Friday, September 13

என் அன்பு நண்பரும், சகோதரருமான திரு.ஆனந்த் அவர்களின் பிறந்தநாளாம்......


ஜூன்` 14

வாருங்கள் வாழ்த்துவோம்!

என் அன்பு நண்பரும், சகோதரருமான திரு.ஆனந்த் அவர்களின் பிறந்தநாளாம் நாளை..
------------------------------

ஆகாய அளவில் 
அன்பன் உருவம் 
உலவும் உலகிது 
அவ்வுலகினில் 
எனக்கும் சிறு இடம்
கொடுத்து கொத்தாய்
நேசம் பாய்ச்சும் நல்லன்
நலன் மேலும் பெருகி
நாளும் இன் முகம்
சுடர் வீசி ஒளிர - வேண்டி
எட்டு திக்கும் உள்ள
இறைவா உன்னை
வணங்குகிறேன்,

இன்றுப் போல் என்றும்
என்றென்றும் - இனி எல்லா
ஆண்டும்,
உன்னுடன் என் சொந்தம்
நீளும் - நம் தலைமுறை
தாண்டியும் - நம் நட்பை
பாராட்டி பேசும் இவ்வுலகம்
அவ்வரம்
ஒன்றே போதும் எனக்
இப்பொழுதும், எப்பொழுதும்,

ஞாயிறு கதிர்
பிறந்த விடியல்கள் - எல்லாம்
விருட்சமாய் ஒளிர்ந்திடும்
அப்படியே உன்னால்
இந்நாள் வரை
எல்லா நாளும் ஒளிமயமாகவே
சிறந்தது,
இனியும் அதுவே
நிரந்தரமே - வாழியவே
நின் புகழ் மற்றும்
நின் குலம் அதுவும்.

வாழ்த்துக்கள் என் இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்.


எழுத்தோலை!

No comments: