பூக்களின் அரசி!
தாமரை மொட்டுக்கள் எல்லாம்,
பட்டென்று பூத்தது,
சட்டென்று என்னவள்,
அதன் பொய்கையில் - தன்
பாதம் நனைத்து
போன நிமிடங்களில்,
வெட்கத்தில் குனிந்தன
வெள்ளை அல்லியும்,
வள்ளியாம், அவள் வடிவில்
மதி சொல்லிய நொடிகளில்,
பூக்களின் அரசி,
பூவரசி தானே,
பிறகெப்படி?
எழுத்தோலை!
No comments:
Post a Comment