Sunday, February 17

குறள் 1221

வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------

குறள் பால்: காமத்துப்பால்.
குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.

குறள் 1221:

"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."

உரை:

சோலையில் கூடிய
வண்டுகள் போலே
பாடிக் கூடியிருந்தோம்,
நீயும் வந்தாய்,
ஒளியையும் தின்றாய்,
உறைவிடம் அடைத்தே
எங்களைப் பிரித்து
உயிரையும் குடித்தாயே,

வாழியவே நீ வாழியவே,
அந்தியே.

எழுத்தோலை!


No comments: