Sunday, February 17

குறள் 833

வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: பொருட்பால் .
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பேதைமை.

குறள் 833:

"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்."

உரை:

நகம் கடித்து,
கால் விரல் நிலத்தை கிழித்து,
நாணுவர் பெண்டீர் - தன்
பினையைக்கண்ட தருணம்,
அவளன்றோ பெண்ணும்,
ஆங்கே தவிர்க்கும் அவளும்,

வேண்டுவன எல்லாம்
வேண்டும் எனும் ஆசை
கொண்டும் - தன்னிடத்தே
தானே வரவேண்டும் என்றே
தேடலை விடுத்து - வேண்டுவர்
எவரும்,

துணையாய்,
மனையாள் ஒருத்தி
காதல் சீக்குண்டு,
மணாளன் முகம் காணா,
மயக்கமும் கொண்டிருப்பவளை
மறந்து - மாசில்லா
காதலை கள்ளி ஒருத்தியிடம்
கட்டவிழ்க்கும் அவரும்,

தேனினும் இனிதாம்,
மலரினும் அழகாம்,
பொன்னினும் அரிதாம்,
எதையும் பேணிடா
மறந்தே - காக்காதிருப்பவர்
அனைவரும்,

ஓரரிவில் குறைந்த
விலங்கின் குணத்தை ஒத்தே
அறிவிலிகளாய் வலம்
வருவாரோ.


எழுத்தோலை!






No comments: