நண்பகலில் எனக்கெதிரில்
வீதி உலா வந்திடவே,
நித்திரைலே மட்டும் வரும்
கனவோ,
என்பதுப்போல்,
ஊருணி மீனாய்,
கண்கள் உருட்டி
தொல்லாடி பழமையாய்,
குழியாடியாய் வளைந்தே,
குவியாடியாய் தொலைகிறேன்,
நிலைக்கண்ணாடி தேடி
நிஜமென்பதை
உணர்கிறேன்,
தேவர் உலகம்
இடம்பெயர்ந்து - நான் பிறந்த
இடத்தில் வந்ததுப்போல்,
ர, மே, ஊர் எனத்தொடங்கும்
மூவரும் ஒன்றாய், முழுதாய்
அவள்த்தானோ,
ரம்பையும்,
மேனகையும்,
ஊர்வசியையும்
யார்க்கண்டர் - நான்
கண்டேன் இன்றே,
அதுவே,
எனது பாக்கியம்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment