Thursday, April 26

இல்லாத இறைவா, வா வா!



கடவுள் இருக்கும் இடம் தேடி நானும்,
தூணிலும், துரும்பிலும் தேடி பார்த்தேன்.

படித்த நூல் எழுத்தினுள் அர்த்தமாய்,
வடிக்கும் கவி கொடுக்கும் சுவையதாய்,
முந்தி வந்திட்ட மொழி, தமிழ் மொழியதன்வாய்,
சொல்லிட்ட தெல்லாம் காதை பொருளாய்,
எதிலும் காணவில்லையே இறைவா உன்னை.

ஏழையின் சிரிப்பினில் உன்னை பார்த்தனராம்,
நானும் பார்த்தேன் ஏழையும் சிரிக்க, இல்லையே நீயும்?
மழலையின் முகமதில் நீ இருப்பாயாமே,
எழில்முகமதில் எங்கே, அதிலும் இல்லையே நீயும்?
கோவிலில், குளத்தினில் நீ இருப்பதாய் சொல்லி
கூட்டமாய் கூடும் மானுடற்கெல்லாம் ஏன் நீ தெரிவதில்லை?

வேண்டுதல், பிரத்தனை, ஆராதனை அபிசேகம்,
அனைத்தையும் காண, தனி தனி சீட்டு வாங்க வேண்டுமாம்,
அப்படி வாங்கியும், காட்டவில்லையே உன்னை?
உண்மையிலே நீ எங்கே இருக்கிறாய்?
விண்ணிலா? மண்ணிலா? கடலிலா?
இல்லாத உன்னை, இருப்பதாய் சொல்லி,
கொள்ளை அடிக்கும் குகைகள், தான் கோவில்களோ?

கடவுளே! நீ உண்மையிலே இருந்தால் என் முன்,
வந்து தான் பாரேன், முடியாது தானே உன்னால்?

::: கோ.இராம்குமார் :::

மல்லிகை மொட்டு!




மொட்டு விட்ட மல்லிகை கொடியும்
பூப்பெய்திவிட்ட சேதி கேட்டு - தேடி
பறந்தோடி வந்திடும் தேனீ - தேனைப்பருகவோ?

தேவதையாய் தெரிந்திட்ட மல்லிகை மொட்டை,
வடாமல்லியை, வாடிட செய்திடா தேனீயையும்
காணயிலே, கால்நகம் தரையை கிறுக்க
கோலங்கள் போட்டிடுமோ பூங்கொடியும் ?

புரிந்துக்கொண்ட மொட்டும், மலரும் தருணம்
சுற்றி கலைத்த தேன் ஈயை பற்றும் காமம்,
புடைத்த நரம்பினை அழுத்த குறையுமோ,
சலிக்க குடித்த தேன், காமன் குறைந்த ஈ,
வெட்க்க கண்கள் பேசிடும் பேச்சில்,
அடுத்த சுற்றுக்காய் இறக்கை விரிதிடுமோ?
அலுப்பை விரும்பாத ஆண் தேனீ,
அதையே விரும்பும், மல்லிகையும்!

சுவையில் நா சுவையில்,
மலரும் விரிந்திடும் நொடியில்
நுழைந்திடும் வண்டும் இறுக சிக்கி
ராட்டின கயிறாய் அகம்புற நகற
வழுக்கியே குலுங்கியே சிந்திடும் - மகர
இந்தம், முற்றும் இன்பம் முற்றும்.
முடிந்ததும் பறந்தது தேனீயும்,
மூலையில் அழுதது மல்லிகையோ?

முதிர்ச்சி இல்லா புணர்ச்சியில்,
அதிர்ச்சியில், பிறந்தது அடுத்தவாரிசு,
அழகாய், வளைந்தே, புதுக்கொடியாய்!!

::: கோ.இராம்குமார் :::




அன்று !



இடுக்கி பிடிப்போல் இறுக்கி பிடித்தாலும்,
விலகி ஓடிட துடிக்குதவள், மனசு - காதல்
கட்டைவண்டி சக்கரமோ அச்சாணி,
இறுக்கம் போல் அவிழாமல் போக?

வழியெல்லாம் ஒரு வழி பாதையாய்,
திரும்பிட வழியின்றி சுற்றிடும் வாழ்க்கையில்,
விதிவிட்ட வழியோட, விழியோரம் நீர்வடிய,
விளக்கு திரியாய், மெழுகாய் கருகி,
என்னை விட்டே எரிய தொடங்குகிறேன்,
எண்ணையில்லாமல், விளங்கா விளக்கில்,
விளக் எண்ணை ஆனேன் நானும்.

வியப்பு! நானும் காதலனாய், அன்று.

::: கோ.இராம்குமார் :::



Monday, April 23

சோம்பல்!


 சர சர வென சாரை சாரையாய்,
ஊர்ந்து, வளைந்து வரிசையாய்,
எங்கே, அவசர அவசரமாய் போகிறீர்கள்,
கொட்டும் மழை, கொண்டு போய்விடும்,
ஓடும் நீரினில் நனைந்து மிதந்திடும்,
உற்பத்தி, இனவிருத்தி இடைவிடாது,
இடப்பெயர்வு, பொருள் கடத்தல்,
உணவெடுத்தல், உழைப்பை கற்றுகொடுக்கும்,
உங்களுக்கு ஆறு மாதம் ஓய்வு, தேனிலவு!

சபாஷ், உங்களை உதாரணம் காட்டினர்
உழைப்புக்கும், திட்டமிடழுக்கும்,
உங்களைப்போல் நானில்லையே?
உறுத்துகிற நெஞ்சம் கொஞ்சம்,
மறுத்து பேசும் சோம்பல் உடலும்,
திருந்துகின்ற தருணம் இதுவாய்,
ஏனிருக்க கூடாது  இக்கணமே, இன்றே ??

::: கோ.இராம்குமார் :::

உமையாள் உனக்கு பிறந்தநாளோ?


சித்திரை திங்களில் உமையாள் உனக்கு,
பதினொன்றாம் நாளில் பிறந்தநாளோ?
ஆசிகள் பல சேரும், பொன்னாளிதுவும்,
ஆண்டாண்டு காலங்கள் தொடர்ந்திட வேண்டும்,
அரியணை ஏறிட்ட அரசியைப்போலவும்,
அமைதியை தந்திடும் நிலவொளிப்போலவும்,
நறுமணம் கமழும் செண்பகம் போலவும்,
அன்பினை சுமந்து, அமைதியை தந்து,
மலர்முக  சிரிப்பினில், மதிஒளி குளுமையில்,
கொண்டவர்க்கெல்லாம் சந்தோசம் தந்திடுவாய்,
என் அன்பு தமக்கையே ! தோழியே ! நீ நீடூழி வாழ்கவே !!

::: கோ.இராம்குமார் :::

Saturday, April 21

What`s on my mind?



I TESTED MY SELF IN MANY WAYS,
TEST RESULTS SAYS GO AWAY,
NO TIME TO DISCOVER WHO I AM,
TECHNICALLY I AM A UPDATED RAM(HARDWARE),
RUNNING, FLYING, DIVING,
RUNS FOR MONEY,
FLY'S ON MY DREAMS,
DIVES TO RECOVER....

WHO I AM?

NO MATTER, ON A SALT WATER,
LIKE A FISH, LIKE A CRAB, LIKE A TURTLES,
SWIMMING, FLOATING TO SEEKING
A RIGHT TIME, RIGHT PLACE TO SURVIVE!

OH` MY DEAR GOD!

SHOW ME THE WAVES,
SHOW ME THE LIGHT,
SHOW ME THE PATH,
SHOW ME THE WIND,

AM SURE, I`LL MAKE IT USEFUL,
FINDS MY WAY TO SUCCESS......

::: RAMKUMAR.GOPAL :::

Friday, April 20

இனிமை!




இனிப்பை தவிர்க்கும்,
எறும்புகளும் இருந்திட்டால்,
இனிப்பை, இனிப்பே வெறுக்குமோ?

இனிமை யில்லா,
இயற்கையும் இருந்திட்டால்
இயற்க்கை,  செயற்கையாய் சிரிக்குமோ?

இனிப்பை வெறுத்த,
தேனீக்களும் இருந்திதிட்டால்,
தவார, செடிக்கொடிகள் எக்கணம் பூக்குமோ?

இனிப்பை சுரக்கா,
இதழ்களும் இருந்திட்டால்,
கலவியின் முகவரி, முடிவுரை ஆகுமோ?

இனிப்பை தொலைத்த,
வாழ்க்கையும் இருந்திட்டால்,
இல்லறம் நல்லறம் புரியுமோ?

உப்பில்லா உணவும் குப்பையிலே, என்பர் -
இனிப்பில்லா வாழ்வும் நிலைதிடுமோ?

இனிது, இனிது இல்லறம் இனிது,
இன்முகம் கொண்டவளும்,
இயல்பாய் சிரிப்பாள், இனிமை தொடுப்பாள்,
இனிக்க இனிக்க, இதழ்முத்தம் கொடுப்பாள்,
இழுத்தணைத்து, உடல்முழுதும் கொடுப்பாள்,
இறுதி எனக்கருதி, இருக்கியணைத்து கொடுப்பாள்,
இதுப்போதும் இன்றைக்கென்று, நழுவிட துடிப்பாள்,
இனிமை இதுவோ! போதும், போதுமென்பாள்,
இருகிட்ட அவளும், பகலிது என்னைவிடு, என்பாள்,
இரவொன்று வரும்வரை,
இனிமை தொடர வழியில்லை என்பாள்,
இருட்ட பொழுது இருக்கு இன்னும்,
இறுக்கி பிடித்து படுத்துக்கோ என்பாள்...
சக்கரை கலந்த தேனைப்போல,
நீரில் பிரிந்தேன் தனியாய் நானே,
இருட்டை வேண்டி, இனிப்பை சுவைக்க,
பற்கள் கடித்தே, கடிகாரம் பார்க்கிறேன்.

விடிந்தது பகலும், இனித்தது கனவோ ?

இனிமை, இளமை, தனிமை, கொடுமையோ??

::: கோ.இராம்குமார் :::
















மரிக்கொழுந்து வாசம்!


சுவாசம் அத்து போச்சுதுன்னா,
வேஷம் கலைந்து போகுமுன்னு,
ரோசம் கேட்ட பய,
பேசும் வார்த்தைய நம்பி,
பாசம் விலை பேசி முடிச்ச,
காசும், என் கருமாதில,
வீசும் ஊதுபத்தி பொகையா,
தூசும் தும்பியுமா சேந்து,
தோஷம் கழிச்சிட்டு போய்டும்ன்னு,
தேச(ம்) துரோகம் பண்ணமுடியுமா?


மதுரை மரிக்கொழுந்து,
மாசம் நாலு ஆனாக்கூட,
வாசம் விட்டு போகாதான்.

அது மாதிரிதான் நானும்!


::: கோ.இராம்குமார் :::

Tuesday, April 17

கோலம்!


புள்ளிகள் நெருக்கமாய்,
தள்ளி தள்ளி, அடுக்கடுக்காய்,
கோடுகள் வரையதொடங்கி,
வளைத்து, நெளித்து, புள்ளிகளுக்குள்,
நுழைந்து முடித்தேன்.

என்ன ஒரு அழகு, அட அட ....
என் கண்ணையே நம்ப முடியவில்லையே.


--------------------------
::: கோ.இராம்குமார் :::
--------------------------

Monday, April 16

வெளிச்சம்!



பழகிய முகம்தானதுவும்,
அவளுடன் பழகியதில்லை.
பார்த்திட்ட பொழுதுகள் பல,
ஒருநாளும் பேசியதில்லை.
என்னைக்கடந்து போயிருப்பாள் பலநாள்,
தோணவில்லை இதுநாள் வரையில்.

அவள் அழகான பெண்ணாயிருந்தும்,
எப்படி தவிர்த்தேன், அவளை?
அவள் இயற்கையாய் தெரிந்தும்,
ஏனோ, எட்டவில்லை இந்த புத்திக்கு?
மா நிறம் குறைந்த நிறமாயினும்,
மனதிற்குள் புதைந்திடும் முகமதுவோ?
இருக்க வேண்டிய அத்துணை அம்சமும்,
இவளுக்கே தனி சிறப்போ?

இன்று என்ன அது ஒரு, வெளிச்சம்?
இத்தனை நாளாய் இல்லாதொரு, புதுமை?
என்னிடம் நானே, கேட்டிடும் கேள்வி?
இனியாவது அவளிடம், பேசுவேனோ?
சொல்லாத என்க்காதல், சொல்வேனோ?
கேட்டகாமல் சென்றாலோ, என்செய்வேன்?
சொல்லாமல் விட்டாலும், கொல்லுமே?
அவளுக்கு, என்னையும் பிடிக்குமோ?
எப்படி, எம்மொழி சொல்லுவேன்?
எதுகை, மோனை வேண்டுமோ?

கருவிழி, மைதிலி போறாளே,
போறாளே என்னைக்கடந்து போறாளே,
சொல்லவா மெதுவாக சொல்லவா?
கேட்குமோ, உரக்க மீண்டும் சொல்லாவா?
இனிமேலும், முடியாது மைதிலியே,
ஒருநிமிடம் நிற்ப்பாயோ கண்மணியே,
உன்னிடம் ஒன்று சொல்கிறேன்,
உவமை இன்றி மொழிகிறேன்.
காதல் உன்மேல் காதல்,
காலம் கடந்து சொல்கிறேன்,
உனதுகரம் பிடித்து நடந்திட வேண்டும்,
உன்மடி சாய்ந்து உறங்கிட வேண்டும்,
உன் விழி பார்த்து பேசிடவேண்டும்,
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்,
தருவாயோ, இவ்வரம் அனைத்தும்?
I LOVE YOU மைதிலியே ........

DON `T SAY NO , TO ME ,
MY HEART AND SOUL yoU ONLY ....

-------------------------------------
::: கோ.இராம்குமார் :::
------------------------------------


ஓவியா?



ஓவியன்க்கை பதிந்த,
தூரிகை ஊறிய மை,
தீண்டும் காகித கவிதையும்,
எண்ணத்தில் வண்ணம் குழைத்து,
வண்ணத்தில் வார்த்தை சேர்த்தே,
பேசா மொழிப்பேசும், சித்திரமோ?

அவளும் !
--------------------------------------
::: கோ.இராம்குமார் :::
-------------------------------------


Sunday, April 15

காதல் கதை !




ஒளிப்போல், ஒலியைப்போல்,
வேகமாய் போகிறாயே - வெண்ணிலவே!
நின்றிடு ஒருநிமிடம் - என்
காதல் கதை கேட்டிடவே?

என் காதல் புதைந்த, அவள் கண்ணில்,
பூவலயம் கருவிழியால், காணும் வழி,
தெரியா நின்றேன், காட்டுவழி - தவறியவன்,
தவிப்பதுப்போல் தவித்தே?

கண்டும் காணாமல் போவதுமேனோ?
சொல்ல மொழியுண்டு, சொல்லிட பொழுதில்லை,
எண்ணி எண்ணி, ஏழையும் ஆவேனோ,
எழுதும் அறிவிழந்து, சிந்தனை திறன் குறைந்தே?

பேசிவிட துடித்த நொடிகள் எல்லாம்,
பேதையாய் இருந்தவிட்டு, இன்று - பேசிட,
வருநொடியில், சொல்லிட முடியா தயக்கம்,
மயக்கம் எனக்கு, மயக்கியவள் அவள் தானே?

முடிந்துப்போன மூச்சுக்காற்றாய், முடிவுரை
படித்தேன் காதலில் சொதப்பியே, சொல்லாது,
முழுதாய் நின்ற தென்றல் காற்றாய்,
புழுக்கம் சூழ்ந்த நெஞ்சில் வியர்வையாய்,
வழிதெரியா உருள்கிறேன், அவள்நினைவில்.

வேரிலிருந்து துளிர்த்து, வாழையாய்,
வாழையடி, வாழையாய் என்றுமே - என்,
நெஞ்சுக்குள்! வாழ்க்கையை வாழ்கிறேன்,
அவள் நினைவு அது ஒன்றே! இன்பமே என்று!!

சொல்லாத காதல், என் காதல் - கதை
கேட்டாயோ வெண்ணிலவே!
சென்று வா, நாளையும் தொடர்கிறேன் ........

-------------------------------------
::: கோ.இராம்குமார் ::::
-------------------------------------

Saturday, April 14

தானம்!


தியாகமாய் தன்னுயிரில்,
தவமிருந்து, தன்னைவருத்தி,
ஊனமில்லா உடல் - உனக்கு,
உயிர் கொடுத்தவள் அன்னை.

பார்க்கும் கண்ணிரண்டு,
நடக்கும் காலிரண்டு,
உழைக்கும் கைகளிரண்டு,
கேட்க்கும் காதுமிரெண்டு,
அழகான முகமும் உண்டு,
பிறப்பினில், வளர்ப்பினில்,
குறையில்லா வாழ்க்கையோ?

ஒருவேளை உன்னுயிர் பிரிந்தால்,
என்செய்வாய் இவையனைத்தும்?
எரித்த சாம்பலை, கடலோடு கரைப்பாயோ?
புதைத்த மண்ணில், மரம் நட்டு மகிழ்வாயோ?

மடிந்த உயிரதனை,
மீண்டும் உயிர் பெறவை,
இதயம் தொடங்கி,
கண்கள்,
சிறுநீரகம்,
கல்லீரல்,
சுவாசப்பை,
கணையம்,
குடல்கள்,
தோல்,
நாரிழை,
கருவிழி,
இதயக்குழாய் - இப்படி,
அனைத்தும், மடியாத உடல் உறுப்புக்கள்,
ஒருவருக்கோ, இருவருக்கோ இல்லை,
பலருக்கும் வாழ்வளிக்கும் பல்கலை கழகமாய்,
உன்னை வாழவைக்கும் ஏழு தலைமுறைக்கும்.

உடல்த்தான கொடையாலனாய்,
உலகிற்கு உதாராணமாய், கர்ணனாய்,
இறந்தப்பிறக்கும் வாழ்ந்திடு!
இன்றே! உறுப்பு கொடைதந்திடு !!

::: கோ.இராம்குமார் :::

http://www.mode.org.in/online_registration.aspx


Friday, April 13

கண்கள் இரண்டு போதுமோ!



அஜித்துனா அழகு,
அவர்மட்டும் தாண்டா ஸ்டைலு!
மரண மாஸ்சு அது - இவர எதிர்க்க,
மவனே! எவனுக்கு இருக்குடா தில்லு,
மிரட்டுது இவரு சொல்லு, இவர அணைக்க,
நமக்கு, ரெண்டு கையது, போதுமா சொல்லு.

ஆண் அழகனோ அற்புதமாணவனோ,
ஆசையின் நாயகனோ, அமர்க்களம் -
இல்லா தமிழகம் ஆள்பவனோ ?
அமைதியாய அன்பிலோர், ஆகாய -
சூரியன் போலவே, பிரகாசமாய்,
ஒளிமுகம், அள்ளிவீசும் அன்புடையோன்,
கருணையுள்ளம், கொடைவள்ளல்,
கோவமாய் பேசாது, குழந்தையாய்,
இன்முகம் காட்டும் எளியவனோ?

இன்னும் எவ்ளோ இருக்கு உன்னை சொல்ல,
பாத்துக்கிட்டே இருக்கலாம் தல, உன்ன.
சோறு, தண்ணி, தூக்கம், தேவையில்ல.

உன் அழகை காண, கண்கள் கோடி பத்தாதே, எண்ணிரெண்டு -
கண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் இப்போது?

::: கோ.இராம்குமார் :::

BILLA II Teaser releasing today @ 7pm ! Most awaited .....



Thursday, April 12

தமிழ் புத்தாண்டு!




ஓடிகொண்டிருக்கும் கால சுழற்சியில்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டோ?

புதுமை, இனிமை, இளமை ...
பிறக்கும் பொழுது புதுமை,
இருக்கும் பொழுது இனிமை,
குறைந்து வரும் இளமை ?
ஆண்டுக்கு ஆண்டு,
ஆண்டாண்டு காலமாய்.

இயற்கையின் குறிப்பேட்டில்,
இன்றுதான் தமிழுக்கு, பிறந்தநாளோ?

தமிழன் என்று சொல்ல,
தலைநிமிர்ந்து வாழ்ந்தவன் - இன்று
என்று தான் தமிழுக்கு புத்தாண்டு,
என்னும் குழப்பத்தில் வெட்கி,
தலைகுனிந்து நிற்கிறான்.

தமிழர் திருநாள் அதுவே - தமிழனுக்கு
புத்தாண்டு இல்லையோ?
எதற்கு இந்த பிதற்றல்,
காட்டிட பொறையை திங்க,
ஆட்டிடும் வாலை, நாயும் - அப்படியா
ஆனோம் தமிழர்கள்?

தமிழா! நீயும் தமிழனாய் இருந்தால்,
தையினில் தானுனக்கு, தமிழ் புத்தாண்டு அதுவும்.
சித்திரையில் இருந்தது, வடக்கினில் உதித்தது,
அறுவது பெயர்களில், ஒன்றுமில்லை தமிழினில்,
ஆத்திரம் நீ கொல்லாதே, ஆசுவாசம் படுத்திக்கொள்.
சித்திரையிலல்ல உனக்கு தமிழ் புத்தாண்டு.
தை திங்களில் பிறந்துவிட்டது தமிழாண்டு.

வாழ்க தமிழ் !

-----------------------------
::: கோ.இராம்குமார் :::
-----------------------------


நிறம்! (Racism)




வண்ண வண்ண பூக்கள் யாவும்
வார்த்தை பேச முடியாததாலோ,
வர்ணம் பல வண்ணங்களில்,
வாசனையோடு பூத்து பேசும்,

மனிதா உனக்கு என்னக்குறைச்சல்,
பேச நாவும் உள்ளதுதானே,
நிறத்தில் என்ன நிறைய கண்டாய்?.

நிரந்தரம் இல்லா வாழ்வு அதனை,
நிறத்தை கொண்டா நீட்டிக்க செய்வாய்?
நிஜமாய் நீயும் நிறத்தை வெறுக்க,
காரணம், இல்லா காரணம் சொல்வாய்?.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு எல்லாம்,
பார்க்கும் கண்ணுக்கு குளுமை தரலாம்,
கண்ணை புடுங்கி, என்நிறம் கேட்டால்
என்னென்று சொல்லும் உந்தன் நாவு?

கண்ணன், அவனை கார்மேகம் என்பர்,
கள்வன் அவன் பின் எத்தனை கோபியர்?
கருமை, சூழ்ந்திட்ட வானமும் தானே,
வற்றிடா நதியை வார்த்திட முடியும்?.

ரெத்தமும், சதையும் பிரிவது நேர்ந்தால்,
செத்தது உடலும், பிரிந்தது உயிரும்?
கண்களில் கருவிழி, நீக்கிட உனக்கு,
கருமையே பார்வை, இருளிலே வாழ்க்கை.

பரதேசி குடிவழி, பிறந்தவன் நீயோ,
ஒப்பில்லை உன்னை சொல்ல,
இவனும், நீயும் ஒன்று தானோ?

நிறத்தால், மனிதனை பார்ப்பதை நிறுத்து,
குணத்தால், அன்பால், பார்த்தல் நன்று.

உலகில், உயிர்கள் யாவும் ஒன்றே - இந்த
உண்மையை உணரு, மனிதம் செழிக்கும் !!

::: கோ.இராம்குமார் ::::


Wednesday, April 11

எச்சரிக்கை ?



முழங்கி மறைந்த இடியை போலே,
குலுங்கி மறைந்த பூமித்தாயே,
என்ன வேண்டும் உனக்கு?
எதற்கு இந்த எச்சரிக்கை?
ஏது தவறு இழைத்தோம் நாங்கள்?

மரண பயத்தை கண்ணில் காட்டி,
மனித குலத்தை மிரள செய்கிறாய்,
மண்டியிட்டு, மல்லாட வேண்டுகிறோம்,
இன்னொரு சுனாமி வேண்டாம் தாயே,
தாங்காது, எங்கள் உயிர்கள், போதும் -
போதும், என்கிற அளவுக்கு அள்ளி சென்றாயே,
இன்னுமா, உனக்கு அடங்காப் பசி ?

உயிரை தொலைத்து, உறவுகளை தொலைத்து,
தேடி தேடி, தேடி கிடைக்கா, இறுதிச் -
சடங்குகள் கூட, நடத்தி விட்டோம்.
நடுங்கி, ஒடுங்கி நடுத்தெருவில் உறங்கி,
நாய்களாய் அளந்தோம், நாதியற்று அன்று.

மீண்டு வந்து, பன்னிரண்டு -
வருடம் முடியா முன்பே,
மீண்டும் வந்து மிரட்டுவதும் ஏனோ?
தெம்பில்லை இனியும் ஓட,
துணிவுமில்லை துன்பத்தை நோக்க,
மன்னித்துவிடு பூமித்தாயே,
ஏதேனும் தவறு இழைத்திருந்தால்.


::: கோ.இராம்குமார் :::



Monday, April 9

சிரிப் பூ !


பூக்காரி அலமேலு
பூவாதான் சிரிச்சாலே,
பூவாசம் அவ மேல,
வாய்பேசா வச்சாலே,
சாமந்திபூ அழகாய்,
ஒத்தையாய் இருந்தாலே,
சமயம் வரக்காத்திருந்து,
கனவோடு நின்றேனே,
சும்மாவே பாத்தாலே,
துரு துருக்கும் கண்ணாலே,
துருப்பிடித்த இரும்பாக,
உதிர்வேனே நானுமே.

உதிர்ந்து மணக்கும் பூ எல்லாம்,
அவள் சிரிப் பூ தானே! வேறென்ன ?

:::: கோ.இராம்குமார் ::::




இல்லாமை!



அகண்ட விளக்கு திரியாய் எரிகிறேன்,
அனையா திருக்க எண்ணை வேறு,
வெளிச்சம், இருளை மறைத்திட முயன்றும்,
மறைய மறுக்கும் முளுயிருள்ளதுவும்,
மனதில், கருமையாய் கருகிடவே,
கனத்த இதயம், துடிக்க அறிந்தேன்,
விடியலென்று ஒன்று இல்லாது,
அகலாது, எந்த இருலாயினும்,
கல்லாமை, இல்லாமை அறிவொளி காணாமல்.

:::: கோ.இராம்குமார் :::::



உமிழ்நீர் !


சிந்தாமல் இதழ் சிந்தும்,
சக்கரை தேனதுவும்,
உமிழ்நீர் அமிர்தமாய்,
உயிர்
நீராகுமோ, எனக்கு,
ஒருதுளியாயினும் போதுமே,

உயிர்ப்பெறுவேன்,
இறவா -சுகம் அதுவோ?
அவள்
இதழ்மதுவும்!

:::கோ.இராம்குமார் :::


Saturday, April 7

அழகு!



எழுததெரிந்த எனக்கு
சொல்லத்தெரியவில்லை,
சொல்ல நினைத்த பொழுது,
சொற்கள் கிடைக்கவில்லை,
இல்லாத, சொல்லாத வரிகள் அதுவும்,
வாளை, மீன் னதன் முள்ளாய்,
சிக்குதே, தொண்டையிலே.

குழல் ஊத, குயில் பாட,
புதுராகம், தேடிஎடுத்து,
மெட்டுகொரு வரி பிடித்தேன்,
வஞ்சியவள் அழகை சொல்ல.

வண்ணமயில் நீலம்,
சிரிக்கும் ரோஜா சிவப்பு,
உடையணிந்து உட்கார்ந்திருக்கும், அவளும்,
கோயில் சிற்பம்! அழகோ, அத்துணை அழகு!

பாவாடை, தாவணி பெண்களை இன்றோ,
பார்ப்பது என்பது மிக, மிக அரிது,
பார்த்தேன் அவளை, படித்துறை அருகே,
ஆயிரத்தில் ஒருத்தியாய், அமைதியாய் சிரித்தாலே!

மாட்டிய கம்மல், அவளசைந்திட்ட பொழுது,
அதில் சிக்கிய ஒற்றை மயிராய், நானுமே,
கூந்தலில் மல்லிகை, கொஞ்சமாய் இருப்பதனால்,
கூட்டமாய் வண்டுகள், கெஞ்சலாய் சினுங்குமே.

மாடத்து புறாக்கள், மறந்துபோகும் பறக்கவே,
மைவிழியாள், விழியதனால், மெய்மறந்தே,
கோயிலக்குள மீன்களனைத்தும், நீந்துவதை
நிறுத்திவிட்டு, நீயொன்றே கதி எனுமே.

கேட்க்காத சுரம் எட்டில்,
சொந்தமாய் வரி சேர்த்தே,
செந்தமிழின் மொழிக்கொண்டே,
சொல்லி முடித்தேன் செல்வி உன்னழகை !

::: கோ.இராம்குமார் :::::



பயணம்!



என்னைக்கடந்து போனதொரு மையில்க்கல்,
இறக்கம் இல்லாமல், ஒவ்வொரு மையில்லிலும்.
ஜென்னலிடை காற்றிடம், ஒரு அடி விழுந்தது,
ஓரமாய் உட்கார்ந்ததர்க்கு, ஓடுகிற பேருந்தில்.
தூர தெரிந்ததொரு ஒத்தை பனைம்மரம்,
கூடவே வருவேன் என ஓடோடி வந்தது,
சாயும் சூரியனும், சமைந்த புதுப்பெண்ணாக,
வெட்கி குனிந்தே, கூரையிடுக்கில் மறைந்தது.

என்ன ஒரு இனிமை, பயணம்!
இப்படியே ரசிப்பதினாலோ என்னவோ,
தூரம் வெகு, தொலைவாய் தெரியவில்லை.

:::: கோ.இராம்குமார் ::::


Online Casino Australia Online Casino Casino Online Grand reef casino Casino Mate

Thursday, April 5

ஓசைகளின் கூட்டமாம் மொழி !



இதழ்ப்பிரிய நுழைந்த காற்று,
அடிவாயிற்றை சென்றடைந்து திரும்ப,
பிறக்கும் ஓசை, கூட்டமாம் மொழி......

முப்பது முதன்மை ஓசைகள் தமிழில்,
இதுவே, எழுத்து என்பர், சான்றோர் !
அப்படி எழுப்பிய ஓசையில் சொல்கிறேன்,
என் இனிய காலை வணக்கங்கள்...

"இனிய காலை வணக்கங்கள்
என் அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும் "



::: கோ.இராம்குமார் :::


விதி !


சுட்ட சூரியன் எரிக்கும் நெருப்பில்,
யிட்ட புழுவாய் துடிக்க, துடி துடித்தேன்,
திட்ட ம் போட்டே என்னை நீயும்,
வெட்ட ஒருவன் எங்கிருந்து முளைத்தானோ?

கிட்ட தட்ட பதினெட்டு திங்கள்,
ஓட்ட கம் ப்போல் அலைந்தேனே,
வட்ட மான வாழ்க்கையிலே,
நட்ட பனை ப்போல் உயர்ந்தே,
முட்ட விண்ணையும், விழுந்தேனே.
பட்ட காலிலே படுமென்பர், எனக்கு
கிட்ட வில்லையே இந்தக்காதலும் ??


:::: கோ.இராம்குமார் ::::




Wednesday, April 4

சிரிப்பு !


மருதாணி இலையோடு,
புளி சேர்த்து அரைத்து எடுக்க,
கிடைக்கும் கலவை, மருதாணி கூழை,
தாள்ம்மடித்து கூழ் தினித்து,
அன்னம் வண்ணமாம், அவள் உள்ளங்கை -
யதனில் வளைத்து, நெளித்து,
வரைய தெரியும், பச்சை வண்ண ஓவியமும்,
நிமிட நாழிகை கடந்து, காய்ந்து, உதிர,
சிவந்து சிரிக்குமவள் உள்ளங்கை யதுவும்,
விரல் நுனி யதுவும், அழகோ, பேரழகோ ?

மருதாணி ஓவிய பூக்கள் கூட,
சிவக்க சில மணிந்நேரம் கேட்க்குமே,
என்ன ஒரு மின்னல் வேகம்,
நீ சிரிக்க சிவக்கும் உன் வெட்கக்கன்னங்கள் ?

:::: கோ.இராம்குமார் கோபால் :::::







Tuesday, April 3

ஏட்டுசுரைக்காய் !



முழங்கால் தெரியா, பாவாடை பருவம்,
படிந்து வாறி பின்னிய, கூந்தல் குமரிகள்,
அரைப்புடவை, அமர்க்களமாய் அடிவயிற்றுக்குமேல்,
கண்ணாடி வளை, மூக்குத்தி, கொஞ்சும் கொலுசுடன்,
குங்கும பொட்டும், மஞ்சள் முகமுமாய்,
தெளிந்த முகத்துடன், வாசற்ப்படி  தாண்டா நாட்கள் - அன்று,
அம்மி முன்னமர்ந்த்து இடித்து, நசுக்கி அரைத்த துவையல்,
ஆட்டுக்கல், குலவி சுழன்று குழைத்த அரவை தோசை,
கைகள் சிவக்க அடித்து, பிழிந்து துவைத்த சலவை,
விறகுமூட்டி அடுப்பெரித்து, மஞ்சட்டி நிரம்ப வடித்த சோறு,
அச்சாணி சக்கரம், இரெட்டை மாடு பூட்டிய வண்டி,
அரணம் தெரியா பாதம் நடந்த கருங்கல்ப்பாதை,
கோயில்களே கதி என்றிருந்த பக்தர், அறிஞர்கள்,
ஏனோ எல்லாம் இன்று ஏட்டு சுரைக்கைப்போல்
நமக்கு, நவீன கால நடைமுறையில் - இயற்க்கை,
துறந்து செயற்கையாய், சோம்பல் சேகரிப்பில்,
எரியக்கிடைக்கும் சாம்பல் ஆனோமே !

:::: கோ.இராம்குமார் ::::

Monday, April 2

பரிதவிப்பு!


சாயும்காலம் நிழலும்,
சரிந்து, விழுந்து மடிய - மூழ்கும்,
இருளில் மிளிரும், நிலவாய்!
உன்முகம் கண்டு சிலிர்த்தேனே !

மாயம் என்ன மாயம்,
மயங்கிவிட்டேன் நானும்,
சாலை விளக்காய், ஒளியாய்,
பளிச்சிட சிரிக்க, விழுந்தேனே!

தேனுன்யிதலும்  என் னாவும்,
தேவை தீர்ந்தும் நிற்க - மறுக்க,
தேனீக்கள் நீந்தும், தேன்க்குளமோ?
உன்னிதழ் இரண்டும், மிரண்டேனே!

பருவம் இளம்பருவம், உன்னுருவம்,
மோசம் செய்யா திருக்க - நெஞ்சிறுக்க,
இமைகள் ஒட்டா - கண்விழித்தேன்,
உன் கடைக்கண், விடைக்கேட்க,
சிவன், ராத்திரி பக்தன்  நானோ !

அய்யையோ, ஆர்பரிப்பு, பரிதவிப்பு...
அடிமையாக, என்ன வரிவிதிப்பு ?
சொல்ல, செலுத்தா ஆவேனே,
அடிமையாய் உனக்கு, அடிப்பணிய !!

:::: கோ.இராம்குமார் ::::