Wednesday, July 24

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்....


May`09

கவியரசு கண்ணதாசன் அவர்களின் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்..." என்னும் பாடலின் முதல் வரிகளை தழுவி எனது வரிகள்...இதோ! 
---------------------------------------------------

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...."
-------------------------------------------------------
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 
நித்தமும் பேசிட மறுக்கிறது - இந்த 
சித்திர பெண்ணுக்கு என்னடி கோபம் 
சிரித்திட வெறுக்கிறது,
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நித்தமும்பேசிட மறுக்கிறது - இந்த
சித்திர பெண்ணுக்கு என்னடி கோபம்
சிரித்திட வெறுக்கிறது,

கார்த்திகை திங்கள் தீபங்கள் போலே
சிரித்திட ஒளிர்பவளே - நீ
ஒளிர்வதை நிறுத்திட துடிக்குது நெஞ்சம்
கோபமும் வேண்டாமே,
திசைகள் நான்கிலும் விசையாய் ஈர்ப்பவளே - நீ
இசையாய் பேசிட தலையாட்டி கேட்டிடும்
எனக்கிது சோதனையோ,
முற்றிய கதிர்கள் தலைக்கவிழ்ந்து நாணும்
நீயுமதன் எதிரினில் சென்றுவிட்டால் - நான்
எப்படி நலமாய் இருப்பேன் - என்னிடம்
நீயும் பேசிட தவிர்த்துவிட்டால்,

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நித்தமும் பேசிட மறுக்கிறது - இந்த
சித்திர பெண்ணுக்கு என்னடி கோபம்
சிரித்திட வெறுக்கிறது,
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நித்தமும் பேசிட மறுக்கிறது - இந்த
சித்திர பெண்ணுக்கு என்னடி கோபம்
சிரித்திட வெறுக்கிறது,

வற்றிய ஆற்றில், மணற்பரப்பில் வீடு
கட்டிட ஆசைப்பட்டேன் - ஏனோ,
கொட்டிய மழையில், வெள்ளமும் வருமோ - என்
ஆசைகள் கரைந்ததடி,
கிள்ளையின் மொழிகள் கேட்பவன் போலே
கொள்ளையாய் ரசித்திருந்தேன் - நீயும்
சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை - என்
செவிகளை விட்டே ஏன் மறைந்தாய்,
பிள்ளைகள் தூங்க, கதைகளை சொல்லி
ஏமாற்றும் அன்னையே உன் உருவில்,
என்னையும் பிள்ளையாய் எப்படி நீ நினைத்தாய்,
தூங்கிடா நானிருந்தேன்,

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நித்தமும் பேசிட மறுக்கிறது - இந்த
சித்திர பெண்ணுக்கு என்னடி கோபம்
சிரித்திட வெறுக்கிறது,
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நித்தமும் பேசிட மறுக்கிறது - இந்த
சித்திர பெண்ணுக்கு என்னடி கோபம்
சிரித்திட வெறுக்கிறது.


எழுத்தோலை!

No comments: