உன்னை போல வருமா ? தல போல வருமா ??
அமராவதியில் தொடங்கிய
பிரேம புஸ்தகத்தின் எழுத்துக்களை
பாச மலர்களால் கோர்த்தே
பவிதிரமானாய் ! நீ
ராஜாவின் பார்வை கொண்டவனே ?
ஆசையாய், வான்மதியை எங்கள்
கல்லூரி வாசலில் கோலம் போட்டாய் !
மைனர் மாப்பிள்ளையாய்,
காதல் கோட்டையை கட்டி
எங்கள் நேசக்கொடி ஏற்றினாய் !
ராசி எந்த ராசி நீ ?
உல்லாச வாசியானோம் உன்னால் நாங்கள்.
பகைவன் இல்லை உனக்கு
உன் பக்கபலம் எங்கள் இலக்கு
ரெட்டை ஜடை வயசு பெண்களுக்கு
நீயே காதல் மன்னன் என்பதும் சிறப்பு,
அவள் வருவாளோ இல்லையோ
உன்னிடத்தில் எங்களை கொடுத்தோம்
உயிரோடு உயிராக, இது தொடரும் உன்னை தேடி.
வாலி எழுதாத ஆனந்த பூங்காற்றே, நீ வருவாயென
அமர்க்களம் இன்றி காத்துகிடக்கும் எங்களின்
முகவரியும் நீயோ ?
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
உன் பெருமைகளை மனமகிழ்ந்தே,
உன்னை கொடு என்னை தருவேன்
என்று சொல்ல எனக்கேதும் தகுதியுண்டோ ?
தீனதயாலனே! நான்கு திசைக்கும்
சிட்டிசனாய் நீ இருப்பதால்தானோ
பூவெல்லாம் உன் வாசம் ?
அசோக வன இலங்கையின்
கரையில் சிவந்து, பதுங்கும்
(ரெட்)செஞ்சூரியனே !
எங்கள் ராஜனாய் நீ இருக்க,
வில்லனுக்கு இனி வேலையேது ?
என்னை தாலாட்ட வருவளோ
உந்தன் ரசிகையிலே ஒருத்தி, என்று
வேண்டாத நாளில்லை அந்த ஆஞ்சநேயனிடம் .
ஜனா நீ தினம் வராதே பெண்கள் கனாவில்,
அவர்களின் அட்டகாசம், இந்த ஜி-ல்லாவை
கடந்து பரமசிவனின் ருத்ர தாண்டவ வேகத்தில்
திருப்பதி மலை உயர்ந்தே வரலாறு படைத்துவிடும் போல !
ஆழ்வார் துதி பாடி உன்னை
வைரமாய் கிரீடத்தில் பதிப்போம்,
பில்லா நீ எங்கள் ஏ(க்)கத்தின் அசல்,
மங்காத புகழ் கொண்டே
வெற்றி பல குவிக்க
பில்லா இரண்டாய்
விண்ணே! வியக்க விரைந்து வா,
எங்கள் தல !!
நீ என்றும் எங்கள் தங்க தலைவனே !!
உன்னை போல வருமா ? தல போல வருமா ??
- எழுத்தோலை கோ.இராம்குமார் -
No comments:
Post a Comment