வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அன்புடைமை.
குறள் 71:
------------
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"
உரை:
--------
கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்,
பூட்டிட இங்கு வழியுமேது,
சொல்லாமல் கொட்டும்,
பேசாமல் பேசும் - உன்
துன்பதனை காணுமிடத்தில்
தவழ்ந்தோடும் என்
கண்ணீரும்,
கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்.
எழுத்தோலை!
Showing posts with label திருக்குறள் கவிதை உரை. Show all posts
Showing posts with label திருக்குறள் கவிதை உரை. Show all posts
Wednesday, February 20
Sunday, February 17
குறள் 833
வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: பொருட்பால் .
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பேதைமை.
குறள் 833:
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்."
உரை:
நகம் கடித்து,
கால் விரல் நிலத்தை கிழித்து,
நாணுவர் பெண்டீர் - தன்
பினையைக்கண்ட தருணம்,
அவளன்றோ பெண்ணும்,
ஆங்கே தவிர்க்கும் அவளும்,
வேண்டுவன எல்லாம்
வேண்டும் எனும் ஆசை
கொண்டும் - தன்னிடத்தே
தானே வரவேண்டும் என்றே
தேடலை விடுத்து - வேண்டுவர்
எவரும்,
துணையாய்,
மனையாள் ஒருத்தி
காதல் சீக்குண்டு,
மணாளன் முகம் காணா,
மயக்கமும் கொண்டிருப்பவளை
மறந்து - மாசில்லா
காதலை கள்ளி ஒருத்தியிடம்
கட்டவிழ்க்கும் அவரும்,
தேனினும் இனிதாம்,
மலரினும் அழகாம்,
பொன்னினும் அரிதாம்,
எதையும் பேணிடா
மறந்தே - காக்காதிருப்பவர்
அனைவரும்,
ஓரரிவில் குறைந்த
விலங்கின் குணத்தை ஒத்தே
அறிவிலிகளாய் வலம்
வருவாரோ.
எழுத்தோலை!
-----------------------------------------------
குறள் பால்: பொருட்பால் .
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பேதைமை.
குறள் 833:
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்."
உரை:
நகம் கடித்து,
கால் விரல் நிலத்தை கிழித்து,
நாணுவர் பெண்டீர் - தன்
பினையைக்கண்ட தருணம்,
அவளன்றோ பெண்ணும்,
ஆங்கே தவிர்க்கும் அவளும்,
வேண்டுவன எல்லாம்
வேண்டும் எனும் ஆசை
கொண்டும் - தன்னிடத்தே
தானே வரவேண்டும் என்றே
தேடலை விடுத்து - வேண்டுவர்
எவரும்,
துணையாய்,
மனையாள் ஒருத்தி
காதல் சீக்குண்டு,
மணாளன் முகம் காணா,
மயக்கமும் கொண்டிருப்பவளை
மறந்து - மாசில்லா
காதலை கள்ளி ஒருத்தியிடம்
கட்டவிழ்க்கும் அவரும்,
தேனினும் இனிதாம்,
மலரினும் அழகாம்,
பொன்னினும் அரிதாம்,
எதையும் பேணிடா
மறந்தே - காக்காதிருப்பவர்
அனைவரும்,
ஓரரிவில் குறைந்த
விலங்கின் குணத்தை ஒத்தே
அறிவிலிகளாய் வலம்
வருவாரோ.
எழுத்தோலை!
குறள் 1221
வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: காமத்துப்பால்.
குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.
குறள் 1221:
"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."
உரை:
சோலையில் கூடிய
வண்டுகள் போலே
பாடிக் கூடியிருந்தோம்,
நீயும் வந்தாய்,
ஒளியையும் தின்றாய்,
உறைவிடம் அடைத்தே
எங்களைப் பிரித்து
உயிரையும் குடித்தாயே,
வாழியவே நீ வாழியவே,
அந்தியே.
எழுத்தோலை!
-----------------------------------------------
குறள் பால்: காமத்துப்பால்.
குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.
குறள் 1221:
"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."
உரை:
சோலையில் கூடிய
வண்டுகள் போலே
பாடிக் கூடியிருந்தோம்,
நீயும் வந்தாய்,
ஒளியையும் தின்றாய்,
உறைவிடம் அடைத்தே
எங்களைப் பிரித்து
உயிரையும் குடித்தாயே,
வாழியவே நீ வாழியவே,
அந்தியே.
எழுத்தோலை!
குறள்: 1213
ஐயன், திருவள்ளுவரின், திருக்குறளுக்கு எனது உரை, கவிதை நடையில், (புது முயற்சி)
பொருள்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும், தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்.
"கனவுநிலையுரைத்தல், கற்பியல், காமத்துப்பால்"
குறள்: 1213
"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்"
-----------------------------------------------------
எனது உரை (புதுக் கவிதை வடிவில்)
------------------------------------------------------
நனவிழந்து நிற்கிறேன்,
நிழலிருந்து பெருகிய
உயிர் போலே - ஒருக்காலும்
நிற்காமல் தொடரும்
வளியாய் அவன் முகம்,
ஆழ்ந்த உள்ளம் விடுத்து
கானா உலகிலாவது என்னிடம்
வருவதால் - அங்கேனும்
அன்பை பொழிவதால்.
எழுத்தோலை!
பொருள்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும், தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்.
"கனவுநிலையுரைத்தல், கற்பியல், காமத்துப்பால்"
குறள்: 1213
"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்"
-----------------------------------------------------
எனது உரை (புதுக் கவிதை வடிவில்)
------------------------------------------------------
நனவிழந்து நிற்கிறேன்,
நிழலிருந்து பெருகிய
உயிர் போலே - ஒருக்காலும்
நிற்காமல் தொடரும்
வளியாய் அவன் முகம்,
ஆழ்ந்த உள்ளம் விடுத்து
கானா உலகிலாவது என்னிடம்
வருவதால் - அங்கேனும்
அன்பை பொழிவதால்.
எழுத்தோலை!
Subscribe to:
Posts (Atom)

