Tuesday, January 31

கவிதை !


எழுத நினைத்த கவிதை,
எதுகை, மோனை புதுமை,
உவமை மொழியில் புலமை,
இலக்கண, இலக்கிய இளமை,
இணைத்து, பிரிந்த இனிமை,
கனவின் வரிகள் வலிமை,

அவள் பெயரும், அதுவோ !
இவ்வளவு அருமை !!

::::::: இராம்குமார் கோபால் :::::::::



Monday, January 30

நினைவு!


மூன்றம்பிறை முழுநிலவாய்
முகம் சிவக்கும் என்னவளின்,

மிளிர்கின்ற கண்கள்,
சிமிட்டாமல் பேசியதும்,
சிலுமிச இதழ்கள்
சிரிக்காமல் சிரித்ததும்,
இல்லாத இடை ஒடித்து
நடக்காமல் நடந்ததும்,

நான் அவளோடு இருந்த
நாட்களின் நினைவுகளாய்,

முப்பொழுதும் அவள் கற்பனையில் !!

:::::: இராம்குமார் கோபால் :::::::



Sunday, January 29

ஏழாம்ச்சுவை !


உணவின் சுவை ஆறு வகையாம் - எழாவதாய்,
நான் சுவைத்து, ரசித்த சுவையோ புதிது,

என்னவள் உதட்டுச்சாய சுவையே, அதுவோ !

இனிப்பும், புளிப்பும் சேர்ந்தார் போல
துவர்ப்பும், கசப்பும் இணைந்தார் போல
உவர்ப்பும், கரமும் பினந்தார் போல
என்னிதழ் அவளிதளோடு கலவையில்
இதழ்ச்சாயம் தந்த சுவையோ, மயக்கம் !

:::::: இராம்குமார் கோபால் :::::::



Saturday, January 28

இடை !

சிறுத்து, மடிந்த வளைவில்
படர்ந்து, மலர்ந்த கொடியை!
பற்றி, சுற்றி, இறுக்கி,
என்னை மயக்கும் சிறுக்கி - யின்
சிற்றிடை வெறுக்கும் சீருடை
சில்லென்ற காற்றில் நகர்ந்திட - என்
சிலுமிச கையும் சிணுங்கியே, அவள்
இடை, மேடை பற்ற, இயல்,
இசை- நாடகங்கள் அரங்கேறிடுமே!

::::::: இராம்குமார் கோபால் :::::::



ஏழையாய் பிறந்தது தவறோ !


ஆத்திசூடி படிக்கும் வயதில்
அடிமைகளாய், அரக்கர் பிடியில்.
கருங்கல் உடைக்கும் கைகள், எனது
ஏடெடுத்து, எழுதா வாடுது.

காசை கண்டால் குடிக்கும் அப்பா,
கஞ்சில்லாமல் துடிக்கும் அம்மா,
கந்தை துணி கால்சட்டை தங்கை,
குடிசையில் கிடக்கும் நானும்,
ஏழையாய் பிறந்தது தவறோ !

என்னை போன்ற சிறுவர் எல்லாம்,
ஏளனமாய் சிரிக்கும் நிலைக்கு,
ஏக்கமாய் அவர்களை பார்க்கும்,
ஏன் இந்த நிகழ்காலம் எனக்கு ?

எழுதி, படிக்க துடிக்கும் - எனது
கைகள், கண்கள் இரண்டும்,
எருமை மாடு மேய்தே,
எண்ண பழகி, கற்றேன்.

கருத்த உடம்பு வியர்க்க,
காகிதம் பொறுக்கியானேன்,
கையில் கிடைக்கும் குப்பை,
குடித்து வீசிய குப்பி,
இவற்றில் கிடைக்கும் காசை,
எதிர் பார்த்து கிடக்கும் மூவர் ..

என்னை போன்று, இந்நாட்டில்
எத்தனை ஆயிரம் சிறுவர்
ஏழையாய் பிறந்ததை தவிர
ஏது, தவறு இழைத்தோம்?


இளமையில் கல் விஇன்றியே- எங்கள்
எதிர்காலம் விடுகதை ஆகுமோ ?

::::: இராம்குமார் கோபால் ::::::



Thursday, January 26

சிரிப்போடும், சிறப்போடும்!!


அவள் விழியில் உன் பார்வை
சேரும் இந்நேரம்
அழகான மாலை,
இடம்மாறி சிரிக்கும்.
பட்டுடை மேனி,
தங்கம் சேர்ந்து ஜொலிக்கும்.
வாழைமரம், தோரணங்கள்,
வாசலில் அழைக்கும்.
நாதஸ்வர, மேள,
மங்கள இசை ஓலிக்கும்.
வாழ்த்த வந்தவர் வயிறு,
மனம் நிறைந்து பெருக்கும்,
மனமேடை நிறைந்த
மங்கையர் சூழ,
வந்ததமரும் மணமக்கள்,

அர்தனாரிஸ்வர அவதராமாய்
ஆழம் விழும் விழுதாய்
செந்தமிழ் மொழியாய்
பல்லாண்டு காலம்
சிறக்க, இல்வாழ்க்கை
தொடங்கும் இத்தருணம்
தேவர்கள் வாழ்த்து பாட
தாய், தந்தையர், ஆசியோடு
அரியணை ஏறும் அரசன் போல்
ராஜஸ்ரீயின் கை பற்றும்
சிங்காரவேலனும் நீயோ ?

இல்லறம் தொடங்கி
நல்லறம் புரிந்து
மக்கட்செல்வம் பல பெற்று
சிரிப்போடும், சிறப்போடும்
ஆண்டுகள் பல வாழ
உங்களை வாழ்த்தும் பல
நெஞ்சங்களில் அடியேனும்
ஒருவன் !


:::::::::: இராம்குமார் கோபால் ::::::::::





Tuesday, January 24

சல்லடை !


அரசிலை சல்லடை
அழகியின் கண்ணிடையே ...
அமர்களமாய் அரங்கேறி
அடியேனை அடியோடு சாய்கிறது ...

உன் கண்ணழகா ? என் கண்களை, கேட்கிறேன்
என் பார்வையில் பழுதென சொல்கிறார்
சோதித்து பார்த்த வைத்தியர் ...........
:::::::: இராம்குமார் கோபால் :::::::::




Monday, January 23

செக்ஸ்செர்சைஸ் !


அவள் மூச்சிம்முட்ட கொடுத்த முத்தத்தில்
மொத்தமாய் கரைந்தது 200 கலோரிகள் ...
நா வரண்டு ஓடியும், ஒருமாதம் குறையாத
ஒட்டு மொத்த கொழுப்புகளில் .......



இதை தான் சொல்வார்கள் போல,
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று !!

::::::::: இராம்குமார் கோபால் ::::::::::::


சிக்கல் !


சிலந்தி வலைக்குள்
சிக்கிய ஈ போல், நான்
சிக்கி தவிக்கிறேன் - அவள்
விழி வலைக்குள் !

வாழவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்........

:::::::: இராம்குமார் கோபால் :::::::::



பிடித்தல் !




கொட்டி தீர்த்த ஒரே நாளில்
துடைத்து தீராத ஒழுகல்,
கூரை இடுக்கில் அல்ல - அவள்
மூக்கின் இடுக்கில் ...

மழையை பிடித்த அவளும்,
அவளை பிடிக்காத, மழையும்...

:::::::::: இராம்குமார் கோபால் ::::::::::


Wednesday, January 18

மோவாய் முத்தம் !



இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே ....

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே
இலைமறை காய்ப்போல் தயங்கும்,
இதழ் சுழித்து, மடித்து
இதயம் துடித்து, துயலும்
இச்சை, பிச்சை வேண்டி
பசித்த தேக தேடலில் -
ஒள்ளமர்க் கண்ணாள்
பக்கம் வந்தமர்ந்தேனே.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே ....

நுதல் பதிதென் இதழ்,
நாவைசுழற்றி, கீழிறங்கி
விழிகள் இரண்டில், ஒன்றின்மேல்
வெட்டுதட்டு வெதுமை தீர்த்து,
குழியமைப்பு குழியின்மேல்
குத்தவைத்து குடிபெயர-
மறுத்தே, இதழோடு - இதழ்
பிணைந்து, எச்சிலோர்
குளம் அமைத்து, நீந்தி-
சேரா, நாபடகில் பயணித்தே
பாற்கடல் அமிழ்தினை பருக
மோவாய் முத்தம் முற்றும்.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே....

பலுங்கி கல் கழுத்து வழுக்கி
பருவத்தோள் பரவியே இதழும்
நெருங்கிட முயலும் வலக்கை
மென்மை மேனி , மடந்தை
மேலாடை மறைத்த கொங்கை-
அலைத்திமில், அதன்மேல் என்கை,
படர்ந்த கொடிபோல் நெளிந்து
நுழைய திறந்த குகைவாயில்
புகுந்து பற்றி கூர் நசுக்க
நெளிந்த பாம்பாய், தெரிவை.

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே....

பொருக்கா இடக்கை, பொறுத்து-
வெதும்பி, அகடு இடம்பெயர்ந்து
உந்தி துளை உறிய, மோக தீ
பற்றியே அவளும், துடிக்கும் நொடிக்குள்
உதரம் கடந்து புணர்குழை தீண்ட
நெருப்பினுள் இட்ட புழுவோ, அவளும்
நெளிந்து, ஒடிந்து மடிந்திடும் நிலைக்கு
செல்லவதற்கு சற்றே, களையா
விட்ட துகில் கலைத்தேன்
ஒன்றாய், இரண்டாய், முழுதாய்
முற்றிலும் ஆனாள் முழுநிலவாய்

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே...

இரவை தழுவும் நிலவும்
என்னை தழுவிய அவளும்
இருட்டில் கிடைத்த வரமோ ?
தயக்கம் கடந்த களவியில், கற்பனை
கவியேற்றி கரைதெரியா, கடல்நடுவே
சிக்குண்ட ஓடமாய், எல்லையில்லா
இன்ப நீந்தலில் சிதறிய நீர்
உயிர் பெறுமோ புதுஉறவாய்
அவள் வடிவில் ?

இரு க்கை அவளது மேனியை
இருக்க அணைக்க எண்ணியே....


::::::::::: இராம்குமார் கோபால் :::::::::::

Tuesday, January 17

விழி இரண்டு, இதழ் இரண்டு !



விழி இரண்டு, இதழ் இரண்டு
இதில், எதை கொண்டு வீழ்த்தினாய் என்னை ?

விழி கொஞ்சும் பார்வை, கூர்மையோ ?
இதழ் சொட்டும் கனிரசம், விஷமோ ?

இதில் மீண்டு, உயிர் பிழைக்க
இதழோடு இதழ் இணைக்க
இவள் இல்லை என்னருகே
இது இரவோ, கனா களைய?


:::::::இராம்குமார் கோபால் :::::::


உன்னை போல வருமா ? தல போல வருமா ??






அமராவதியில் தொடங்கிய
பிரேம புஸ்தகத்தின் எழுத்துக்களை
பாச மலர்களால் கோர்த்தே
பவிதிரமானாய் ! நீ

ராஜாவின் பார்வை கொண்டவனே ?
ஆசையாய், வான்மதியை எங்கள்
கல்லூரி வாசலில் கோலம் போட்டாய் !

மைனர் மாப்பிள்ளையாய்,
காதல் கோட்டையை கட்டி
எங்கள் நேசக்கொடி ஏற்றினாய் !

ராசி எந்த ராசி நீ ?
உல்லாச வாசியானோம் உன்னால் நாங்கள்.

பகைவன் இல்லை உனக்கு
உன் பக்கபலம் எங்கள் இலக்கு
ரெட்டை ஜடை வயசு பெண்களுக்கு
நீயே காதல் மன்னன் என்பதும் சிறப்பு,

அவள் வருவாளோ இல்லையோ
உன்னிடத்தில் எங்களை கொடுத்தோம்
உயிரோடு உயிராக, இது தொடரும் உன்னை தேடி.

வாலி எழுதாத ஆனந்த பூங்காற்றே, நீ வருவாயென
அமர்க்களம் இன்றி காத்துகிடக்கும் எங்களின்
முகவரியும் நீயோ ?

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
உன் பெருமைகளை மனமகிழ்ந்தே,
உன்னை கொடு என்னை தருவேன்
என்று சொல்ல எனக்கேதும் தகுதியுண்டோ ?

தீனதயாலனே! நான்கு திசைக்கும்
சிட்டிசனாய் நீ இருப்பதால்தானோ
பூவெல்லாம் உன் வாசம் ?

அசோக வன இலங்கையின்
கரையில் சிவந்து, பதுங்கும்
(ரெட்)செஞ்சூரியனே !
எங்கள் ராஜனாய் நீ இருக்க,
வில்லனுக்கு இனி வேலையேது ?

என்னை தாலாட்ட வருவளோ
உந்தன் ரசிகையிலே ஒருத்தி, என்று
வேண்டாத நாளில்லை அந்த ஆஞ்சநேயனிடம் .

ஜனா நீ தினம் வராதே பெண்கள் கனாவில்,
அவர்களின் அட்டகாசம், இந்த ஜி-ல்லாவை
கடந்து பரமசிவனின் ருத்ர தாண்டவ வேகத்தில்
திருப்பதி மலை உயர்ந்தே வரலாறு படைத்துவிடும் போல !

ஆழ்வார் துதி பாடி உன்னை
வைரமாய் கிரீடத்தில் பதிப்போம்,
பில்லா நீ எங்கள் ஏ(க்)கத்தின் அசல்,
மங்காத புகழ் கொண்டே
வெற்றி பல குவிக்க
பில்லா இரண்டாய்
விண்ணே! வியக்க விரைந்து வா,
எங்கள் தல !!
நீ என்றும் எங்கள் தங்க தலைவனே !!
உன்னை போல வருமா ? தல போல வருமா ??

- எழுத்தோலை  கோ.இராம்குமார்  -

Saturday, January 14

மௌன மொழி !



தங்க சுரங்கம் ஆழம் உந்தன்
மௌன மொழியின் அர்த்தங்கள் அனைத்தும்

தங்க சுரங்கம் ஆழம் உந்தன்
மௌன மொழியின் அர்த்தங்கள் அனைத்தும்
வெட்டி அல்ல முடியாது, தவித்தேன்
வெளிச்சத்தை தொலைத்த தொலைதூர தேடலில்
வியர்வை துளிகள், கடலாயினும் கூட
விடாது தொடர்வேன் உன் விழி ஒளி கிடைக்க..

தங்க சுரங்கம் ஆழம் உந்தன்
மௌன மொழியின் அர்த்தங்கள் அனைத்தும்

தேடி, தேடா கிடைத்த தங்கமே
தேரினில் உனைவைத்து,
தெருவெல்லாம் சுற்றி வர
கையெடுத்து கும்பிடுவோர்
தெருவோரம் உன்னருள் வேண்டி
வழியெங்கும் காத்துகிடக்க,
எனக்கு மட்டும் கிடைத்த வரமோ
உன்னருகே நானிருந்தேன்
உன் மௌன மொழியின் அர்த்தம் அறியா
ஐந்து வயது பிள்ளையை போல

தங்க சுரங்கம் ஆழம் உந்தன்
மௌன மொழியின் அர்த்தங்கள் அனைத்தும் ???

::::::::இராம்குமார் கோபால் ::::::






Friday, January 13

பிடிப்பு!


இரவை பிரியும் நிலுவுக்கு
பகலை பிடிப்பதில்லை,
இளமையை பிரியும் முதுமைக்கு
வாழ்க்கை பிடிப்பதில்லை,
என்னை பிரிந்த அவளுக்கு
பகலும் நானோ ?
அவளை பிரிந்த எனக்கு
வாழ்க்கையும் அவளோ ?.







பறிதவிப்பு..


குங்குமச்சிமிழில் கொட்டிவ்வைத்த
குங்குமமாய் கன்னம் சிவந்தவளே
கொட்டித்தீர்த்த மழையோ உன் சிரிப்பு ?
துடைத்தும் என்னை விடவில்லை
என்மேல் படர்ந்த அதன் பறிதவிப்பு ...
சிதைந்து போன சிலையாய்
மலர்ந்து மடிந்த மலராய்
இலையுதிர்ந்த மரமாய்
நீர்வற்றிய குளமாய்
நித்திரையின்றி தவிக்கிறேன் .........
ஒரு சொல்லில் மரணம்
மறுசொல்லில் ஜனனம்
இதில் எதை கேட்பது உன்னிடம் ?
நீயே சொல் ! என் உயிர் ஓவியமே !!


பொங்கலோ !! பொங்கல் !!








மார்கழியின் குளிர் விரட்டி தை பிறக்க,
மாவிலை தோரணங்கள் வாசல் தோறும்,
வாழையிலை,
மஞ்சள்கொத்து,
இஞ்சிக்கொத்து,
புதுநெல்லு பச்சரிசி,
அச்சில்வார்த்த வெல்லக்கட்டி,
அறுத்தெடுத்த வாழைக்கன்று,
இலைகள் நீண்ட கரும்பு ரெண்டு,
பானை ரெண்டு,
அடுப்பும் ரெண்டு,
சக்கரை பொங்கல் பொங்க ஒன்று,
வெண்பொங்கல் பொங்க ஒன்று,
அம்மா கையில் அடுப்பை மூட்ட
அப்பா அரிசியை பானையில் சேர்க்க,
பாலுடன், வெள்ளமும் சரியாக கலக்க
கொஞ்ச நேரம் பொருக்கா நாங்கள்
பொங்கும் நேரம் காத்துக்கிடப்போம்
எட்டி பார்க்கும் வெண்ணுரை நுனியை
சொல்ல தொடங்குவோம் பொங்கலோ ! பொங்கல் !!
பொங்கலோ !!! பொங்கல் !!!
இன்பம் பொங்கும் வாழ்வை தொடங்க
உரக்க சொல்லுவோம் பொங்கலோ !! பொங்கல் !!

Tuesday, January 10

இருட்டிலோர் நடனம், நளினம்.





இருட்டினில் மின்னிடும் நட்சத்திரமே,
என் இருக் கையில் வருவாயோ ?
இளவரசியாய் என் தோழி சிரிக்க
அவள் இதழோரம் உன்னை பூசிவைக்க,

இருட்டினில் நடந்திடும் வெண்ணிலவே,
என் தோளோடு தோள் சேர்வாயோ ?
நளினமாய் என் தோழி நடனமிட
அவள் நடனத்தை நாடெங்கும் ஒளிபரப்ப,

இருட்டினில் ஒலித்திடும் சில்வண்டே,
என் செவியினில் வந்து சத்தமிடு
அமைதியான நதியாய் என் தோழி உறங்கிட
அவள் துயிலை நீ கலைகாதிருக்க.

இருட்டினில் ஓய்வெடுக்கும் சூரியனே
என் பேச்சை நீ கேட்பாயோ ?
நாளை ஒரு நாள் தாமதமாய் வந்தால் போதும் ?
விடிய விடிய என்னோடு பேசிய என்தோழி
சற்று முன்னர் தான் தூங்க சென்றாள் .