ஜூன்` 10
தன்னைத் தானே செதுக்கும்
சிற்பிகள் நாங்கள் - எங்களிடம்
உளியும் இல்லை, சுத்தியலும் இல்லை
சுற்றியோடி வலுத்த தொடைகளும்,
வலுவை உயர்த்தி, இறக்கி - உருக்கி
வார்த்த சதைகள் மட்டுமே - சாத்தியாமாய்,
உயர்ந்து விரிந்த மார்பும் - வளைந்து
நெளிந்த தோள்களும் - முறுக்கி
திரித்த கைகளும் - படிக்கட்டு
போன்ற வயிறும் - அத்துனை
எளிதாய் செதுக்கி விட முடியாது - அரை
சீனி, கால் உப்பு, சிறிதளவு சோறு,
ஊட்டச்சத்து உணவு ,
புரதம் செறிந்த பயிறு - உணவு
கட்டுப்பாடு இன்றி - தொங்கிய
தொப்பையையும் - தளர்ந்த
சதைகளையும் - இறுக்கி, மெருகேற்றி
செப்பு சிலைப்போல் திரிய முடியாதே,
தன்னைத் தானே செதுக்கும்
சிற்ப்பிகள் நாங்கள் - எங்களிடம்
உளியும் இல்லை, சுத்தியலும் இல்லை
சுற்றியோடி வலுத்த தொடைகளும்,
வலுவை உயர்த்தி, இறக்கி - உருக்கி
வார்த்த சதைகள் மட்டுமே - சாத்தியாமாய்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment