Sunday, October 26

ஓராயிரம் ஆண்டுகள்..!

Jan 24`2014


ககன(ம்)!
--------------

கானகம், வானம், சுவர்கம், 
செந்தணல், படைபலம், பறவையினம்,
இவையனைத்தும் ஒற்றை சொல்லில்
உந்தன் பெயரில் அடங்கிடுமெனில்..,

நான் மட்டும் எப்படி
உன்னில் அடங்காதிருப்பது,

அழகாய் சிரிப்பில்
சுவர்கத்தை காட்டி,
வானாய் அளவிடா
அன்பை ஊட்டி,
திசையறியா பறவையாய்
அமுதமொழி கூட்டி,
செந்தணல் கண்களால்
என்னையும் வாட்டி,
கானகமாய் விரிந்தாய்
என்னிதயம் புகுந்தாய்,
படைபலம் இல்லா
அரசனும் ஆனேன்,
உன்னன்பால் சிறைப்பட்டு
அடிமையாய் போனேன்,

சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,
சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,

வாழ்ந்து போகிறேன்
என்றென்றும் எனை இயக்கும்
உன்னிதய கூட்டில்
ஓராயிரம் ஆண்டுகள்.


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./589840507774494/?type=3&permPage=1

No comments: