!!


உன்னில் நானிருக்க
வந்தவன் இல்லை,
ஆனாலும் வாழ்கிறேன்,
பெருமை சேர்ந்திருக்கும்,
அருமை நிறைந்திருக்கும்,
உன்னில்
அடைக்கலம் கொண்டேன்,
பெட்டைக்கோழியின் இறைக்கையில்
உறங்கிடும் குஞ்சுகள் போலே,

நிதமும் உன்னை சுற்றி
தெருத்தெருவாய் வலம்
வந்தேன், என் தொழில்
விற்பனை என்பதால்,
உன் தலை முதல்
பாதம் வரை முற்றிலும்
அறிவேன் - நான்
போகாத இடமேதும்
இல்லை என்பதனால்,

படிப்படியான என்
வளர்ச்சியில் உன் பங்கும்
பெரும்பங்கோ,
உன்னாலே, உன்னுள்ளே
வாழ்கிறேனே, வளர்கிறேனே
சென்னையே நீயும் எனக்கு
இன்னொரு அன்னையோ!

இன்றுனக்கு பிறந்தநாளாம்!
வாழ்க நீ பல்லாண்டு பல
கோடி ஆண்டு,
வாழவைத்திடு வந்தோரையும்,
வரப்போவோரையும்!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Wednesday, August 22

ஊர்கோலம்!



சொல்லிவிட்டு தள்ளிப்போகும் பெண்ணும்
அள்ளிக்கொண்டு போவது எந்தன் உயிரோ,
கிள்ளி என்னைப்பார்த்த பின்பு அறிந்தேன்,
இது கனவல்ல, நிஜமென்று.

என்னிரு சக்கர வாகனம் - காவல்துறையின்
ஆறுசக்கர வாகனத்தில் ஊர்கோலமாய்!

நோ பார்கிங்!

அச்சாரம்!



உருளவும் முடியாமல்,
உறங்கவும் முடியாமல்,
பாதி தூங்கி, மீதி விழிக்கும்,
ஆனந்த அவஸ்தையின்,
அச்சாரமோ இத்திருமணங்கள்,

மோக முள்!! 

தொன்மை!


இரட்டை பிறவிகள்!


தொட்டான்சினுங்கி!


Wednesday, August 8

அ சோகவனம்!



அச்சு பிழையான எழுத்துகள்,
தலை எழுத்தாய் கிறுக்கியதாலோ,
`கதை உயர்த்திய ராவணன், அவன்
பத்து தலைகளும் ஒன்றாய்,
ராமன் அவன் அம்பில் மாண்டு,
சீதையவள் அன்பை பெறாமலே,
சிதைந்து போனதவன் சிதையும்
தீக்கு இரையாய், லங்கையின்
மணர் ப்பறந்த கடற்க்கரையோரம்..,

மாமன்னன் அரக்கர்க்குல அரசன்
பாசம், தன் தமக்கை மேல்மட்டுமே,
மைதிலியின் மேல் இல்லையே,
பிணையாய் பிடித்து வைத்தவளை,
கணையாழி காட்டி அடையாளம்
சொன்னதும் வானரம், ஆரவாரம்
கொண்டவளோ சீதையும், ஆசை
அவள் ராமன் மேல் மட்டுமோ,
இல்லை இலங்கையை தாண்டவோ?


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

கலைவாணி !



அவள்,
என்னை நெருங்கும்
நொடிகள் எல்லாம்
எனக்குள் ஏதோ
நொறுங்கும் ஒலி
கேட்கிறது,
ஒளி ஊடுருவும்
கண்ணாடி போலவே,
அவளை ஊடுருவ
என் கண்கள் துடிக்கிறது,
காதுகள் வெறிக்கின்றது
அவள் கால் கொலுசு
சத்தம் கேட்க,
விரல்கள் தாளமிடுகிறது
காற்றில் தானே,
என்னையும் மறந்து
அவளுக்குள் நுழைந்த
உயிரும், உறங்கிட
அவள் மடிக்கேட்கின்றது,

கேட்பது எல்லாம்
கிடைத்திடுமாயின்,
கேட்டிட ஏதும்
இருந்திடுமோ உலகில்,
உலகமே அவளாய்,
இருப்பின், எனக்கு.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Saturday, August 4

மோட்சம்!


மோட்சம் கிட்டும் நாளில்,
உடலை பிரிந்த உயிராய்,
கூடு விட்டு கூடு,
தேடி, ஓடி புகுந்த,
உயிரும், உடலும் உனதோ ?


சடலம் எனது இங்கே,
சரிந்து கிடக்குது அன்பே,
ஈமை கிரியை செய்து,
சுவர்க்கம் வாசல் அனுப்பு.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

எழுத நினைத்த எழுத்துக்கள்!



சணல் க்கயிற்றில்,
இழை, இழையாய்,
முறுக்கி, திருகி
இழுத்து க்கோர்த்த,
கோர்வையாய் சிலநேரம்,
சிந்தனையில் சிக்கி,
சிதைகிறேன்,

எழுதிட வரிகள் தேடிட,
வாய்வரை எட்டிப்பார்ததும்,
இதழோர எச்சில் பட்டு,
முழுதாய் முடிப்பதற்குள்,
மறைந்து, நமத்து போகிறதே,

மீள்வேனோ, மீண்டும்
மீளா தவிப்பேனோ,
முடிப்பேனோ, நினைத்திட்ட,
எழுத்துக்கள் எழுதி முடிப்பேனோ?

சொல்லடி கலைவாணி!
 
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -

கொலுசே, கொலுசே!



 
காலம் பலக் காலமாய்,
பெண்கள் கால்கள் கவர்ந்து - அவளை,
பார்ப்பவர் கண்களையும் கவர்ந்து,
சின்னதாய் சின்ன, சின்னதாய்
முத்துக்கள் வரிசையாய்,
ஜல் ஜல் கீதங்கள்,
இசைஞானியும்,
இசைக்காத சங்கீதமாய்,
வசியம் செய்வதிலோர்
வல்லமை, உன்னையன்றி யார் - இசைப்பார்
வெள்ளி கொலுசே, கொலுசே!

வைரம் பதித்த உனையனிந்து,
வஞ்சியவள் நடைபயிலும்,
மாலை வேளைகள் சாலையில்,
நாளை ஒன்று வேண்டாம்ப்போல்,
கண்ணை நிறுத்தி குடியிருப்பேன்,
காதல் உன்மேல் காதல்ப்போல்,
உன்னால் அவளிடம் காதல் சொல் -
சொல்லி முடிக்கா முழிப்பேனே,
தங்க கொலுசே, கொலுசே!

அந்தி வரும் நேரம்
தந்தி வருமென்று,
தத்தி, தாவி ஓடி - வாசல்
படியில் சாயும், வஞ்சி அவள்
வஞ்சி, என்னவள் ஓடிவரும்
நொடிகள், நோக நீயும் சிணுங்கும்,
செல்ல சிணுங்கல்கள் தான் ஜல், ஜல்
மொழியாய் என்னை உன்னை
நினைக்க, வைக்கும் இதய துடிப்போ -சொல்லு
விழுப்பொன் கொலுசே, கொலுசே!

நாட்டிய அரங்கில் ஆரவாரம்,
அவளுடன் இணைந்து ஆடியவரும்,
எதிரில் அமர்ந்து கண்டவரும்,
அவளாடும் அழகை மறந்து,
பக்கவாத்திய இசையும் துறந்து,
என்னவள் அழகையும் கூட
அனைவரின் கண்கள்,
காண மறுத்து காணுமே - அவள்
கால்களை முத்தமிடும் - உன்னை,
நெகிழி கொலுசே, கொலுசே!

உன்னழகை சொல்ல, சொல்ல
ஒருத்திக்கு வருதிங்கே கோபம்,
ஓரவிழி பார்வையிலே தீப்பிடிக்கும்
முன்னாலே முன்னாலே,
போதுமென்று முடிக்கின்றேன்,
உன்னழகை இனியும் தொடர்வதை
அழகிய, அழகி கொலுசே, கொலுசே!

 
 
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -


மின்னல்!




கண்சிமிட்டி மறையும் பெண்ணோ, மின்னலும்!
லேசாய், லேசாய் மின்னிவிட்டு மறையுதடி.

வெட்கம் எதற்கு, அப்படி யாரைக்கண்டாய்,
என்னவள் சிரிப்பில் நீயும்,
காதல் கொண்டாயோ?
தூரமாய் இருந்துகொள்,
தூவானில் மறைந்துகொள்,
என்னவள், துயில்கின்ற நேரம் பார்த்து,
லேசாய் மின்னிக்கொள்,
என்னவள், கண்சிமிட்டும் நேரம் மட்டும்
ஓரமாய் ஒளிந்துக்கொள்.

 
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -


மழையற்ற ஒரு வருடமாய்!



பார்வையற்ற பாவையும் நீயோ,

என்னை பார்த்தும் பார்க்காதுப்போல்
போகிறாயே.

பார்வையற்ற பாவையும் நீயோ..(1)

வருடம் ஒரு வருடமாய்
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி
வஞ்சியுன், பார்வை செய்யும் புரட்சி
என்மேல் கல்லெறிந்து போனதடி.

குழிவிழுந்த நெஞ்சம் கேட்கும் - தஞ்சம்
உன் ஊமை விழிகளில் தானே - கொஞ்சம்,
இமைத்தாலே போதும், போதும் - மஞ்சம்
சாய்ந்த மணித்துளி, உயிர் உருகி ஓடுதடி,
காலம் திரிந்து காவியம் ஆகுமோ?
காதலும் கணித்து என் காதலாய் ஆகுமோ?
வருடம் ஒரு வருடமாய்,
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி...(2)

மழை ப்பிறந்து, மலரச்செய்யுமோ
மலர்களை, மக்கள் மனங்களை,
நீயுன் பார்வைக்கொண்டு, என்னை
மீண்டு பிறக்க செய்வாயோ மைதிலியே,
வருடம் ஒரு வருடமாய்,
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி,
வஞ்சியுன், பார்வை செய்யும் புரட்சி
என்மேல் கல்லெறிந்து போனதடி...

பார்வையற்ற பாவையும் நீயோ,
என்னை பார்த்தும் பார்க்காதுப்போல்
போகிறாயே.

வருடம் ஒரு வருடமாய்,
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி........



- எழுத்தோலை கோ.இராம்குமார் -


ஒத்திகை!



உதட்டை சுழித்து ஒத்திகை,
பார்க்கிறாயோ கள்ளி,

பார்த்து பத்திரம்,
கிள்ளி விட்டு போய்விட
போகிறது, கிளிகள் கூட்டமாய் வந்து,
கோவைப்பழம் பழுத்திருக்கிறது என்று.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பார்வதி!



மொத்தமாய் மூன்றேவ்வார்த்தை,
என்னுயிர் முடிவதற்குள் சொல்லிவிடு,

சத்தமாய், சாதகமாய், சவுக்கியமாய்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்,
வராமல் போனாலும், வார்த்தை
அந்த - மூன்றே வார்த்தை சொல்லிவிடு.

வானம், வற்றி வைகையில்
தண்ணீர் தேடி, அங்குமின்றி,
அலைக்கடல் ஓடி, ஆடிவரும்
அலைகள் தொட்டு, அதில் ஒரு
சொட்டு உன் காலில் பட்டு,
தெறிப்பதற்குக்குள்ளேனும்,
அந்த மூன்று வார்த்தை சொல்லிவிடு.

ஏதும் இல்லாத பிச்சை பாத்திரமாய்,
ஏழை கேட்கும், அட்சயப்பாத்திரமாய்,
பாலை நிலத்தின், பண்டைய சாத்திரமாய்,
பார்வதியே, பஞ்சமியில் - உன்னை
பெண்ப்பார்க்க வந்தவன் - நான்,
தானே கேட்கிறேன், இப்பொழுதாவது,
அந்த - மூன்று வார்த்தை சொல்லிவிடேன்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

* Photo courtesy: Google!
* கற்பனை புகைப்படமே.

சகிரா, சகிரா!!


மெல்லிடை மேலாடை,
என் விரலிடையில் விளையாட,
உறுவி, நழுவி, விலகி, வெளிச்சம்
பட்ட இருட்டறை வளைவாய் மடிப்பு,

மூடி வைத்தால் உயிரெடுக்கும்,
திறந்து விட்டால் மாரடைக்கும்,
கண்மூடி திறந்துப்பார்க்க கத, கதக்கும்,
கை வைத்து குளிர்க்காயும் விறகடுப்பும்,
மொத்தமாய் குத்தவைத்த குந்தவை இடுப்பும்,
சொந்தமாய் கொண்டவள் நீ குந்தாணி,

சோதனை செய்திட கேட்குதே என் மனமே,
முத்து, முத்தாய் முத்தம் வைத்து
மூச்சித்திணறி போவோமா,
மூழ்கிப்போன கப்பல் போலே,
ஆழம் சென்று படர்வோமா.
என் மெல்லிடை மேகலையே,
சொல்லடி இடையின இளவரசியே.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Friday, August 3

வெற்றி!



 வலிகள் இல்லாத
வெற்றியும் இல்லை,
வெற்றிகள் காண்பதே
இவர்களின் எல்லை,
வேதனைகள், சோதனைகள்,
தடைகளை தாண்டி,
வேள்விகளில், கேள்விகளின்
பதிலோ அதுவும்,

உந்தித்தள்ள, உற்ச்சாகபடுத்த,
யார்க்கொடுப்பர் தோளை,
ஒருப்பதக்கம் பெற்றிடவே,
பெருமையதை சேர்த்திடவே,
காய்ச்சு, சிவந்த கைகள் நோக,
வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று,
ஓடி, ஒடிந்து, மடிந்து, களைத்து,
வெற்றிக்கனி பறிக்கா, இறங்கா
வெற்றி வீரர்கள் இவர்களை,
தோற்றாலும் தூற்றாமல்,
அடுத்த வரும்காலங்களில்,
தோற்காமல் ஜெயிப்பதற்கு,
உற்சாகம் படுத்துவோமா?

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Wednesday, August 1

மனம் தேடும் மரங்கள்!



நிழல் தரும் சுகங்களை,
வெயிலில் நடந்திட உணர்கிறேன்,
வழிந்து ஓடும் குருதியாய்,
வியர்வையும் நாறிட சட்டையில்,
நகர்ந்து நடக்கும் நங்கையின்,
நாசியை துளைதிருக்க கூடுமோ,
மேலும், கீழும் பார்க்கிறாள்,
வேதனையில் என்னை ஆழ்த்தினால்,
தேடிட மரங்கள் இல்லையே, சாலையில்,
எங்கு தேடியும் உங்களை காணலையே,
மனம் தேடும் மங்கையோ நீங்களும்.

இப்படியொரு இழிநிலை இவ்வுலகினில்,
குளிர் காற்றில்லை உறங்கிட இரவினில்,
ஒதுங்கி நிற்க மரமில்லை வெயிலினில்,
தேனீக்கள் தேன்சுவை மறந்திடும் விரைவினில்,
பறவைகள், மந்திகள், பழங்கள் படங்களில்,
காட்டி சொல்லிடும் நிலை வரும், வருங்காலங்களில்,
தேடிட மரங்கள் இல்லையே, சாலையில்,
எங்கு தேடியும் உங்களை காணலையே,
மனம் தேடும் மங்கையோ நீங்களும்.

இன்றைக்கே இந்நிலை நமக்கெனில்,
நாளைய தலைமுறை புதைந்திடும் நிலத்தினில்,
விதைத்திடுவோம், வளர்த்திடுவோம் மரங்களை,
காத்திடுவோம், நிழல் காய்ந்திடுவோம் மனங்களில்,
தேடிட மரங்கள் இல்லையே, சாலையில்,
எங்கு தேடியும் உங்களை காணலையே,
மனம் தேடும் மங்கையோ நீங்களும்.



(இந்த குழந்தை பார்த்தேனும் திருந்திடுவோம்,
இடமிருந்தால், ஒரு மரக்கன்றை நட்டு நீரூற்றுவோம்,
மரங்களை காப்போம், மனமகிழ்ந்து வாழ்வோம்.)


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

புது இரவு!


முட்டிய மடி நசுங்க,
கசிந்திடும் வெள்ளைத்திரவம்,
பசித்திருந்த உடலுக்கு,
பால்சோறு ஊட்டி,
பட்டினி இனியில்லை உனக்கு,
என்பதைப்போல் புது இரவில்,
தொடங்கி, விடிவதற்குள் கசங்கிய,
படுக்கையும், நசுங்கிய
மல்லிகையும், பாதி மீந்துப்
போன பால்சொம்பும், பூனை
உருட்டலில் குப்புற கவிழ்ந்து,
சொட்டு, சொட்டாய் சொட்டி,
தரையில் கிடந்த பாலை நா
வருடி பசியாறிய பூனையாய்,
விடிந்ததும், தூங்கிப்போனேன்,

சீம்பால் மருந்தாய்,
சிகிச்சையில் கிடந்த எனக்கு,
உயிர்கொடுத்து, உயிர் வாங்கிய
வாட்டியும், வதைத்தது, இனித்தது.

(வாட்டி = மனைவி)


- எழுத்தோலை கோ.இராம்குமார் -