Sunday, April 28

வாழ்த்த வாருங்கள் நண்பர்களே!

Mar`20

எனது அன்பு நண்பர் திரு. முகமது மீரா 
அவர்கள் நாளை இல்லறத்தில் இணையவிருக்கிறார்,
அவரை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே,
------------------------------------------------------------
மணமக்கள் : முகமது மீரா - பர்சத் நிஸா 
------------------------------------------------------------
நாள் : 21.03.2013
-------------------------------------------------------------

அகலிடம் அலம்ப,
நபிகள்(ஸல்) ஆணைக்கிணங்க,
அச்சாரமிடும் நன்னாளாம்,
அன்பினை அறத்தினை என்றும்
அவிதல் நன்றாம்,
அருள்நெறி அற்றா அறிந்து
ஆய்வளை ஐயள் கரம் பற்று,
எழிலி திரளும்,
காந்தள் தூவும்,
இயல்பை மறந்தே
இதயம் இணையும்,

இல்வாழ்க்கை தொடங்கும்,
இனிக்கும் கனிப்போல் சுவைக்கும்,
நாளென்றும் நன்னாளாய் மணக்கும்,
திகட்டும் அளவும் நெருங்கும்,
திகையா, அடங்கா, நிறையா - நீவீர்
குறையா, மதியாய், ஒளியாய் வீச
புதிதாய் உங்கள் உருவாய், அருளாய்
பெறுவீர் ஒன்றாய், இரண்டாய்
மக்கட்செல்வம் அழகாய்,

முகமது மீரா, முகமது மீரா - உன்
முகம் அது மிளிர, அகம் கூட குளிர - நீ
நிதம் கண்ட கனவெல்லாம்,
நிஜமாக்கி உன்னை சேர,
தரையிறங்கி வரும் நிலவேதான்
நிஸா என்னும் நிறைமதியோ?

இன்ஷா அல்லாஹ்
இனியெல்லாம் சுகமே,
சுப்ஹான் அல்லாஹ்
வாழ்வெல்லாம் வசந்தமே,
வாழ்த்துகள், வாழ்த்துகள்
என், இனிய நிக்காஹ்
வாழ்த்துக்கள்.


எழுத்தோலை!

புது வாழ்வை!

Mar`20

என்றாவது ஒரு நாள்
நீ என்னிடம் வருவாய் என்றே,
நுனிப்புல் மீதுள்ள 
பனித்துளிகளை சேகரிக்கிறேன்,
அம்மன் சிலை அபிசேகம் செய்து 
வேண்டிக்கொள்கிறேன்,

ஆண்டாள் பாக்கள் தழுவி
தினம் ஒரு பாடல் வடிக்கிறேன்,
ஆழக்கடல் மூழ்கி, தேடித்தேடி
முத்துக்களை சேர்க்கிறேன்,
சொத்தாம் நீ எனக்கு என்றும்
அழியாதிருக்க,
இதயக்கூட்டில் பொக்கிசமாய்
பாதுக்காக்கிறேன்.

வந்துவிடு தமிழ் மகளே,
தரணியெங்கும் சென்றிடலாம்,
தனித்தீவை தேடித் பிடித்து,
புது வாழ்வைத் தொடங்கிடலாம்.

எழுத்தோலை!

ஜெயந்தி, தோழிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Mar`20

நிலமகள் நீர்நிலைகள் 
மலையழகை எல்லாம்,
மாற்றம் ஏதுமின்றி 
மங்கா தாங்கும் எங்கள்
மருமகளே,
சீனத் தாய் வயிற்றில் பிறந்தும்
சீனியாய் தமிழ் பேசி,
சித்திரமாய் ஒளி வீசி,
ஜெயந்தியாய் வலம் வரும்
திருமகளே,

மலாய் நீக்கிய பாலின்
சுவை அதுவாய்
மலாய் மொழி நீ
பேசிட நிறைக்கும்,
நிலவு அழகை
கவிதைகளால் பாட,
தமிழ் மொழியில் நீ
எழுதிட சிலிர்க்கும்,

அன்பினை அடைக்காக்கும்
கோழியதன் இறகாய் - நீ
எங்களை காக்கும்
ஒவ்வொரு நொடியும்,
சுகத்தினில் பொரிந்தோம்
உள்ளுர உறைந்தே,

உன்னை வாழ்த்த
வாயெடுத்த போதெல்லாம் - என்
போதாத காலம் எனை - ஏதும்
எழுதிட விடவில்லை,
மாறும் காலங்கள் எல்லாம்
மாற்றம் ஒன்றையே
நிலையாய் தாங்கி,
ஏற்ற, இறக்க வாழ்க்கையையே
தந்திடவே - என்
என்னத் திவலைகள் எல்லாம்
கிண்ணத் தண்ணீரிலே
மூழ்கியதே,

மன்னித்துவிடு தோழியே,
மன்னித்தேன் எனும் ஒற்றை
வார்த்தை சொல்லிவிடு,
காலம் தாழ்த்திய என் வாழ்த்துக்கள்
இதுவோ உனக்கான எனது
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எழுத்தோலை!

கடலெனும் வாழ்வில்!

Mar`16

இதழ்களை நெருங்கியத் தருணம்,
நீ உதறிய பொழுதில் அறிந்தேன்,
ஒட்டாது இந்த இதழ்கள்,
என்றும்,

ஓடாத நதிகள் போலே,
சேராத கடலெனும் வாழ்வில்.


எழுத்தோலை!

எழிலி!

Mar`16

எழிலி திரண்டு,
இடைவிடா உருண்டு, 
என்னிடம் சேர்த்ததே 
பொழியும் மழையை - அதுவும் 
என் சிரமதனை நனைக்க,
பரவும் குளிர் ஊடே 
யாரோ புகுத்தியது - உன்
உருவை, இறந்தேன்
அக்கணமே நானும்,
உன் திருவாய் ஒரு
மொழி சொல்லிடை என்
செவி புக மீண்டும்
பிழைத்தேன் உயிர் - அதுவும்,
உன்னால் உந்தன் பின்னால்
நிழலாய் தொடர்கிறதே,
இருளினுள் நுழையாதே கண்ணே,
வாழ்ந்திட ஆசை
கொல்லாதே, வேண்டும்
இவ்வாழ்வும், அதுவும் உன்னோடு
மட்டும் இருந்திட வேண்டுமே,

வெண்ணிலவே என் பெண்ணிலவே.

( எழிலி = மேகம் )

எழுத்தோலை!

வெண்ணிற தேனோ?

Mar`15

சிற்பமாய் உன் வடிவை 
செதுக்கிய உளியாய் என் இதழ்கள்,
கொங்கைகள் இரண்டின் மீதே 
ஓய்வினை எடுக்கிறது,
சுற்றி, சுற்றி செதுக்கியதில்
தாகம் அதுவும் எடுத்திடுமோ,
அதனால் அதுவும், அங்கயே பருகிடுமோ,

நீரோ அதுவும்,
வெண்ணிற தேனோ?

எழுத்தோலை!

அவளும்!

Mar`15

இருட்டினில் உருட்டிடும் 
குருட்டுப் பூனையாய் 
நானும்,
விழுந்து நெளிந்து 
சத்தமாய் சினுங்கிடும்,
சிற்பமாய்,

அவளும்.

பிடிக்கவில்லை!

Mar`15

எதையும் எழுதப் பிடிக்கவில்லை,
எழுதியதெல்லாம் கேட்ப்பாரற்று
கிடப்பதால் - என்
எழுத்துக்கள் எல்லாம் ஏளனமாய்ப்
போனதால்,
ஏழெட்டு கண்களைத்தவிர
எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனதால்,
இன்றோடு நிறுத்துகிறேன்,
எழுதுவதை நானும், இனிமேலும்.


எழுத்தோலை!

சக்கரை ஸ்வப்பன வருகை!

Mar`15

சக்கரை ஸ்வப்பன வருகையில்,
நித்திரை, சித்திரை நிலவொளியில்,
வேப்பில்லை இலை நிறைந்த மரத்தடியில்,
வாடைக்காற்று சேர்த்ததம்மா,
வாங்க மறந்த தென்றலையும்,
வருடி சென்ற நேரத்திலே,
எனை மறந்துப் போவேனோ,
உறங்க கண்கள் மூடியே,
மூன்றாம் உலகை அடைவேனோ.

எழுத்தோலை!

கடுதாசி!

Mar`15

ராசாத்தி என்னடி செஞ்சிபுட்ட
ராக்கோழி போலென்ன ஆக்கிபுட்ட,
ராப்பகல ஒன்னெனவா சுத்துறேனே,
கண்ணுமுழி ரெண்டுக்குள்ள நிக்கிரப்புள்ள,
கொண்ட சேவ கூவிடிச்சி,
மாடு தண்ணி கேட்டுடிச்சி,
சின்னப்பொண்ணு ஒன்ன மட்டும் காங்கலையே,
கடுதாசி கூட வந்து சேரலேயே.


எழுத்தோலை!

சத்தம்ப்போடுதே!

Mar`15

ஒத்த கல்லு சிவப்பு நிற மூக்குத்தியில் 
என் மொத்த உசுரு மாட்டிகிச்சி மாங்குயிலே,
திறுகாதே, முறுக்காதே தலைசுத்துதே,
முழுசாக நுலஞ்சேனே உன் மூச்சாகவே.

மனசெல்லாம், மனசெல்லாம் மாங்குயிலே,
ஒரு தினுசாக, தினுசாக சத்தம்ப்போடுதே.

எழுத்தோலை!

பாச மொழிக்காக !

Mar`15

எலிகள் இல்லாத நிலத்தினில்
வாழ்ந்திடும் பூனையாக,
நீ இல்லாத இந்த யுகத்தினில் - நான்,
பசிக்காக அழவில்லை,
உன் பாச மொழிக்காக மட்டுமே.

எழுத்தோலை!

மின்னியும், மின்னாமலும்!

Mar`15

நிலவில்லாத நீல வானில்
நிம்மதியுடன் நட்சத்திரங்கள்,
என்னைப்போல் ஆங்காங்கே,
மின்னியும், மின்னாமலும்.


எழுத்தோலை!

தூரா ஊரில் மாரி பொழிந்து!

Mar`15

தூரா ஊரில் மாரி பொழிந்து,
வாரி இறைக்கிறதே வசந்தத்தை இன்று.

ஏங்கிய நெஞ்சத்தில் விழுந்த 
அவளப் போலே,

எத்தனை குளிர்ச்சி,
மொத்தமாய் மகிழ்ச்சி,

தூரா ஊரில் மாரி பொழிந்து,
வாரி இறைக்கின்றதே வசந்தத்தை இன்று.


எழுத்தோலை!

இவ்வுலகே நீ!

Mar`15

விழியோர நீர்க்கசிவில் 
நிறைகிறது என் இரவுகள்,
உறவுகள் இருந்தும் 
உன்னிடமிருந்து பதில் வாரா,

என் தவிப்புகள் இன்னுமா புரியவில்லை,
என் எழுத்துக்களை படித்துமா தெரியவில்லை,
இவ்வளவு திமிர் கூடாதடி,
இவ்வுலகே நீ என்றிருப்பவனிடம்.

எழுத்தோலை!

நினைவில் தங்க!

Mar`13

கார்மாலை சனியில்,
காந்தள் முழம் சூடி, 
கள்ளாவி கமழ எனை 
கவ்வாமல் கவ்வும் ஐயள், 
ஏழ்ப்பிறப்பில் இப்பிறப்பை 
எப்பிறப்பிலும் என் நினைவில் தங்க, 

தங்கமெனும் மேனிக்
கொடியிடை யதனில் எல்லாம்,
எனை யணிந்து திரிந்து
பூசா எனை பூசியதில்,
ஒட்டிய வாடை எனை
இன்னும் ஏசாமல் ஏசும்
அழகும்,
உன் உடல் வடிவும்,

சொல்லாத கவிதையதை
சொல்லிட வைக்கும் நொடியும்,
கண்கள் கவர்ச்சியை ஒதுக்கி,
உன் உணர்ச்சியை திருடி,
புணர்ச்சியை முடித்த
சாரையாய் முறுக்கி, திறுகி
கிடப்பில் கிடக்கும் உன்
நினைவை,
ஏழ்ப் பிறப்பிலும் எனை
நினைக்க வைக்குமே.


(கார்மாலை சனியில் = இருண்ட சனிக்கிழமை மாலை நேரம்
காந்தள் = ஒரு வகை அரிய மலர்
கள்ளாவி = தேனின் மனம்
ஐயள் = அழகான இளம்ப் பெண்
வாடை = வாசனை
சாரை = ஒரு வகை பாம்பு)


எழுத்தோலை!

பிரித்திடாமல், நிறுத்திடாமல் !

Mar`12

(கவிதையை கவிதையாய், கலையாய் பார்ப்பவருக்கும், ரசிப்பவருக்கு மட்டும், 
முற்றிலும் கற்பனையே)
------------------------------------------------

கட்டிலை நெருங்க, நெருங்க 
உடைத்தெறிந்த கட்டுப்பாடுகள் 
காற்றில் மிதந்த வாசமாய் 
மெல்ல, மெல்ல என்னை 
சொல்ல, சொல்ல வைக்குதே 
அன்பே - நீயும் என்ன காமனின்
மாமனா, பக்கத்தில் வந்தாலே
பத்திக்குதே - என் நெஞ்சமே,

பாவாடை நாடாவும்,
ரவிக்கையின் கொக்கியும்,
தானாய் தாழ்த்திறக்கிறதே
எனை கேட்காமலே,
வேண்டாம் வேடிக்கைப் போதும்,
மெல்லியதாய் தொடங்கிடு - மேனி
மீது ஊரும் எறும்பாய்
உதட்டால் நீயும்,

சுடுகிறதே உள்ளும், புறமும்
சுற்றுவதை நிறுத்து - நீர்த்தேக்க
தொட்டி நீர்ப்போலே தேங்கிக்கிடந்த
ஆசையெல்லாம் மடைத்திர
மெல்ல - முத்தமிடு,
கண்களில் தொடங்கு,
நெற்றியில் மெல்லமாய்,
கன்னத்தில் அழுத்தமாய்,
இதழ்களில் வெள்ளமாய்,

பிரித்திடாமல், நிறுத்திடாமல்
குடித்திடு,
நாவில் ஊறிய நீர் முழுதும்,
எடுக்காதே வேண்டும் இன்னும்
வேண்டும் - முடிக்காதே நானே
சொன்னாலும் - குத்திய மீசை
வலித்தாலும் பிடித்திருக்கிறது,
அன்பே,
தேனினை என் நா கண்டதில்லை
இதுநாள் வரை - இதுவே
அதுவோ தேனோ - உன்னிதழ்
அது தரும் சுவையும்.


எழுத்தோலை!

என் தாயகமும் தமிழ் ஈழமோ?

Mar`11

என்னவோ, என்னவோ இன்னும் 
என் மனம் ஈழத்தையே சுற்றி,
தீயாய் பற்றி எரிகிறது - எரிக் குண்டுகள் 
விழுந்து சிதைத்த கணங்களை
மீண்டும், மீண்டும் நினைப்படுத்தியே,
முன்ஜென்ம தொடர்ச்சியாய்,

என் தாயகமும் தமிழ் ஈழமோ?

எழுத்தோலை!

ஈழ விடுதலை வெறும் கனவா?

Mar`11

ஆற்றுப் பசிக்கு அடித்து 
இழுத்துக்கொண்டு போன 
சோற்றுக்கற்றாழை செடியாய் 
திக்குத்தெரியா ஊர்க்கரையில்
ஒதுங்கி நிற்கிறேன் 
ஓர் ஓரமாய்,
உறைவிடம், உறவினர்கள் மடிய
கணவன், பிள்ளைகளை இழந்து,

உண்மையில் நான்,
விதவையா, அனாதையா ?
ஊமையாய் போன பொம்மையாய்,
வன்னி மண்ணில் பெண்மையை இழந்து,
எஞ்சிய உயிரை வெற்றுடலுடன்
ஒட்டவைத்து கண்ணீரில் தத்தளிக்கும்

"ஈழத்து தேசத்து தமிழ்ப் பெண் நான்"

குண்டு சத்தம் என்றும்
கேட்டகாத உனக்கும்,
சிதறி தெறித்து - தேடிப்
பிடித்த உடல்களும்,
பெண்னென்றும் பாராமல்
ஆவலைப் பெண்கள் - எங்களின்
துணிகளை கிழித்து,
நாய்களைப் போல்
நாலைந்து சிங்கள ஓநாய்கள்
சிதைத்த கர்ப்பை,
அறுத்த மார்பகங்களை,
கண்டும், கேட்டும் இன்னும்
எப்படி உன் மனம் இறங்கவில்லை,
இரக்கமில்லாதவன் தமிழன் இல்லை,
நீயும் தமிழனா?

என்குரல் கேட்டும், கேட்காதுப்போல்
வேடிக்கைப் பார்க்கும் உலக மக்களில்
நீயும், உன் நாடும் அதன் தலைவர்களும்
ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை,

நன்றி தமிழா,
தன்னலம் கருதும் தலைவா,
அரக்கனின் அடிமை இந்தியா,
ஈழ விடுதலை வெறும் கனவா ???

நன்றி, நன்றி, நன்றி உலக மக்கள்,
அனைவருக்கும் நன்றி.


எழுத்தோலை!

அச்சமில்லை அச்சமில்லை!

Mar`10

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே,
உச்சி மீது வான் இடிந்து 
வீழுகின்ற போதிலும், 
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்பது இல்லையே

என்றவன் பாரதி
இன்றவன் இல்லையே,
அதற்குதான் தயக்கமோ,
எதற்குதான் உன் மனம்
செவியதை சாய்க்குமோ?
பாவாடை கிழித்துப்
பாதித் தெரிய பாட்டுப் பாடி
ஆடினால்,

பல் இளித்து பாராட்டுவாய்,
பலப் பேரிடம் சொல்லுவாய்,
அடித்துப் பிடித்து நுழைய முனைந்து
முன் வரிசையிலேனும் அமர்ந்து
முதல்நாளே பார்த்திடுவாய்,
அதுவே,

உனக்காய், உன் இனத்திற்காய்,
ஒட்டுமொத்த தமிழின சமூகத்திற்காய்,
உயிரையும் துச்சமென தூர எறிந்து
உண்ணா, உறங்கா, உரக்க
கூவி அழைத்திடும் பிரிட்டோவின்
குரலுக்கு மட்டும் குரல்க்கொடுக்க,
கூட்டத்தில் இணைந்து ஆதரிக்க
கூச்சமாய், வீட்டில் அடைந்து
அச்சாசோ என்று, அனுதாபம்
சேர்க்கிறாயோ ?

போதும், போதும், போதும்
மூன்று நாள் முடிந்துவிட்டது,
உண்ணாதவர் முகம், உடல் எல்லாம்
சோர்வை சேர்த்துக்கொண்டது,
ஒன்று சேர், அணித்திரல்,
ஒட்டுமொத்த உலகை உலுக்க,
ஓடிவா மௌன யுத்த செய்ய,

மீண்டும், மீண்டும் சொல்,

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே,
உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே,

கேட்டதுக் கிடைக்கும் வரை
சொல்லிக்கொண்டே இரு,
கூட்டத்தில் இணைந்தே இரு,
மத்தியில் சுத்தியல் அடித்தார்ப்போல்
நம்க் குரல் இறங்கும் வரை.


எழுத்தோலை!

புறப்படு புடைசூழ!

Mar`09

புறப்படு புடைசூழ, அழைத்திடு நண்பர்களை கூட 
தமிழ் நமது மொழி, மடிந்தது நமது இனம்,
ஊமையென நீயும் இருந்ததுப் போதும், 
உடைமைகள் சேர்த்து, காத்ததுப் போதும், 
இனியேனும் ஒற்றுமைக்கொள் தமிழா 
உறவைக் காத்திட, உரிமை கேட்டிட 
ஒன்றுக்கூடிய நண்பர்களுடன் கரம்க்கோர்த்திட
உண்ணாதிருக்கும் அவர்களுக்கு நம்பிக்கை கூட்டிட,

புறப்படு புடைசூழ, அழைத்திடு நண்பர்களை கூட
தமிழ் நமது மொழி, மடிந்தது நமது இனம்
ஊமையென நீயும் இருந்ததுப் போதும்,
இனியேனும் தயங்காமல் துணிந்திடு தமிழா
எதிரிகளை கூட மன்னித்து விடலாம்,
இன துரோகிகளை மன்னித்தால் தகுமோ?
தூங்கியதெல்லாம் போதும் தமிழா
இனியேனும் விழித்துக்கொள்,

புறப்படு புடைசூழ, அழைத்திடு நண்பர்களை கூட
தமிழ் நமது மொழி, மடிந்தது நமது இனம்,
கட்சிகள் சார்ந்திடா, கரைகள் படிந்திடா
மாணாக்கர்கள் அவர்களுக்கு,
ஆதரவு தந்திட, ஆரோக்கியம் கூட்டிட,

புறப்படு புடைசூழ, அழைத்திடு நண்பர்களை கூட
தமிழ் நமது மொழி, மடிந்தது நமது இனம்.


எழுத்தோலை!

இரக்கம் கொள்!

Mar`05

இரக்கம் கொள் விழியே 
இரக்கம் கொள்,
உறக்கம் கொள்ள வேண்டும், 
நானும் உறங்கிப்போக வேண்டும், 
நாளை,
பிறக்கும் இனியதொரு நாளில் 
அவளைப் பார்க்க வேண்டும்,
அவளுக்காய் ஒரு கவிதை எழுதிடவேண்டும்,
இரக்கம் கொள் விழியே 
இரக்கம் கொள்,
உறக்கம் கொள்ள வேண்டும்
நானும் உறங்கிப்போக வேண்டும்.

எழுத்தோலை!

ஒரே மயக்கமே!

Mar`05

போதுமே, போதுமே 
இந்த ஒரு ஜென்மம் போதுமே, 
ஏழெட்டு ஜென்மம் எனக்கும் 
வேண்டவே வேண்டாம் வேண்டாமே, 
கண்கள் கவிதைப் பாடுவதும்,
இதயம் பார்வை தேடுவதும்,
ஓவியம் நடனம் ஆடுவதைப்போல், 
எனக்குள் ஒரே மயக்கமே, 
எனக்குள் ஒரே மயக்கமே.

எழுத்தோலை!

தந்திரம் செய்யவும் பழகிக்கொள்!

Mar`05

வரையாடு கூட்டம் கண்டு 
பதுங்கி நிற்குமாம் சிங்கம் ஒன்று, 
பயந்தோ இல்லை அதுவும், 
கூட்டத்தை வெறுக்கும் ஒன்றும் 
தனித்து நடக்குமே என்று, 
தவமிருந்து காத்து, 
தாவிச்சென்று கவ்வவே,

தந்திரம் செய்யவும் பழகிக்கொள்,
இல்லையேல் தரித்திரம் என்பாரே பலரும்.

எழுத்தோலை!

பொன்விழா இரவோ?

Mar`05

பத்திரப்பதிவு செய்ததைப்போல் 
முத்திரைப் பதித்த உன்னிதழை, 
நித்திரை மீண்டும் கேட்கிறது
சத்தமாய் வேண்டுமாம் இன்னொருமுறை,

உத்தரவு ஒன்று இடு கன்னல், 
சுற்றளவு அளந்திட என் இதழால், 
கற்றதை எல்லாம் தொடங்கிட உன்னால் 
மார்கழியும், சித்திரையாய் மாறிடுமே தன்னால்,

இத்தகையான,
முன் விளையாட்டு சேட்டைகள்,
முகம் மறைக்கும் வெட்கங்கள்,
முதல் இரவின் தயக்கங்கள் எல்லாம்
மறந்திட்ட இது - நமக்கு
பொன்விழா இரவோ?

எழுத்தோலை!

கொடுமை!

Mar`05

உணர்ச்சிவசப் பேச்சில்,
புரட்சி வசன பேச்சில், 
பொழுது, பிழைப்பில்லா பேச்சில், 
ஓர் உயிரை குடித்த தலைவா 
லட்ச உயிர் மிச்சத்திற்க்காய்
ஒவ்வொன்றாய் சேர்க்குறீரோ, 
உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு 
வேடிக்கை காண்குறீரோ,

அரசியல் நீங்கள் சமைப்பதற்கு 
அப்பாவிகளை தீ மூட்டுகுறீரோ ?

கொடுமை!

எழுத்தோலை!

காணலையே!

Mar`05

கவிதைகள் தந்த கார்மேகம் 
ஏனோ,
இன்று களைந்து ஓடியதே, 
என் சோகம் சுமக்கும் வானம் 
தானே கண்ணீர் பொழிகிறதே,
மழை என்றனர் கண்டவர், 
என் மன அலை விசும்பல் 
அவை என்பதை புரியாமல்

காகிதமும் நனைந்ததே,
கவிதைகள் கரைந்ததே,
அவளை இன்னும்
காணலையே.

எழுத்தோலை!

என்னைப்போல் எத்தனைப்பேர்!

Mar`05

குறுஞ்செய்தி உலகத்தில் 
நுழைந்த மறுநாளே 
இளங்குமரி ஒருத்தி 
HI என்று சொல்வாளோ 
பேய் ஒன்று அரைந்ததைப்போல் 
FREEZE ஆகி நின்றேனே - முழுதாய் 
SEIZE ஆகிப் போவதற்குள் 
BYE சொல்லி மறைந்தாளே,

ஏமாந்த கொக்காய் நானும்,
என்னைப்போல் எத்தனைப்பேர்,
எங்கெங்கு இருக்காரோ?

எழுத்தோலை!

கூன், குருடு, செவிடாய் !

Mar`05

ஒருமையில் இருக்கும் எனக்குள் 
ஒருவரும் நுழைந்திட முடியாது 
என்னவளை துரத்திய ஓட்டத்தில் 
தொலைந்த என்னிதயம் ஒடிந்து 
உடைந்து மீண்டும் ஒட்டவைத்த 
மண்சட்டியாய் நொண்டியடிப்பதால் 
காதல் விபத்தில் பிழைத்த நானும் 
கூன், குருடு, செவிடாய் ஆனதால்.

எழுத்தோலை!

அடம்பிடிக்கிறது!

Mar`05

அவளுக்கான ஒரு அழகான கவிதையை 
எழுதிட முனைகிறேன்,
அவளைப்போல் வார்த்தைகளும் 
அடம்பிடிக்கிறது.

எழுத்தோலை!

கல்லறை பக்கம்!

Mar`05

நிலவில்லா இரவும்,
நீயில்லா முக(நூல்)மும்,
நட்சத்திரங்கள் நிறைந்தும்,
நடப்புக்கள் குவிந்தும்,
இயற்கையில் பொய்யை கூட்டியும்,
இனிமையில் மாயை காட்டியும்,
இயல்பை தொலைக்க செய்தே - என்னை 
கல்லறை பக்கம் சேர்க்கிறதே.

எழுத்தோலை!

அந்த தேனிலவை!

Mar`05

கொஞ்சும் கண்களை மிஞ்சும் அழகு 
அது தேனிலவு, அவள் இதழ் சுளிவு 
அது தேனிலவு, அவள் இதழ் சுளிவு 
வேண்டும் இரண்டும் பிடித்து 
கடித்துப் பார்த்திட வேண்டும் 
கொஞ்சும் கண்களை மிஞ்சும் அழகை 
அந்த தேனிலவை.

எழுத்தோலை!

என்னவாகுமோ!

Mar`05

முழுமதி இரவில் 
நீயின்றி நடந்தேன் பெண்ணே 
நிஜமாய் என்னுடன் நீயும் 
வருவதாய் எண்ணி,

அழகாய் உலவிய நிலவும் 
முகில்களின் ஊடே மெதுவாய் 
நுழைந்து, மறைந்து பார்க்கிறதே 
வெட்கத்தில் சுற்றத்தை மறந்து,

நிஜமாய் உன்னைக் கண்டால்
என்னவாகுமோ அவ் வெண்ணிலவும்?

எழுத்தோலை!