01 Dec 2014
நெருங்கி வரும் இரவின் தொடக்கம்
அந்தியின் முந்தியில் முகம்மறைக்க
பிந்திவரும் நிலவும் அதன் அழகும்
முழம் மல்லியாய் சிரிக்கும் விதமும்
சுற்றி, சுற்றி வந்து செல்லும்
என்னுள் நிதமும் குடிக்கொள்ளும்,
இனிமை அதன் சுவை யறியாத - என்
நாவும் அதன் நாளமும் பாவம்,
தனிமை இதன் காரணம் புரியாத
நாளும் நீளும் கோலமும் தாபம்,
முதுமை எதன் தொடக்கமோ, முடிவோ
தொடரரும் தினம், கழியும் வயதும்,
விடியும்முன் முடியும்
காட்சிகள் யாவும்,
நொடியும் முள் தின்று விடியும்
எனக்கு மட்டும், இன்றும் என்றும்!
எழுத்தோலை!
அந்தியின் முந்தியில் முகம்மறைக்க
பிந்திவரும் நிலவும் அதன் அழகும்
முழம் மல்லியாய் சிரிக்கும் விதமும்
சுற்றி, சுற்றி வந்து செல்லும்
என்னுள் நிதமும் குடிக்கொள்ளும்,
இனிமை அதன் சுவை யறியாத - என்
நாவும் அதன் நாளமும் பாவம்,
தனிமை இதன் காரணம் புரியாத
நாளும் நீளும் கோலமும் தாபம்,
முதுமை எதன் தொடக்கமோ, முடிவோ
தொடரரும் தினம், கழியும் வயதும்,
விடியும்முன் முடியும்
காட்சிகள் யாவும்,
நொடியும் முள் தின்று விடியும்
எனக்கு மட்டும், இன்றும் என்றும்!
எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./562713000487245/?type=3&permPage=1
No comments:
Post a Comment