Sunday, October 26

விடியாத வறுமை, குடியானவன் குடிலில்! (உலக சாதனைக்கான படைப்பு)

19th Dec 2014





வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்.., (1)

ஒருக்காணி நிலமுண்டு அதனில்
சோளமும், நெல்லும் நடவும் எத்தனித்தே
வளமாய் வாய்கால் வழி நீர்செலுத்த
இரவும், பகலும் உறக்கம் மறக்கும்
வயிற்றில் வரிப்படர்ந்த வருமை உழவன்
வானம் பார்த்து காத்து நிற்க.., (2)

குடியானவன் (உழவன்) குடிலில் விடியாத வருமை
ஏர்கலப்பைகள், எருதுகள், ஏற்றமும் இல்லை,
இயந்திற கலப்பைகள் அதுவும் எட்டாக்கனி நிலைமை
மின்சார எற்றமும் மின்வெட்டு இடைவேளை(யில்)
தள்ளூப்படிக்கு தவிக்கும் வட்டியுமதன் குட்டியும்
ஒருவேளை உணவை ஒத்திகைக்குகூட காட்டிடவில்லை..,(3)

இயற்கையும், செயற்கையாய் மாறிடும் காலத்தில்
பயிர்செழித்த பூவியதில் பூகோள கோடுகள்
சதுரடி அறுபது ரூபாய் பெயர்பலகைகள்
நகரத்திற்கு மிக அருகில் மிகைசொற்கள்
ஏழையும், ஏழ்மையை மாற்றிட துனியும்
எந்தநொடியும், அவன்பிடியை பிரியும் விவசாயம்.., (4)

இப்படியும், எப்படியும் வாழ்வதும் நகர்வதும்
முண்டியடித்து முன்னேற முயல்பவர் துவல்வதும்
ஏறிய ஏணியை எட்டிவிட்டு பார்பதும்
ஏளனமாய் ஏழையை பார்பவர் இருப்பதும்
இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதும் - எல்லாம்
ஆசை எனும் இச்சையால் விளையுமோ..,(5)

வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்
ஏழை உழவன் அவன்நிலை நினைத்து
வருந்தும், வரிசையில் நம்மில் எத்தனைப்பேர் இங்கே?.., (6)

இயந்திர கலப்பை = Tractors
மின்சார எற்ற(மு)ம் = Pump Set

எழுத்தோலை !

No comments: