Tuesday, June 26

ஓமன பெண்ணே!

ஓமன பெண்ணே, ஒள்ளமர்க்கண்ணே,
ஓடிவா என்னுடன், ஒரு ஓட்டப்பந்தயம்
நடத்துவோம் -  பின்னே,
மூச்சு வாங்கும், அதனால் கொஞ்சம்,
உட்கார்ந்து பேசுவோம் - உலக கதை
ஊர்க்கதைக்கு ஊடே சிலுமிச பேச்சும்.

எந்தா மயக்கம், கழிச்சோடு வெள்ளம்,
தூர தெரியுதுப்பார் அங்கே வெளிச்சம்
அங்கேப்போய் வருவோம், எதற்கு அச்சம்,
ஆற உக்கார்ந்து, அளாவலாம் கொஞ்சம்,
அச்சன் கண்டால் அடிச்சே கொல்லுவானோ?
அம்மே வந்தாள், அரிவாள் மனையிலேயே வெட்டுவாளோ?
வந்தா பாத்துக்கலாம், வாடி என் பக்கம். 

::: கோ.இராம்குமார் :::

Monday, June 25

கிறுக்கு!

புருவத்திலே அம்பெய்து,
புல்நுனியில் பனிக்கொய்து,
பூபோட்ட பாவாடை, பூப்பறித்து,
புதுவாசம் தந்தாயே, என்தேவி -
ஸ்ரீதேவி!

சாவித்துளை ஊடுருவி,
செவிதுளைக்குள் கச்சேரி,
சாயும்க்காலம் சந்தையிலே,
முழம், முழமாய் மல்லிகைப்பூ
சூடி, மந்தைவெளி போவோமா,
மாந்தளிர்ப்பெண்ணே, என் அன்னையின் -
மருமகளே!

மனசெல்லாம் நீயாய் போனால்,
மனசில்லை எனக்கு, மயக்கமாய் இருக்கு,
மான்விழி, மைவிழி சுந்தரி என் கண்மணியாய்,
காண ஒளி தந்து, கடந்துப்போகாதே இன்று,
காதலியே, என் தங்கைக்கு அண்ணியே!






::: கோ.இராம்குமார் :::




Wednesday, June 20

தனிமை!


இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...(2)

இதயம், ஏனோ என் இதயம்
இயங்க, நேரம் பிடிக்கிறதே,
லேசாய் துடிக்கிறதே - துணையில்லா
வேதனையில், துயர் பற்றிய துவானமாய்...

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...(2)

தேடல், நின்றப்பாடில்லை
தேகம், மெலிய நூலிலைப்போல்,
நோக மனசும், இயங்க நேரம் பிடிக்கிறதே,..

இத்தனை நாள், இருந்துவிட்டேன்,
இதயம் சுருங்கி, விரியகண்டேன்,
இம்சையாய், தனிமை உணர திரிந்தேன்,
இருட்டினில்,
தலையணை உறவில் புலம்பி துயின்றேன்,
புதுமை காலையில் ஓலை வருமோ?
புரியாமல், சேதி அறியாமல், சோர்ந்தேனே?

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறது...(2)

தேடல், நின்றப்பாடில்லை
தேகம், மெலிய நூலிலைப்போல்,
நோக மனசும், இயங்க நேரம் பிடிக்கிறதே,..

இதனை நாள், இருந்துவிட்டேன்,
இனியும் ஒரு நொடி இருக்க முடியாது,
தேதி கிழிந்த நாட்காட்டியும் தேயுதடி,
எனக்கென பிறந்தவள், தேவதையும் யாரடி?
எங்கிருக்கிறாய், என்னை தெரியவில்லையா?
ஏதும் தெரியாமல், ஏக்கம் நெஞ்சை கொல்லுதே!

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...(2)

இதயம், ஏனோ என் இதயம்
இயங்க, நேரம் பிடிக்கிறதே,
லேசாய் துடிக்கிறதே - துணையில்லா
வேதனையில், துயர் பற்றிய துவானமாய்...

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...

::: கோ. இராம்குமார் :::

நெஞ்சோர நினைவுகள்!

 
நாலு அஞ்சு (04 .05) மணியாச்சி,
நான்த்தொலைந்து, நாலஞ்சு நாளாச்சு,
நசுங்கிப்போன எலுமிச்சை பழம்ப்போல்,
கழுவலில் வழுக்கி, தாவும் குளத்து மீன்ப்போல்,
குத்தகை எடுத்த, உன் மனசை,
குழந்தையாய் சிரித்த உன் சிரிப்பை,
எங்கு, தேடியும் கிட்டவில்லையே?

ஆரோமலே, என் நெஞ்சு ஆறாமலே
பதறி, சிதறிய தேங்காய் சில்லாய்,
அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடக்குதடி,
அருகிலிருந்து நீயும் - என்னை
ஆட்கொள்ள வேண்டாம்,
இறுக அணைத்து - என்னை
உருக வைக்க வேண்டாம்,
தொலைவில் இருந்தாலும் - என்னுடன்
தொடர்பில் இருந்தாலே போதுமடி,
ஏழ்பிறப்பும் இன்பமே, இனிமையே,
உன்னுடன் -
பழகிய அந்த பதினைந்து நாட்களின்,
நினைவுகள்!

நெஞ்சின் ஓரமாய், நித்தியமாய்....


::: கோ.இராம்குமார் :::

Tuesday, June 19

குறை!

 

குயில் கூவலிலும் குறை காண்பர்,
குற்றம் குறை இல்லாதார்,
குற்றால அருவியில் குளித்தாலும்,
குரங்காய் மரம் தாவி,
குத்தூசி குடைசலாய் குறுகி,
கடைசியில் கன்னைவிட்டே மறைவாரோ?


காற்று!

விழிக்கூட அறியாது அதன் வரவை,
செவிக்கூட புரிந்திடாது அதன் மொழியை,

சுழன்று சுற்றி, சுவாசத்தில்

உயிர்வளி செலுத்தி, கரிவளி
கடத்தி, கடைசியில் கரும்பொருள்,
மின்சார அடுப்பில் வேகும் வரை!

கண்ணனுக்கு தெரியாத கடவுளாய்,


காற்று!


Saturday, June 16

மாறுதே சென்னை!

 

செந்தமிழ் மொழிப்பேசும்
சங்க தமிழ்நாட்டின் முதன்மை
நகராம் சென்னை மாநகரும்,
விடியல் தொலைத்து வெகு -
நாட்கள் ஆகுமோ - இன்னும்
வந்தவர் நின்றதில்லை,
நின்றவரும் சென்றதில்லை,
நிதிதிரட்டி, நீண்ட வழி நடந்து,
நித்ய வாழ்க்கை வாழ்ந்திட,
ஓடி ஓடி வந்துக்கொண்டு
தானே இருக்கின்றனர்.

குடி வழி சிறக்க,

குழந்தை குட்டிகள் வளர்க்க,
குத்தகை எடுத்தார்ப்போல்,
குடும்பம்மாய் குடிபெயர்ந்து இன்று,
குடிக்க தண்ணீர் கூட, கூத்தாடி
வாழ்க்கைப்போலே கயிற்றின்மேல்
நடந்து, காக்கை கடி கடித்து,
கசந்து, அயர்ந்து, கடுகினாய் சிறுத்து,
கடைசியில் கட்டையில் போகும் வரை,
இம்மண்ணை, விற்காமல் நிற்ப்பாரோ?

எதோ தேடல் எல்லோர்க்கும்,

ஏற்றம் தேடும் வல்லோர்க்கும்,
வறுமை போக்க வந்தோர்க்கும்,
வாங்க, வாங்க என்றோமே!
வந்த, இடத்தில வாந்தி எடுப்பதா?
காட்டிய இடத்தை கூட்டிகொடுப்பதா?

தேடல் நின்ற பாடில்லை - எதையும்

தேவைக்கு ஏற்ப சேர்த்ததில்லை,
சென்னை என்ன அக்ஷயப்பாதிரமா?
அல்ல அல்ல குறையாமல் கொடுக்க?

ஆஸ்திக்கு ஆசை, அவள் மீதும் ஆசை,

ஆஸ்பத்திரி நுழைய அங்கேயும் நாறுதே,
அவஸ்தை சாலையெங்கும் திரும்பிய
இடமெல்லாம், ஈசல் புற்றாய் நெரிசல்,
ஊர்ந்து, நகர்ந்து வீடுவந்து சேர பன்னிரண்டு
மணியும் அடித்து, அயர்வதற்க்குள் அடுத்தநாள்
காலை, அவசரம், ஆத்திரம், அள்ளிபோட்டு
தண்ணீர் கூட குடிக்காமல் ஓடி, ஓடி ஓய்வினை
மறந்து, ஓட்டம் பிடித்து, ஓடுகிற பே -
ருந்தில் தொங்கி, சாகாப்பிளைத்து,
அப்படி எங்கே தான் போய் கொண்டு,
இருக்கிறார்கள் என்று புதிதாய்
வந்தவர்கள் புலம்பிடும் நிலையில்
இன்று, சென்னை!.

மாறுதே உன் புகழ், மாறி இன்று நாறுதே! 

 ::: கோ.இராம்குமார் :::

1000 முத்தங்கள்!



அன்பே! உந்தன் இதழ் பதிந்த கணக்கு,
அனுதினம் கிடைத்திட, கடந்தது ஆயிரம் இன்று,
கணக்கிட்ட எனக்கும், அதை தந்திட்ட உனக்கும்,
விரிவுரை எதற்கு, விளக்கமாய் இன்னும் சொல்வதற்கு?
இருந்தும் சொல்கிறேன், ஒவ்வொன்றாய்,
ஆயிரம் முத்தங்களின் அரங்கேற்றத்தை.

அள்ளி பருக அமுதென,
ஆசை தீயில் சருகென,
ஆண்மை மோக நுழைவாயில்,
அவள், சிரிக்க விரிந்திடும் வெட்டிதழ்,
என் மேல் பதிந்து, பகிர்ந்திட்ட காதல்,
காமம், கலப்பற்ற காவியமே?

காம விரசமின்றி காதல் கலப்படத்தில்,
காதினோரம் அவள் கடித்த நொடி,
சிறியதாய் ஒரு மிளகாய் வெடி,
நெஞ்சுக்குள் வெடித்து வேடிக்கை பார்க்க,
வேண்டும் அந்த முத்தம், என்றிருக்கும்,
படிக்கும் உங்களுக்கே!

மடித்த அவளிதழ், படிந்த நெற்றி
பற்றி, பரவும் காட்டு தீ, வேகம்,
சுற்றி, சுற்றி நெற்றி வியர்வை துடைக்கும்,
துவளையாய் அவளிதழ்! இலவம்பஞ்சில்
நெய்ததோ! இளமை !! 

சிலிர்க்க, பனியிரவும் வேண்டியதில்லை,
சிரிக்க, சிரிக்க அவளிதழ் செதுக்க -  சீரிய
சன்னம் துளைக்கும் கன்னங்கள் எனது,
போதும், இரவே குளிர்கிறது, இருட்டும்
இருக்கிறது, குறைத்துக்கொண்டால்,
மிச்சமாகும் கொஞ்சம் நாளைக்கும், என்றேனே!!

முறைத்து பார்த்து, இழுத்து கொடுத்தால்
இச்சென்று, இச்சையாய் ஆகுமென்று,
சுற்றிலும் பார்த்து, சுற்றம் எல்லாம் மறந்து,
கழுத்தினை கவர்ந்து, முப்பத்தாறு பல்லும்,
பதியா பார்த்து, பார்த்து பக்குவம் பெற்றவளாய்,
பதிந்து சென்றாளே! பருவம் அவள் புருவத்திலே,
தெரியுமே! குந்தவை - தருமங்கள் செய்தது போலே!

மூன்றாம் நாளில், முகம் கொஞ்சம் தெளிவாய்
மிளிரும், பொறுத்திருந்த அந்த நாட்களின் -
பொத்திவச்ச, பொதிச்சுமை அனைத்தையும்,
பொதுவாய், மெதுவாய், தாவாய் தாவி,
தத்தளிக்கும், தண்ணீரில்லா மீனை போல,
என்னை, தள்ளிவிட்டு, மீண்டும் இழுத்து,
இசைத்தமிழ் இதழ்கொண்டு இசைத்தாளே,
சிறியதாய், மெலியதாய், சிரிப்புடனே!

அசைந்தாடும் இலை விழும் சத்தம்,
கேட்காமல் போவதும், ஒருவேளை,
என்னவள் - என் இதழோடு  பேசும்,
இருநாட்டு கூட்டு முயற்சியோ - இல்லையோ?
இதழோடு இதழ், இயற்கையில் புயல்,
நுழைவாயில் நூற்றுக்கும் மேற்பட்ட முத்தம்,
தொள்ளாயிரம் தாண்டி தொடர்ந்ததே!

ஆசை, ஆசை இன்னும் தொடந்திட,
ஆசை தீரா ஆசை, இப்படியும், அப்படியும்
அனுதினம், அரங்கேற ஆசை, அனுபவிக்க,
அவள் மறுக்காதினம் வரை - தொடந்திட
ஆசை, ஆயிரம் முத்தங்கள் அனைத்தும்
சொன்னால் அது என்னவளை களங்கம்
செய்வதாய் ஆகுமே!

அதனால் இத்துடன் நிறுத்திக்கிறேன்!
எங்கள் காதல், மோதல், முத்த யுத்தத்தை!



::: கோ. இராம்குமார் :::

Friday, June 15

சமுக அவலங்கள்! குழந்தை கல்வி!! (கவிதை திருவிழா)



தன்னுயிரை பொருளென்று கருதாமல்,
உனக்குள் வளர்ந்த உயிர் வளர்த்து, வலிபொருத்து,
திங்கள் பத்து, தவம் கிடந்தது - என்னை
பெற்றவள் நீ, நீலாவதி! உன்னால் இன்று - நான்,
நற்கல்வி கற்று, நல்வழியில் நடக்கிறேன்,
நன்றிகள் அம்மா உமக்கு, கோடான கோடிகள்.
-----------------------------------------------------------------------------

உன்னைப்போல் தானே ஆயிரம், ஆயிரம் கோடி
அன்னையர் பெற்றனர், அவர்களுடைய பிள்ளைகளை,
ஆயினும் எத்தனை, அன்னையும் அவளது பிள்ளையை,
ஆத்திச்சுடி கற்க வைத்தாள், அ ஆ இ ஈ சொல்லி கொடுத்தால்?,
கணவன் ஆசைக்கு இணக்கி, அவசரத்தில் இயங்கி,
அடுக்கடுக்காய் பூப்பூக்கும் செம்பருத்தி பூப்போல்,
அடுத்தடுத்து, இடைவெளியின்றி எத்தனை பிள்ளைகள் ?

வறுமை வாழ்வில், வயிறு நிறைக்க சோறில்லை,
வருஷம் ஒன்றானால் வயிற்றை நிரப்ப தவறியதில்லை,
வாட்டிவதைக்கும் வறுமையில் இருந்தாலும்,
குவாட்டர், கட்டிங் இல்லாத நேரமில்லை,
பிள்ளைகளை படிக்க வைக்க பணமில்லை - இருந்தும்,
பாரம் சும்மா வைத்து, குப்பை பொறுக்க விட்டு,
பத்தும், இருபதுமாய் கொண்டுவரும் காசைக்கூட,
கயமை தகப்பன், பிடுங்கிப்போய் குடிக்க, பாடுப்படும்
இதயம், இளம்பிஞ்சின் மனதும் - எத்துனை,
துயர்கொள்ளும் இறைவா ?

ஏடெடுத்து, எழுதப்பயின்று, எண்ணி, எண்ணி எண்ணக்கற்று,
எழுத்து கூட்டி படிக்க கற்று, பாடசாலையில் இத்தனையும் பயின்று,
பண்புடன், பணிவுடன், முதன்மை பெற்று - வளர்த்திடும்
கல்வியும், உன்னை சீரோடும், சிறப்பாய் நிறுத்திடும் இவ்வுலகில் நாளை.

அடிப்படை கல்வியின்றி, அணுவும் அசையுமோ,
அழகு இளம்பிள்ளைகள், அதனையும் ருசிக்குமோ,
மேதைகள், அறிஞர்கள் குறைவில்லா இதேநாட்டிலே,
ஏழ்மையும், படிப்பின்மையும்தான், முதன்மை குறைச்சலே.

இளமையில் கல்வி, இயற்கையில் விளையுமோ?
இருப்பவர் உதவிட, கிடைக்குமோ அதுவுமே,
தன்னார்வ தொண்டர்கள், முயற்சிகள் பலிக்குமோ?
தலைமுறை அடுத்த தலைமுறையிலேனும் ,
அனைவரும் கற்றவர் ஆவரோ, நம் தேசத்தில்?







எழுத்தோலை  கோ. இராம்குமார் 

Thursday, June 14

ஒப்பில்லா உழவு! ( கவிதை திருவிழா)

உண்மையை உரக்க சொல்ல விழைகிறேன்,

உழவு தொழிலினில் இருக்கும் துன்பங்களை,
விருப்பம் உள்ளவர்கள் படியுங்கள் - என்னை,
வெறுக்க நினைப்பவர்கள் தவிர்த்திடுங்கள்,
போட்டிக்கான கவிதையாய் பாராமல்,
ஒரு கலைஞனின் படைப்பதுவாய் ரசியுங்கள்.
-------------------------------------------------------------------

ஒப்பில்லா உழவு - ஓர்

ஒப்பற்ற உறவு , மனித குலங்கள் தழைக்க,
தலைமுறை, தலைமுறையாய் - நமது,
குலத்ட்தொழிலாய், குடும்பம், குடும்பமாய்,
குழந்தை முதல், குமரி வரை,
சிறுவன் முதல், கிழவன் வரை,
சேற்றிலே இறங்கி, கரையோரம் செதுக்கி,
பாய்தல், வாருதல், இறைத்தல் என்று,
தண்ணீர் பாய்ச்சி, பயிர்கள் வளர்த்தவன்.

உழவை தொழிலாய், நடவே வாழ்வாய்,

சூரியன், சந்திரன் இருவர் பார்வையில்,
பகலில் உழுவதும், இரவில் காவலுமாய்,
உலக உயிர்கள், உடலுயிர் வளர்க்க,
உண்ணாமல், உறங்காமல் கழனியில்,
கால்நடை காளையை, கட்டி விரட்டி
மண்ணை பண்படுத்தி, பயிர் வளர்த்தவனை,

இன்று! எங்கே தேடுவேன், உழவனை

எங்கே தேடுவேன், எங்கே தேடுவேன்,
தொடுவானம் தொடும்தூரம் இல்லை,
தொலைந்த உழவன், மீண்டும் உழப்போவதுமில்லை,
வெட்டப்பிளந்த, வயல்வெளியில், உழவு இல்லை,
வெட்டி, வெட்டி கூர்போட்டு விடியவும்மில்லை,
மடிக்கணினியில் புதைந்த மனிதன், மீளவுமில்லை,
எங்கே தேடுவேன், உழவை எங்கே தேடுவேன்?

உண்ண நாங்கள், உழைப்பவன் உழல்கிறான்,

உறக்கம் தொலைத்து, ஓடாய் தேய்கிறான்,
எலிக்கறியே உணவாய், இன்று அதையும் காணலையே?
எலும்புகள் தெரியுதே, ஏன் இந்த நிலை உமக்கு?
எங்கே போவது, யாரிடம் சொல்வது?
ஒப்பில்லா உழவின்று, ஒன்னுமில்லாமல் போகுதே?

ஏனென்று! எண்ணிப்பார்த்தேன், இதுவோ காரணம்?


நிலங்கள் காத்திட, உழவும் நிலைத்திடும், - விதைகள்

விலைகுறைவாய் கிடைத்திட, விளைச்சலும் தழைத்திடும்,
நீரும் நிலையாய் ஊரிட, உற்பத்தி பெருக்கிடும்,
மின்தடை இல்லையேல், மீளும் உழவும், உழவனும்,
படித்தவர் கணினியை, கட்டியழாமல் - கழனியில்
கால் என்று, ஊன்றுவாரோ அன்றே! தாரணி செழிக்கும்,
பஞ்சம் தொலையும், ஒப்பில்லா உழவும், உயரும்.

வாருங்கள், இளைஞர்களே,

வயல்வெளியில் நின்றிடுவோம்,
வறுமையை போக்குவோம்,
நாளைய தலைமுறை செழிக்க,
உழவை புதுமுறையில், உருவாக்குவோம்!!

யார் நீ ?

மகாலக்ஷ்மியின் மருவுருவமோ?
மங்கயர்களில் மாணிக்கமோ?
புடவைக்குள் புகுந்த பெண்மலரோ?
தேவதைகள் கூட்டத்து, பட்டது அரசியோ??
நீ யாரென்று சொல்லிவிடு,
என் சிந்தை சிதைந்து மண்ணாகி போவதற்குள். 

 

சே குவாரா -ஒரு மாமனிதன் (நிலா சூரியனின் கவிதை திருவிழா )

சே!
ஆச்சரியம்,
ஆனந்தம்,
வருத்தம்,
நாணயம்,
அட்சேபம்,
அங்கீகாரம்
இத்தனையும் அடங்குமோ இப்பெயரில்?
மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லோ அதுவும்??
புரட்சி போராளி, மருத்துவர், மார்க்சியவாதி, சோசலிசப் புரட்சியாளன்,
இப்படியும் அழைத்தனரோ உன்னையும்? அர்ஜென்டினாவில் பிறந்த,
கியுபா புரத்சியாளன் உன்னை போல், உலகில் எது தலைவனும்?

செல்வனாய் பிறந்தும், இனியனாய் வளர்ந்தும்,
இருட்டினில் கிடந்த நாட்டையெல்லாம் காக்க
போர்முனையில் குரங்காய் மறைந்துதாக்கும் - கலையை,
பயின்று, பலருக்கும் பழக்கினாய் - நீ
இறைவனோ பலருக்கு,
துணையருத்த கணவனோ,
உன் மனைவிக்கு ?
தத்தளிக்க வைத்த,
தகப்பனோ உன் பிள்ளைகளுக்கு ?

மருத்துவன் ஆகிபோகும் முன்னே,
அதனைதுறந்து -  வசதியின்,
இனிய வாழ்வதையும் கசந்து,
விடுதலை வீரனாய் - வெவ்வேறு,
நாட்டிற்காகவும் களமிரங்கினாய்,
போராளியாய் போராடியே - வாகை
சூடா மன்னனாய், அங்கும் நிற்காமல்,
அடுத்தனாட்டின் - அக்கரையில்
அங்கும் ஓர் போராட்டம், விடுதலை.

விடியல் கூட உன்னுருவில் - சூரியனாய்
விடிந்ததோ உன்னாலே, உன்னாலே!
உலகில்: கியுபா, காங்கோ,
பொலிவியா
இங்கெல்லாம், மக்கள் போராட்டமாய்
உன் முன்னிலையில், உன் முளுப்பயிற்சியில்,
கொரில்லா முறையில், கூட்டம் கூட்டமாய்,
மலையாய் குவித்து, குவியலாய் மாண்டனறோ,
உனது எதிரிகள்! உன் வீரத்திற்க்குமுன்.

நீ - போர்முனையில் மட்டுமா வீரன்?
ரக்பியிலும் சூரன், சதுரங்கத்தில் அரசன்,
படிப்பது உனக்கு பிடிக்கும் தானே,
எத்தனை ஆயிரம் நூல்கள் உன் சேகரிப்பில்?
அத்துணை நூல்கள் தந்த முதிர்ச்சியோ - உனது
பேச்சினில், எழுத்தினில், கவிதைகளில்.

உனக்கு இன்று பிறந்தநாள் தலைவா,
ஏழைகளின் திருநாள் அதுவா?
ஏற்றங்கள் கண்ட இறைவா - உன்னை,
போற்றிப்பாட எனக்கு, கிடைத்த தருணம் இதுவா?

இதுவரை, உன் முழுக்கதை தெரியாது எனக்கு,
இன்றே படித்தேன், உன் வரலாறு அனைத்தும்,
கவிதை திருவிழா நடப்பதால், இது நடந்தது,
நன்றிகள் நிலசூரியனுக்கும், எழுத்து.காமுக்கும்.

வாழ்க உன் புகழ், வானும் மண்ணும் உள்ளவரை.

Saturday, June 9

நேற்று, இன்று, நாளை ?


நேற்று:
கடைவீதியில் கண்ட அதே சிவப்பு தாவணி,
என்னை கடந்துப்போகையில்...
இன்றுதான் தொடங்கியதோ
தென்மேர்க்குப்பருவ காற்று - அதுவும்,
அவள் தேகம் பட்டு,
கிழக்காக என்மேல் வீச?
வழக்காட வாய்மையின்றி,
ஊமையானேனோ? - அப்படியோர்
பளிற்சிரிப்புடன் பவளமாய்,
பக்குவமாய், பம்பர விழி சுழற்றி,
ஒரு பார்வை! தெரியாமல் விழுந்ததோ
என்மேல் - தெரியவில்லை, இருந்தும்
திரும்பி ஒருமுறை பார்த்தாளே - எதுக்கு?
என்பது புரிந்து, அவளை காண முயல்கையில்,
நடுநிசி தெருவைப்போல், வெறுமையாய் மறைந்தாளே.

இன்று:
வாசல் என் வாசலில் நான்
நின்றுக்காக்கிறேன் - வழிம்மேல்,
விழிவைத்து வளம்வருகிறேன்,
தேவதை நீ வரும்த்தோரனை,
தெரியவில்லையே - இருந்தும்,
வாசல்ப்படி தேயும் அளவில்
நடந்துத்திரிகிறேன் - எதனால்,
இப்படியெல்லாம் என்று , எண்ணி
பார்க்கிறேன், எதுவும் விளங்காமல்
குழம்பி நிற்கிறேன்  - கடைவீதி
நெரிசலில் கண்ட தேவதை,
என் எதிர்வீடிலே இருப்பதாய், இதுவரை - ஏன்,
இன்றுவரை, நானும் அறியவில்லையே.

நாளை : ???????????????????????

::: கோ.இராம்குமார் :::

Friday, June 8

வேடிக்கை!

இருட்டிலிருந்து வெடித்துவிளும்
வான பூ வேடிக்கை வெடிகள்,
உயர எழும்பி, வெடித்து சிதறி
சினுங்கியடங்கிய வாணம்,
சிறுவயது நினைவுகளை சின்னதாய்,
நினைவுபடுத்தி செல்கிறது,

வாகன நெரிசலுக்கிடையில், இரு
சக்கர வாகனத்தில் செல்கையில்,
வெடிசத்தம் கேட்டு வானை எட்டி
பார்த்திட்ட தருணம்.

 நான் நானாக இல்லை, ஐந்து
வயது பிள்ளையாய் ஆனேனோ?


::: கோ.இராம்குமார் :::

ஊறுகாய்!



ரோட்டோர கடையதுவும்,
அவ்வளவாய் பெறிசில்லை,
அமர்வதற்கும் இடமின்றி,
எல்லாமே கையேந்திதான்,
இட்லி, கரி சுட, சுட ஓட,
கூட்டம் நிக்கமுடியா கூட்டம்,
பிரியாணி கேட்டு ஒரு கூட்டம்,
ஆண்களுக்கு இணையாய் பெண்களும்,
இதில் அடக்கம், என்ன அடக்கம்?

கூட்டத்திலிருந்து ஒரு குரல்
ஊறுகாய் இருக்க அண்ணே,
என்று, பிரியாணி தின்றவாறே!

உலகத்திலேயே பிரியாணிக்கு ஊறுகாய்
கேட்ட முதல் ஆள் நீதான்யா, இன்னொருக்குரல்.

சத்தியாமாய், ஊறுகாய் கேட்டது நான் இல்லைங்கோ!


::: கோ.இராம்குமார் :::



ஏக்கம்!

பேசமாட்டாய் என்று தெரிந்தும்,
மீண்டும் மீண்டும் பேச விழைகிறேன்,
என்றாவது ஒருநாள் என்னையும் கவனித்து,
என்னிடம் வந்து, பேசுவாய் என்ற நம்பிக்கையில்.
பேசாமல் போனாலும், ஒன்னும் குற்றமில்லை,
பேசினால்தானே, என்னைபற்றிஎதுவும் புரியும்?

பேசுவாயோ கயல்விழி, தமிழ் கவிதையே?


கற்பனை!

கவிதை பேசும் ஓவியம் கையில்,
சிறு பிள்ளையாய், வெள்ளை ஆட்டுக்குட்டி,
ஆனந்தம் சொல்லும் இதழுனது,
காண்பவன் என் நெஞ்சையும் கவிழ்க்கிறது.
ஆடாய், நானிருக்க கூடாதா,
என்றும் என்னவும் தோன்றுகிறது,
ஆசை யாரைத்தான் விட்டது,
நானும் மனுஷன் தானே?

::: கோ.இராம்குமார் :::

Thursday, June 7

ஆரவாரம்!


அடைமழை காணாது ஐந்தாறு மாதமாய்,
அடிமைப்பட்டு கிடந்தார்ப்போல் ஆயின,
புல்த்தரை முதற்கொண்டு புங்கைமரம்,
பூப்பூக்கும் சோலைவனம் எல்லாமே!

வாட்டி வதைத்த வக்கிர சூரியன் - லேசாய்,
வதங்கி, வந்தவழி தேட தொடங்கியதன்,
அறிக்குறியோ இன்று, இதமாய் காற்று,
மினுமினுத்த மேகம், இசையான இடியும்,
இன்முகம் காட்டியதை கண்கள் உணர,
நாசி உரசிய வாசனை, மண் வாசனை சேர,
வானவில் கண்ட கைபிள்ளையாய்,
ஆரவாரம்! காத்திருந்தது கடந்ததோ?
நீண்டநாள் கனவும் இன்று பளித்ததோ?

சென்னையில் லேசாய் மழைத்தூறல்!

::: கோ.இராம்குமார் :::

Wednesday, June 6

நன்றி!

எழுத தொடங்கி 6 மாதங்களில்,
இன்றே சதம் கண்டேன்,
என் கவிதை கணக்கில்.
எனக்குள் இத்தனை,
எழுதும் திறனை,
தாய்ப்போல் அதனை,
எனக்கே தெரிவித்த
தோழி ஒருத்தி,
அவளால் தானே,
தொடங்கி நடந்தேன்.

உடன்ப்பிறவா தமக்கை
கொடுத்த, ஊக்கம் சேர்ந்து
முழுமை அடைந்தேன்
ஒருப்படி மேல், காலூன்றியே.

இருவர் மட்டும் இல்லையென்றால்,
நானும், பத்தில் ஒன்றுதானோ?

நன்றிகள் கோடி: என்னுயிர் தோழிக்கும், என்னுடன்ப்பிறவா தமக்கைக்கும்.


::: கோ.இராம்குமார் :::
 
Rogini Maivagalnam and Uma Radhakrishnan.

பேடி IDகள்!

முகம் காட்ட துணிவில்லா உனக்கு,
பெண் பெயரில் பொய் முகவரி எதற்கு?
திருடன் போல் இருட்டில் வாழ்ந்து,
comments & likes ஐ திருடத்தானே இந்த பிழைப்பு?
வெட்கம் கெட்ட செயல் அதனை,
வெட்கமில்லாமல் செய்வதாய் நினைப்பு,
வெளிச்சம் ஒருநாள் பளிச்சென்று தெரியும்,
அன்று! நீ, எங்கோ இருப்பாய், வேகாத பருப்பாய்!

போலி கௌரவம், தேடி பிழைக்கும்
பேடி IDகள், உரிமையாளர்கள் கவனத்திற்கு மாத்திரம்.

::: கோ.இராம்குமார் :::

அலைப்பேசி!


காசு: காற்றாய் பறக்கிறது
அலைவரிசை ஊடகத்தில்,
நொடிக்கு ஒரு பைசா என்றாலும்
நொடிந்து போகாமல் பேசி தீர்க்கும்,
தீர்க்கதரிசி யாரில்லை, பாரெங்கும்?.

பரதேசி முதற்கொண்டு அலைபேசி
புலங்கிட இன்று, புதுமை புரட்சி இதுவோ?
இல்லை: நிலபுலன் சேர்க்க நிறுவியவன்
செய்யும், வியாபார கவர்ச்சியோ, முருகா!

எல்லோர் கைகளது சிறையில்,
கைதியாய் அலைப்பேசி!

::: கோ.இராம்குமார் :::

Friday, June 1

போராட்டம்!



பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே ,
வாழ்வா, சாவா போராட்டம்,
பசிக்கு அழும் குழந்தையை, தாயறிவாள்,
தகப்பனுக்கு அது எப்படி புரியும்,
அதைப்போல் ஆகிப்போன இந்நாட்டில்,
எங்களின் அழுகையை உணர ஒரு தாயில்லையே?
பாரத தாயே, எனக்குரல் கேட்கிறதா உனக்கு?

::: கோ.இராம்குமார் :::