Friday, September 13

அவளோ அதுவே அழகே, அழகே...


ஜூலை` 06

கண்கள் சொல்லும், பாடம் நூறு
பார்த்தோம் படித்தோம்,
அவளும் வரவே, ஆசையும் கூடவே
அணைத்தோம், இணைத்தோம்,
அங்கே, நிலவும் அருகே, அருகே
அவளோ அதுவே அழகே, அழகே,

கண்கள் சொல்லும், பாடம் நூறு
பார்த்தோம் படித்தோம்,
அவளும் வரவே, ஆசையும் கூடவே
அணைத்தோம், இணைத்தோம்,
அங்கே, நிலவும் அருகே, அருகே
அவளோ அதுவே அழகே, அழகே,

சலித்துப் போகா, இனித்துக் கிடக்கும்
அவள் முத்தசுவடுகள்,
அகழ்ந்து, ஆராய்ந்து நான் கண்டெடுத்த
முத்த இதழ்கள்,
வெட்கம் முட்டும், மோகம் தட்டும்
சுவர்க்க இரவுகள்,
பக்கம் வந்தோம், பற்றிக் கொண்டோம்
நழுவியது உடைகள்,
வேண்டாம் என்றாள், வேண்டும் என்றேன்
மூண்டோம் மீண்டும்,
தீண்டல் தொடர்ந்தோம், தீக்குள் நின்றோம்
தித்தித்தது அவள் விரல்கள்,
ஆண்மை நடிக்க, பெண்மை துடிக்க
உண்மைக் கண்டோம்,
அங்கே, நிலவும் அருகே, அருகே
அவளோ அதுவே அழகே, அழகே,

கண்கள் சொல்லும், பாடம் நூறு
பார்த்தோம் படித்தோம்,
அவளும் வரவே, ஆசையும் கூடவே
அணைத்தோம், இணைத்தோம்,
அங்கே, நிலவும் அருகே, அருகே
அவளோ அதுவே அழகே, அழகே,

உறங்க மறுக்க, உளறி குவிக்க
இரவும் நீள - மறுநாள் காலை
இனிதே முடித்தோம் எங்கள்
முதல் இரவை,
உறங்க மறுக்க, உளறி குவிக்க
இரவும் நீள - மறுநாள் காலை
இனிதே முடித்தோம் எங்கள்
முதல் இரவை,

கண்கள் சொல்லும், பாடம் நூறு
பார்த்தோம் படித்தோம்,
அவளும் வரவே, ஆசையும் கூடவே
அணைத்தோம், இணைத்தோம்,
அங்கே, நிலவும் அருகே, அருகே
அவளோ அதுவே அழகே, அழகே.



எழுத்தோலை!


follow us @ www.facebook.com/ezutholai 

No comments: