Sunday, October 26

இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

Feb 26` 2014



இயற்கையை காப்போம்!
-----------------------------------

இந்த புவி இன்று 
புதுமைகளை கண்டதெல்லாம் 
உன்னால் தான் மனிதா..,
வானளாவிய கட்டிடங்களும் - அதற்கு
மேலே கூர்த்தீட்டி நிற்கும்
அலைவரிசை கோபுரங்களும் சாத்தியமானது
உன்னால் தான் மனிதா...,
எங்கு பார்க்கினும் பறந்துக்கொண்டிருக்கும்,
சாலைகளில் எல்லாம் விரைந்துக்கொண்டிருக்கும்
வான் ஊர்திகளும், வாகனங்களும்
உலவிட ஊர் கடந்திட உதவியது
உன் திறமை தான் மனிதா..,
இன்னும் பல பிரம்மாண்டங்கள்
வியக்க வைக்கும் அதிசயங்கள் எல்லாம்
உன்னால் தான் மனிதா...,

இவையாவும்,
இன்றைக்கு இல்லாமல் இருந்திருந்தால்
இந்த பூமி தோன்றியதைப் போலவே
பசுமையாய் சிரித்திருக்கும்...,
எங்கு காணினும் கழிவுகள் இன்றி
இன்னும் வளமாய் தன்னை கொண்டிருக்கும்...,
வற்றாத ஆறுகள் இன்னும் கிடைத்திருக்கும்...,
பொங்கும் சமுத்திரம் விழுங்கா - பல
நிலங்கள் இன்றும் இருந்திருக்கும்..,
மரங்களே மண்ணை காத்திருக்கும்...,
அதன் பரப்பில் அன்று வாழ்ந்த
டைனோசர்களும், மமூத் யானைகளும்,
ஏட்டினிலும், கணினியிலும்
காணும் இன்னும் பல உயிரினங்களும்
இன்றும் வாழ்ந்திருக்கும்..,
பறவைகளும் மகிழ்ந்திருக்கும்...,

எல்லாம் போனது மனிதா ...
ஏட்டு சுரைக்காய் வைத்துக்கொண்டு
பசிக்கிறது என்பதில் பலனென்ன நண்பா..,
இழந்தவை மீள்வதும்,
இறந்தவர் சிரிப்பதும் சாத்தியம் தானா
இருப்பதை நாளையும் இருந்திட செய்வோம் - இனி
எஞ்சி இருப்பதையாது அடுத்த தலைமுறைக்கு
விட்டுவைப்போம்.., புவியை காப்போம்
நம்மால் முடிந்தவரை மரங்களை வளர்ப்போம்,
இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608050309286847/?type=3&permPage=1

No comments: