Thursday, April 12

தமிழ் புத்தாண்டு!




ஓடிகொண்டிருக்கும் கால சுழற்சியில்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டோ?

புதுமை, இனிமை, இளமை ...
பிறக்கும் பொழுது புதுமை,
இருக்கும் பொழுது இனிமை,
குறைந்து வரும் இளமை ?
ஆண்டுக்கு ஆண்டு,
ஆண்டாண்டு காலமாய்.

இயற்கையின் குறிப்பேட்டில்,
இன்றுதான் தமிழுக்கு, பிறந்தநாளோ?

தமிழன் என்று சொல்ல,
தலைநிமிர்ந்து வாழ்ந்தவன் - இன்று
என்று தான் தமிழுக்கு புத்தாண்டு,
என்னும் குழப்பத்தில் வெட்கி,
தலைகுனிந்து நிற்கிறான்.

தமிழர் திருநாள் அதுவே - தமிழனுக்கு
புத்தாண்டு இல்லையோ?
எதற்கு இந்த பிதற்றல்,
காட்டிட பொறையை திங்க,
ஆட்டிடும் வாலை, நாயும் - அப்படியா
ஆனோம் தமிழர்கள்?

தமிழா! நீயும் தமிழனாய் இருந்தால்,
தையினில் தானுனக்கு, தமிழ் புத்தாண்டு அதுவும்.
சித்திரையில் இருந்தது, வடக்கினில் உதித்தது,
அறுவது பெயர்களில், ஒன்றுமில்லை தமிழினில்,
ஆத்திரம் நீ கொல்லாதே, ஆசுவாசம் படுத்திக்கொள்.
சித்திரையிலல்ல உனக்கு தமிழ் புத்தாண்டு.
தை திங்களில் பிறந்துவிட்டது தமிழாண்டு.

வாழ்க தமிழ் !

-----------------------------
::: கோ.இராம்குமார் :::
-----------------------------


No comments: