பிறப்பால் உனையரிந்தேன்,
பிறர் சொல்லில் உன் புகழறிந்தேன் ,
உன் சிறப்பனைதும் படித்து
வியந்தேன்,
நீ பேசிட்டபொழுதில்
உன் இனிமையரிந்தேன்,
இத்தனையும் தெரிந்தப்பின்னர்,
நீயின்றி நான் எப்படி?
நீயே சொல்,
என்னுயிர் தமிழே.
எழுத்தோலை!
Wednesday, February 20
உன் பார்வைக்கொண்டே!
நின்றுக்கொண்டு சிரிக்கும் நிலவாக - நீ
நிலைக்கண்ணாடி முன் சிரிக்கிறாய்,
ரசிக்கிறேன், படம் பிடுக்கிறேன் - என்
இமைகள் உள் இருக்கும் உன்
பார்வைக்கொண்டே உன்னையே.
எழுத்தோலை!
நிலைக்கண்ணாடி முன் சிரிக்கிறாய்,
ரசிக்கிறேன், படம் பிடுக்கிறேன் - என்
இமைகள் உள் இருக்கும் உன்
பார்வைக்கொண்டே உன்னையே.
எழுத்தோலை!
பாறை!
மழைக்கு எப்படி தெரியும்,
எனது இதய சுவர்கள்
பாறைகள் என்று,
கழுவிட நனைத்தும்,
அழியாத உன் நினைவுகளை
இதய அறைகள் நான்கில்,
ஒளித்து வைத்திருப்பதை.
எழுத்தோலை!
எனது இதய சுவர்கள்
பாறைகள் என்று,
கழுவிட நனைத்தும்,
அழியாத உன் நினைவுகளை
இதய அறைகள் நான்கில்,
ஒளித்து வைத்திருப்பதை.
எழுத்தோலை!
இதுவும் அதுவும், எதுவும் எல்லாம்!
இன்னலும் செந்தணலாய்
மெல்ல மென்னும், எனை தின்னும்,
இம்சையும் அகிம்சையாய்,
உன்னால் உண்ணாவிரதம் இருக்கும்
தொடந்துவிடு நிறுத்தாமல்,
இதுவும் அதுவும், எதுவும் எல்லாம்,
பிடித்திருக்கிறது உன்னால்.
எழுத்தோலை!
மெல்ல மென்னும், எனை தின்னும்,
இம்சையும் அகிம்சையாய்,
உன்னால் உண்ணாவிரதம் இருக்கும்
தொடந்துவிடு நிறுத்தாமல்,
இதுவும் அதுவும், எதுவும் எல்லாம்,
பிடித்திருக்கிறது உன்னால்.
எழுத்தோலை!
என் எழுத்தாணி!
எழுத்துக்கள் எல்லாம்
மறந்ததுப் போலே,
விரல்கள் பிடியில்
குழம்பி தவிக்கிறது - என்
எழுத்தாணி,
அப்படியே, என் இதயமும்
அவள் நினைவில்.
எழுத்தோலை!
மறந்ததுப் போலே,
விரல்கள் பிடியில்
குழம்பி தவிக்கிறது - என்
எழுத்தாணி,
அப்படியே, என் இதயமும்
அவள் நினைவில்.
எழுத்தோலை!
ஒரு சொல்!
நிழல்க் கூட
ராப்பொழுதில் ஓய்வெடுக்கும்,
நான் நிழல் அல்ல,
கடிகார முள்,
ஆயுள் உள்ளவரை
நொடிக்கொரு முறை துடித்து,
மணிக்கொரு முறை
தவித்துக்கொண்டிருகிறேன்,
பேசாமடந்தையும் பேசிடும்,
நீ மட்டும் ஏனோ?
ஒரு சொல் - அதுவுமின்று,
உதிர்த்திடவில்லையே.
எழுத்தோலை!
ராப்பொழுதில் ஓய்வெடுக்கும்,
நான் நிழல் அல்ல,
கடிகார முள்,
ஆயுள் உள்ளவரை
நொடிக்கொரு முறை துடித்து,
மணிக்கொரு முறை
தவித்துக்கொண்டிருகிறேன்,
பேசாமடந்தையும் பேசிடும்,
நீ மட்டும் ஏனோ?
ஒரு சொல் - அதுவுமின்று,
உதிர்த்திடவில்லையே.
எழுத்தோலை!
குறள் 71
வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அன்புடைமை.
குறள் 71:
------------
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"
உரை:
--------
கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்,
பூட்டிட இங்கு வழியுமேது,
சொல்லாமல் கொட்டும்,
பேசாமல் பேசும் - உன்
துன்பதனை காணுமிடத்தில்
தவழ்ந்தோடும் என்
கண்ணீரும்,
கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்.
எழுத்தோலை!
-----------------------------------------------
குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அன்புடைமை.
குறள் 71:
------------
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"
உரை:
--------
கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்,
பூட்டிட இங்கு வழியுமேது,
சொல்லாமல் கொட்டும்,
பேசாமல் பேசும் - உன்
துன்பதனை காணுமிடத்தில்
தவழ்ந்தோடும் என்
கண்ணீரும்,
கதவுகள் இல்லையடி என்
அன்பிற்கும்.
எழுத்தோலை!
Sunday, February 17
குறள் 833
வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: பொருட்பால் .
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பேதைமை.
குறள் 833:
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்."
உரை:
நகம் கடித்து,
கால் விரல் நிலத்தை கிழித்து,
நாணுவர் பெண்டீர் - தன்
பினையைக்கண்ட தருணம்,
அவளன்றோ பெண்ணும்,
ஆங்கே தவிர்க்கும் அவளும்,
வேண்டுவன எல்லாம்
வேண்டும் எனும் ஆசை
கொண்டும் - தன்னிடத்தே
தானே வரவேண்டும் என்றே
தேடலை விடுத்து - வேண்டுவர்
எவரும்,
துணையாய்,
மனையாள் ஒருத்தி
காதல் சீக்குண்டு,
மணாளன் முகம் காணா,
மயக்கமும் கொண்டிருப்பவளை
மறந்து - மாசில்லா
காதலை கள்ளி ஒருத்தியிடம்
கட்டவிழ்க்கும் அவரும்,
தேனினும் இனிதாம்,
மலரினும் அழகாம்,
பொன்னினும் அரிதாம்,
எதையும் பேணிடா
மறந்தே - காக்காதிருப்பவர்
அனைவரும்,
ஓரரிவில் குறைந்த
விலங்கின் குணத்தை ஒத்தே
அறிவிலிகளாய் வலம்
வருவாரோ.
எழுத்தோலை!
-----------------------------------------------
குறள் பால்: பொருட்பால் .
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்: பேதைமை.
குறள் 833:
"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்."
உரை:
நகம் கடித்து,
கால் விரல் நிலத்தை கிழித்து,
நாணுவர் பெண்டீர் - தன்
பினையைக்கண்ட தருணம்,
அவளன்றோ பெண்ணும்,
ஆங்கே தவிர்க்கும் அவளும்,
வேண்டுவன எல்லாம்
வேண்டும் எனும் ஆசை
கொண்டும் - தன்னிடத்தே
தானே வரவேண்டும் என்றே
தேடலை விடுத்து - வேண்டுவர்
எவரும்,
துணையாய்,
மனையாள் ஒருத்தி
காதல் சீக்குண்டு,
மணாளன் முகம் காணா,
மயக்கமும் கொண்டிருப்பவளை
மறந்து - மாசில்லா
காதலை கள்ளி ஒருத்தியிடம்
கட்டவிழ்க்கும் அவரும்,
தேனினும் இனிதாம்,
மலரினும் அழகாம்,
பொன்னினும் அரிதாம்,
எதையும் பேணிடா
மறந்தே - காக்காதிருப்பவர்
அனைவரும்,
ஓரரிவில் குறைந்த
விலங்கின் குணத்தை ஒத்தே
அறிவிலிகளாய் வலம்
வருவாரோ.
எழுத்தோலை!
குறள் 1221
வள்ளுவம் காப்போம், வாருங்கள்!
-----------------------------------------------
குறள் பால்: காமத்துப்பால்.
குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.
குறள் 1221:
"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."
உரை:
சோலையில் கூடிய
வண்டுகள் போலே
பாடிக் கூடியிருந்தோம்,
நீயும் வந்தாய்,
ஒளியையும் தின்றாய்,
உறைவிடம் அடைத்தே
எங்களைப் பிரித்து
உயிரையும் குடித்தாயே,
வாழியவே நீ வாழியவே,
அந்தியே.
எழுத்தோலை!
-----------------------------------------------
குறள் பால்: காமத்துப்பால்.
குறள் இயல்: கற்பியல்.
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.
குறள் 1221:
"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."
உரை:
சோலையில் கூடிய
வண்டுகள் போலே
பாடிக் கூடியிருந்தோம்,
நீயும் வந்தாய்,
ஒளியையும் தின்றாய்,
உறைவிடம் அடைத்தே
எங்களைப் பிரித்து
உயிரையும் குடித்தாயே,
வாழியவே நீ வாழியவே,
அந்தியே.
எழுத்தோலை!
குறள்: 1213
ஐயன், திருவள்ளுவரின், திருக்குறளுக்கு எனது உரை, கவிதை நடையில், (புது முயற்சி)
பொருள்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும், தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்.
"கனவுநிலையுரைத்தல், கற்பியல், காமத்துப்பால்"
குறள்: 1213
"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்"
-----------------------------------------------------
எனது உரை (புதுக் கவிதை வடிவில்)
------------------------------------------------------
நனவிழந்து நிற்கிறேன்,
நிழலிருந்து பெருகிய
உயிர் போலே - ஒருக்காலும்
நிற்காமல் தொடரும்
வளியாய் அவன் முகம்,
ஆழ்ந்த உள்ளம் விடுத்து
கானா உலகிலாவது என்னிடம்
வருவதால் - அங்கேனும்
அன்பை பொழிவதால்.
எழுத்தோலை!
பொருள்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும், தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்.
"கனவுநிலையுரைத்தல், கற்பியல், காமத்துப்பால்"
குறள்: 1213
"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்"
-----------------------------------------------------
எனது உரை (புதுக் கவிதை வடிவில்)
------------------------------------------------------
நனவிழந்து நிற்கிறேன்,
நிழலிருந்து பெருகிய
உயிர் போலே - ஒருக்காலும்
நிற்காமல் தொடரும்
வளியாய் அவன் முகம்,
ஆழ்ந்த உள்ளம் விடுத்து
கானா உலகிலாவது என்னிடம்
வருவதால் - அங்கேனும்
அன்பை பொழிவதால்.
எழுத்தோலை!
ராமனும் தேடிடும் சீதையே!
இறந்தப்பிணம் மீண்டும்
எழுந்ததுப்போல் - உனைக்
கண்டநாள் முதலாய் - உன்
மொழிக் கேட்டிடவே
ஏங்கி தவிக்கிறேன் - மின்னல்
கதிர்ப்போல இமைக்கும்
தருணமே காட்சி தருகிறாய்,
எக்கணம் ஆனாலும்
காக்கும் எனது ஐம்புலனும்,
அதுவரை,
என் மெய்யிறுக்கும்,
உயிரிருக்காது - எனவே
இக்கணமே எனை
ஆட்கொள்ளடி - கண்ணனும்
உரைத்த கீதையே - ராமனும்
தேடிடும் சீதையே.
எழுத்தோலை!
எழுந்ததுப்போல் - உனைக்
கண்டநாள் முதலாய் - உன்
மொழிக் கேட்டிடவே
ஏங்கி தவிக்கிறேன் - மின்னல்
கதிர்ப்போல இமைக்கும்
தருணமே காட்சி தருகிறாய்,
எக்கணம் ஆனாலும்
காக்கும் எனது ஐம்புலனும்,
அதுவரை,
என் மெய்யிறுக்கும்,
உயிரிருக்காது - எனவே
இக்கணமே எனை
ஆட்கொள்ளடி - கண்ணனும்
உரைத்த கீதையே - ராமனும்
தேடிடும் சீதையே.
எழுத்தோலை!
எனது பாக்கியம்!
நண்பகலில் எனக்கெதிரில்
வீதி உலா வந்திடவே,
நித்திரைலே மட்டும் வரும்
கனவோ,
என்பதுப்போல்,
ஊருணி மீனாய்,
கண்கள் உருட்டி
தொல்லாடி பழமையாய்,
குழியாடியாய் வளைந்தே,
குவியாடியாய் தொலைகிறேன்,
நிலைக்கண்ணாடி தேடி
நிஜமென்பதை
உணர்கிறேன்,
தேவர் உலகம்
இடம்பெயர்ந்து - நான் பிறந்த
இடத்தில் வந்ததுப்போல்,
ர, மே, ஊர் எனத்தொடங்கும்
மூவரும் ஒன்றாய், முழுதாய்
அவள்த்தானோ,
ரம்பையும்,
மேனகையும்,
ஊர்வசியையும்
யார்க்கண்டர் - நான்
கண்டேன் இன்றே,
அதுவே,
எனது பாக்கியம்.
எழுத்தோலை!
Saturday, February 16
இதுவும் கள்ளக்காதலே!
எத்திசையில் கோயிலோ
அத்திசையிலே வணங்குவர்,
நானோ - அவள்
திசையில்,
வானமாய் உயர்ந்து,
வனப்பாய் செழித்து,
அழகாய், கண்டிப்பாய் - அவள்
இருந்திட வேண்டும்,
நான் அறியேன் - ஆனால்,
அவள் ஆற்றல் அறிவேன்,
அவள் எழுத்துக்களை அறிவேன்
அதுப் போதுமே,
காணாமலே,
ஊர், பெயர் தெரியாமலே - அவள்
பேச கேட்காமலே - ஏனோ
மனக்கோட்டையும் கட்டிவிட்டேன்,
பேசாமலே அவள் போனாலும்,
தொடர்வதை நிறுத்தேன்,
என்றோ - அவள் பார்வை
என் மேல் படுமென்றும்,
அன்றே நான் பார்வை
பெற்றவன் ஆவேனே,
அவளுக்கு தெரியாமலே - ஏன்,
எனக்கும் தெரியாமலே - நான்
காதலிக்க,
தொடங்கிவிட்டேன்,
அவளுக்கு தெரியாமலே
காதலிப்பதால் - ஒருவகையில்,
இதுவும் கள்ளக்காதலே.
எழுத்தோலை!
அத்திசையிலே வணங்குவர்,
நானோ - அவள்
திசையில்,
வானமாய் உயர்ந்து,
வனப்பாய் செழித்து,
அழகாய், கண்டிப்பாய் - அவள்
இருந்திட வேண்டும்,
நான் அறியேன் - ஆனால்,
அவள் ஆற்றல் அறிவேன்,
அவள் எழுத்துக்களை அறிவேன்
அதுப் போதுமே,
காணாமலே,
ஊர், பெயர் தெரியாமலே - அவள்
பேச கேட்காமலே - ஏனோ
மனக்கோட்டையும் கட்டிவிட்டேன்,
பேசாமலே அவள் போனாலும்,
தொடர்வதை நிறுத்தேன்,
என்றோ - அவள் பார்வை
என் மேல் படுமென்றும்,
அன்றே நான் பார்வை
பெற்றவன் ஆவேனே,
அவளுக்கு தெரியாமலே - ஏன்,
எனக்கும் தெரியாமலே - நான்
காதலிக்க,
தொடங்கிவிட்டேன்,
அவளுக்கு தெரியாமலே
காதலிப்பதால் - ஒருவகையில்,
இதுவும் கள்ளக்காதலே.
எழுத்தோலை!
உருட்டி விளையாடி!
நிலவே,
விரைந்து வந்தெந்தன்
கண்களை பிடுங்கிப்போ,
இரவே,
நிறந்த உலகத்தில்
வாழ்ந்துவிட விழைகிறேன்,
உறங்க மறுக்கும் விழியும்
இனியும் எதற்க்கெனக்கு ,
உன்னிடம் தானே இருக்கிறாள்
சேர்த்திடு அவளிடம்,
உருட்டி விளையாடி
மகிழ்ந்திடுவாள்.
எழுத்தோலை!
விரைந்து வந்தெந்தன்
கண்களை பிடுங்கிப்போ,
இரவே,
நிறந்த உலகத்தில்
வாழ்ந்துவிட விழைகிறேன்,
உறங்க மறுக்கும் விழியும்
இனியும் எதற்க்கெனக்கு ,
உன்னிடம் தானே இருக்கிறாள்
சேர்த்திடு அவளிடம்,
உருட்டி விளையாடி
மகிழ்ந்திடுவாள்.
எழுத்தோலை!
முகம் கண்டேன்!
பனிவிழும் இரவில்
பூக்களைப் பறித்து,
புல்வெளியோரம்
வழித்தடம் அமைத்தேன்,
வேல்விழியால்
வருகையையொட்டி
வேடந்தாங்கல்
பறவைகளை அழைத்தேன்,
கிளிகளும், குயில்களும்
கூடடைந்துப் போனதால்
மயில்களை தட்டியெழுப்பி
ஆடிட சொல்லிட நினைத்தேன்,
அடங்கிடா ஆசைகள் இன்னும்
எத்தனையோ இருக்கையிலே,
அவள் முகம் கண்டேன்
அத்தனையும் மறந்தேனே.
எழுத்தோலை!
பூக்களைப் பறித்து,
புல்வெளியோரம்
வழித்தடம் அமைத்தேன்,
வேல்விழியால்
வருகையையொட்டி
வேடந்தாங்கல்
பறவைகளை அழைத்தேன்,
கிளிகளும், குயில்களும்
கூடடைந்துப் போனதால்
மயில்களை தட்டியெழுப்பி
ஆடிட சொல்லிட நினைத்தேன்,
அடங்கிடா ஆசைகள் இன்னும்
எத்தனையோ இருக்கையிலே,
அவள் முகம் கண்டேன்
அத்தனையும் மறந்தேனே.
எழுத்தோலை!
காதலால் கடவுளை காண்பீர்!
பொன் கணையாழி ஒன்றும்
தேவையில்லை,
சகுந்தலை கூந்தலின் - ஒற்றை
மயிர்க் போதுமே,
ஆழக்கடல் காதல் செய்யும்
துஷ்யந்தனும்,
அவன் துணையாள் அடையாளம்
காண.
ஆதலால் காதல் செய்வீர்,
காதலால் கடவுளை காண்பீர்.
எழுத்தோலை!
தேவையில்லை,
சகுந்தலை கூந்தலின் - ஒற்றை
மயிர்க் போதுமே,
ஆழக்கடல் காதல் செய்யும்
துஷ்யந்தனும்,
அவன் துணையாள் அடையாளம்
காண.
ஆதலால் காதல் செய்வீர்,
காதலால் கடவுளை காண்பீர்.
எழுத்தோலை!
இனிமை!
திருக்குறள் கூட
தோற்றுவிடும்,
அரைமணிநேரம் கழித்து,
அவள் பேசிய அந்த ஒற்றை
வார்த்தையில்.
இனிமை.
எழுத்தோலை!
தோற்றுவிடும்,
அரைமணிநேரம் கழித்து,
அவள் பேசிய அந்த ஒற்றை
வார்த்தையில்.
இனிமை.
எழுத்தோலை!
Friday, February 15
முனகல்!
முகம்புதைத்த தலையணையும்,
முனகுவது காதில் கேட்கிறதே,
"தானும் படுக்காமல்,
தள்ளியும் படுக்காமல்"
தனிமையில் அதுவும்,
கிடப்பதனாலோ,
என் சிரங்கும் அதன் சிரசில்
பற்றிக்கொண்டதாலோ,
தனிமை,
தலையணைக்கும் வலிக்குமோ?
எழுத்தோலை!
முனகுவது காதில் கேட்கிறதே,
"தானும் படுக்காமல்,
தள்ளியும் படுக்காமல்"
தனிமையில் அதுவும்,
கிடப்பதனாலோ,
என் சிரங்கும் அதன் சிரசில்
பற்றிக்கொண்டதாலோ,
தனிமை,
தலையணைக்கும் வலிக்குமோ?
எழுத்தோலை!
காலம் பதில் சொல்லும்!
செல்லரித்துப் போகும் சவக்குழி மேலே,
புல்முளைக்க மேயும் பசுவும், எருதும்,
படுத்துறங்கும் நாயும், நரியும்
ஊளையிட்டு உனையெலுப்பும்,
மண்ணாகி போன உன்னாலும்,
மனுசனாக மாற வழியேது,
பிணந்தின்னி கழுகாய் நீயும்,
பணம் தின்ன பெருகுமோ வயிறும்.
காலம் பதில் சொல்லும் - அதுவே
உனக்கான குழியும் தோண்டும், காத்திரு.
எழுத்தோலை!
புல்முளைக்க மேயும் பசுவும், எருதும்,
படுத்துறங்கும் நாயும், நரியும்
ஊளையிட்டு உனையெலுப்பும்,
மண்ணாகி போன உன்னாலும்,
மனுசனாக மாற வழியேது,
பிணந்தின்னி கழுகாய் நீயும்,
பணம் தின்ன பெருகுமோ வயிறும்.
காலம் பதில் சொல்லும் - அதுவே
உனக்கான குழியும் தோண்டும், காத்திரு.
எழுத்தோலை!
எப்படி நிற்குமே?
தொலைந்துப் போகத் தூண்டும்,
தொலைவிலிருந்தும் பேசும்,
காற்றின் திசையில் வீசும்,
அவள், சிரம் சேர்ந்த வாசம்,
வசியம் செய்யும் மையும்,
கண்களில் அப்பிய பொய்யும்,
எத்தனைமுறை கொய்யும்,
அவளே, என் உயிரும், மெய்யும்,
அவளும், அருகிலில்லையே,
தேடலும் எப்படி நிற்குமே?
எழுத்தோலை!
தொலைவிலிருந்தும் பேசும்,
காற்றின் திசையில் வீசும்,
அவள், சிரம் சேர்ந்த வாசம்,
வசியம் செய்யும் மையும்,
கண்களில் அப்பிய பொய்யும்,
எத்தனைமுறை கொய்யும்,
அவளே, என் உயிரும், மெய்யும்,
அவளும், அருகிலில்லையே,
தேடலும் எப்படி நிற்குமே?
எழுத்தோலை!
பச்சைகிளியிடமிருந்து!
மாலை மங்கும் வேளையில்,
ஓலை வாரா தவிக்கிறேன்,
வேப்பமரத்து உச்சியில் நிற்கும்,
பச்சைகிளியிடமிருந்து.
எழுத்தோலை!
ஓலை வாரா தவிக்கிறேன்,
வேப்பமரத்து உச்சியில் நிற்கும்,
பச்சைகிளியிடமிருந்து.
எழுத்தோலை!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா!
வாழ்த்திட வாருங்கள் நண்பர்களே,
என் அன்பு தமக்கையின் மணநாளில்
இன்று,
--------------------------------------------------------
அகண்டவிழி ஆண்டாள்க்
கொண்டைக்கிளி அலகின் சிவப்பில்,
அங்கங்கே தொட்டு வைத்து,
பொட்டும் வைத்து சிரித்திருக்கும்,
பூத்துநிற்கும் அன்றையப் புதுப்பெண்,
இன்றுடன்,
பத்துவருடமும் கடந்து,
பக்குவமும் நிறைந்து,
பாசமும் மிகுந்து,
கணக்கின்றி நேசிக்கும்,
இல்லற அரசன்,
அன்பான கணவன்,
இளவரசி த்ரிஷா,
இவர்களுக்கும் இடையே,
எங்களைப் போன்ற,
எத்தனை இதயங்கள்,
உங்களில் தஞ்சம்,
என்றுமே இதுப்போல்,
இன்பமும் பொங்கட்டும்,
வாழையடி வாழைப்போல்,
வாழ்வீரே நீங்கள்,
வாழ்த்திட வயதில்லை எனக்கும்,
வணங்குகிறேன் அன்னையாய் உன்னையே,
அன்பு தமக்கையே,
வாழியவே நீ பல்லாண்டு.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா!
அன்பு தமையன்,
எழுத்தோலை!
தவிப்பு!
தூக்கம் தொலைத்த இரவுகள்
ஒன்றும் புதிதில்லை எனக்கு,
இன்றும் அப்படியே,
கூடுதலாய் ஒருக் கூட்டல்,
வகுக்கத் தெரியாமல்,
பெருக்க நினைத்ததில்
உண்டான சிக்கலில்,
கழித்துக் கொண்டிருக்கிறேன்,
இந்த இரவை,
தூக்கம் தொலைத்த இரவுகள்
ஒன்றும் புதிதில்லை எனக்கு.
எழுத்தோலை!
ஒன்றும் புதிதில்லை எனக்கு,
இன்றும் அப்படியே,
கூடுதலாய் ஒருக் கூட்டல்,
வகுக்கத் தெரியாமல்,
பெருக்க நினைத்ததில்
உண்டான சிக்கலில்,
கழித்துக் கொண்டிருக்கிறேன்,
இந்த இரவை,
தூக்கம் தொலைத்த இரவுகள்
ஒன்றும் புதிதில்லை எனக்கு.
எழுத்தோலை!
தலைக் காவிரியோ!
சொல்லக் கேட்டு,
மெல்லத் தொடங்கி,
அன்னமாய் நடந்து,
ஆறாய்ப் பெருகி,
அருவியாய் விழுந்து,
பெருக்கோடி வரும்முன்,
ஊர்க்கோடி அதனில்,
அணைப்போட்டு தடுக்கிறேன்,
என் கண்கள் ஈரும்,
தலைக் காவிரியோ,
அதன் கண்ணீர் ஈரம்,
இன்னும் காயலையோ.
எழுத்தோலை!
மெல்லத் தொடங்கி,
அன்னமாய் நடந்து,
ஆறாய்ப் பெருகி,
அருவியாய் விழுந்து,
பெருக்கோடி வரும்முன்,
ஊர்க்கோடி அதனில்,
அணைப்போட்டு தடுக்கிறேன்,
என் கண்கள் ஈரும்,
தலைக் காவிரியோ,
அதன் கண்ணீர் ஈரம்,
இன்னும் காயலையோ.
எழுத்தோலை!
புரியாமலே!
மாற்று மருந்து இல்லா,
நேசமென்னும் நோயும்பட்டு,
வாக்கப்பட்டு வந்தவளா,
வருசமெல்லாம் ஆசைப்பட்டு,
பிறந்தவீட்டு சீதனமாய்,
பொத்திவச்சேன் நெஞ்சுக்குள்ளே,
கத்திக்கொண்டு கிழிச்சதுப்போல்,
கிழித்துவிட்டு,
வத்திகுச்சி கொளுத்திப்போட்டு போவாரோ,
புத்திக்கெட்டு நிக்குறேனே புரியாமலே.
எழுத்தோலை!
நேசமென்னும் நோயும்பட்டு,
வாக்கப்பட்டு வந்தவளா,
வருசமெல்லாம் ஆசைப்பட்டு,
பிறந்தவீட்டு சீதனமாய்,
பொத்திவச்சேன் நெஞ்சுக்குள்ளே,
கத்திக்கொண்டு கிழிச்சதுப்போல்,
கிழித்துவிட்டு,
வத்திகுச்சி கொளுத்திப்போட்டு போவாரோ,
புத்திக்கெட்டு நிக்குறேனே புரியாமலே.
எழுத்தோலை!
வாடிக்கை!
பரிவு இன்றி பிரிந்துபோவதே
நிலவின் வாடிக்கையாகிவிட்ட
புலரும் விடியல்கள் யாவும்,
புதிதாய் தெரிகிறது எனக்கு,
என்னிதயம் தொலைந்து நான்
தவிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும்,
பிரிவும், நிலவும், அவளும்,
ஒற்றுமையின் அடையாளங்களாய்.
எழுத்தோலை!
நிலவின் வாடிக்கையாகிவிட்ட
புலரும் விடியல்கள் யாவும்,
புதிதாய் தெரிகிறது எனக்கு,
என்னிதயம் தொலைந்து நான்
தவிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும்,
பிரிவும், நிலவும், அவளும்,
ஒற்றுமையின் அடையாளங்களாய்.
எழுத்தோலை!
வேதனை!
சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்
சோதனை என நினைத்துக்கொள்கிறேன்,
சொல்லாமலே போவதால்
வேதனை, தனலிலிட்ட புழுவாகிறேன்.
எழுத்தோலை!
Tuesday, February 12
எழுத்துக்கள், முளைத்திருக்கும்!
என்னை செதில்களாய் வெட்டி வீசுங்கள்,
வீசிய இடங்களில் எல்லாம் என் எழுத்துக்கள்,
முளைத்திருக்கும்.
- எழுத்தோலை!
வீசிய இடங்களில் எல்லாம் என் எழுத்துக்கள்,
முளைத்திருக்கும்.
- எழுத்தோலை!
சிந்தித்துப் பார்
கண்கள் சொன்ன வார்த்தைகளை
செவிகள் பேசியும் நம்பவில்லை,
சிரித்தவாறுப் பார்க்கிறது
சின்னஞ்சிறு இதழ்கள்,
நடக்கின்ற கைகளையும்,
எழுதுகின்ற கால்களையும்,
நடைமுறையில் சாத்தியமில்லா
சாத்தியங்கள் செய்பவன் தானே,
சரித்திரத்தில் இடம் பிடிக்கிறான்
ஏன் நம்மால் முடியவில்லை?
சிந்தித்துப் பார் உலகம்
புரியும்.
எழுத்தோலை!
பத்தோடு, பதினொன்றாய்!
கனத்த இதயத்துடன்
கடந்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு நாளையும்,
சமுகத்திற்காக ஒன்றும்
செய்ய இயலாத சாமான்யனாய்,
ஒற்றுமையற்ற நாட்டில்,
பத்தோடு, பதினொன்றாய் நானும்.
எழுத்தோலை!
கடந்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு நாளையும்,
சமுகத்திற்காக ஒன்றும்
செய்ய இயலாத சாமான்யனாய்,
ஒற்றுமையற்ற நாட்டில்,
பத்தோடு, பதினொன்றாய் நானும்.
எழுத்தோலை!
என்று தணியும் இந்த பெண்மை மோகம்?
அரக்கர்கள் உள்ளவரை
அநீதிகள் செழிக்கும்,
அக்கறை உள்ளவரும்
அஞ்சி ஒதுங்கும்,
சமக்கால வாழ்வியலில்
வாழ்ந்தும் வற்றிய
ஆறே நாமும் - யாருக்கும்
பயனற்றுக் கிடக்கிறோம்,
அன்று டெல்லியிலும்,
இன்று காரைக்காலிலும்,
நடுவில் எத்தனையோப்
பேர் எங்கெங்கோ,
அரக்கர்கள் மட்டும்,
அரச மரியாதையுடன்
இன்று வரை இயல்பாய்
களிப்பரோ,
என்று தணியும் இந்த
பெண்மை மோகம்?
அன்றே பிறக்கும்
உண்மை சுதந்திரம்.
எழுத்தோலை!
Monday, February 11
கீதைக்குள் விழுந்தவன்!
கீதைக்குள் விழுந்தவன் நான்,
சீதைக்கு இனி வேலையில்லை,
இத்தனை நாள் வாழ்க்கையில்
இன்றே பிறந்திட்டதாய் உணர்கிறேன்,
என்கிருந்தாள் என்பதெல்லாம்
யான் அறியான் பராபரமே,
முத்தெடுக்கும் முயற்சியில்,
மூழ்கி கண்டேத்தேன்,
முகம் கானா தினமும்,
அகம், புறம் எல்லாம்,
அனுதினம் கேட்கிறேன்,
கீதமாய், சங்கீதமாய்,
அவள்ப் பெயர் தமிழச்சி
என்பதை ராக, தாளம்,
பல்லவியில் - இன்னிசையாய்
கண்ணுறங்க கண்திரை
முன் தோன்றும்
கானொளியில்.
எழுத்தோலை!
சில்மிஷம் 3
சிறியதாய் பொய் சொல்லி,
சிமிட்டிடும் கண்கள் இரண்டும்,
குவிந்திடும் எந்தன் மார்பில்,
அவள் இதழ் பதிந்து,
தொடங்கிடுவாள்,
இரவின் சேட்டைகளை,
பதினோரு மணி காட்சியாய்,
இடைவேளை வரை,
இருவர் நெஞ்சமும்,
மூர்ச்சை யாகும்,
சிக்கலாய் கிடக்கும்,
நூர்ப்பாலை நூல்கள் போலே
நாங்களும் கிடப்போம்,
சூரியக்கதிர் ஜன்னல்
புகுந்து எங்கள் எதிர்
வரும் வரை.
எழுத்தோலை!
பேரழகி தமிழ்ப் பெண்ணே!
பேரழகி தமிழ்ப் பெண்ணிற்கு சமர்ப்பணம்.
----------------------------------------------------------
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே,
உன்னழகை சொல்லவும்
என்னிடமில்லை வார்த்தைகளே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே..
முன்ஜென்மம் நினைவுகளே
பின் ஜாம கனவுகளாய்,
நீ என்னோடு பேசியதெல்லாம்
இப்போது தெரிகிறதே,
எப்போதும் உன்னுடனே
இருந்திடவும் முடியலையே,
பேரழகி தமிழ்ப் பெண்ணே,
பிரிந்தேனே உனக்கு முன்னே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே,
உன்னழகை சொல்லவும்
என்னிடமில்லை வார்த்தைகளே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே..
தீண்டா மெழுகாய் உருகி - உந்தன்
பின் அலைந்த நாட்கள் எல்லாம்,
முகிலாய் கலைந்து,
முற்றிலும் மறைந்ததே,
நினைவிருக்கிறதே என்,
பேரழகி தமிழ்ப் பெண்ணே,
பிரிந்தேனே உனக்கு முன்னே,
சித்தரமாய் நின்றவளே,
தமிழ்ப் பேசும் பௌர்ணமியே,
உன்னழகை சொல்லவும்
என்னிடமில்லை வார்த்தைகளே..
எழுத்தோலை!
Sunday, February 10
எதிர்க்காலத்தை நினை!
இன்று என்பது
இமைக்கும் நொடியில்
மறைந்துவிடும்,
நாளை என்பதோ
நம் கைக்கோர்க்க
காத்திருக்கும்,
இன்றைக்கு இருப்பதைவிட
குன்றாத வளம் சேர்க்கும்
நாளைக்காக இன்றைக்கு,
விதைக்காமல் அறுவடைக்கு,
அருவாளோடு வந்தென்ன,
பயன்,
எதிர்க்காலத்தை நினை,
முயற்சியினை விதை -
இன்றே - நாளை,
உனதே.
எழுத்தோலை!
இமைக்கும் நொடியில்
மறைந்துவிடும்,
நாளை என்பதோ
நம் கைக்கோர்க்க
காத்திருக்கும்,
இன்றைக்கு இருப்பதைவிட
குன்றாத வளம் சேர்க்கும்
நாளைக்காக இன்றைக்கு,
விதைக்காமல் அறுவடைக்கு,
அருவாளோடு வந்தென்ன,
பயன்,
எதிர்க்காலத்தை நினை,
முயற்சியினை விதை -
இன்றே - நாளை,
உனதே.
எழுத்தோலை!
சில்மிஷம் 2
சட்டென்று நகர்ந்தவள்
சலனமின்றி திரும்புவாளோ,
சாந்தமாய் ஆனவளாய்,
அடியெடுத்து வைத்து,
என்னருகே வந்து,
காதோரம் ஏதோ சொல்வதாய்,
பின்கழுத்தில் கடித்துவிட்டு,
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு
அச்சார மிட்டவளாய்,
ஆச்சர்யமூட்டி,
புள்ளி மானாய்,
துள்ளி மறைவாளோ.
எழுத்தோலை!
சலனமின்றி திரும்புவாளோ,
சாந்தமாய் ஆனவளாய்,
அடியெடுத்து வைத்து,
என்னருகே வந்து,
காதோரம் ஏதோ சொல்வதாய்,
பின்கழுத்தில் கடித்துவிட்டு,
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு
அச்சார மிட்டவளாய்,
ஆச்சர்யமூட்டி,
புள்ளி மானாய்,
துள்ளி மறைவாளோ.
எழுத்தோலை!
சில்மிஷம் 1
ஒத்திகை காணும் நடிகையாய்,
ஒப்பனையற்ற அசைவில்
நளினமாய் நெளியும் என்னவள்
இடையினம் தொட்டு,
உடையினம் கானா
உயிரினம் ஆவோமா என்றேன்,
உருவி, மருவிய சர்ப்பமாய்
ஆகவும் ஆசையோ என்றே,
ஜாடையாய் திட்டி, திமிறி
நகர்வாளோ?
எழுத்தோலை!
ஒப்பனையற்ற அசைவில்
நளினமாய் நெளியும் என்னவள்
இடையினம் தொட்டு,
உடையினம் கானா
உயிரினம் ஆவோமா என்றேன்,
உருவி, மருவிய சர்ப்பமாய்
ஆகவும் ஆசையோ என்றே,
ஜாடையாய் திட்டி, திமிறி
நகர்வாளோ?
எழுத்தோலை!
நிழலும், நிஜமும்!
நிழலை இருளில் கரைக்க,
வெளிச்சம் துறந்து நடந்தேன்
நிழலும் கரைந்து,
நிஜமும் மறைந்தது,
நிழலும், நிஜமும்
நானாய் அங்கே,
நொடிப்பொழுதில்
வெளிச்சம் மறந்தோம்.
எழுத்தோலை!
வெளிச்சம் துறந்து நடந்தேன்
நிழலும் கரைந்து,
நிஜமும் மறைந்தது,
நிழலும், நிஜமும்
நானாய் அங்கே,
நொடிப்பொழுதில்
வெளிச்சம் மறந்தோம்.
எழுத்தோலை!
Saturday, February 9
மலர்தூவி மறைந்து ஓடும்!
விடியும் வரை அலைப்பேசி
விடுதலை கேட்டு அடம்பிடிக்கும்,
இறுக பிடித்த அரவணைப்பில்,
இரண்டுக்காதும் சிவந்து வீங்கும்,
இருட்டு, திருட்டு முத்தங்களாலே,
மூழ்கிப்போகும் பொத்தான்கள் யாவும்,
அந்த நாள் ஞாபகங்கள் - இப்படி,
அடிக்கடி வந்துப் போகும்,
காதலர் தின காலங்களில்,
மலர்தூவி மறைந்து ஓடும்.
எழுத்தோலை!
விடுதலை கேட்டு அடம்பிடிக்கும்,
இறுக பிடித்த அரவணைப்பில்,
இரண்டுக்காதும் சிவந்து வீங்கும்,
இருட்டு, திருட்டு முத்தங்களாலே,
மூழ்கிப்போகும் பொத்தான்கள் யாவும்,
அந்த நாள் ஞாபகங்கள் - இப்படி,
அடிக்கடி வந்துப் போகும்,
காதலர் தின காலங்களில்,
மலர்தூவி மறைந்து ஓடும்.
எழுத்தோலை!
காதலி, வேண்டு(ம்)தல்!
Feb 6
அந்தநாள் முதல்
இந்த நாள் வரை,
நான், நானே, நான் மட்டுமே,
இந்த வருடமும் அப்படியே,
இருந்திடக் கூடாதே,
தேவை ஒன்றே,
காதலியோ, மனைவியோ,
இருப்பது இன்னும்
எட்டு நாளே,
அதிசயம் நடந்தால்,
ஆச்சர்யம் வேண்டாம்,
அவள் யார் என்று அறிந்திட
ஆர்வமும் வேண்டாம்,
காத்திருப்பு நீங்க,
எல்லாம் நடந்தால்,
நூற்றியெட்டு தேங்காய்
முறைப்படி அவன் காலடியில்.
காதலி, வேண்டு(ம்)தல்.
எழுத்தோலை!
அந்தநாள் முதல்
இந்த நாள் வரை,
நான், நானே, நான் மட்டுமே,
இந்த வருடமும் அப்படியே,
இருந்திடக் கூடாதே,
தேவை ஒன்றே,
காதலியோ, மனைவியோ,
இருப்பது இன்னும்
எட்டு நாளே,
அதிசயம் நடந்தால்,
ஆச்சர்யம் வேண்டாம்,
அவள் யார் என்று அறிந்திட
ஆர்வமும் வேண்டாம்,
காத்திருப்பு நீங்க,
எல்லாம் நடந்தால்,
நூற்றியெட்டு தேங்காய்
முறைப்படி அவன் காலடியில்.
காதலி, வேண்டு(ம்)தல்.
எழுத்தோலை!
பயனன்றோ!
வணங்காத கரங்களும்,
இறங்காத மனங்களும்,
இருந்தும் பயனன்றோ,
பயனன்றோ,
கடலாக இல்லாமல்,
கடவுளாகவும் வாழாமல்,
களிமண்ணாக பிறந்தது,
சுடாமலே கரையவோ.
எழுத்தோலை!
இறங்காத மனங்களும்,
இருந்தும் பயனன்றோ,
பயனன்றோ,
கடலாக இல்லாமல்,
கடவுளாகவும் வாழாமல்,
களிமண்ணாக பிறந்தது,
சுடாமலே கரையவோ.
எழுத்தோலை!
என்ன தவம் செய்தேனோ?
Feb 2
விதைகள் விழுந்து
முளைக்கும் முன்னே ,
மழை நீரில் நனைந்து -
மிதந்து, நிலம் புலம்
பெயர்ந்து மண்ணாகிப்
போகுமோ,
அப்படியே,
விழுந்து பிழைக்க
தவித்த நானும்,
என்றோ இந்நேரம்
எங்கோ புதைந்து,
மண்ணோடு, மண்ணாய்,
மக்கியிருக்க கூடும்,
என்னுயிர் தமக்கை
என்றொருத்தி
எனக்கில்லாமல்
போயிருந்தால்,
இங்கிவளை யான் பெறவே,
என்ன தவம் செய்தேனோ?
எழுத்தோலை!
விதைகள் விழுந்து
முளைக்கும் முன்னே ,
மழை நீரில் நனைந்து -
மிதந்து, நிலம் புலம்
பெயர்ந்து மண்ணாகிப்
போகுமோ,
அப்படியே,
விழுந்து பிழைக்க
தவித்த நானும்,
என்றோ இந்நேரம்
எங்கோ புதைந்து,
மண்ணோடு, மண்ணாய்,
மக்கியிருக்க கூடும்,
என்னுயிர் தமக்கை
என்றொருத்தி
எனக்கில்லாமல்
போயிருந்தால்,
இங்கிவளை யான் பெறவே,
என்ன தவம் செய்தேனோ?
எழுத்தோலை!
வேண்டுதல்
Jan 31
மீண்டும் மீண்டு பிறந்திட கூட,
வேண்டும், வேண்டும் கரங்கள் இரண்டு,
உதவும் உறவுகள் அருகில் இன்றி,
உதிரும் மலரும் நானும் ஒன்றோ.
வேண்டுதல்.
எழுத்தோலை!
மீண்டும் மீண்டு பிறந்திட கூட,
வேண்டும், வேண்டும் கரங்கள் இரண்டு,
உதவும் உறவுகள் அருகில் இன்றி,
உதிரும் மலரும் நானும் ஒன்றோ.
வேண்டுதல்.
எழுத்தோலை!
விஸ்வரூபம்!
Jan 30
சோதனை ஓட்ட
வாகனம் போல,
உன்னை சோதித்து
பார்ப்பவர் ஆயிரம் இருக்க,
வேதனை அதன்
உச்சத்தைக் கண்டும்,
போதனை செய்திடும்
புத்தனாய் நிற்கும்,
சாதனை படைத்திடும்
சரித்திர நாயகன்,
சமயங்கள் அனைத்தும்
உனக்காய் அமையும்,
விஸ்வரூபம்
உனது ரூபம்,
விட்டில் பூச்சிகளை
விரட்டினால் போதும்.
எழுத்தோலை!
சோதனை ஓட்ட
வாகனம் போல,
உன்னை சோதித்து
பார்ப்பவர் ஆயிரம் இருக்க,
வேதனை அதன்
உச்சத்தைக் கண்டும்,
போதனை செய்திடும்
புத்தனாய் நிற்கும்,
சாதனை படைத்திடும்
சரித்திர நாயகன்,
சமயங்கள் அனைத்தும்
உனக்காய் அமையும்,
விஸ்வரூபம்
உனது ரூபம்,
விட்டில் பூச்சிகளை
விரட்டினால் போதும்.
எழுத்தோலை!
மறுப்பிறவி!
Jan 30
எப்படி அடி வைத்தாலும்,
அடி மேல் அடி நகர்ந்தாலும்,
இடி மேல் இடி விழுமோ,
நொடிந்த காலிலே படுமோ,
ஒடிந்து காயும் செடியும்,
மறுப்படியும் துளிர்க்க
மறுப்பிறவியும்
கிடைக்குமோ?
எழுத்தோலை!
எப்படி அடி வைத்தாலும்,
அடி மேல் அடி நகர்ந்தாலும்,
இடி மேல் இடி விழுமோ,
நொடிந்த காலிலே படுமோ,
ஒடிந்து காயும் செடியும்,
மறுப்படியும் துளிர்க்க
மறுப்பிறவியும்
கிடைக்குமோ?
எழுத்தோலை!
நண்பன் என்பவன்!
Jan 30
நண்பன் என்பவன் எவனென்று,
துன்பம் வரும் தருணம்
துளி நிமிடத்தில் உணர்த்திவிடும்,
துல்லியமாய் காட்டிவிடும்,
துடிப்பதுப்போல் நடிப்பவரை,
துணையாக இருப்பவரை.
அனுபவம்.
எழுத்தோலை!
நண்பன் என்பவன் எவனென்று,
துன்பம் வரும் தருணம்
துளி நிமிடத்தில் உணர்த்திவிடும்,
துல்லியமாய் காட்டிவிடும்,
துடிப்பதுப்போல் நடிப்பவரை,
துணையாக இருப்பவரை.
அனுபவம்.
எழுத்தோலை!
வலியின் உச்சம்!
Jan 30
பட்ட காலிலே படுமென்பர்,
பட்டு, பட்டு இரத்தமும்,
சொட்ட தொடங்கிவிட்டது,
சொட்டி, சொட்டி மொத்தமாய்,
சுண்டி போவதற்குள்,
நொண்டிக்குதிரைப் போல
நொடிந்து விழுவேனோ,
நோகும் ரணமும் நொந்து,
சீழ் வடிந்து,
புழுக்கள் நெளிந்து,
வெட்டிடக் கூட துனியும் -
காலம், வலியின் உச்சம்.
எழுத்தோலை!
பட்ட காலிலே படுமென்பர்,
பட்டு, பட்டு இரத்தமும்,
சொட்ட தொடங்கிவிட்டது,
சொட்டி, சொட்டி மொத்தமாய்,
சுண்டி போவதற்குள்,
நொண்டிக்குதிரைப் போல
நொடிந்து விழுவேனோ,
நோகும் ரணமும் நொந்து,
சீழ் வடிந்து,
புழுக்கள் நெளிந்து,
வெட்டிடக் கூட துனியும் -
காலம், வலியின் உச்சம்.
எழுத்தோலை!
பயிற்சி!
Jan 29
பொய், பொய்
பொய், பொய்
இமை வழியே புகுந்தவளே,
இதயத்திலும் நுலஞ்சிவிட்ட,
எதுவும் தேவையில்ல
இதுவே போதும் மொத்தம்,
வருஷம் ஒரு வருஷம்,
சேர்ந்து திரிஞ்சதுப்போல்
வசமா மாட்டிகிட்டேன்,
பொய், பொய் - எல்லாமே,
பொய், பொய்
---------------
பயிற்சி .....
---------------
எழுத்தோலை!
பொய், பொய்
பொய், பொய்
இமை வழியே புகுந்தவளே,
இதயத்திலும் நுலஞ்சிவிட்ட,
எதுவும் தேவையில்ல
இதுவே போதும் மொத்தம்,
வருஷம் ஒரு வருஷம்,
சேர்ந்து திரிஞ்சதுப்போல்
வசமா மாட்டிகிட்டேன்,
பொய், பொய் - எல்லாமே,
பொய், பொய்
---------------
பயிற்சி .....
---------------
எழுத்தோலை!
கவிதைகளின் உறவுக்காரன்!
Jan 29
நினைத்ததை எல்லாம்
எழுத்துக்களால் நிறைக்க,
காகிதமும், கரிக்கோலும்
நிறைந்தும், கரைந்தும்
கண் முன்னே நிறுத்தும்,
கற்பனைகளை கவிதைகளாய்
நான் கவிக்காரன்,
க வன்னாவில் தொடங்கும்,
காகித, கரிக்கோல், கவிதைகளின்
உறவுக்காரன்.
எழுத்தோலை!
நினைத்ததை எல்லாம்
எழுத்துக்களால் நிறைக்க,
காகிதமும், கரிக்கோலும்
நிறைந்தும், கரைந்தும்
கண் முன்னே நிறுத்தும்,
கற்பனைகளை கவிதைகளாய்
நான் கவிக்காரன்,
க வன்னாவில் தொடங்கும்,
காகித, கரிக்கோல், கவிதைகளின்
உறவுக்காரன்.
எழுத்தோலை!
நிதர்சனமா அறிவர்?
Jan 26
கருவை சுமக்கமுடியா ஆணும்
கருத்தரிக்கமுடியா பெண்ணும்
பதினாறு பெற்றவளின் பாதி
வலியேனும் அறிவரோ?
புரம் பேசி திரிவரே அன்றி
புத்தகமா எழுதுவர்?
வீண் விமர்சனம் புரிவரே அன்றி
கருவின் நிதர்சனமா அறிவர்?
எழுத்தோலை!
கருவை சுமக்கமுடியா ஆணும்
கருத்தரிக்கமுடியா பெண்ணும்
பதினாறு பெற்றவளின் பாதி
வலியேனும் அறிவரோ?
புரம் பேசி திரிவரே அன்றி
புத்தகமா எழுதுவர்?
வீண் விமர்சனம் புரிவரே அன்றி
கருவின் நிதர்சனமா அறிவர்?
எழுத்தோலை!
வேதனை!
Jan 26
சார்பற்று இருப்பதனால்
சேர்ந்து இருக்கிறோம் ஒன்றாய்,
சோர்ந்து போகும் விளைவுகளை
சொரிந்து விடுவது யாவரோ?
வரிகள் வேதனை கோடுகளாய்
விளைத்தவன் வயிற்றினில் தெரிகிறதே,
அறுவடைக்கு காத்திருந்த கதிரை
ஆடு, மாடுகள் மேய்ந்ததும் நியாயமோ?
எழுத்தோலை!
சார்பற்று இருப்பதனால்
சேர்ந்து இருக்கிறோம் ஒன்றாய்,
சோர்ந்து போகும் விளைவுகளை
சொரிந்து விடுவது யாவரோ?
வரிகள் வேதனை கோடுகளாய்
விளைத்தவன் வயிற்றினில் தெரிகிறதே,
அறுவடைக்கு காத்திருந்த கதிரை
ஆடு, மாடுகள் மேய்ந்ததும் நியாயமோ?
எழுத்தோலை!
மறந்து பிறந்துவிட்டான்!
Jan 26
மிருகக்காட்சி சாலையில்
இருக்க வேண்டியவர்கள்
எல்லாம் - ஏனோ தப்பி
மாநகர, கிராம சாலைகளில்
மனிதர்களாய் திரிகின்றனர்
ஆறறிவில் ஒன்றையிழந்து
சுயபுத்தியின்றி அலைகின்றனர்
விருப்பமின்றி மனிதரூபம் பூண்டு
மாறி தடுமாறி பேசுகின்றனர்.
மனிதன் மாறி விட்டான்,
மறந்து பிறந்துவிட்டான்.
எழுத்தோலை!
மிருகக்காட்சி சாலையில்
இருக்க வேண்டியவர்கள்
எல்லாம் - ஏனோ தப்பி
மாநகர, கிராம சாலைகளில்
மனிதர்களாய் திரிகின்றனர்
ஆறறிவில் ஒன்றையிழந்து
சுயபுத்தியின்றி அலைகின்றனர்
விருப்பமின்றி மனிதரூபம் பூண்டு
மாறி தடுமாறி பேசுகின்றனர்.
மனிதன் மாறி விட்டான்,
மறந்து பிறந்துவிட்டான்.
எழுத்தோலை!
பிரிவு!
Jan 23
காதலில் பிரிவு
நேர்ந்திட்ட பொழுதில்
வலித்திடும் இதயம்
யாருக்கு சொந்தம்,
உண்மை காதல்
கொண்டவர்க்கு மட்டுமோ?
நட்பிலும் அப்படியே,
என்னைப் போல் அனைவருக்கும்.
எழுத்தோலை!
காதலில் பிரிவு
நேர்ந்திட்ட பொழுதில்
வலித்திடும் இதயம்
யாருக்கு சொந்தம்,
உண்மை காதல்
கொண்டவர்க்கு மட்டுமோ?
நட்பிலும் அப்படியே,
என்னைப் போல் அனைவருக்கும்.
எழுத்தோலை!
நண்பன்!
Jan 23
நண்பன் என்பவன்
நட்பாய் பழகலாம்,
நாலு காசு உள்ளவரை
நாளும் செய்யலாம்,
நாசுக்காய் சொல்பேசி
நயவஞ்சகம் புரியலாம்,
நாம் நாமாக இல்லாமல்
நமக்காக வாழாமல்
நண்பனுக்காய் வாழ்வினும்
வீழ்வது யாரோ நாமோ.
கூடா நட்பு கேடு விளைவிக்கும்.
எழுத்தோலை!
நெருக்கம்!
Jan 18
இரு வரிகளுக்குள் எழுதிட நினைத்தேன்,
நம் இருவருக்குள்ளான நெருக்கத்தை,
ஒற்றை வரியிலேயே,
முடித்தேன்,
இமைக்கும், விழிக்கும் இருக்கும்
நெருக்கமென்றே.
எழுத்தோலை!
இரு வரிகளுக்குள் எழுதிட நினைத்தேன்,
நம் இருவருக்குள்ளான நெருக்கத்தை,
ஒற்றை வரியிலேயே,
முடித்தேன்,
இமைக்கும், விழிக்கும் இருக்கும்
நெருக்கமென்றே.
எழுத்தோலை!
முகப்பு விளக்கு!
Jan 18
கண்சிமிட்டலாய் ஒளிவீசி,
என் கண்கள் கூச செய்வாயோ,
நான் தலைக்குனிந்து கடந்து வந்தேன்,
சாலை விபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள,
மகிழுந்தின்,
உயர் முகப்பு விளக்கும்,
உயிர்க்கொல்லும் பெண்ணவள்,
கண்களைப் போலவோ?
எழுத்தோலை!
காதலர் தினம்!
Jan 17
வயதானவர்களுக்கும்,
பதினாறு வயது நினைவுகளை,
தொடர் வண்டி நீளத்தில்,
எடுத்துக்கொடுக்க வருகிறது,
காதலர் தினம்,
மலரும் நினைவுகளாய்.
எழுத்தோலை!
Subscribe to:
Posts (Atom)