Sunday, April 28

அச்சமில்லை அச்சமில்லை!

Mar`10

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே,
உச்சி மீது வான் இடிந்து 
வீழுகின்ற போதிலும், 
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்பது இல்லையே

என்றவன் பாரதி
இன்றவன் இல்லையே,
அதற்குதான் தயக்கமோ,
எதற்குதான் உன் மனம்
செவியதை சாய்க்குமோ?
பாவாடை கிழித்துப்
பாதித் தெரிய பாட்டுப் பாடி
ஆடினால்,

பல் இளித்து பாராட்டுவாய்,
பலப் பேரிடம் சொல்லுவாய்,
அடித்துப் பிடித்து நுழைய முனைந்து
முன் வரிசையிலேனும் அமர்ந்து
முதல்நாளே பார்த்திடுவாய்,
அதுவே,

உனக்காய், உன் இனத்திற்காய்,
ஒட்டுமொத்த தமிழின சமூகத்திற்காய்,
உயிரையும் துச்சமென தூர எறிந்து
உண்ணா, உறங்கா, உரக்க
கூவி அழைத்திடும் பிரிட்டோவின்
குரலுக்கு மட்டும் குரல்க்கொடுக்க,
கூட்டத்தில் இணைந்து ஆதரிக்க
கூச்சமாய், வீட்டில் அடைந்து
அச்சாசோ என்று, அனுதாபம்
சேர்க்கிறாயோ ?

போதும், போதும், போதும்
மூன்று நாள் முடிந்துவிட்டது,
உண்ணாதவர் முகம், உடல் எல்லாம்
சோர்வை சேர்த்துக்கொண்டது,
ஒன்று சேர், அணித்திரல்,
ஒட்டுமொத்த உலகை உலுக்க,
ஓடிவா மௌன யுத்த செய்ய,

மீண்டும், மீண்டும் சொல்,

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே,
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே,

கேட்டதுக் கிடைக்கும் வரை
சொல்லிக்கொண்டே இரு,
கூட்டத்தில் இணைந்தே இரு,
மத்தியில் சுத்தியல் அடித்தார்ப்போல்
நம்க் குரல் இறங்கும் வரை.


எழுத்தோலை!

No comments: