Wednesday, December 21

என் நிலை!

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!
உச்சியிலிருந்து மண்ணில்தாவி
பள்ளம், மேட்டில், நில்லாமல் செல்வாயோ !!

நிலவு , வானம், நட்சத்திரம்
வண்ண பூக்கள் வாசம் கலந்து
நீந்தி செல்லும் மீனுக்கும் தெரியாமல்
நீறருந்தி செல்லும் மானுக்கும் புரியாமல்
அலைகடலை சேரும்முன் அவளை நீ பார்பாயோ !!

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!

பார்த்தால் கொஞ்சம் சொல்லு,
நான்,
கூடில்லா பறவையாய், திசையறியா தவிப்பதை
குழலில்லா இசையாய், ஜதியறியா ஒலிப்பதை
நீரில்லா தேசம் போல் வறண்டு சாகக்கிடப்பதை.

நதியே நீயும் ஒரு நொடி நில்லாயோ
என் நிலை சொல்வேன், அவளிடம் சேர்ப்பாயோ !!

No comments: