Saturday, October 13

நெஞ்சு பொறுக்குதில்லையே!


அக்னி பிழம்பிலிருந்து
சொல்லெடுத்து,
ஆணி வேரின் வரிகள்
பின்னி - முறுக்கு கம்பிகள்
போலே, படிக்கும் எவர்க்கும்,

நரம்புகள் புடைக்கும்
கவிகள் தந்த மகாக்
கவி பாரதி நீயும் - ஏனோ,
பாரதத்தில் இல்லை இன்று,
துளிர் விட்டு திரிகின்றனர்
சட்டத்தை இயற்றியவர் போலே,
ஆளுக்காள் நாட்டாமையாய்,

உன் வாய்ச்சொல் சுட்ட
இந்நாட்டில், துப்பாக்கிகள் சுட
தொடங்கிவிட்டன,
கேட்பாரில்லை - கேடு
கேட்டு பொய் விட்டான்
தமிழன்,
சொந்த தமிழ்நாட்டிலே,
உரிமை இழந்து தவிக்கிறான்
தமிழன்,
ஊரை விட்டு ஒடச்
சொல்கின்றனர்,
பட்டினி கிடந்தேனும்,
வாழ்வுரிமை கிடைக்க
வாய்திறக்கா வாதாடுகிறான்,
தமிழன்,
பொய்ப்பழி சுமத்தி சிறை
வாசம் அடைக்கின்றனர்,
இன்னும் சில நாள்
போனால் தமிழன் இருந்த
சுவடை கூட வரலாறு
சொல்ல கூடும் நாள்
வருமோ?

அய்யா பாரதி,
இன்னொரு பிறவி
எடுப்பாயோ - எங்களை,
தமிழரை காப்பாயோ?
இன்றைய உன் நினைவு
நாளில், எங்களது இந்த
வரமொன்ரையாவது நீயும்
கொடுப்பாயோ????????

"நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்"



எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: