Saturday, October 13

ஜெயந்தி!


சலவை ரூபாய் தாளில்,
சத்தியாகிரக வழியில்,
கதராடை இடையில்,
கண்ணாடி, கைத்தடி,
வழுக்கை தலை,
ஆட்டுப்பால்,
வேர்க்கடலை,
இவைகள் மட்டுமா
உன்னை அறியும்,

இந்நாடும், நாட்டும்
மக்களும், இவ்வுலகும்
உலகமக்களும், எல்லாம்
உன்னை அறிவர் - ஆனால்
நான் அறியேன் உன்னை,
உன் புகழறியேன்,
உன்னால் பிரிவினை அறிந்தேன்,
மதக் கலவரம் அறிந்தேன்,
ஜாதியரிந்தேன் - சுதந்திரம்
என்று சொல்லி நீப்
பெற்றுத்தந்த அந்த சுதந்திரம்
என்னிடம் இல்லை இன்று,
பேச முடியவில்லை,
எழுத முடியவில்லை,
இன்னும் எத்தனயோ
கொடுமை இங்கே,

என்னை விட இருபது
வருடம் முந்தி சென்றுவிட்டான்
ஆங்கிலேயனும், அமெரிக்கனும்,
ரூபாய்க்கு நிகராய் இருந்த
டாலரும் இன்று நூறில்
பாதியாய் எட்டாக்கனியாய்,

ஏமாந்த பாமரனாய் - நானும்,
என் நாடும் முன்னேறும்
என்று ஏங்கித்தவிக்கிறேன்,
உன் சுதந்திரம் எனக்கு
தேவை இல்லை நீயே
எடுத்துச் செல், மீண்டும்
வந்து தந்துவிட்டுப் போ,
பழைய பாரதத்தை - போதும்
இந்த போலிச்சுதந்திரமும்,
பொய்யும், புரட்டும்
நிறைத்த இந்த பாரதமும்.

தேச தந்தையே, உன்
மகன் நானும் ஏதும்
தப்பாய் பேசியிருந்தால்,
மன்னிக்கவும் - உன்
பிறந்தநாளில் எங்கள்
அனைவரையும் ஆசிர் -
வாதிக்கவும்.



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: