Monday, February 11
பேரழகி தமிழ்ப் பெண்ணே!
பேரழகி தமிழ்ப் பெண்ணிற்கு சமர்ப்பணம்.
----------------------------------------------------------
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே,
உன்னழகை சொல்லவும்
என்னிடமில்லை வார்த்தைகளே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே..
முன்ஜென்மம் நினைவுகளே
பின் ஜாம கனவுகளாய்,
நீ என்னோடு பேசியதெல்லாம்
இப்போது தெரிகிறதே,
எப்போதும் உன்னுடனே
இருந்திடவும் முடியலையே,
பேரழகி தமிழ்ப் பெண்ணே,
பிரிந்தேனே உனக்கு முன்னே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே,
உன்னழகை சொல்லவும்
என்னிடமில்லை வார்த்தைகளே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே..
தீண்டா மெழுகாய் உருகி - உந்தன்
பின் அலைந்த நாட்கள் எல்லாம்,
முகிலாய் கலைந்து,
முற்றிலும் மறைந்ததே,
நினைவிருக்கிறதே என்,
பேரழகி தமிழ்ப் பெண்ணே,
பிரிந்தேனே உனக்கு முன்னே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே,
உன்னழகை சொல்லவும்
என்னிடமில்லை வார்த்தைகளே..
எழுத்தோலை!
Labels:
காதல் மொழி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அழகு... அருமை...
மிக்க நன்றி நண்பரே :)
Post a Comment