May`31
வாய்வரை வந்த வார்த்தை - ஏனோ
வழித்தவறிப் போனதடி,
எல்லாம் உன்னாலே கண்ணே,
எல்லாம் உன்னாலே,
எனக்குள்,
ஒரு மின்னல்,
ஒரு மழை,
புது வெள்ளம் எல்லாம்
தன்னாலே தோன்றி
தன்னாலே மறையுதே என் முன்னே,
ஒரு சொல், ஈருயிரை
ஓருடலாய் இணைக்கும் என்றால்,
அச்சொல் சொல்வதில் - அச்சமில்லை,
அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
சொல்லவா, சொல்லாமல் செல்லவா
சொல்லிவிட்டு ஏதும் கேட்காமல் போனால்
சொல்லும், கொள்ளும் என்னை என்றே
சொல்லிவிட முனைந்தே, முடியாமல் தவிக்கிறேன்.
எழுத்தோலை!
வழித்தவறிப் போனதடி,
எல்லாம் உன்னாலே கண்ணே,
எல்லாம் உன்னாலே,
எனக்குள்,
ஒரு மின்னல்,
ஒரு மழை,
புது வெள்ளம் எல்லாம்
தன்னாலே தோன்றி
தன்னாலே மறையுதே என் முன்னே,
ஒரு சொல், ஈருயிரை
ஓருடலாய் இணைக்கும் என்றால்,
அச்சொல் சொல்வதில் - அச்சமில்லை,
அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
சொல்லவா, சொல்லாமல் செல்லவா
சொல்லிவிட்டு ஏதும் கேட்காமல் போனால்
சொல்லும், கொள்ளும் என்னை என்றே
சொல்லிவிட முனைந்தே, முடியாமல் தவிக்கிறேன்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment