Saturday, January 28

ஏழையாய் பிறந்தது தவறோ !


ஆத்திசூடி படிக்கும் வயதில்
அடிமைகளாய், அரக்கர் பிடியில்.
கருங்கல் உடைக்கும் கைகள், எனது
ஏடெடுத்து, எழுதா வாடுது.

காசை கண்டால் குடிக்கும் அப்பா,
கஞ்சில்லாமல் துடிக்கும் அம்மா,
கந்தை துணி கால்சட்டை தங்கை,
குடிசையில் கிடக்கும் நானும்,
ஏழையாய் பிறந்தது தவறோ !

என்னை போன்ற சிறுவர் எல்லாம்,
ஏளனமாய் சிரிக்கும் நிலைக்கு,
ஏக்கமாய் அவர்களை பார்க்கும்,
ஏன் இந்த நிகழ்காலம் எனக்கு ?

எழுதி, படிக்க துடிக்கும் - எனது
கைகள், கண்கள் இரண்டும்,
எருமை மாடு மேய்தே,
எண்ண பழகி, கற்றேன்.

கருத்த உடம்பு வியர்க்க,
காகிதம் பொறுக்கியானேன்,
கையில் கிடைக்கும் குப்பை,
குடித்து வீசிய குப்பி,
இவற்றில் கிடைக்கும் காசை,
எதிர் பார்த்து கிடக்கும் மூவர் ..

என்னை போன்று, இந்நாட்டில்
எத்தனை ஆயிரம் சிறுவர்
ஏழையாய் பிறந்ததை தவிர
ஏது, தவறு இழைத்தோம்?


இளமையில் கல் விஇன்றியே- எங்கள்
எதிர்காலம் விடுகதை ஆகுமோ ?

::::: இராம்குமார் கோபால் ::::::



No comments: