Saturday, October 13

பணம் காய்க்கும் மரம்!


பணம் காய்க்கும் மரம்
ஒன்றின் விதை வேண்டி
விரதங்கள், மா தவங்கள்
தொடங்கி மாதங்கள், பல
வருடங்கள் எல்லாம்
கடந்து, இளமை இன்பம்
எல்லாம் துறந்து, இறுதியில்
தொண்ணூற்றி ஒன்பதாவது
வயதில், பெற்றேன் அந்த

விதையை,

இனி இந்த விதை முளைத்து,
காய்த்து, பணமாகி அதைப்
பறித்து, செலவு செய்ய என்
வயது ஒத்துழைக்க மறுக்கிறதே,
இனியும் எதற்கு இந்த விதை எனக்கு?
தூக்கி எறிவதை விட, என்
சவக்குழியின் தலை மாட்டில்
விதைத்து விட என் மகனிடம்
சொல்லி முடிக்கும் முன்னே,
முடிந்ததே என் வாழ்வும்,

பணம் காய்க்கும் மரங்கள்,
முளைக்க வேண்டும் - நாளும்
உழைக்க நோகும் மனிதன்,
அதில் நானும் ஒருவனாய்
இல்லாதுப் போனதில் மகிழ்ச்சி.



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: