Sunday, October 26

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

24th Dec 2013


இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து 
வெள்ளை மேக மூட்டம் போல் 
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து 
மனதெல்லாம் குளுமை சூழ்ந்து கொண்டது ..,

உலகெல்லாம் உண்மை நிலைத்து நிற்க
மானுடமெல்லாம் மனிதநேயம் செழித்து
காணும் இடமெல்லாம் அன்பொன்றே
கடவு சொல்லாய் கடவுள் சொல்லாய் ..,

ஏழைக்கும், ஏழ்மையே தெரியாதவர்க்கும்
இன்முகம் கொண்டே எடுத்துரைக்க
அவதரித்த தேவன் மகனோ நீயும்
உதித்த நாளும் இதுவோ...,

மார்கழி பிறந்ததால் நிலமெங்கும் குழுமை - நீ
மார்கழியில் பிறந்ததால் எங்கள் மனதிலும் குழுமை..,

இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து
வெள்ளை மேக மூட்டம் போல்
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து
மனதெல்லாம் குளுமை சூழ்ந்தது உன்னால்...,

இன்னாள் மாத்திரம் அல்ல எந்நாளும் குளுமையே -உன்னை
என்றென்றும் எங்கள் இதயத்தில் சுமப்பதால்.

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

* MERRY CHRISTMAS *

எழுத்தோலை!

No comments: