June`06
"திருக்குறளே தேசிய நூல்" மாநாட்டில் வெளியிட இருக்கும் நூலில் பங்கேற்க இருக்கும் எனது வரிகள். (எனது குரலில் ஒரு வேண்டுக்கோள்)
--------------------------------------------------------------------
பாரதத்தின் தேசிய நூலும் திருக்குறளே!
-------------------------------------------------------
அரியணையில் வீற்றிருக்கும்
அன்னைத்தமிழில் - ஆண்டுகள்
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையில்
தெய்வப்புலவராம் திருவள்ளுவர்
அருளிய குறள் என்னும்
திருக்குறளே,
உறவுக்கெல்லாம் முதலே - அதுவும்
முப்பால் கொண்டே வளர்த்தது நமையே,
திருக்குறள் அதவும் மறையே - மாறாது
வாழ்வியல் நெறி புகுத்தியது முறையே,
மொழிக்கடந்து, மதம் தவிர்த்தே
நிதம் எல்லாம் சொல்ல,
நிஜம் காட்டும் அறிவும்,
அறம், பொருள், இன்பம் கூட்டும்,
வாழ்வியல் ஆதாரம் தனை - முறையே
வாழ்ந்திட தவறியோர்க்கு, இணை ஏதும்
இல்லாத இடர் எல்லாம் சூழ - வாழ்ந்தும்
வாழாதவறாய் வீழும் நிலை எல்லாம்
இப்பொதுமறை மொழித்தொடர - இன்பமும்
கிட்டும், நிறைவில்லா சுகம் முட்டும்,
அத்துனை அற்புதம் புரியும்
சொற்பத சுவையில் ருசிக்கும்,
பொருள் பல நிறைந்து,
நிமிர்ந்து நடக்க துனியும்
குறள் காட்டும் ஒவ்வொரு வரியும்,
கோர்த்தே செய்த எழுத்துச் சித்திர நூலும்,
அதுவே, உலகை சுருக்கி நமக்கும்
உள்ளங்கையில் தந்ததே என்றோ,
அதனை கொண்டாடும் நாடுகள் எல்லாம்
ஆங்காங்கே விரிந்து, சிறந்து இருக்க,
தன்னகத்தே கொண்ட நாடும் - மதியாமல்
மறைத்திட முனைய - தமிழனாய் ஒன்று சேர்
திருக்குறளே தேசிய நூலாய் இயற்றிடும் வரையில்
தன்னலம் மறந்து குரல் எழுப்ப வா,
தலை நிமிரும் நேரம் இதுவே,
பாரதத்தின் தேசிய நூலும் திருக்குறளே.
எழுத்தோலை!