Saturday, April 14

தானம்!


தியாகமாய் தன்னுயிரில்,
தவமிருந்து, தன்னைவருத்தி,
ஊனமில்லா உடல் - உனக்கு,
உயிர் கொடுத்தவள் அன்னை.

பார்க்கும் கண்ணிரண்டு,
நடக்கும் காலிரண்டு,
உழைக்கும் கைகளிரண்டு,
கேட்க்கும் காதுமிரெண்டு,
அழகான முகமும் உண்டு,
பிறப்பினில், வளர்ப்பினில்,
குறையில்லா வாழ்க்கையோ?

ஒருவேளை உன்னுயிர் பிரிந்தால்,
என்செய்வாய் இவையனைத்தும்?
எரித்த சாம்பலை, கடலோடு கரைப்பாயோ?
புதைத்த மண்ணில், மரம் நட்டு மகிழ்வாயோ?

மடிந்த உயிரதனை,
மீண்டும் உயிர் பெறவை,
இதயம் தொடங்கி,
கண்கள்,
சிறுநீரகம்,
கல்லீரல்,
சுவாசப்பை,
கணையம்,
குடல்கள்,
தோல்,
நாரிழை,
கருவிழி,
இதயக்குழாய் - இப்படி,
அனைத்தும், மடியாத உடல் உறுப்புக்கள்,
ஒருவருக்கோ, இருவருக்கோ இல்லை,
பலருக்கும் வாழ்வளிக்கும் பல்கலை கழகமாய்,
உன்னை வாழவைக்கும் ஏழு தலைமுறைக்கும்.

உடல்த்தான கொடையாலனாய்,
உலகிற்கு உதாராணமாய், கர்ணனாய்,
இறந்தப்பிறக்கும் வாழ்ந்திடு!
இன்றே! உறுப்பு கொடைதந்திடு !!

::: கோ.இராம்குமார் :::

http://www.mode.org.in/online_registration.aspx


No comments: