Saturday, June 16

மாறுதே சென்னை!

 

செந்தமிழ் மொழிப்பேசும்
சங்க தமிழ்நாட்டின் முதன்மை
நகராம் சென்னை மாநகரும்,
விடியல் தொலைத்து வெகு -
நாட்கள் ஆகுமோ - இன்னும்
வந்தவர் நின்றதில்லை,
நின்றவரும் சென்றதில்லை,
நிதிதிரட்டி, நீண்ட வழி நடந்து,
நித்ய வாழ்க்கை வாழ்ந்திட,
ஓடி ஓடி வந்துக்கொண்டு
தானே இருக்கின்றனர்.

குடி வழி சிறக்க,

குழந்தை குட்டிகள் வளர்க்க,
குத்தகை எடுத்தார்ப்போல்,
குடும்பம்மாய் குடிபெயர்ந்து இன்று,
குடிக்க தண்ணீர் கூட, கூத்தாடி
வாழ்க்கைப்போலே கயிற்றின்மேல்
நடந்து, காக்கை கடி கடித்து,
கசந்து, அயர்ந்து, கடுகினாய் சிறுத்து,
கடைசியில் கட்டையில் போகும் வரை,
இம்மண்ணை, விற்காமல் நிற்ப்பாரோ?

எதோ தேடல் எல்லோர்க்கும்,

ஏற்றம் தேடும் வல்லோர்க்கும்,
வறுமை போக்க வந்தோர்க்கும்,
வாங்க, வாங்க என்றோமே!
வந்த, இடத்தில வாந்தி எடுப்பதா?
காட்டிய இடத்தை கூட்டிகொடுப்பதா?

தேடல் நின்ற பாடில்லை - எதையும்

தேவைக்கு ஏற்ப சேர்த்ததில்லை,
சென்னை என்ன அக்ஷயப்பாதிரமா?
அல்ல அல்ல குறையாமல் கொடுக்க?

ஆஸ்திக்கு ஆசை, அவள் மீதும் ஆசை,

ஆஸ்பத்திரி நுழைய அங்கேயும் நாறுதே,
அவஸ்தை சாலையெங்கும் திரும்பிய
இடமெல்லாம், ஈசல் புற்றாய் நெரிசல்,
ஊர்ந்து, நகர்ந்து வீடுவந்து சேர பன்னிரண்டு
மணியும் அடித்து, அயர்வதற்க்குள் அடுத்தநாள்
காலை, அவசரம், ஆத்திரம், அள்ளிபோட்டு
தண்ணீர் கூட குடிக்காமல் ஓடி, ஓடி ஓய்வினை
மறந்து, ஓட்டம் பிடித்து, ஓடுகிற பே -
ருந்தில் தொங்கி, சாகாப்பிளைத்து,
அப்படி எங்கே தான் போய் கொண்டு,
இருக்கிறார்கள் என்று புதிதாய்
வந்தவர்கள் புலம்பிடும் நிலையில்
இன்று, சென்னை!.

மாறுதே உன் புகழ், மாறி இன்று நாறுதே! 

 ::: கோ.இராம்குமார் :::

No comments: