Thursday, April 26

இல்லாத இறைவா, வா வா!



கடவுள் இருக்கும் இடம் தேடி நானும்,
தூணிலும், துரும்பிலும் தேடி பார்த்தேன்.

படித்த நூல் எழுத்தினுள் அர்த்தமாய்,
வடிக்கும் கவி கொடுக்கும் சுவையதாய்,
முந்தி வந்திட்ட மொழி, தமிழ் மொழியதன்வாய்,
சொல்லிட்ட தெல்லாம் காதை பொருளாய்,
எதிலும் காணவில்லையே இறைவா உன்னை.

ஏழையின் சிரிப்பினில் உன்னை பார்த்தனராம்,
நானும் பார்த்தேன் ஏழையும் சிரிக்க, இல்லையே நீயும்?
மழலையின் முகமதில் நீ இருப்பாயாமே,
எழில்முகமதில் எங்கே, அதிலும் இல்லையே நீயும்?
கோவிலில், குளத்தினில் நீ இருப்பதாய் சொல்லி
கூட்டமாய் கூடும் மானுடற்கெல்லாம் ஏன் நீ தெரிவதில்லை?

வேண்டுதல், பிரத்தனை, ஆராதனை அபிசேகம்,
அனைத்தையும் காண, தனி தனி சீட்டு வாங்க வேண்டுமாம்,
அப்படி வாங்கியும், காட்டவில்லையே உன்னை?
உண்மையிலே நீ எங்கே இருக்கிறாய்?
விண்ணிலா? மண்ணிலா? கடலிலா?
இல்லாத உன்னை, இருப்பதாய் சொல்லி,
கொள்ளை அடிக்கும் குகைகள், தான் கோவில்களோ?

கடவுளே! நீ உண்மையிலே இருந்தால் என் முன்,
வந்து தான் பாரேன், முடியாது தானே உன்னால்?

::: கோ.இராம்குமார் :::

No comments: