ஒப்பில்லா உழவு! ( கவிதை திருவிழா)
உண்மையை உரக்க சொல்ல விழைகிறேன்,
உழவு தொழிலினில் இருக்கும் துன்பங்களை,
விருப்பம் உள்ளவர்கள் படியுங்கள் - என்னை,
வெறுக்க நினைப்பவர்கள் தவிர்த்திடுங்கள்,
போட்டிக்கான கவிதையாய் பாராமல்,
ஒரு கலைஞனின் படைப்பதுவாய் ரசியுங்கள்.
-------------------------------------------------------------------
ஒப்பில்லா உழவு - ஓர்
ஒப்பற்ற உறவு , மனித குலங்கள் தழைக்க,
தலைமுறை, தலைமுறையாய் - நமது,
குலத்ட்தொழிலாய், குடும்பம், குடும்பமாய்,
குழந்தை முதல், குமரி வரை,
சிறுவன் முதல், கிழவன் வரை,
சேற்றிலே இறங்கி, கரையோரம் செதுக்கி,
பாய்தல், வாருதல், இறைத்தல் என்று,
தண்ணீர் பாய்ச்சி, பயிர்கள் வளர்த்தவன்.
உழவை தொழிலாய், நடவே வாழ்வாய்,
சூரியன், சந்திரன் இருவர் பார்வையில்,
பகலில் உழுவதும், இரவில் காவலுமாய்,
உலக உயிர்கள், உடலுயிர் வளர்க்க,
உண்ணாமல், உறங்காமல் கழனியில்,
கால்நடை காளையை, கட்டி விரட்டி
மண்ணை பண்படுத்தி, பயிர் வளர்த்தவனை,
இன்று! எங்கே தேடுவேன், உழவனை
எங்கே தேடுவேன், எங்கே தேடுவேன்,
தொடுவானம் தொடும்தூரம் இல்லை,
தொலைந்த உழவன், மீண்டும் உழப்போவதுமில்லை,
வெட்டப்பிளந்த, வயல்வெளியில், உழவு இல்லை,
வெட்டி, வெட்டி கூர்போட்டு விடியவும்மில்லை,
மடிக்கணினியில் புதைந்த மனிதன், மீளவுமில்லை,
எங்கே தேடுவேன், உழவை எங்கே தேடுவேன்?
உண்ண நாங்கள், உழைப்பவன் உழல்கிறான்,
உறக்கம் தொலைத்து, ஓடாய் தேய்கிறான்,
எலிக்கறியே உணவாய், இன்று அதையும் காணலையே?
எலும்புகள் தெரியுதே, ஏன் இந்த நிலை உமக்கு?
எங்கே போவது, யாரிடம் சொல்வது?
ஒப்பில்லா உழவின்று, ஒன்னுமில்லாமல் போகுதே?
ஏனென்று! எண்ணிப்பார்த்தேன், இதுவோ காரணம்?
நிலங்கள் காத்திட, உழவும் நிலைத்திடும், - விதைகள்
விலைகுறைவாய் கிடைத்திட, விளைச்சலும் தழைத்திடும்,
நீரும் நிலையாய் ஊரிட, உற்பத்தி பெருக்கிடும்,
மின்தடை இல்லையேல், மீளும் உழவும், உழவனும்,
படித்தவர் கணினியை, கட்டியழாமல் - கழனியில்
கால் என்று, ஊன்றுவாரோ அன்றே! தாரணி செழிக்கும்,
பஞ்சம் தொலையும், ஒப்பில்லா உழவும், உயரும்.
வாருங்கள், இளைஞர்களே,
வயல்வெளியில் நின்றிடுவோம்,
வறுமையை போக்குவோம்,
நாளைய தலைமுறை செழிக்க,
உழவை புதுமுறையில், உருவாக்குவோம்!!
No comments:
Post a Comment