Tuesday, April 3

ஏட்டுசுரைக்காய் !



முழங்கால் தெரியா, பாவாடை பருவம்,
படிந்து வாறி பின்னிய, கூந்தல் குமரிகள்,
அரைப்புடவை, அமர்க்களமாய் அடிவயிற்றுக்குமேல்,
கண்ணாடி வளை, மூக்குத்தி, கொஞ்சும் கொலுசுடன்,
குங்கும பொட்டும், மஞ்சள் முகமுமாய்,
தெளிந்த முகத்துடன், வாசற்ப்படி  தாண்டா நாட்கள் - அன்று,
அம்மி முன்னமர்ந்த்து இடித்து, நசுக்கி அரைத்த துவையல்,
ஆட்டுக்கல், குலவி சுழன்று குழைத்த அரவை தோசை,
கைகள் சிவக்க அடித்து, பிழிந்து துவைத்த சலவை,
விறகுமூட்டி அடுப்பெரித்து, மஞ்சட்டி நிரம்ப வடித்த சோறு,
அச்சாணி சக்கரம், இரெட்டை மாடு பூட்டிய வண்டி,
அரணம் தெரியா பாதம் நடந்த கருங்கல்ப்பாதை,
கோயில்களே கதி என்றிருந்த பக்தர், அறிஞர்கள்,
ஏனோ எல்லாம் இன்று ஏட்டு சுரைக்கைப்போல்
நமக்கு, நவீன கால நடைமுறையில் - இயற்க்கை,
துறந்து செயற்கையாய், சோம்பல் சேகரிப்பில்,
எரியக்கிடைக்கும் சாம்பல் ஆனோமே !

:::: கோ.இராம்குமார் ::::

No comments: