May`09
கவியரசு கண்ணதாசன் அவர்களின் "காலையும் நீயே, மாலையும் நீயே.." பாடல் வரிகளை தழுவி எனது வரிகள்...இதோ!
--------------------------------------------------
காலையும் நீயே, மாலையும் நீயே,
கண்ணுக்குள் சுழலும் கருவிழியும் நீயே,
பார்வையும் நீயே, பௌர்ணமியும் நீயே,
பார்க்கும் இடமெல்லாம் காட்சியும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே...
பகல் பொழுதில் பனிதுளிப்போல்
கண்ணுக்கு எட்டாமல் மறைபவளும் நீயே,
நிலவொளியில், மதி ஒளிப்போல்
மறைமுகமாய் சிரிப்பவளும் நீயே,
கடலருகில், கரையதனில் சிப்பிக்குள்
முத்தாக பற்களை கடிப்பவளும் நீயே,
என் உடலதனில், ஓடும் உதிரம் தனில்
உறைந்து உயிரூட்டுபவளும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே,
கண்ணுக்குள் சுழலும் கருவிழியும் நீயே,
பார்வையும் நீயே, பௌர்ணமியும் நீயே,
பார்க்கும் இடமெல்லாம் காட்சியும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே...
உண்மையில், தொன்மையாய் உள்ள
மொழி தமிழ், அதன் இனிமையும் நீயே,
உணர்வினில் உடையணியா உலவி
உறுதியாய் என்னை யனிந்தவளும் நீயே,
கண்களும் சோர்வை மறக்க
கண்ணெதிரே நிற்ப்பவளும் நீயே,
என்னை இப்பொழுதும், எப்பொழுதும்
ஏமாற்றி ரசிபபவளும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே,
கண்ணுக்குள் சுழலும் கருவிழியும் நீயே,
பார்வையும் நீயே, பௌர்ணமியும் நீயே,
பார்க்கும் இடமெல்லாம் காட்சியும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே,
காலையும் நீயே, மாலையும் நீயே...
எழுத்தோலை!
No comments:
Post a Comment