Showing posts with label தமிழின் பெருமைகள். Show all posts
Showing posts with label தமிழின் பெருமைகள். Show all posts

Sunday, October 26

அதிகாலையில் சுபம்!

Mar 10` 2014


தாமரை இலை மேல்
தண்ணீர் துளிகள் - அவள்
கீழ் இதழ் ஓரமாய் ...,
சக்கரை துகள்கள் - இனிப்பு,
எறும்புக்கு மட்டும் அல்ல 
எனக்கும் பிடித்ததே,

தேநீர் கோப்பை,
துயில் நீங்கா படுக்கை,
நான், அவள்...,
இதழ்கள் பரிமாற்றம்
இனிமையின் அரங்கேற்றம்..,
அதிகாலையில் சுபம்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616368121788399/?type=3&permPage=1

எழுவர் விடுதலை உறுதி பெரும்..!

Mar 11` 2014


சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,
சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,

அறிவால் ஒரு நிலை மேல் கொண்ட தமிழா(மனிதா),
உன்னினம் மடிந்து வீழ்ந்ததை கண்டும்,
பெண்ணினம் கர்பிழந்து உருக்குலைந்ததை கேட்டும்,
துளியும் கலங்காத உன்னிலையே துரோகம்..,

வெகுண்டெழ வேண்டாம் - நின்று
வேடிக்கைப் பார்க்காதிருந்தால் போதும்,
வெடிகுண்டுகள் வீச வேண்டாம் - நீயறிந்த
அவலங்களை நாடறிய செய்தால் போதும்,

உண்மை நிலை உலகும் அறிய,
உண்ணாநிலை போராட்டங்கள் தொடரும்
உயிரையும் பொருட்படுத்தா மாணவர்கட்கு
உறுதுணை நின்றாலே போதும்..,

தமிழ் வெல்லும், தமிழீழமும் பிறக்கும்
எழுவர் விடுதலை உறுதி பெரும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./614822355276309/?type=3&permPage=1

ஒவ்வொன்றும் அழகோ அழகு..!

Mar 09` 2014


இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு,

கன்னம் உரசி காதினை மறைக்கும் 
உன் கார்குழல் அழகு,
செவ்விதழ் மறைக்கும் செவ்விதழ் சாயம்
சிலிர்த்திட செய்யும் அழகு,
புருவம் வளைந்து கார்முகில் ஆகவே
கச்சித பொருத்தம் அழகு,
கோதுமை நிறம் தங்கமாய் மின்னும்
தமிழச்சி உன்மேனி அழகு,

ஒவ்வொன்றாய் சொல்லிடவே ஆசையும் கூடுதே
அதற்கு என் இச்சென்மமும் போதாதே..,
இன்னும் ஏழு வேண்டுமே, மீண்டும்
மீண்டும் பிறந்து சொல்லிடவே,

இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613878338704044/?type=3&permPage=1

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே!

Mar 04` 2014


கோடிட்ட இடத்தை நிரப்புனீர் அன்று 
பள்ளியில் புள்ளி மான்கலென..,
கேள்வியும் இதுவாய் தானே இருந்தது 
சிறுத்தையை விட வேகமாயோடும்..,

ஓடும் அதிவேகம் தாவி வளைந்து,
தன் இலக்கை தவறவிடா,
சிறுத்தையும் சிரத்தையும் எண்ணா, உண்ண
இன்னொரு உயிர் தேடலில்..,

தேடும் இடம் அடர் வனம்
அது ஒருக் காலம் - புதர்கள்,
புல்வெளிகள், வான் மறைத்த மரங்கள்
எங்கள் இனங்களின் புகலிடம்..,

புகலிடம் புது இடமாய், மாயமாய்
புது, புது வீடுகளாய் - இன்று
மரங்களை காணோம், மலைகளை காணோம்
எங்கள் சந்ததிகளும் காணோம்..,

காணாமலே இன்னும் சில காலங்களில்
நாங்களும் போய் விடுவோமோ,
நாளை பிள்ளைகளும் எங்களை எட்டில்
பார்த்தே எண்ணங்களில் மகிழ்வாரோ..,

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே உணர்வீரோ
எங்களுக்கும் உணர்வுண்டு அறிவீரோ,
நாங்களும் உயிர்களே, உறவுகளே கருணையுடன்
எங்களயும் பார்ப்பீரோ இனியேனும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611123258979552/?type=3&permPage=1

தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தே..!

Feb 26` 2014



நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்..,

நீயே ஆசையே, என்னுள் தினம் 
அசையும் அசைவே அழகே..,
அனுதினம் ஆர்ப்பரிக்கும் அணுவே,
என்னுள் இருந்தே எனை தின்றே
எனை இயக்கும் இசையே,
இன்றெங்கே நீயும்சென்றாய் மறைந்தே..,
தேடும் திசையே மறந்தேனடி
தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தேனடி
விதியே நம்மை பிரிதிடினும் - நாம்
மதி இழந்தா மயங்கி கிடந்தோம்.

நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608111382614073/?type=3&permPage=1

இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

Feb 26` 2014



இயற்கையை காப்போம்!
-----------------------------------

இந்த புவி இன்று 
புதுமைகளை கண்டதெல்லாம் 
உன்னால் தான் மனிதா..,
வானளாவிய கட்டிடங்களும் - அதற்கு
மேலே கூர்த்தீட்டி நிற்கும்
அலைவரிசை கோபுரங்களும் சாத்தியமானது
உன்னால் தான் மனிதா...,
எங்கு பார்க்கினும் பறந்துக்கொண்டிருக்கும்,
சாலைகளில் எல்லாம் விரைந்துக்கொண்டிருக்கும்
வான் ஊர்திகளும், வாகனங்களும்
உலவிட ஊர் கடந்திட உதவியது
உன் திறமை தான் மனிதா..,
இன்னும் பல பிரம்மாண்டங்கள்
வியக்க வைக்கும் அதிசயங்கள் எல்லாம்
உன்னால் தான் மனிதா...,

இவையாவும்,
இன்றைக்கு இல்லாமல் இருந்திருந்தால்
இந்த பூமி தோன்றியதைப் போலவே
பசுமையாய் சிரித்திருக்கும்...,
எங்கு காணினும் கழிவுகள் இன்றி
இன்னும் வளமாய் தன்னை கொண்டிருக்கும்...,
வற்றாத ஆறுகள் இன்னும் கிடைத்திருக்கும்...,
பொங்கும் சமுத்திரம் விழுங்கா - பல
நிலங்கள் இன்றும் இருந்திருக்கும்..,
மரங்களே மண்ணை காத்திருக்கும்...,
அதன் பரப்பில் அன்று வாழ்ந்த
டைனோசர்களும், மமூத் யானைகளும்,
ஏட்டினிலும், கணினியிலும்
காணும் இன்னும் பல உயிரினங்களும்
இன்றும் வாழ்ந்திருக்கும்..,
பறவைகளும் மகிழ்ந்திருக்கும்...,

எல்லாம் போனது மனிதா ...
ஏட்டு சுரைக்காய் வைத்துக்கொண்டு
பசிக்கிறது என்பதில் பலனென்ன நண்பா..,
இழந்தவை மீள்வதும்,
இறந்தவர் சிரிப்பதும் சாத்தியம் தானா
இருப்பதை நாளையும் இருந்திட செய்வோம் - இனி
எஞ்சி இருப்பதையாது அடுத்த தலைமுறைக்கு
விட்டுவைப்போம்.., புவியை காப்போம்
நம்மால் முடிந்தவரை மரங்களை வளர்ப்போம்,
இயற்கையை காப்போம், இனிமையை மீட்போம்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608050309286847/?type=3&permPage=1

தவமாய் பெற்ற தவப்புதல்வன்..!

Feb`13 2014


காட்சிகளை வெறும் காட்சிகளாய் 
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை,

இவன் இருந்தான் சுருள் மகிழ்ந்தது
இனி மறைந்தான் இருள் சூழ்ந்தது..,
துல்லியம் தெரியா துள்ளித்திரியும்
துணை இயக்கம் துள்ளல் முறிந்தது,

ஆசானாய் அள்ளி, அள்ளி வழங்கிய
யோசனைகளை எல்லாம் இனி யார்தருவர்..,
எங்கும் சுழலும் சுருள்சக்கரம் காட்டும்
காட்சிகளும் கசக்கும், ஒளியுகம் சிரிக்கும்,
திரையுலகு தவிக்கும், தலைமுறைகள் ஏங்கும்..,
தவமாய் பெற்ற தவப்புதல்வன் உறங்கிடவே,

காட்சிகளை உணர்ந்த என் கண்கள்
இன்று கண்ணீரை உதிர்த்தப்படி ..

காட்சிகளை வெறும் காட்சிகளாய்
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./600644150027463/?type=3&permPage=1

ஓராயிரம் ஆண்டுகள்..!

Jan 24`2014


ககன(ம்)!
--------------

கானகம், வானம், சுவர்கம், 
செந்தணல், படைபலம், பறவையினம்,
இவையனைத்தும் ஒற்றை சொல்லில்
உந்தன் பெயரில் அடங்கிடுமெனில்..,

நான் மட்டும் எப்படி
உன்னில் அடங்காதிருப்பது,

அழகாய் சிரிப்பில்
சுவர்கத்தை காட்டி,
வானாய் அளவிடா
அன்பை ஊட்டி,
திசையறியா பறவையாய்
அமுதமொழி கூட்டி,
செந்தணல் கண்களால்
என்னையும் வாட்டி,
கானகமாய் விரிந்தாய்
என்னிதயம் புகுந்தாய்,
படைபலம் இல்லா
அரசனும் ஆனேன்,
உன்னன்பால் சிறைப்பட்டு
அடிமையாய் போனேன்,

சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,
சிறைப்பிடித்து என்னை
அழைத்துப்போ,
விடியும்வரை வதைத்து
உறங்கிப்போ,

வாழ்ந்து போகிறேன்
என்றென்றும் எனை இயக்கும்
உன்னிதய கூட்டில்
ஓராயிரம் ஆண்டுகள்.


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./589840507774494/?type=3&permPage=1

சாதிகள் இல்லையடி பாப்பா!

Jan 17`2014



எதிர்வரும் ஞாயிறு அன்று,

கூடல் நகர் கவிஞர் பேரவை மற்றும் ஓவியன் கலைக்கூடம்!
(இடம்: காந்தி திடல், (கூடலூர், நீலகிரி மாவட்டம்), நாள்: 19.01.2014)

இணைந்து நடத்தும்
சமத்துவ பொங்கல் விழா கவியரங்கில்,

கொடுக்கப்பட்ட தலைப்புக்கு நான் வாசிக்க இருக்கும் கவிதை,

-----------------------------------------
சாதிகள் இல்லையடி பாப்பா!
-----------------------------------------

தீப்பிழம்பினும்,
விரைந்து அழிக்கும் இந்த தீ
ஒரு வியாதியே இச் சமூகத்தில்
பரிந்துரைக்கப்படாத மருந்துகள் போல்
சுயமருத்துவம் செய்துக்கொண்டு
தனக்கு தானே, தனித்தனியே ஆங்காங்கே
பிரிந்து விரிந்து அழித்துக்கொண்டிருக்கிறது..,
நம் சமூகத்தில்,
வறண்ட நிலத்தில் பிளந்துக் கிடக்கும்
மணர்குழம்புகள் போலே..,

சாதி என்கின்றனர்..,
சாத்தியக்கூறுகள் ஏதும் அறியா
சம்பிரதாய மடமை கயவர்கள்..,
வேதியல் மாற்றம்
உடல்ரீதியில் தெரிய
மனமுவந்து மனம் திறந்து
காதல் மலர்ந்து திருமணம் புரிந்து
புதியதோர் வாழ்வியல்
தொடங்கிடும் தருணமே
குறுக்கிடும் இந்த தீப்பிழம்பும்
பொசுக்கி விழுங்கிடும் கொடுமையும்
நிகழ்வதும் நீங்குமோ,

ஒதுக்கி, ஒதுக்கி,
ஒதுங்கி, ஒதுங்கி முழிப்பிதுங்கி
வழிப்பாதை, வழிப்பாடு ஆலை(யம்)
பாடசாலை நுழைந்திடா நாளை
சீர்த்திருத்திய பெரியார் - முதியவர்
முறிந்துப் போன முருங்கை கிளையாய்
என்றோ அவருடன் புதைத்துவிட்டு
ஒதுக்கினர்..,

இடமாம், ஒதுக்கீடாம்
பார்பனனாம், பறையனாம்
இதற்கு இடைப்பட்ட இடைசாதி
வன்னியனாம், தேவனாம் இன்னும்
நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களால்
வீதிக்கொரு கட்சியாம்,
வீட்டுக்கொரு சங்கமாம்,

பள்ளியில் சேர்க்கையில்
விதைத்திடும் முதல் விதை
விண்ணப்ப தாளில் கேள்வியாய்
சாதியின் குறிப்பீடு - இதில்
சாதிக்கு ஏற்றவாறு மதிப்பீடு
திருந்துமோ அரசும்,
திருத்துமோ அதன் அரசாணையையும்,
அணைக்குமா சாதீய தீப்பிழம்பும்
அன்பால் அனைவரையும்
அரவணைக்குமோ இச்சமூகம்..,

குருதி ஒன்றெனில்
மனிதமும் ஒன்றே.
சாதிகள் இல்லையெனில்
சமூகமெல்லாம் சமமே,
இதை உணர்த்திட
உண்மையை உணர்ந்திட
ஒன்றினைவோம்
ஒர்குடைக்குள்,
ஒன்றே குலமென்ற
ஒருங்கிணைப்பில்,

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

எழுத்தோலை!

நீளும் எந்த பயணமும் ...

Jan 07th 2013


நீளும் எந்த பயணமும் 
நீ அருகில் இருந்தால் விருப்பம்,
வளைவும், நெளிவும் இருந்தும், 
ரயிலாய் நீ அழகாய் தெரிந்தும், 
உன் இடையோடு என் கைக்கோர்த்து 
நாம் நடைப்போடும் சந்தர்ப்பம்
அடியோடு நீ மறுக்கும் நாளும்
உன் அழகோடு உறவாடா - என்
உயிர் ஒருப்போதும் உறங்காது,

நீளும் எந்த பயணமும்
நீ அருகில் இருந்தால் விருப்பம்.


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580723705352841/?type=3&permPage=1

சொல்லி, சொல்லி மலைக்கிறேன் !

Jan 07`2013


அழகிய நீர்வீழ்ச்சி அருகில் அவள் 
இதில் எந்த அழகில் நான் மயங்க?
அள்ளி அனைத்திடாதபடி ஆர்ப்பரிக்கும் 
இவையிரண்டும் எனக் கண்முன்னே,

துள்ளி மகிழவும் இயலாதவனாய்
சொல்லி, சொல்லி மலைக்கிறேன்
இன்னும் ஈராயிரம் கண்கள் வேண்டி
இரக்கமுரு சன்முகனிடம் கேட்கிறேன்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580720875353124/?type=3&permPage=1

ழகற வடிவிடை !

27th Dec 2013


ழகற வடிவிடை தின்னும் நித்திரை,
துள்ளும் அசைவுமென் கண்களின் கொடுப்பனை,
அள்ளும் அழகியலில் இவளொரு தொடர்கதை,
ய ர ல வ ழ ள யாரிவள் இடையின இளவரசி?

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./575065872585291/?type=3&permPage=1

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

24th Dec 2013


இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து 
வெள்ளை மேக மூட்டம் போல் 
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து 
மனதெல்லாம் குளுமை சூழ்ந்து கொண்டது ..,

உலகெல்லாம் உண்மை நிலைத்து நிற்க
மானுடமெல்லாம் மனிதநேயம் செழித்து
காணும் இடமெல்லாம் அன்பொன்றே
கடவு சொல்லாய் கடவுள் சொல்லாய் ..,

ஏழைக்கும், ஏழ்மையே தெரியாதவர்க்கும்
இன்முகம் கொண்டே எடுத்துரைக்க
அவதரித்த தேவன் மகனோ நீயும்
உதித்த நாளும் இதுவோ...,

மார்கழி பிறந்ததால் நிலமெங்கும் குழுமை - நீ
மார்கழியில் பிறந்ததால் எங்கள் மனதிலும் குழுமை..,

இலைகள் எல்லாம் குளிரால் உறைந்து
வெள்ளை மேக மூட்டம் போல்
நிலமெல்லாம் பனி விழுந்து குவிந்து
மனதெல்லாம் குளுமை சூழ்ந்தது உன்னால்...,

இன்னாள் மாத்திரம் அல்ல எந்நாளும் குளுமையே -உன்னை
என்றென்றும் எங்கள் இதயத்தில் சுமப்பதால்.

இனிய நத்தார் பெருநாள் நல்வாழ்த்துகள்!

* MERRY CHRISTMAS *

எழுத்தோலை!

ஆதலால், காதல் செய்வீர்..!

21st Dec 2013



நீ வெறுக்கும் ஒவ்வொரு உயிரும்
இன்னொருவருக்கு உயிராய் வளம்வரும்
அன்பு என்றும் நிலையானதே இப்புவியில்
அதற்க்கு எப்படித்தெரியும் ஏழைப்பணக்காரன்,
ஆதலால், காதல் செய்வீர்,
தனிமையைத் தகர்த்தெறிவீர்.

எழுத்தோலை!

விடியாத வறுமை, குடியானவன் குடிலில்! (உலக சாதனைக்கான படைப்பு)

19th Dec 2014





வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்.., (1)

ஒருக்காணி நிலமுண்டு அதனில்
சோளமும், நெல்லும் நடவும் எத்தனித்தே
வளமாய் வாய்கால் வழி நீர்செலுத்த
இரவும், பகலும் உறக்கம் மறக்கும்
வயிற்றில் வரிப்படர்ந்த வருமை உழவன்
வானம் பார்த்து காத்து நிற்க.., (2)

குடியானவன் (உழவன்) குடிலில் விடியாத வருமை
ஏர்கலப்பைகள், எருதுகள், ஏற்றமும் இல்லை,
இயந்திற கலப்பைகள் அதுவும் எட்டாக்கனி நிலைமை
மின்சார எற்றமும் மின்வெட்டு இடைவேளை(யில்)
தள்ளூப்படிக்கு தவிக்கும் வட்டியுமதன் குட்டியும்
ஒருவேளை உணவை ஒத்திகைக்குகூட காட்டிடவில்லை..,(3)

இயற்கையும், செயற்கையாய் மாறிடும் காலத்தில்
பயிர்செழித்த பூவியதில் பூகோள கோடுகள்
சதுரடி அறுபது ரூபாய் பெயர்பலகைகள்
நகரத்திற்கு மிக அருகில் மிகைசொற்கள்
ஏழையும், ஏழ்மையை மாற்றிட துனியும்
எந்தநொடியும், அவன்பிடியை பிரியும் விவசாயம்.., (4)

இப்படியும், எப்படியும் வாழ்வதும் நகர்வதும்
முண்டியடித்து முன்னேற முயல்பவர் துவல்வதும்
ஏறிய ஏணியை எட்டிவிட்டு பார்பதும்
ஏளனமாய் ஏழையை பார்பவர் இருப்பதும்
இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதும் - எல்லாம்
ஆசை எனும் இச்சையால் விளையுமோ..,(5)

வறண்ட மேகம் உருண்டு பிறள
நிறைமதி அதுவும் நகர்ந்து ஒளிர
உத்திரம் துளைத்த பொத்தல்கள் வழி
நுழைந்த இளமை தென்றல் மொழி
மேற்கில் பிறந்த நிலவொளி அதனைக்
கண்டும் ஆனந்தம்கொள்ளாதவர் யவரோ இவ்வுலகில்
ஏழை உழவன் அவன்நிலை நினைத்து
வருந்தும், வரிசையில் நம்மில் எத்தனைப்பேர் இங்கே?.., (6)

இயந்திர கலப்பை = Tractors
மின்சார எற்ற(மு)ம் = Pump Set

எழுத்தோலை !

என்னை இன்னும் வலுப்படுத்தும்..!

22nd Sep 2013


என் எண்ணங்களை இங்கு பதிவிட 
எழுத்துக்களை தமிழிடம் யாசிக்கிறேன்
விருந்துப் படைத்தர் போல சுவையாய் 
சொற்களும் சொல்லிடமாளாது கிடக்க 
அள்ளி அள்ளி மையில் கலந்து 
அவையோர் யாவர்க்கும் படைக்கிறேன்,

பசிமறந்து, படித்து மகிழ்ந்து நீங்களும்
ருசியெப்படி என்று சொல்லி செல்லுங்கள்,
தவறுகளை திருத்திடவும்,
புதுமைகளை சேர்த்திடவும் - என்னை
இன்னும் வலுப்படுத்தும் அதுவும்.

நன்றி, நன்றி அன்பர்களே, நண்பர்களே.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./524874314271114/?type=3&permPage=1

Thursday, July 25

திருக்குறளே தேசிய நூல்!


June`06

"திருக்குறளே தேசிய நூல்" மாநாட்டில் வெளியிட இருக்கும் நூலில் பங்கேற்க இருக்கும் எனது வரிகள். (எனது குரலில் ஒரு வேண்டுக்கோள்)
--------------------------------------------------------------------


பாரதத்தின் தேசிய நூலும் திருக்குறளே!
-------------------------------------------------------

அரியணையில் வீற்றிருக்கும்
அன்னைத்தமிழில் - ஆண்டுகள்
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையில்
தெய்வப்புலவராம் திருவள்ளுவர்
அருளிய குறள் என்னும்
திருக்குறளே,

உறவுக்கெல்லாம் முதலே - அதுவும்
முப்பால் கொண்டே வளர்த்தது நமையே,
திருக்குறள் அதவும் மறையே - மாறாது
வாழ்வியல் நெறி புகுத்தியது முறையே,
மொழிக்கடந்து, மதம் தவிர்த்தே
நிதம் எல்லாம் சொல்ல,
நிஜம் காட்டும் அறிவும்,
அறம், பொருள், இன்பம் கூட்டும்,

வாழ்வியல் ஆதாரம் தனை - முறையே
வாழ்ந்திட தவறியோர்க்கு, இணை ஏதும்
இல்லாத இடர் எல்லாம் சூழ - வாழ்ந்தும்
வாழாதவறாய் வீழும் நிலை எல்லாம்
இப்பொதுமறை மொழித்தொடர - இன்பமும்
கிட்டும், நிறைவில்லா சுகம் முட்டும்,

அத்துனை அற்புதம் புரியும்
சொற்பத சுவையில் ருசிக்கும்,
பொருள் பல நிறைந்து,
நிமிர்ந்து நடக்க துனியும்
குறள் காட்டும் ஒவ்வொரு வரியும்,
கோர்த்தே செய்த எழுத்துச் சித்திர நூலும்,
அதுவே, உலகை சுருக்கி நமக்கும்
உள்ளங்கையில் தந்ததே என்றோ,

அதனை கொண்டாடும் நாடுகள் எல்லாம்
ஆங்காங்கே விரிந்து, சிறந்து இருக்க,
தன்னகத்தே கொண்ட நாடும் - மதியாமல்
மறைத்திட முனைய - தமிழனாய் ஒன்று சேர்
திருக்குறளே தேசிய நூலாய் இயற்றிடும் வரையில்
தன்னலம் மறந்து குரல் எழுப்ப வா,
தலை நிமிரும் நேரம் இதுவே,
பாரதத்தின் தேசிய நூலும் திருக்குறளே.


எழுத்தோலை!

Saturday, December 22

எழுத்தோலை, கவிதைத் திருவிழா!







எழுத்தோலை, கவிதைத் திருவிழா!

(புதுவருட கவிதைக் கொண்டாட்டம்)


கவிஞர்களை அழைக்கிறோம்!

தமிழின் மேல் அன்புக்கொண்டு, தமிழ் மொழியில் பேசிக்கொண்டிருக்கும் நாம், தமிழ் வளர்க்கவும் கடமைப்பட்டுள்ளோம்...., தமிழ் வளர்க்க நம்மால் என்ன
செய்ய முடியும்?

தமிழில் எழுதி, தமிழ் பேசி, தமிழ் சொற்களை முடிந்த வரையில், வேண்டிய இடத்தில் பயன்படுத்துங்கள், அதுவே நம்மால் செய்ய இயன்ற தமிழ் பனி. உங்களுக்கு கற்பனை சக்தியும், தமிழறிவும் துளியேனும் இருக்குமானால் நீங்களும் கவிஞரே!, வெளிக் கொண்டுவாருங்கள் உங்களுள் ஒளிந்திருக்கும் கவிஞரை,

கவிதை திருவிழாவில் உங்கள் கவிதைகளையும் அரங்கேற்றுங்கள், சிறந்த கவிதையாய் உங்களதும் தேர்ந்தெடுக்கபடும் எனில் அதற்குரிய சிறந்த பரிசையும் தட்டி செல்லுங்கள்,

"எழுத்தோலை, கவிதைத் திருவிழா" இணையத்தில் இணைத்து உலக அளவில் பரவிக்கிடக்கும் தமிழ் நெஞ்சகள் மகிழ, நமது இனிய தமிழை வளர்க்க, மேற்கொள்ளப்பட்டுள்ள முதற்கட்ட முயற்சியே.

போட்டிக்கான தகவலுக்கு :
https://www.facebook.com/events/441656145897811 இணைய முகவரியில் தொடர்பு கொள்க. மேலும், நிகழ்ச்சியின் தொடர் தகவலுக்கு https://www.facebook.com/ezutholai  என்னும் இணைய முகவரியையும் தொடந்து தொடருங்கள்.


தொடர்பு கொள்க :
8939431932 / ezuttholai@gmail.com



நன்றி,
எழுத்தோலை!


Sunday, December 9

நிஜத்தினில் நீயும்!


Dec`08

கண்கள் மூடி உறங்கும் போது,
கனவு என்னும் மாய உலகம்,
உன்னை மன்னனாகக் கூட,
அரியணையில் அமர்த்தும்,

உறங்காமலே மன்னனாவாய்,
தமிழினில் எழுதிட, நிஜத்தினில் நீயும்.



எழுத்தோலை!

உன் தரம் அறிவது உறுதி!


Dec`08

தங்கத்தின் தரம் மின்னுவதில்
இல்லையாம் - உரசிட, உரசிட
ஒளி வீசாத வரைக்கும்,
பேசிட.பேசிட தங்கத் தமிழில்,

உன் தரம் அறிவது உறுதி.



எழுத்தோலை!