Saturday, October 13

ஆறுதல்!


நித்திரை என்னை
ஆட்கொள்ளும் நேரமே,
பத்திரமாய் நானும்
படுத்துறங்கி, பசி
மறந்து, பகல்மறந்து,
பக்குவமாய் அவளை,
என் கண் முன்னிறுத்தி,
பத்தியக் கால பலன்
கிடைக்க, சொற்ப்பதமாய்

அற்ப்புதமாய், கவி
வரிகள் சேர்த்தே,
வகுடெடுத்த அவள்
உச்சன் சிரசில், இச்
சென்றொரு முத்தம்
வைப்பேனோ,

"கனவு, அதுவே காதலின்
ஒற்றை ஆறுதலோ"


எழுத்தோலை கோ.இராம்குமார்.

பிறந்தநாள் வாழ்த்து – திரிஷாவுக்கு - I


விண்ணில் மினுக்கும்,
நட்சத்திரங்கள் யாவும்
வித்தாய் உந்தன்
வயிற்றினில் மகளாய்
பிறந்து, வளர்ந்து
இன்றோடு எட்டு
வருடங்களும் முடிந்ததோ,
அதன் கொண்டாட்டமாய்,

வான மேக
கூட்டம் எல்லாம்,
வானவில்லாய் திரிந்து,
திரிஷாவாய்
நிமிடங்கள் எல்லாம்,
வண்ணங்கள், ஏழு
வண்ணங்களில்,
மின்னல்கள்ப் போலே,
இடித்து, மின்னி
கண்ண புதைக்குழிக்
குள்ளே மறைத்தே
தான் போகுமோ,

வாழ்த்துப்பா பாடவே
மழையையும்,
மின்னலையும்,
இடியையும், மேள
நாதஸ்வரம் போலே
இசைத்துப் பாடிடுமோ,
இனியப் பிறந்தநாள்
வாழ்த்துகள் என்றே
வாழ்த்து மழையாய்ப்
பொழிந்திடுமோ.

வாழ்த்துக்கள் என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னுயிர் திரிஷா.



எழுத்தோலை கோ.இராம்குமார்.

3. பிறந்தநாள் வாழ்த்து – திரிஷாவுக்கு - II


கண்ணொளி ம்மின்னல்
கடைக்கண் பார்வையால்,
காட்சிப்பொருள் யாவும்
மீனாட்சி உருவமாய்,
கருமாரி, மகமாயி
ஆயிரம்க்காளியின்
அவதார கோலமாய்,
உருமாறி, உயிர்க்கொண்டே
உலகமெல்லாம் உலவினால்,
உன்ப்பெயரை சொல்லினால்,
இரண்டுமே இனைதானோ,

இரண்டாம் உலகம் ஒன்று
வேண்டும்போல், உன்னுடன்
மட்டும் வாழ்ந்திட வேண்டுவேன்,
செல்லமாய், வெல்லமாய்
கொஞ்சியே, எஞ்சி இருக்கும்
என் காலம் முழுதையும்
கழித்திடுவேன், யானும்
உன் மாமனாய் என்றும்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரிஷா.
 
 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்.

சமாளிப்புகள்!


சாதக பொருத்தம்,
சாத்திரங்கள் எல்லாம்,
சான்றோர் வழித்தொடரும்
சமாளிப்புகள் தானோ,
இல்லை, காதலை
தட்டிகழிக்க சொல்லும்,
சாக்குகள் தானோ,

கண்ணில் நுழைந்து

கவிதையாய்ப் பேசி
கனவுக்குள் நுழையும்
காதலும் பாவமோ,
காதலர் சாபமோ,

வாழ்ந்திட ஏங்கும்,
இளசுகள் மனசும்,
வாழையாய் வீழுமோ,
வார்த்தையால் மூழ்குமோ,
வலிகளில் வாடுமோ,

பக்குவம் பேசியக்
கிழவர்கள் எங்கே,
புத்தகம் எழுதிய
புலவர்கள் எங்கே,
கவிதையில் கதைத்த
கவிஞர்கள் எங்கே,

உங்கள் பேச்சுக்கள்,
எழுத்துக்கள் இன்று
காலாவதியும் ஆனதோ,
காற்றினில் பறந்தே
கடலக் கடந்துப்
போனதோ,

எங்களை, காதலை
வாழவும் வைக்கவே,
வைக்கம் வீரர்ப்போல்
வருவாரோ எவரும்?
வந்தே, நின்றே,
சாத்திர, சாதக
சடங்குகளை வென்றே,
ஒழிப்பாறோ ??



எழுத்தோலை கோ.இராம்குமார்.

பச்சை முளரிப் பூவொன்று!


பச்சை நிறத்தினில்
முளரிப் பூவொன்று,
முழுசாய் மறைந்த,
பசுமையான அவள்
நினைவுகளை,
முள்ளாக குத்தியே,
மீண்டும் நினைவுக்
கொள்ள, வைக்கிறதே....!


எழுத்தோலை கோ.இராம்குமார்.

Friday, October 12

என்னவள்!


ஆயிரம் முறை
பார்த்திருப்பேன்,
ஆண்டாள் விழி
கொண்டவளாம்
அவளின் ஓவியத்தை,


ஆசை,
இன்னும் தீரவில்லை
வேண்டும், மீண்டும்
பார்த்திட வேண்டும்போல்
அடிக்கடி, நொடிக்
கொருமுறை பார்த்துக்
கொண்டிருக்கிறேன்,
கன்ன சிவப்பையும்,
கண்களின் சிமிட்டளையும்,
வளைந்த புருவத்தையும்
வட்ட திலகத்தையும்,
நெற்றிசுட்டியாய்
முல்லைக்கொடியாய்,
முன்நெற்றி படர்ந்திட்ட,
சுருண்ட முடியையும்,
முழ மல்லிகை அழகையும்,
(maple)மேப்பல் இலை ஓவிய
வான்நீல பட்டுப்
புடவையையும்,
வீனைப்போல்
இனிதான இசைக்கு
ஈடான அவள்க்குரல்,
எதுகை, மோனை
கலப்படமில்லா,
ஒன்றே முக்காலடி
திருக்குறளோ?

மொத்தமாய் சொல்வதெனில்,
அவள் அணிந்திருக்கும்,
ஒற்றைக்கல் மூக்குத்தியின்
திருகாணி போலவே,
அவளழகில் திறுகி,
கிறங்கி, மதிமயங்கி,
மலர்ச்சுற்றும் சிறுவ்
வண்டாய் ஆவேனோ
நானும்!



எழுத்தோலை கோ.இராம்குமார்.

Sunday, October 7

சித்திரமோ அவளும் என் கண்களுக்கு!


மென்மை சிரிப்பு,
கூறியப் பார்வை,
மெல்லிய இதழில்
சொல்லிடும் அழகும்,
பார்த்திட, பார்த்திட

தோன்றுமே காதலும்,
காணாமல் போன
கைப்பிள்ளைப் போலே,
காணாமலே தொலைந்தேனே,
சித்திரமோ அவளும்
என் கண்களுக்கு,
எழுந்து, நடந்து
வந்தே, நித்திரையில்
இருந்த என்னை,
எழுப்பியதிலிருந்து
தூங்கவே இல்லை,

கை சேரும் கை
வளைப்போல்,
மை சேரும் மை
விழிப்போல்,
அவளை சேரும்
நாளை எண்ணி
ஏக்கம் கொண்டே
எனை மறந்தேனே.



(சித்திரம் எழுந்து, நடந்து
வந்து என்னிடம் பேசியதை,
என்னாலே நம்ப முடியவில்லை,
நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்.)



எழுத்தோலை கோ.இராம்குமார்.

Sunday, September 9

மழை!


September 9

நில்லென்று சொன்னாலும்,
கேட்காத மழை - அதனால்
சொல்வதை நிறுத்திவிட்டு,
மரமாய், மலராய், முழுதாய்
நானும், அவளும் நனைந்து,
நடுங்கும் வேளையும், ஏதோ
கதகதப்பு வேண்டும் போல்
தேட,
கைப்பிடியில் தொடங்குமோ
உரசல்களும், உளறல்களும்,
பரவிய நெருப்பில் கரைந்தது
மழையோ, அவளோ - இல்லை
எங்கள் இதழோ,  இளமையோ,
தேகச்சூடு இளகும் வரையில்,
நனைந்தோம் அடை மழையில்,
துடைத்திட தோனா மீண்டும்
நனைந்தோம் விடா மழையாய்,

அவளும் மழையாய்,
நானும் மேகமுமாய்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

கேட்காத மழை!

September 8

நில்லென்று சொன்னாலும்,
கேட்காத மழை - அதனால்
சொல்வதை நிறுத்திவிட்டேன்,
மரமாய், மலராய், முழுதாய்
நானும் நனைந்து சிரிக்கிறேன்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

பெரியாரும் கடவுளே!




உண்மையை சொல்வதெனில்,
எனக்கு பெரியாரை,
அவ்வளவாக தெரியாது,
அனால்,
அவர் சீர்திருத்தம் தெரியும்,
அவர் எழுத்துக்கள் புரியும்,
அவர் முனைந்த, முடித்த பல
சாதனைகள் தெரியும்,
அவர்,
கடவுளை கல்லென்றார்,
மனிதனை மதி என்றார்,
பெண்மையை துதி என்றார்,
சாதியை ஒழி என்றார்,
இந்தியை மிதி என்றார்,
தொந்தி கணபதியை -
விதி என்றார் - ஆம்,
அனைத்துமே தன் உயிர்
போல் நினைத்து,
சீர்,
திருத்த வாதியாய்
உலகை வளம் வந்தார்,
வயது, தள்ளாத வயதிலும்,
தனக்கென சேர்க்காமல்
தன் கொள்கைகளை சமமாய்
எல்லோர்க்கும் சேர்த்தார்,
சாமி இல்லை பூதம் இல்லை
என்று சொல்லி எனக்கு
சாமியாய், பூமியாய்
சமத்துவம் சொல்லி,
தருசாய் கிடந்த என்னை,
அவர் சொல்லால் உழுது
இன்று,
முழுசாய், பூக்கும் மரமாய்
மண்ணில் பிறர் நலம் பேண
நிழலாய் செய்தாரே,

மண்ணும், விண்ணும்
இருக்கும் காலம் வரை
மனிதம் இருக்கும்
என்றானால்,
அதுவரை அவரை,
மறந்திடாது இத்
தமிழகமும் உலக
தமிழர்களும்,

உங்களால் நாங்கள்,
வாழ்ந்தோம், வாழ்கிறோம், வாழ்வோம்!


இனிய பிறந்த நாள் வணக்கங்கள், அய்யா!


எழுத்தோலை கோ.இராம்குமார்

வேண்டாம் கள்!


 
காலையில் சாலையில் - நானும்
போகையிலே கண்டதொரு காட்சியும்
என்னை ஏனோ, இப்படி எழுத வைக்கிறதே,

கள்ளுண்ட காளையர் ஒருவர்,
கடைத்தெரு வழியே போகையில்,
வளைவாய், சாய்வாய் கால்கள் பின்ன,
பின்னங்கால் முன்னே சிக்க,
சரிவாறோ சாலையில், அதனையும்
பூமெத்தைப்போல் பாவித்து, உருண்டு
புரண்டு, ஒழுகும் எச்சில் ஊடே முகம்
புதைந்து, சேறும், சகதியுமாய் ஆடையும்,
அறைக்குறைக் கோலத்தில் அங்கேயே
அறைப்பினமாய் கிடப்பாறோ ?

அளவுக்கு மிஞ்சிய அமுதமும் நஞ்சோ?
அதுப்போல், அளவுக்கு மிஞ்சியக் கள்ளும்
கொள்ளுமே? எதற்கு இந்த நஞ்சு?

வீட்டின் நிலை மறந்திடவா?
ஏழ்மையின் பகை வென்றிடவா ?
மனைவியை வாட்டிடும் இந்நிலை
தாங்கா, எத்தனை மனைவிகள்
மாட்டி தொங்கினார், உத்தரக்
கயிற்றினில்?
பிள்ளைகள் வகுப்பறை சென்றிட
தவித்திட, உன் தவிப்புகள் எல்லாம்
கள்ளும், கள்ளுக்கடை யடையவோ?

கள்ளுக்கும், நஞ்சுக்கும் ஒற்றை
ஒற்றுமையே,
கள்ளுண்டவன் அறைப்பினமாய்,
நடைப்பிணமாய் வீடடைய,
நஞ்சுண்டவன் முளுப்பினமாய்,
நால்வர் த்துணையாய் காடடைவான்,

குடி, குடியைக்கெடுக்கும்,
மது, நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு,
இப்படி எத்தனை வாசகம் படித்தாலும்,
வாசனை கள் வாசனை தேடியே
காலையில், கால்கள் நடக்குமோ?

கள்ளுண்ணும் எத்தனைப்பேர், தான்
கள்ளுன்னா வேளையில், கள்ளுண்டு
மேற்சொன்னதைப்போல், சரிந்துக்
கிடக்கும் கள் ளர்களை காண்கையிலே,
தன்னிலையும் இப்படித்தான் கள்ளுண்டு
திரும்புகையில் என்று எண்ணுவாரோ,
அந்நாளே,
சாக்கடைகளாய் கிடக்கும் கள்ளுக்கடைகள்
பூகடைகளாய் மாறும்,
புது வாழ்வுப் பிறக்கும்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

யாழ்!


 
மீட்டும் இசை யாழ்
வழியே, என் காதில்
கேட்கும் நொடிகள்
எல்லாம்,
என் பார்வை - நீ
வரும் வழியை
தேடி வேடிக்கை
காண்கிறது,

காதல், காதின்
மொழியாய், உன்
பேச்சாய் தானோ,
ஏனோ என்னுள்
புகுந்தது.



எழுத்தோலை கோ.இராம்குமார்

செவ்வாய் பேதை!




செவ்வாய் பேதை,
சில்பகல் சிரித்திடல்
காண்போறும்,
நெடுங் கடல் சுழல் ல்
சிக் கிழுத்து தவிப்போறும்
மீள் வாரோ? கரை சேர்வாரோ ??


எழுத்தோலை கோ.இராம்குமார்

திரிஷா!


 

எடுத்துக் காட்டு!


 

இட்லி!



நிலவினை தரவிறக்க
என் அன்னையிடம் தான்
கற்றுக்கொள்ள வேண்டும்,

அரையாழாக்கு பச்சை
அரிசியை தட்டி - கூடவே
கால்யாழாக்கு உளுத்தம்
பருப்புடன் ஒருப்பிடி
வெந்தயமும் சேர்த்தே,
ஊறவைத்து ஆட்டுக்கல்லில்
ஆட்டியே வெண்ணையாய்,
குருணை குருனையாய்,
மசித்து எடுத்து உப்பும்
கலந்து புளிக்கவிட்டு,
காலையில் விறகைத்தினித்து
அடுப்பைமூட்டி, சட்டியில்
கொஞ்சம் நீரும் ஊற்றி,
குளித்தட்டின் ஒவ்வொரு
குழியில், பொதுவாய்,
மெதுவாய் வார்த்து,
ஆவியால் பூக்கவிட்டு,
ஐந்து, பத்து வினாடிகளில்
தட்டில் தரவிறங்கும்
நிலவாய் வெளிச்சம்
பரப்பும் வெள்ளை
இட்லி,
ஜோடியாய் துகையல்,
கூடவேசாம் பார்,
இத்தனயும் இருந்தால்,
எத்தனை என்
உள்ளிறக்குவேன் என்று
எனக்கே தெரியாது,

என் அம்மாவிடம்
கற்றுக்கொண்டேன்
நிலவினை தரவிறக்க,
வெள்ளையாய்
மல்லிகைப்பூ இட்லி
விடிவில்.


எழுத்தோலை கோ.இராம்குமார்

என் ஆச்சி!


 
சிரித்து, மகிழ்ந்து,
சித்திரம்ப்போல்
அழகு தமிழ் பேசி,
திரிந்த காலமும்
நினைவிருக்கா உனக்கு
ஆச்சி?

பலுங்கிக்கல் போல்
பளபளப்பான கன்னம்,
பார்த்தவுடன் மீண்டும்
பார்க்க சொல்லும் இளமை,
தொட்டால் சிவக்கும்
தோல்களும் எல்லாம்,
எங்கே போனது
ஆச்சி?

வெள்ளிமயிர்
வெயிலில் மின்ன,
சொல்லி, சொல்லி
கிள்ளிய கன்னங்களில்,
தேங்காய் நாராய்
சுருக்கங்கள் ஏனோ,
தொட்டால் சிவந்த
கைகள் தோல்கள்
வரி, வரியாய்,
தொய்வாய்,
வயாதகி விட்டது உனக்கு
ஆச்சி,

உன் இத்தனை
ஆண்டுகள் இளமை
தேய்ந்து முதுமை
சேர்ந்திட,
கூடவே உன்
அனுபவமும்
சேர்ந்தே எங்களை
வளர்த்திருக்க கூடுமே,

அதனால் தானோ
என்னவோ,
பாட்டி சொல்லை தட்டாதே,
என்றனர்?



எழுத்தோலை கோ.இராம்குமார்

செல்ல நண்பன்!


 
முற்றத்து வீட்டு
வாசற்ப்படியில்,
மல்லிகை மொட்டு
வாசம் கொடியில்,
லேசாய் சிரிக்கும்
பல்வரிசை பத்தும்
சில்மிஷம் பேசும்,
துளிவிஷம் உண்டவன்
போலே,
தலைசுற்றி நிற்கும்,
தலைக்கால் புரியாதவன்
போலே
காலிடறி சிக்கும்,
மாய கண்ணும்
மான்விழி தானோ,
மயக்கம் கொடுக்கும்
திராட்சை ரசமாய் - என்
கண்களை மயக்குதே,
பார்த்திபன் வில்லும்
பத்திரமாய் உன் புருவமாய்,
அம்பெய்த ஆயத்தமாய்
இருப்பதை போலவே,
என்னை இலக்காய்
நோக்குகிறதே,

சொல்லி வை அதனிடம்
நான் உன் செல்ல நண்பன் என்று!

------------------------------------------------------
எழுத்தோலை கோ.இராம்குமார்
------------------------------------------------------

யானோ, ஈழத்து தமிழன்!


 
உறங்கி விழிக்கும்,
ஒவ்வொரு காலையும்,
உயிர் என்னிடம் இருப்பதை
எண்ணி பெரும்மூச்சுவிட்டு,
பாதித்தூங்கி, தூங்கா நிலையில்,
பிறந்த காலம் முதலாய்
யானும்,

இதோ இன்றும் நீண்டது
எனது விடியா இரவு,
மெய்யும் உயிரும் ஒன்றாய்,
தலையும் உடலும் முழுதாய்,
கையும், காலும் நன்றாய்,
கண்கள், செவிகள் இயல்பாய்,
எல்லாம் அப்படியே
உள்ளது உள்ளபடியே,
துப்பாக்கி குண்டுகள்
கண்டிராத எனது உயிரும்,
வெடிகுண்டு வேட்டையில்
சிதறாத எனது உடலும்,
நானும் - எல்லாம்
நன்றாய் இருந்தும்
அனாதையாய்,

என்னுடன் இருந்தவரெல்லாம்,
இன்று மண்ணுடன் மண்ணாய்,
காலொன்றும், கை ஒன்றுமாய்,
தலை வேறு, உடல் வேறாய்,
குண்டுகள் சலித்த சல்லடை உடலாய்,
பருந்திற்க்கும், கழுகிற்க்குமாய்
மூவேளை விருந்து படையலாய்,
லட்சக்கணக்கில் மொத்தமாய்
என்னை விட்டே மாண்டாறோ,
தமிழனுக்கு வந்த சோதனையோ,
இதுவும்,
இல்லை தமிழுக்கு வந்த
சோதனையோ?

எங்களை மீட்டிட போராடிய
அண்ணனும் எங்களுடன் இல்லையே
இன்று,
யார் எங்களை காத்திடுவாறோ?
யார் எங்களை மீட்டிடுவாறோ?
தமிழீழம் வெறும் கனவோ?

தெரியா கேள்வியுடன்.
புரியாமல் புலருகிறது,
ஒவ்வொரு காலையும்,
கலக்கத்துடனே,

கலங்கி நிற்ப்பவன் யானோ,
ஈழத்து தமிழன்!


---------------------------------------------
எழுத்தோலை கோ.இராம்குமார்
---------------------------------------------

நின்றுவிடும்!




நினைவுகள்
அழியத்துவங்கும்,
நிஜங்களும்
மறையத்தொடங்கும்,
கனவுகள்,
இரவுகள் தவறா
கண்திரை படம் காட்டி,
காலையில்
மறைந்துபோகும்,
கால்கள்
நடந்துபோகும்,
எதிர்வரும் சுவர்முட்ட,
அதுவும்
நிற்கக்கூடும்,
என்றாவது
ஒருநாள் என்
மூச்சும்
நின்றுப்போகும்,
அத்திருநாள்,
இன்றே வருமோ ?
நான்,
ஆடிய ஆட்டங்கள்
எல்லாம்,
முடிந்துப்போகுமே ??



எழுத்தோலை கோ.இராம்குமார்

அன்னம்!



சித்திர சேலை
மடிப்புக்கள் போல,
கலையாத கூந்தல்
கார்முகில் போல,
காற்றினில் பறக்கும்
பூங்கொடி போல,
வாசனை பரப்பும்
சந்தனம் போல,
வார்த்தைகள் யாவும்
கோர்வையாய் என்னை,
உன் கூந்தல் சிடுக்கில்
கோர்க்குதடி,

மேல்
ஆடையாய் என்னை
அணிந்திடு கண்ணே,
ஜாடையாய் ஒருமொழி
பேசிடு பெண்ணே,
வாடையால் தேகம்
சிலிர்த்திடும் முன்னே,
ஜோடியாய் மாலை
மாற்றிட வா, வா,

மஞ்சள் பூ சூடிய
மார்கழி பனியே,
அன்னமாய் என்
கன்னக்குழி நிறைந்த
பொற்றாமரையே!


எழுத்தோலை கோ.இராம்குமார்

எழுத்தோலை!


 

வீர வணக்கம், வீர தமிழச்சிக்கு!!


 
செந்தழல் நெருப்பினில்
குளித்தவள், சொர்க்கம்
சேர்ந்து
இன்றோடு, ஓராண்டு
முடிகிறது,

பெண்ணாய் அவளும்,
எங்கள்
கண்கள் திறந்துவிட்டு,
கண்மூடி
பொசுங்கி விட்டாள்,
அவள் தானே எங்கள்
வீர தமிழச்சி,

செங்கொடி அவள்,
மகளாய் எனக்கும்
பிறப்பாளோ - பிறந்து
தமிழனை காக்க,
இன்னொரு ஜென்மம்
எடுப்பாளோ!


எழுத்தோலை கோ.இராம்குமார்

சிணுங்கல்கள்!


எழுதிய நாள்: 29 ஆகஸ்ட் 2012.