எத்திசையில் கோயிலோ
அத்திசையிலே வணங்குவர்,
நானோ - அவள்
திசையில்,
வானமாய் உயர்ந்து,
வனப்பாய் செழித்து,
அழகாய், கண்டிப்பாய் - அவள்
இருந்திட வேண்டும்,
நான் அறியேன் - ஆனால்,
அவள் ஆற்றல் அறிவேன்,
அவள் எழுத்துக்களை அறிவேன்
அதுப் போதுமே,
காணாமலே,
ஊர், பெயர் தெரியாமலே - அவள்
பேச கேட்காமலே - ஏனோ
மனக்கோட்டையும் கட்டிவிட்டேன்,
பேசாமலே அவள் போனாலும்,
தொடர்வதை நிறுத்தேன்,
என்றோ - அவள் பார்வை
என் மேல் படுமென்றும்,
அன்றே நான் பார்வை
பெற்றவன் ஆவேனே,
அவளுக்கு தெரியாமலே - ஏன்,
எனக்கும் தெரியாமலே - நான்
காதலிக்க,
தொடங்கிவிட்டேன்,
அவளுக்கு தெரியாமலே
காதலிப்பதால் - ஒருவகையில்,
இதுவும் கள்ளக்காதலே.
எழுத்தோலை!
அத்திசையிலே வணங்குவர்,
நானோ - அவள்
திசையில்,
வானமாய் உயர்ந்து,
வனப்பாய் செழித்து,
அழகாய், கண்டிப்பாய் - அவள்
இருந்திட வேண்டும்,
நான் அறியேன் - ஆனால்,
அவள் ஆற்றல் அறிவேன்,
அவள் எழுத்துக்களை அறிவேன்
அதுப் போதுமே,
காணாமலே,
ஊர், பெயர் தெரியாமலே - அவள்
பேச கேட்காமலே - ஏனோ
மனக்கோட்டையும் கட்டிவிட்டேன்,
பேசாமலே அவள் போனாலும்,
தொடர்வதை நிறுத்தேன்,
என்றோ - அவள் பார்வை
என் மேல் படுமென்றும்,
அன்றே நான் பார்வை
பெற்றவன் ஆவேனே,
அவளுக்கு தெரியாமலே - ஏன்,
எனக்கும் தெரியாமலே - நான்
காதலிக்க,
தொடங்கிவிட்டேன்,
அவளுக்கு தெரியாமலே
காதலிப்பதால் - ஒருவகையில்,
இதுவும் கள்ளக்காதலே.
எழுத்தோலை!
No comments:
Post a Comment